நேசம் 14
அத்தியாயம் : 14
நேசமடி நேசம்
ஆம் சரவணனின் மனதில் இதை விட நல்ல தருணம் கிடைக்காது என தோன்றியதால் தான் இப்போது சொல்ல முடிவு எடுத்தான்...ஒரு ஐந்து நிமிடம் வரை அவனுக்கு அந்த எண்ணம் இல்லை ஆனால் அவளின் கையில் ஒரு குழந்தையோடு அவன் அருகில் கண்டதும் அவனுக்கு அவர்கள் மூவரும் ஒரு குடும்பம் போல தோன்ற அவனின் எண்ணம் நடக்க வேண்டும் என்பதற்காக
அவளிடம் தன் காதலை வெளிப்படுத்த முடிவு செய்து தன் குரலை சரி செய்து, காற்றில் கலைந்த தன் மூடியை சரி செய்து இரண்டு பெரிய மூச்சுகளை எடுத்து விட்டான் தன்னை நிலைப்படுத்தி அனுவை பார்த்தான் அனு சிறு குழந்தை போல கையில் இருக்கும் குழந்தையோடு விளையாடி கொண்டு இருந்தாள்....
அவளை ரசித்து கொண்டே , "அனு எனக்கு ஒரு ஆசை இருக்கு "...என்று சரவணன் கூற ..அவளோ அந்த குழந்தையுடன் விளையாட்டை நிறுத்தி விட்டு என்ன என்பது போல அவனை பார்க்க அவனோ , " அனு ஒரு நாள் இதே மாதிரி நம்ம குழந்தையை எடுத்துட்டு இதே மாதிரி இந்த நிலவை நாம ஒன்னா பார்க்கனும்...அது நடக்க எத்தனை வருஷம் ஆனாலும் உனக்காக நான் காத்துட்டு இருப்பேன்...." என்று ஆடாமல் அசையாமல் தயங்காமல் அவள் கண்களை பார்த்து கூலாக தன் காதலை வெளிப்படுத்தி விட்டான்....
அவளுக்கு ஒரு நிமிடம் அவன் என்ன கூறினான் என்றே புரியவில்லை... மறுபடியும் அவன் கூறியதை மனக்கண்ணில் ஓட விடும் போது தான் அவளுக்கு புரிந்தது அவன் தன்னிடம் அவனுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கிறான் என்று....அனு வயது பெண்களுக்கு இது போல யாராவது தங்கள் அன்பை வெளிப்படுத்தி இருந்தால் இந்நேரம் காதலை ஏற்று கொண்டு இருப்பார்கள்..ஆனால் அனுவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை அந்த குளிர் காற்றிலும் தன்னை போல குறும்பு செய்யும் அவள் முடியை ஒதுக்கி விட்டு கொண்டே ,"நான் யோசிச்சு சொல்லட்டா "....என்று கூறினாள் அனு...
அவளுக்கு அவன் டக்கென்று கூறியதும் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அவனை ஒத்துக்கவும் முடியாமல் தடுமாறி கொண்டே தான் அவள் அந்த பதிலை அவனிடம் கூறியது ... அவளின் நிலையை உணர்ந்த அவனோ சிரித்து கொண்டே," சரி ...ஒன்னும் அவரசம் இல்லை... பொறுமையா சொல்லு...நான் என்னோட ஆசையை சொன்னேன்...அதுக்கு எனக்கு உரிமை இருக்கு அதே போல உனக்கும் உன்னோட கருத்தை சொல்ல உரிமை இருக்கு "என்று கூறி அழகாக சிரித்தான் சரவணன்...
அவனுக்கு அப்போதும் ஆச்சரியமே எப்படி இவள் சில நேரம் குழந்தை மொழியில் பிதற்றுகிறாள்... சில நேரம் பக்குவப்பட்ட பெண் போல இருக்கிறாள் என்ன பெண் இவள் என்று எல்லாம் கலந்த கலவையாக இருக்கிறாள் அவனின் அனு...எது எப்படியோ எனக்கு இவள் வேண்டும் இவள் தான் எனக்கு சரி ஆனவள் என்பதில் தெளிவாக இருந்த சரவணன் அவளிடம் சிறிது நேரம் உரையாடி விட்டு சென்றான்...அனு தன்னை நோக்கி சிரித்து விட்டு ஸ்டைலாக நடந்து செல்லும் சரவணனையே வட்டம் அடித்து கொண்டு இருந்தது....செல்லும் அவன் செல்லாமல் அவள் மனதில் சிம்மாசனம் இட்டு ஒரு மூலையில் யாரும் அறியா வண்ணம் அமர்ந்து கொண்டான் அனுவிடம் கூட சொல்லாமலே......
அனு அவளுடைய பதிலை கூறிய பின்னர் அவன் அந்த விஷயத்தை பற்றி பேசி அவளை தொல்லை செய்ய வில்லை...அனுவுக்கும் அவனின் நேர்மை பிடித்து தான் இருந்தது இந்த ஒரு மாத காலத்தில் சிறு அளவில் கூட அவன் இரட்டை அர்த்த வசனங்களோ இல்லை அவளை தொல்லை செய்யும் விதத்தில் ஒரு சிறு சொல் கூட அவன் வாயில் இருந்து வந்தது இல்லை இப்போது அவளுக்கு ஒன்று மட்டும் அவனுக்கு விளங்கியது அவன் மனதில் தான் மட்டுமே என்று...அந்த நினைப்பே அவளுக்கு மகிழ்ச்சியை வாரி இறைத்தது என கூறலாம்....சிறிது காலம் பொறுத்து இருப்போம் படிப்பு முடியட்டும் அதன் பிறகும் இதே போல என் மனதில் அவன் மீது ஏற்பட்டு இருக்கும் எண்ணம் மாறாமல் இருந்தால் அவனின் காதலை ஏற்போம் என்று விட்டு விட்டாள்...அவளுக்குமே யோசிக்க என்பதை காட்டிலும் அவளை பரிசோதனை செய்ய காலம் வேண்டி இருந்தது அதனால் தான் அவனை ஒதுக்கி தள்ளாமல் அந்த பதிலை உரைத்தது...நேற்று நடந்த நிகழ்வை இப்போது நினைத்து பார்த்தாலும் இருவருக்கும் சந்தோஷத்தை கொடுக்க அந்த மனநிலையிலே யாரும் காணா வகையில் தங்கள் பார்வைகளை பரிமாறிக் கொண்டு அந்த மண்டபத்தில் உலவி கொண்டு இருந்தனர்...
மொத்தத்தில் அந்த மண்டபத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய இவர்களோ சிலிர்த்து கொண்டு சண்டை கோழிகள் போல இருந்தனர்...
இந்த திருமணம் நடக்க சில காரணங்கள் உள்ளன அதில் மிக முக்கியமான காரணம் ஒரு மாதத்திற்கு முன் நரசிம்மன் மொபைல் எண் வாங்கி அவள் வீட்டுக்கு அழைத்து விஜயராஜனிடம் நடந்த விஷயத்தை கூற போலீசாக இருந்த அவரே பதைப்பதைத்து விட்டார்...அவர் வாழ்வில் எத்தனையோ கேஸ்கள் இது போல அவர் எதிர் கொண்டு இருந்தாலும் தன் வீட்டில் நடக்கும் போது போலீஸ் என்ன சாமானியன் என்ன எல்லாம் ஒன்று தான்...அவர் பதட்டத்துடன் என்னவென்று விசாரிக்க நரசிம்மன் நடந்ததை கூறினான்...அதிலும் அவனை காப்பாற்றியது வெற்றி தான் உங்கள் வீட்டு மாப்பிளை என இணைத்து நரசிம்மன் கூற அப்போது தான் அவருக்கு மனம் குளிர்ந்தது...மேலும் சில விஷயங்களை உரையாடி கொண்டு இருந்தனர் நரசிம்மனும் விஜயராஜனும் அதில் நரசிம்மன் முழுவதும் வெற்றியின் அருமை பெருமைகளை பேசியும் அவர்கள் இருவர் இணைந்தால் அவர்கள் வாழ்க்கை செழிக்கும் என்று எல்லாம் கூறினார் அதை கேட்டு அவருக்கு சந்தோஷமே.......என்ன உரையாடினாலும் வயதான மனிதர் அவரின் பதட்டம் குறைந்த பாடில்லை ....
விஜயராஜனே இப்படி என்றால் கண்மணியின் தாயை பற்றி கூறவா வேண்டும் தன் மகள் தன்னிடம் கூட சொல்லாமல் செல்லும் மகளை எண்ணி அவர் மனம் ஏனோ அலைப்புற இரவு வரை உறங்காமல் இருந்த ஜானகிக்கு விஜயராஜனுக்கு போன் வரவும் அந்த சத்தத்தில் எழுந்த அவருக்கு விஜயராஜன் பேசுவது நன்றாக கேக்க ஓடி வந்து , "என்ன ஆச்சு மாமா கண்மணிக்கு சொல்லுங்க "....என்று கூற
அவரோ கண்மணியை , "யாரோ கடத்த முயற்சி செய்ய "...என்று அவர் கூறி முடிக்க வில்லை...ஜானகிக்கு உயர் ரத்த அழுத்தம் அதிகமாகி தான் நிற்கும் போதே பூமிக்குள் புதைந்து போவது போல ஜானகிக்கு தோன்ற அப்படியே வீழ்ந்தார்...
விஜயராஜனோ அதிர்ச்சி தான் என நினைத்து , "அம்மாடி கண்மணிக்கு ஒன்னும் இல்லை மா... அவளை காப்பாத்திட்டாங்க ...அவளை காப்பாற்றியது யாரும் இல்லை நம்ம கண்மணிக்கு பார்த்த மாப்பிளை தான் மா"... என்று விழுந்து கிடந்த ஜானிகியிடம் அவர் பதறி கொண்டு கூற ஜானகியால் பாவம் புரிந்து கொள்ள முடிகிறது...ஆனால் தன் மாமாவிடம் எப்படி பதில் கூறுவது என தெரியவில்லை...பதில் கூற முயற்சி செய்கிறார் ஆனால் முடியவில்லை... அவருக்கு மூளைக்கு செல்லும் ஒரு நரம்பில் அதீத ரத்த அழுத்தம் காரணமாக இரத்தகட்டு ஏற்பட்டு இருந்தது....அவர் கஷ்டப்படுவதை கண்ட விஜயராஜனோ ஜானகிக்கு ஏதோ சரி இல்லை என்பதை உணர்ந்த அவரோ அதன் பிறகு காத்து கொண்டு இருக்கவில்லை...
விரைவாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு போக அங்கே அவருக்கு ஸ்ட்ரோக் வந்து இருப்பதாக கூறி அவருக்கு சிகிக்சை மேற்கொள்ளப்பட்டது....அதை கேட்ட அவருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓட வில்லை...அனு பாவம் அழ தொடங்கி விட்டாள்... விஷயம் கேள்வி பட்டதும் அன்னம்,வேல்முருகன் மற்றும் சரவணன் விரைவாக மருத்துவமனைக்கு வந்து அவர்களுக்கு ஆறுதல் அளித்து கொண்டு இருந்தனர்...
சரவணனுக்கு அனுவை பார்க்கும் போது தன் கண் முன்னால் அழுது கொண்டு இருப்பவளை இழுத்து அணைத்து ஆறுதல் செய்ய வேண்டும் என அவனின் கை துறுதுறுக்க தன்னால் செய்ய முடியாமல் தன் தாயிடம் கூறி அவளை சமாதானம் செய்ய சொன்னான்..அன்னமும், " அழாத மா அம்மாக்கு ஒன்னும் ஆகாது"..என்று ஆறுதல் கூற அன்னத்தின் தோளில் சாய்ந்து சிறு குழந்தை போல கேவி கொண்டு இருந்தாள்...அவளை பார்க்கவே அனைவருக்கும் பாவமாக இருந்தது...
மிக சரியான நேரத்தில் விஜயராஜன் தன் மருமகளை கொண்டு வந்து சேர்த்ததால் அவரின் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை....ஒரு கையும் காலும் மட்டும் அசைக்க முடியவில்லை ...மாத்திரையின் மூலமும் , பிசியோதெரபி செய்தால் நாளடைவில் சரி ஆகும் என்று மருத்துவர்கள் விஜயராஜனையும் அனுவையும் சமாதான படுத்த ஒரு வழியாக அவர்கள் தேறினர்...
இரண்டு நாள் கழித்து வார்டிற்கு மாற்ற ஜானகி கண் திறந்து பார்க்கும் போது அங்கே வெற்றியின் குடும்பம், கண்மணி , அனு, விஜயராஜன் அனைவரும் இருக்க ஜானகி தன் ஒரு கையால் கண்மணியையும் வெற்றியும் அழைத்து வெற்றியிடம் கண்மணியின் கை பிடித்து கொடுத்து என் மகளை ஏற்று கொள்வாயா என்பது போல கண்களில் யாசனை செய்யும் அந்த தாயின் அன்புக்கு முன்னால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை...அதன்படியே இந்த திருமணம் நடக்க இருக்கிறது...
கண்மணியும் தன் தாயின் நிலையை கண்டு அடங்கி இருந்தாள்... அவளின் மௌனத்தை சம்மதம் ஆக நினைத்த ஜானகிக்கு உடல் நிலை விரைவாக சீர் ஆனது...கண்மணி முறையாக மருந்துகளை கொடுத்தும் தன் தாயை பிசியோதெரபி செய்து கொடுத்தும் விரைவாக குணப்படுத்தி விட்டாள்...தன் மகள் ஒத்து கொண்டு விட்டால் என்பதிலே அவரும் தன் முழு ஒத்துழைப்பை கொடுக்க இப்போது அவரால் இலேசாக தன் கையையும் கால்லையும் அசைக்க முடிந்தது...ஆனால் ஒரு ஆள் துணை இல்லாமல் அவரால் படி எல்லாம் ஏற முடியாது...ஆனால் விரைவில் சரி ஆகி விடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்....
ஒரு நாள் ஜானகி தன் மகள் தன்னிடம் இருக்கும் போது, "கண்மணி உனக்கு இப்போ அம்மா செய்யுற விஷயங்கள் பிடிக்காமல் இருக்கும் ...ஆனால் உன்னோட நல்லதுக்கு தான் அம்மா கல்யாணம் பண்ணி வைக்கிறேன்...உன்னால போன இடத்தில் ஒரு சின்ன பிரச்சனை கூட வர கூடாது மா உன் அம்மாவோட வளர்ப்பு இது தானா னு யாரும் கேள்வி கேட்டுட கூடாது மா"... என்று எல்லா தாயை போல அவரும் தளர்ந்த குரலில் அறிவுரை கூற கண்மணியோ , "என் மூலமா எந்த பிரச்சனையும் வாராது மா "...என்று தன் தாயிடம் கூறி அவரை சமாதானம் செய்தாள்...அதனால் கண்மணியால் எல்லோர் முன்னிலையில் அவனை எதிர்க்க முடியாது ஆதலால் பொறுமை காத்து வருகிறாள் இருந்தும் சில பல இடங்களில் அது வெளிப்பட்டு விடுகிறது......அதுக்கும் அவன் தான் காரணம் என்று அவனை ஒரு வழியாக்க காத்து கொண்டு இருக்கிறாள்...
எல்லோரின் வேண்டுதலின் படி நல்ல சுப முகூர்த்தத்தில் அனைவரின் ஆசியின் படி வெற்றிவேல் கண்மணியின் சங்கு கழுத்தில் மங்கள நாணை கட்டி தன்னில் பாதியாக ஊரார் முன்னும் சுற்றத்தார் முன்னும் ஏற்று கொண்டான்...அவளும் மனதுக்குள் இது தான் முதலும் கடைசி முறை நான் உன் முன்னால் தலை குனிந்து இருப்பது இதற்கும் சேர்த்து நீ என்கிட்ட அனுபவிக்க போகிறாய் என கருவிக் கொண்டே அவன் கட்டிய தாலியை ஏற்று கொண்டாள்....
நல்லபடியாக திருமணம் முடிய பெரியவர்களிடம் எல்லாம் ஆசிப்பெற்று, தங்கள் வாழ்வை தொடங்க போகின்றனர்... சுபமாக முட்டி மோத தயாராக கண்மணியின் வீட்டில் முதல் இரவை கழிக்க தயாராகி இருக்கின்றனர் வெற்றிவேல் கண்மணி தம்பதியினர்.....
நேசம் தொடரும்.....
