நேசம் 13
நேசம் : 13
அதிலும் கண்மணி தன் கண்களாலேயே அவரை எரித்து கொண்டும் இங்கே ஒரு ஆயிரம் பேர் இல்லை என்றால் அவரை இந்த ஓமக்குண்டத்திலே இறக்கி அக்கினி க்கு இரை ஆக்கி இருப்பாள்...அவளோ மனதுக்குள் , "யோவ் பெரிய மனுசா எங்க தாத்தாவை விட நீ மோசமா இருக்கியே...நீ பார்த்த எனக்கும் இதோ என் பக்கத்துல உக்கார்ந்து இருக்கானே அவனுக்கும் அன்யோனியம் இருக்கு னு நீ பார்த்த ....நானே இவனை பொறுக்கி னு சொல்லிட்டு இருக்கேன் இதுல நீ வேற மூக்கை நுழைச்சு இந்த கல்யாணத்தை நடத்தி வைச்சிட்டு இருக்க...இரு உனக்கு இருக்கு என்கிட்ட எப்படியாவது சிக்குவ நீ"... என்று எல்லாம் வறுத்து எடுத்து கொண்டு இருந்தாள்...
கண்மணிக்கு தன் அருகில் தன் தொடையை உரசி கொண்டும் தேகத்தை உரசி தன் மயிர்கால்களை சிலிர்க்க வைத்து கொண்டு இருக்கும் அவனை பிடிக்கவில்லை அவனை தன்னுடைய சரி பாதியாக ஏற்று கொள்ள கூட முடியவில்லை.... தான் நினைப்பது எதுவுமே நடக்கவில்லையே என்ற குமுறல் மட்டும் தான் இருந்தது....
வெற்றியின் மனதில் அதுபோல ஒன்றும் இல்லை ...அவனுக்கு கோபம் எல்லாம் தன் குடும்பத்தாரிடம் தான் அதிலும் அவன் அம்மா அவனை சென்டிமென்டிலும் அழுகையிலும் அவனை நிலை கொள்ள செய்து இருக்க அதிலும் அவனின் குருநாதர் நரசிம்மன் பங்கு சற்று கூடுதலாகவே இருக்க எல்லாம் அவனின் கை மீறி போய்விட்டது... ஆனால் அவனுக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லை..அதிலும் இவளை அவனுக்கு அதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.... ஆனாலும் விதி வலியது அல்லவா நாம் நினைப்பதை எல்லாம் நடத்தி கொடுப்பது இல்லையே....ஆனாலும் நமக்கு நடக்கும் சில எதிர்பாராத விஷயங்களை நாம் ஏற்று கொள்ள தானே வேண்டும்...முதலில் கஷ்டமாக இருந்தாலும் பின்னாளில் ஏற்று கொள்ளவும் நாம் பழகி கொள்கிறோம் அது போல இவர்கள் வாழ்க்கையும் சிறப்பாக அமையும் அது சில காலங்கள் கடக்க வேண்டுமோ ...என்னவோ....
வெற்றியின் தம்பி சரவணனை பற்றி கூறவே வேண்டாம் ....வெற்றிக்கு திருமணமா இல்லை சரவணனுக்கா என தெரியவில்லை.... அவன் தான் பளப்பள சட்டையில் கழுத்தில் கையில் என சங்கிலி சகிதம் உலா வந்து கொண்டு இருந்தான்.... பேருக்கு தான் அண்ணன் திருமணம் என்றாலும் அந்த மண்டபத்தில் அவன் தான் அங்கே மாப்பிளை போல உலா வந்து கொண்டு இருந்தான்....எல்லா பெண்களின் பார்வையும் அவன் மீது விழ அவன் கண்களோ அனுவின் பின்னால் தான் மொய்த்து கொண்டு இருந்தது...அவளும் அதை உணர்ந்தாலும் அதன் காரணம் உணர்ந்த அனுவும் அவனை கண்டு கொள்ளாமல் சுற்றி வருகிறாள்...
நேற்று இரவு கூட இதே போல தான் ஒரு
அழகிய நிகழ்வு அவர்கள் இருவருக்குள்ளும் நடந்தது....இந்த ஒரு மாதமாக சரவணன் மற்றும் அனுவின் இடையில் நட்பை கடந்து காதல் என்ற நிலைக்கு அடைய முடியாமல் இருவரும் உள்ளனர்...ஆனால் சரவணனை பொறுத்தவரை காதல் தான் அதில் அவன் உறுதியாக இருக்கிறான்... ஆனால் அதை அவன் அவளிடம் வெளிப்படுத்தவில்லை...அந்த நாளுக்காக காத்து கொண்டு இருக்கிறான்... இருவருக்குள்ளும் அழகிய மெல்லிய உறவு ஒன்று ஓடி கொண்டு இருக்கிறது....அனுவுக்கு பல விஷயங்கள் புரிந்தும் புரியாமலும் அவனோடு தன் உறவை வளர்த்தி வருகிறாள்....அதே போல தான் சரவணன் அவளை இரண்டு நாட்கள் முழுதாக தன்னவளை கண்களாலேயே கபளீகரம் செய்யலாம் என்று தான் அவன் பார்த்து கொண்டு இருந்தது அது வேறு அவளுக்கு குறுகுறுப்பை கொடுக்க ஒரே அவஸ்தை யாக இருந்தது அனுவுக்கு....
அவள் எங்கு சென்றாலும் அவனின் நிழல் உலா வர அதை கண்டு திருமணத்திற்கு வந்த அனுவின் தோழிகள் அனுவை கேலி வேறு செய்ய அனுவுக்கு புசுபுசுவென கோபம் வந்தது...அவளுக்கு உள்ளுக்குள் அவன் பார்ப்பது பிடித்து இருந்தாலும் அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் எப்போவும் மெசேஜ் மட்டும் தானே அனுப்புவாரு...
இப்போ என்ன ஆளை முழுங்கிற மாதிரி பார்க்கிறான் என்று எல்லாம் அவளுக்கு கேள்வி எழுந்து கொண்டும் அதற்கு விடையை அவள் தேடி கொண்டு இருந்தாள் அனு.... அதற்குள் அவளின் உறவினர் ஒருவர் அவரின் குழந்தையை கொண்டு வந்து சிறிது நேரம் பார்த்து கொள்ளுமாறு அவளிடம் கூற அவளும் அந்த குழந்தையை வாங்கி வைத்து இருந்தாள்... குழந்தை வேறு தன் தாயை காணாமல் அழ தொடங்க அவரை நலங்கு வைப்பதிலும் அதை ஒதுக்கி வைப்பத்தில் பிஸியாக இருக்க இவளை குழந்தைக்கு விளையாட்டு காட்டுவதற்காக அந்த மண்டபத்தின் மேலே ஏறினாள்... அங்கே குழந்தை வேறு அடம் செய்ய அப்போது அந்த குழந்தைக்கு நிலாவை காட்டி கொண்டு இருந்தாள்....
அதும் கூட்ட நெரிசலில் இருந்து தனியாக வந்ததும் தன் அழுகையை நிறுத்த அனுவின் மொபைல் ஒலித்தது யார் அது என்று அவள் காணாமலே அவள் முகத்தில் இளம் புன்னகை வந்து போனது...ஆம் அது சரவணனே தான் ....அவனுக்கு என்று பிரித்தேயக ஒலியை அவள் வைத்து இருக்க எப்போதும் போல இப்போதும் போனை முதல் ரிங்கிலே அணைத்து விட்டாள்...அவன் மறுபடியும் அழைக்க எடுக்கலாமா வேண்டாமா என்று ஒன்றிற்கு இருமுறை போனை பார்த்து கொண்டே இருக்க போனும் விடாமல் அழுது கொண்டு இருந்தது... நீ எடுத்தால் தான் நான் அடங்குவேன் என்பது போல அவளின் மொபைலும் விடாமல் ஒலித்தது...
ஒரு வழியாக அவள் போன் எடுக்க மறுமுனையில் அவன் , "எங்கே இருக்க"... என்றான் ...அவளோ அவன் கேள்விக்கு பதில் கூறாமல், " நீங்க எதுக்கு என்னை இப்படி முழுங்கிற மாதிரி பார்த்துட்டு இருக்கீங்க ...என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ...என் பிரின்ட்ஸ் எல்லோரும் என்னை கிண்டல் பண்றாங்க தெரியுமா".... என்று எல்லாம் குழந்தை குரலில் அவனிடம் குறைப்பட்டு கொண்டு இருக்க அவனோ அவளின் கொஞ்சலில் கிறங்கியவனுக்கு அவளை இப்போதே காணவேண்டும் என்ற ஆவல் கொள்ள அவளின் கேள்விக்கு பதில் அளிக்காமல், "எங்கே இருக்க நீ"....என்று கேட்டான்...
அவளோ , "நீங்க பார்த்துட்டே இருந்தீங்களா .....அதான் நான் மாடிக்கு வந்துட்டேன்".... என்று அவனிடம் குறைப்படுவது போல அவள் இருக்கும் இடத்தை அவனிடம் கூற , அவனும் பேசி கொண்டே மெல்ல அவள் இருக்கும் இடம் நோக்கி நடந்தான்...
அவனோ , "அப்படியா உன் தோழிகள் கிட்ட என்னை பத்தி என்ன சொன்ன ....அவங்க ஏன் என்னை பார்த்ததும் அப்படி சிரிச்சாங்க...அவங்களுக்கு என்னை பத்தி தெரியுமா "...என்று எல்லாம் அவன் அவளை கேள்வி கேக்க,
அவளோ , "இல்லை காலேஜ் ல உங்களை பத்தி என்னோட பிரின்ட்ஸ் எல்லோருக்கும் தெரியும்".......என்று மெல்லிய குரலில் முனகினாள்...அதற்குள் அவன் அவள் இருக்கும் இடத்திற்கு வந்து இருக்க கையில் ஒரு குழந்தையோடு அங்கே இருந்த திட்டில் அமர்ந்து இருந்தாள்... அதும் அவள் வெக்கப்பட்டு கொண்டே முனகி கொண்டு இருக்க அவனுக்கு உள்ளுக்குள் என்னவெல்லாமோ செய்தது...
அந்த முனகல் வேறு அவனை உசுப்பேற்றி விட தன்னை கட்டுப்படுத்தி கொண்டு , அவள் அருகில் டக்கென்று அமர்ந்து கேக்க "இது யாரோட குழந்தை"... என்று அவள் கையில் ஒய்யாரமாக அமர்ந்து இருந்த குழந்தையை காணும் போது சரவணனுக்கு பொறாமையாக இருந்தது தான் மடி சாய வேண்டிய இடத்தில் குழந்தை அமர்ந்து இருக்கிறதே என்று ஏக்க பெருமூச்சுடன் குழந்தையை பார்த்து கேக்க..இவளை அங்கே எதிர்பார்க்காத அனு அவனை கண்ட மகிழ்ச்சியில்.."அது உறவுக்கார அக்கா பொண்ணு".. என்று கூறினாள் அனு....
அவளின் பதிலில் செவியில் ஏற்றி கொண்டே சரவணனோ நிலவை வெறித்து கொண்டு இருக்க அந்த நிலவின் ஒளியும் யாரும் இல்லா தனிமையும் கடந்த ஒரு மாதமாக அவனின் இரவை தொலைத்தவள் அவனின் அருகே அமர்ந்து இருக்க தென்றலாய் அவன் மேனியை தொட்டு சென்ற காற்று அவனிடம் கூறியது இப்போதே உன் மனதில் உள்ளதை கூறி விடு என்று கூற சரவணன் அந்த சந்தர்ப்பத்தை உபயோக படுத்த எண்ணி விட்டான்...
நேசம் தொடரும்....
