Share:
Notifications
Clear all

நேசம் 48

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

நேசம் : 48

மறுமுனையில் விஜயராஜன் , "வெற்றி தம்பி எப்படி இருக்கீங்க நியூஸ் பார்த்தேன் அமைச்சர் பிடிபட்டார் னு கேஸ் விஷயத்தில் பிஸி யா இருப்பீங்க னு தெரியும் நான் ஏதாவது தொல்லை செய்துட்டேனா "...என கேட்க

அவனோ , "அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை தாத்தா சொல்லுங்க"... என்றான்...அந்த நேரம் கண்மணி அவனது தாடையில் முகத்தை சாய்த்து அவனை கட்டி கொண்டு படுத்து இருந்தாள்...

"தம்பி உங்க கிட்ட ஒரு விஷயம் பேசனுமே"... என்று கூற , "சொல்லுங்க தாத்தா "...என்று கூற அவரின் குரலில் பதட்டம் இருந்ததோ என சந்தேகம் அவனுக்கு எழ கண்மணியிடம் இருந்து விலகிய வெற்றி மெல்ல வெளியே வந்தான்...கண்மணியோ அவன் பின்னாலே வந்தாள்...

அப்போது விஜயராஜன் அனுவின் விஷயத்தை பற்றி கூறி , "என்னமோ இருக்கு பா..எனக்கு யார் கிட்டயும் சொல்ல தோணலை அவ அம்மா கிட்ட சொன்னா அவ உடம்பை கெடுத்துக்குவா...

அதே போல நேரடியா அனு கிட்டயும் கேக்க முடில வயசான காலத்தில் என்ன செய்ய னு புரியாமல் இருக்கேன் பா இப்போ நீ தான் இந்த குடும்ப தலைவன் அப்போ நீ தான் அவளுக்கு நல்ல புத்தி சொல்லனும் அனுவோட வாழ்க்கையில் ஏதாவது கரை இருக்கா னு பார்த்து சொல்லனும் "...என்று கூறி அவரின் இறைஞ்சலை கேட்டவன்.." நீங்க ஒன்னும் வருத்த படாதீங்க தாத்தா எல்லாம் சரி பண்ணிடலாம் "...என்று கூறி வைத்தவன் யோசிக்க தொடங்கினான்...

வெற்றிக்கு அனு மீது சந்தேகம் இல்லை என்றாலும் இப்பொழுது தான் ஜெமியின் விஷயம் நடந்து முடிந்து இருக்க ஜெமி யின் வயது தானே அவளுக்கும் ஏதாவது இருக்குமோ என்று எல்லாம் மூளையை குழப்பி கொண்டு இருக்கும் போது அவன் பின்னால் வந்த கண்மணி அவனை பின்னால் இருந்து அணைத்து விட்ட வெற்றியிடம் , "எதுக்கு தாத்தா கூப்பிட்டாங்க "...என்று கேட்க ,"ஊர் திருவிழா".. என்று அவன் தொடங்கவும் "ஆமாம் அம்மா கூட நேத்து இருந்து உன் கிட்ட சொல்லனும் னு சொல்லிட்டு இருந்தாங்க "...என்று கூறினாள்...

அப்போது தான் கண்மணிக்கு நியாபகம் வந்து போனது அன்னம் காலை முதல் வெற்றியிடம் பேச வேண்டும் என்று கூறி கொண்டு இருப்பது...

இதை கேட்டதும் வெற்றி அவன் வீட்டுக்கு அழைக்க வேல் முருகன் தான் போன் எடுத்தார்....தாங்கள் அவனின் வேண்டுதல் நிறைவேற்ற கோவிலுக்கு வந்து இருப்பதாக கூறியவர் ,"எல்லாம் சரவணன் விஷயம் தான் நீ வா அப்போ பேசிக்கலாம் "...என்று கூறி வைத்து விட்டார்...

வேல்முருகனும் என்ன விஷயம் என்று முழுதாக கூற வில்லை...அவர் பொது வெளியில் இருந்ததால் நீ வா என்று மட்டும் கூற அவனோ தலையும் புரியாமல் வாழும் புரியாமல் இருந்தான் வெற்றி...கண்மணியிடம் கூறலாமா வேணாமா என யோசித்தவன் எதற்கும் அங்கே போய் பேசிக்கலாம் என பேச்சை தட்டி கழித்தான்...அவளை கொஞ்சி அவளை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து சென்றவன் அவளை திக்கு முக்காட வைத்தான் என்றே கூற வேண்டும்...ஆனால் இரு வீட்டாரும் நீ வா என்று கூறுவதையும் பதட்டத்தையும் கண்டவன் ஊருக்கு செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்து கொண்டான்...

                   *******

     விடியல் யாருக்கும் காத்து இருக்காமல் விடிய தன் தோள் வளைவில் துயில் கொள்ளும் கண்மணியின் முகத்தில் கோலமிட்டு கொண்டே அவளின் முக வடிவை அளந்து கொண்டே அவள் மேல் எழும் தாப உணர்வை அடக்க முடியாமல் முத்தமிட போக ,பல் டாக்டர் ஆகிற்றே அவனின் செய்கையை வைத்து அவனின் நோக்கத்தை புரிந்தவள் ஒரு கண்ணை மட்டும் இலேசாக திறந்து, " டேய் பொறுக்கி பல் தேய்ச்சிட்டு வா டா டர்ட்டி கிஸ் பண்ண வர "...என்று கண்களை திறந்து முறைக்க...

அவனோ, " நீ என்ன செய்ய கூடாது னு என்கிட்ட சொல்றீயோ அதை தான் டி எனக்கு செய்ய தோணுது "...என்று அவளின் மூக்கின் நுனியில் முத்தமிட்டவன் அவள் கையை எடுத்து வெள்ளை கட்டுக்கு வெளியே தெரியும் அவளின் வெண்டை பிஞ்சு விரல்களை பிடித்து அவள் உதட்டின் மீது வைத்து அவள் எது வேண்டாம் என்று அவனிடம் கூறினாலோ அதை செய்து விட்டே அவன் அடங்க அதற்கு பரிசாக தலையணை அடிகளை வெற்றி வாங்கி கொண்டு சிரித்தபடி சென்றான்...

  வேகமாக குளித்து ரெடி ஆகி வந்தவன் கண்மணியிடம் இன்று மாலை ஊருக்கு செல்லலாம் என்று கூறி விட்டு அவளிடம் தயாராக இருக்கும் படி கூறினான்...நேரே மருத்துவமனைக்கு செல்ல அங்கே டேனியலுக்கு பல சிகிச்சை கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான்...ஆனால் மலர் வேந்தனுக்கு கூட்டாக இருந்ததால் டேனியல் மீது வழக்கு பதிவு செய்ய பட்டு இருப்பதால் அவனுக்கு போலீஸ் கஸ்டடியில் வைக்க பட்டு  இருந்தான்...

விளையாட்டாக என்றாலும் வெற்றி கூறியதை கேட்டு நிலைமையை புரிந்து கொண்டு மீண்டு நரசிம்மன் மீண்டும் தனது வேலையில் சேர்ந்து விட்டார்...அவர் பணியில் சேர்ந்ததும் கையெழுத்து இட்ட முதல் கோப்பே அவர்கள் எதிரான கேஸில் தான்...
கேஸில் கையெழுத்து இட்டவர்...

வெற்றியை பார்த்து,"அவங்க தந்திரத்தை அதே தந்திரத்தால் அழிச்சிட்டியே டா...அவங்க உனக்கு எதிரா திரும்பின சதியை அவர்களுக்கே திருப்பி விட்டுட்டியே நீ ஒரு சிறந்த காவல்துறை அதிகாரி னு நிரூபிச்சிட்ட என்ன அக்கிரமத்தை கண்டு நீ பொங்கினதுக்கு எத்தனை பேர் ஹாஸ்பிடல் ல இருக்காங்க னு கணக்கே இல்லை டா...

இப்போ மலர்வேந்தன் மற்றும் டேனியல் இரண்டு பேருக்கும் இடையில் மூணாவதா புகுந்து நீ தான் இதை எல்லாம் செஞ்ச னு அவங்களுக்கு தெரியாமல் அழகா இந்த வழக்கை கொண்டு போயிட்ட வெல்டன் இப்படி தான் இருக்கணும்...ஒவ்வொரு போலீஸ் யும் கடமை னு வந்திட்டா முழுசா இறங்கி அடிக்கணும்...

நான் சொன்ன மாதிரி இவங்க கிட்ட எல்லாம் சத்திரியன்னா இருந்து ஜெயிக்க முடியாது டா சாணக்கியன்னா  இருந்தா தான் நான் ஜெயிக்க முடியும் னு நிரூபிச்சிட்ட டா...அதும் யார் தயவும் இல்லாமல் கண்டு பிடிச்சுட்ட டா...உன்னை என்னோட சிஷ்யன் னு சொல்றதுல ரொம்ப சந்தோஷமா இருக்கு"... என்று அவனை பாராட்டினார்...

"ஆமா எப்படி அவன்கிட்ட ஆதாரம் இருக்கு னு உனக்கு தெரிஞ்சது"... என்று கேட்க, "அதுவும் ராஜதந்திரம் தான் சார் "...என கூறி சிரித்தான்...

பிறகு கொஞ்சம் கேஸ் சம்பந்தம் ஆக உரையாடியவர்கள் , "சார் ஒரு மூணு நாள் லீவ் வேணும் சார் "..என்று கூற, அவரோ "என்ன டா ஹனி மூன் னா"... என்று கேட்க அவனோ ஆமாம் அந்த கையை வெச்சிட்டு ஹனி மூன் கொண்டாடிட்டாலும் என நினைத்தவன் என்ன இருந்தாலும் அவனின் உயர் அதிகாரி ஆகிற்றே அவரிடம் அதை கூறாமல் சிரித்து "கண்மணி ஊர் திருவிழா சார் "..என்று கூற அவரோ , "இனி நான் பார்த்துக்கறேன் ....நீ போயிட்டு வா".. என அவனுக்கு ஒரு வாரத்துக்கு மெடிக்கல் லீவ் கொடுத்தார்...

சில வேளைகளில் மூழ்கி இருந்த வெற்றி மாலையும் ஆக வீட்டுக்கு வந்தவன் ரெடி ஆகி இதோ அவர்களின் பயணம் தொடங்கியது மணியோடு ...வெற்றியின் காரில் பயணம் செய்ய தொடங்க காரில் ஏறியதும் கண்மணி கேட்டது , "இந்த கார் உன்னோடதா இல்லை கவேர்மெண்ட்டோடதா "...என்று தான்...அவன் தான் அவளை அன்று ஒரு நாள் போலீஸ் வண்டியில் ஏற்ற மாட்டேன் என்றானே இன்று அதை பற்றி அவள் கூற அவனோ அவளை பார்த்து, " இது உன் மாமன் உனக்காக அவனோட பொண்டாட்டிக்காக வாங்கியது"... என்று கூற அவளோ சிரித்தாள்... இப்படி அவர்கள் பயணம் சண்டை இட்டும் திட்டியும் முட்டியும் இடையில் கொஞ்சியும் அன்பான ஆக்க பூர்வமான உரையாடல்கள் கொடுத்தும் என அவர்கள் பயணம் நடந்து கொண்டு இருந்தது...

நேசம் தொடரும்.....



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top