Share:
Notifications
Clear all

நேசம் 49

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

அத்தியாயம் : 49

நேசமடி நேசம்
 

  நல்ல இனிமையான பயணம் ஒன்று கழிந்து அவர்கள் வீட்டை அடைந்து இருந்தனர்...இந்த நீண்ட பயணம்  கண்மணி மற்றும் வெற்றிக்கு இவர்கள் பந்தம் மேலும் வலு பெற்றதே தவிர குன்ற வில்லை...அவனது காதலை அவளும் அவளது அன்பை அவனும் உணர்ந்து கொண்டு இருந்தனர்...குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் இவர்கள் காதல் மேலும் அழகு பெற்றது என்றே கூறலாம்...

அந்த நீண்ட பயணம் நிறைவுற்று நள்ளிரவில் வெற்றியின் வீட்டை அடைந்த அவர்களை அன்னம் வரவேற்றார்... வெற்றி மற்றும் கண்மணியை கண்டதும் அன்னம் அவளின் கையில் உள்ள கட்டை பார்த்து, " எப்படி ஆச்சு என்ன ஆச்சு விட்டுட்டு வந்து ரெண்டு நாள் ஆகலை அதுக்குள்ள சண்டை கட்டிடீங்களா ".....முதலியே தன் இளைய மகனை பற்றிய சங்கடத்தில் உழன்று கொண்டு இருந்தவர் இவளின் கை கட்டை பார்த்து கண்மணி மற்றும் வெற்றிக்கு இடையில் தான் சண்டை நடந்தது என்று நினைத்து வெற்றியை பார்த்து , "நான் பெத்த ரெண்டுமே சரி இல்லை...

எருமை மாதிரி வளர்ந்து இருக்கில... ஒரு பொண்ணு கிட்ட எப்படி நடந்துக்கனும் உனக்கு தெரியாதா".. என்று தன் கோவம் பட்டாலும் பராவாயில்லை என்று கத்த தொடங்க வெற்றியோ ஒன்றும் பேசாமல் கைகளை கட்டி அவரையே பார்த்து கொண்டு இருக்கும் போது கண்மணி தான் இடையில் புகுந்து , "அத்தை அது வந்து என்று கூறி வெற்றியை பார்க்க வெற்றியின் கண் அசைவில் தெரிந்த குறிப்பில் அவரு மேல எந்த தப்பும் இல்லை நான் தான் பஸ் ல ஏறும் போது கீழே விழ பார்த்தேன் ...அதுல கீழே கிடந்த கண்ணாடி சில் கையில குத்திடுச்சு "..என்று வாய்க்கு வந்த பொய் யை கூறினாள்...

அன்னமோ இருவரின் பார்வையும் அன்பையும் பரிமாறி கொள்வதை எல்லாம் கண்டவர் ஏதோ நல்லது நடந்து இருக்கு போல என்று ஒரு புறம் நிம்மதி அடைந்தாலும் மறுபுறம், " என்னமோ போங்க நீங்க சொல்றீங்க நான் கேக்குறேன் "..என சலித்து கொண்டு, " ஏன் டா மணி நீயும் இவனுங்க மாதிரி என் சொல் பேச்சு கேக்கமாக இருக்காதா டா".. என்று வருத்தத்துடன் கூறினார்...அதுவோ அமைதியாக இரண்டு குரை குரைத்து விட்டு போய் படுத்து கொண்டது...

வெற்றியோ வந்ததில் இருந்து தன் தாயின் நடத்தையில் ஏதோ வித்தியாசம் இருப்பதை உணர்ந்த வெற்றி தனது அப்பாவை பார்க்க அவரோ சரவணனை கண் காட்டினார்...

அவன் எங்கே குற்றவாளி அல்லவா தலையை கவிழ்த்து கொண்டே நின்றவன் தன் அண்ணி முன்னாடி ஓவர் சீன் போடும் தாயை கண்டு கோவம் வர ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கு ஏறி ஆமாம் நான் லவ் பன்றேன் இப்போ அதுக்கு என்ன இப்போஅது வேற யாரும் இல்லை என்று எல்லாம் சொல்லலாம் என்று துடித்த வாயை கண்மணியை கண்டு  அடக்கி வேகமாக அவன் அறைக்கு சென்று கதவை அடைத்து கொண்டான்...

பின் அன்னம் அவன் செய்கையை பார்த்து , "பார்த்தியா அவன் என்ன செய்யறான் னு "..என்று நடந்த விஷயத்தை கொட்டி வருத்தப்பட கண்மணி இதில் தான் என்ன பதில் சொல்ல என அமைதியாக நின்று கொள்ள வெற்றியோ இப்போ எதுக்கு இப்படி கத்துறீங்க... காதல் தான பண்ணினான் வேற ஒன்னும் செய்யலையே ...இளவு நடந்த மாதிரி ரெண்டு நாளா புலம்பிட்டு இருக்கீங்க..காலையில எல்லாம் பேசிக்கலாம் போய் படுத்து தூங்குங்க".. என்று கூறி தனது தம்பியை சப்போர்ட் செய்து விட்டு கண்மணியை அழைத்து கொண்டு அவன் அறைக்குள் சென்றான்...அன்னமோ , "ஆமா என்னையே திட்டுங்க டா எல்லோரும்"... சேர்ந்து என்று புலம்பி கொண்டே சென்றார்...

மறுநாள் காலை விடிந்தும் விடியாமலும் எல்லோரும் எழும் முன்னே சரவணன் தனது பேக்கை எடுத்து கொண்டு கிளம்பி விட்டான்...அன்னம் திட்ட தொடங்க சரவணன் , "நான் ஒன்னும் கொலை குத்தம் பண்ணல மா நீங்க இந்த அளவுக்கு ரியாக்ட் பண்ணற அளவுக்கு ...லவ் தான் பன்றேன்...அவளை தான் காதலிக்கிறேன் அவளை தான் கல்யாணம் செஞ்சிப்பேன்".. என்று உறுதியுடன் கூறி விட்டு திரும்பி பார்க்காமல் விறு விறுவென்று செல்ல அன்னம் புலம்பும் எதையும் கேக்காமல் சென்று விட்டான்... ஆனால் இதுவும் ஒரு வகை ஒளித்து ஓட்டம் தான் என்று சரவணன் அறியவில்லை...நேராக நின்று தைரியமாக பேசி இருக்கலாம் என்று அவன் விரைவில் வருந்த போகும் நிகழ்வு நடை பெற போகிறது என அவன் அறியவில்லை...வெற்றி இவர்களின் சம்பாஷணை எல்லாம் கேட்டு படுத்து கொண்டு இருந்தாலும் அமைதியாக இருந்தவன்...

அன்னம் மறுபடியும் புலம்ப தயாராகி "ரெண்டை பெத்தேன் ரெண்டும்"... என தொடங்கும் முன் அவனின் அறை கதவை திறந்த வெற்றி தனது தாயை கோப விழிகளுடன் பார்த்து, "அம்மா ரெண்டு தானே பெத்தீங்க சந்தேகம் இல்லையே போங்க சமைக்கிற வழியை பாருங்க...எப்போ பாரு ரெண்டை பெத்தேன் பெத்தேன் னு சொல்றது..."... என்று கூறி காய அவரோ நொடித்து கொண்டு சென்றார்...

காலை நேரமாக எழுந்த கண்மணி இவர்கள் இங்கே உரையாடி கொண்டு இருக்கும் போது குளிக்க சென்று இருக்க வெற்றி சண்டை எல்லாம் முடிந்து அவன் அறைக்குள் வரும் நேரம் கண்மணி குளித்து முடித்து வந்து இருப்பாள் போலும் வெளியே நடக்கும் பிரச்சனைகளை கேட்டு கொண்டே வந்ததால் ஈரம் ஒழுக வந்தவளை கண்டவன் வெளியே நடந்ததை எல்லாம் விட்டு விட்டு ரொமான்டிக் மூட் க்கு செல்ல கண்மணியோ அவர்கள் உரையாடலை பற்றி எல்லாம் வினவாமல் கணவனின் குறும்பு பார்வையை பார்த்து சிரித்து கொண்டே வந்தவள் அவன் அருகே வருவதை பார்த்து , " ஹே என்ன காலையிலே தொடங்கிட்ட".. என்று வெற்றி கூற, " என்ன தொடங்கிட்டேன்".. என்று கேட்டாள் கண்மணி அதற்குள் அவளை வளைத்து பிடித்து இருந்தவனிடத்தில் இருந்து விலக பார்க்க அவனோ விடாமல் அவளை இறுக்கி குளித்து வந்து இருப்பவளை வாசம் பிடித்து , "நீ இந்த மாதிரி போஸ் கொடுத்துட்டு வந்தா வேற என்ன தோணும் "என்று கூறி சிரித்தவன்..அவன் கூறுவதை கேட்டு வெக்கம் கொண்டவள் விலக பார்க்க அவனோ விடாமல், "இப்போ உன் உதட்டில் இருக்கும் அதே குளிர்ச்சியோடு ஒரு கிஸ் பண்ணு நான் போயிடறேன்"... என்க...

கண்மணி யோ , "முதல்ல போலீஸ்  மாதிரி பீஹேவ் பண்ணு நான் ட்ரெஸ் மாத்தனும் நீ போ "..என்று விரட்ட பார்த்தாள்... அவனோ விலகாமல் , "அது எல்லாம் முடியாது காலையிலே ட்ரெஸ் மாத்தற சீன் காட்டிட்டு இப்போ போ னு சொல்ற உன் கை தான் டி எனக்கு எமன் இல்லாட்டி இப்போவே பிரீ ரிகர்சல் பார்த்து இருப்பேன்... அன்னிக்கு இருட்டுக்குள்ள சரியா பார்க்கவே முடில.. இன்னிக்கு பாரு நல்ல வெளிச்சம் நல்ல அழகான காலை  அழகான மனைவி அதும் செக்ஸீ ஆஹ்".. என்று அவனின் தேவையை அழகாக கூற கண்மணியோ அன்றைய நினைவுகள் அவள் கண் முன் வந்தவனை பிடித்து தள்ள போக , "ஹே என்ன டி பண்ற ...நான் சொன்னதுக்கு சம்மதமா "..என்று கூறி அவளின் மூக்கை பிடித்து ஆட்டி அங்கே ஒரு முத்தம் வைக்க போக பின் உதடு , கன்னம் என்று கழுத்து வளைவில் முகம் புதைத்தவனை பார்த்து அவனோ அவளுக்கு குறுகுறுப்பு காட்ட அவளோ கூசி சிலிர்த்தவள் அவனின் முகத்தை தனது விரல் கொண்டு நிமிர்த்தி , "நீ சொன்னதுக்கு சம்மதம் ஆனால் இப்போ இல்லை என் கை சரி ஆனதுக்கு அப்புறம் இப்போ போய் குளி"... என்று கூற அவனோ விடாமல், "கைக்கும் உதட்டுக்கும் என்ன டி சம்பந்தம் "...என்று கேட்க அவனோ அவளை விடாமல் முத்தம் கிடைத்தால் தான் விடுவேன் என்று நிற்க கண்மணி தான் இறங்கி செல்ல வேண்டியது ஆகி போகிற்று...

ஆம் முத்தம் அதும் தரும் சத்தத்தை விட வேறு சொர்க்கம் எதுவும் இல்லை  காதலர்களுக்கு காதலிக்கும் போது அது பெரும் ஆனந்தமே அது கிடைக்கும் தருணம் ஆனால் திருமணம் ஆனவர்களுக்கு அது பேரானந்தமே...அது போல வெற்றி மற்றும் கண்மணி ஆரம்பத்தில் காதலிக்கவில்லை என்றாலும் இப்போது அவர்கள் காதலிக்க தொடங்கி இருக்கிறார்கள்...ஆனந்தமும் பேராந்தனமும் சேர்ந்து கிடைத்து அதில் முழ்கி கொண்டு இருக்கின்றனர்..

அதனால் அவர்களுக்கு கிடைக்கும் சிறு நிமிடங்களை கூட வெற்றி வீணாக்க விரும்ப வில்லை...அது எந்த விதமான குடும்ப பிரச்சனையே ஆனாலும் அதை அவர்களுக்கு இடையே தேவை இல்லை என்றும் குடும்பம் என்றால் பல பிரச்சனைகள் எழும் அதன் மூலம் நமது வாழ்க்கை பாதிக்க பட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான்...அதை தான் நேற்று அவர்கள் இருவரும் பயணம் செய்து கொண்டு இருக்கும் போது அவளிடம் கூறி கொண்டே வந்தான்...அவளும் தலையை ஆட்டி கொண்டே வந்தாள்...அவள் வீட்டில் ஒரு பூகம்பம் வெடிக்கும் என தெரியாமலே... வெற்றிக்கு என்ன பிரச்சனை என தெரியா விட்டாலும் அவளின் மனதை பக்குவப்படுத்தி கொண்டே வந்தான்...

எல்லாம் கழிந்து ரெடி ஆகி இவர்களை நால்வரும் வீட்டுக்கு செல்லும் போது விஜயராஜன் மற்றும் ஜானகி எல்லோரையும் வரவேற்க அனு மட்டும் "வாங்க"... என்று ஒரு வாக்கோடு முடித்தவளை தன் அருகில் நிறுத்தி கொண்டாள் கண்மணி...வெற்றியோ ஓரிரு முறை சரவணனை அழைத்து பார்த்து விட்டான்... ஆனால் அவன் போனை எடுப்பதாக இல்லை...முயற்சி செய்தவன் கிடைக்காமல் போக பின் அங்கே உள்ளவர்களிடம் உரையாட தொடங்கி விட்டான்...

"என்ன அனு படிக்கிறியா மா "...என்று அன்னம் வாஞ்சையோடு கேக்க "படிக்குறேன் அத்தை"... என்று கூறி விட்டு வெற்றியின் முகத்தை பார்ப்பதும் தலையை கவிழ்ப்பதும் ஆக இருந்தவளை சந்தேக கண்ணோடு நோட்டம் விட்ட வெற்றி பார்க்கவும் வேகமாக பார்வையை மாற்றி கொண்டவளுக்கு நேற்றைய தினம் கண் முன் வந்து போனது...

எப்போதும் போல காலேஜ் விட்டு வீட்டுக்கு வரும் சமயம் போல அனு சரவணனை கண்டு விட்டு அவனின் நினைவுகளையும் அவனோடு இருந்த மணித்துளிகளை மனதில் நினைத்து சிரித்து கொண்டே வீட்டுக்கு வர அங்கே விஜயராஜன் வாசலில் நின்று கொண்டு இருந்தார்..

அவரை பார்த்ததும் அனுவுக்கு கையும் காலும் நடுங்க தொடங்கியது... முதன் முதலாக தவறு செய்பவர்கள் என்ன செய்வார்களோ அது போன்றோதொரு மனநிலையில் இருந்தவள்  உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியே காட்டி கொள்ளாமல் தன் தாத்தாவை தாண்டி வீட்டுக்குள் செல்லும் போது அவரோ, "என்ன காலேஜ் முடிஞ்சதா "...என்று அவளை நோட்டம் விட்டு கொண்டே தன்னை தாண்டி செல்பவளை பார்த்து கேக்க எப்போதும் கேக்கும் குரலில் தான் அவர் கேட்டாலும் அந்த கேள்வி அவளுக்கு தூக்கி வாரி போட்டது...

ஏதாவது பார்த்துட்டாரா என்று பீதி மேலோங்க பயத்தில் , "முடிஞ்சுடுச்சு தாத்தா"... என்று வார்த்தைகளை மென்று முழுங்கினாள் அனு...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top