நேசம் 50
நேசம் : 50
அதற்குள் ஜானகி வெளியே வர விஜயராஜன் தன் கையில் இருக்கும் ஒரு கவரை ஜானகியிடம் கொடுத்து , "இதுல சில மாப்பிளைங்க போட்டோ இருக்கு பாருங்க நம்ம அனுவுக்கும் ஏதாவது தோது படுதா னு பாருமா ஜோசியர் கொடுத்தாரு"... என்று மருமகளிடம் கொடுக்க இப்போது என்ன அவசரம் படிக்கும் பெண் தானே என்று தோன்றினாலும் தன் தாய் மாமனை கேள்வி கேட்டு பழக்கம் இல்லாததால் அந்த கவரை வாங்கி கொண்டார்..இதை எல்லாம் கண்ட அனு தாத்தா பார்த்து விட்டாரோ என்ற பயத்தில் கொலையாக நடுங்கினாள்....அவரும் அந்த சமயத்தில் அவளை அளவிட்டு கொண்டு தான் இருந்தார்...அதன் பிறகு அவரின் பார்வை எல்லாம் அவளுக்கு பயத்தை கொடுத்தது...
அன்று இரவு அவள் பயத்தை உறுதி செய்யும் விதமாக , "அம்மா ஜானகி இனிமேல் நீ அனு ரூம்ல படுத்துக்கோமா".. என்று கூற , "ஏன் மாமா இப்படி சொல்றீங்க"... என்று ஜானகி மெல்ல கேட்டு விட்டார்...எப்போதும் யார் தனிமை யிலும் குறுக்கிட விரும்பாத மனிதர் இப்போது இது போல நடந்து கொள்கிறார் என்றால் அதனால் தான் ஜானகி அவ்வாறு கேட்டது...
அவரோ , "இல்லை மா ...எதுக்கு ஆளுக்கு ஒரு அறையில அடைஞ்சு கிடக்கனும் அம்மாவும் பொண்ணும் ஓரே அறையில் படுத்துக்கோங்க இனி அவளுக்கும் கல்யாணம் ஆகி போய்ட்டா..அதுவரை அவ கூட இரு மா "..என்று ஜானகியின் வீக் பாயிண்ட் பார்த்து அடிக்க அவரும் மேற்கொண்டு கேள்வி கேக்காமல் அனுவின் அறைக்கு செல்ல விஜயராஜனோ அனுவை தீர்க்கமாக பார்க்க அனுவோ அவர் பார்வையை உணர்ந்தாலும் அவள் அந்த கடுமையான பார்வையை தவிர்த்தாள்... அதனால் அனு வந்தது முதல் சரவணனை அழைக்க வில்லை இதுவரை...அந்த சங்கடங்கள் தான் மனதில் கிடந்து அரிக்க அவளது முகம் சோகமே உருவாக மாறி கிடந்தது அதை நினைத்து கொண்டு இருந்தவள் அப்போது தான் கண்மணியின் கையை பார்த்தாள்...
"என்ன அக்கா கையில அடி பட்டு இருக்கு என்று அனு கேக்க அது "...என்று அன்னத்திடம் கூறிய பொய்யை தான் இங்கேயும் உரைத்தாள்...ஜானகி மகளை கையை , "பார்த்து கவனமா இரு கண்மணி "...என்று கூறி வருந்தினார்...ஜானகி க்கு தன் மருமகனை கண்டதும் கைய்யும் ஓட வில்லை காலும் ஓட வில்லை என்றே கூறலாம் ஓரிரு வார்த்தைகள் பேசியவர் உடனே அடுகளைக்குள் புகுந்து கொண்டார்...
பின்ன தன் மகளின் குடும்பத்தை கண்டு அவர்களுக்கு விருந்து உபசரிக்க வேல்முருகனோ, " தங்கச்சி பார்த்து மா நாங்க எங்கேயும் போக மாட்டோம் இங்கேயே தான் இருப்போம் மெல்ல செய் மா "...என கூறினார்...
அவரும் வேகமாக ஓடினார் விருந்து சமைக்க அன்னமோ ஜானகி க்கு உதவி செய்ய சென்று விட்டார்..
கண்மணி அவள் தங்கையை அழைத்து கொண்டு அவள் அறைக்கு செல்ல விஜயராஜன் முன் இருந்த ஒரு டேபிளில் கிடந்த கவரை காட்டி பொதுவாக எல்லோரிடமும் கூறும் விதத்தில், "இது எல்லாம் அனுவுக்கு வந்த வரன்கள் "..என்று கூற கண்மணி வேகமாக வெளியே வந்தாள்...
"என்ன படிக்கிற பொண்ணுக்கு கல்யாணம் பண்றீங்க அதுவும் இந்த வயசுல "..என்று எல்லோர் முன்னும் கேள்வி கேட்டே விட்டாள் தன் கணவன் இருக்கும் தைரியத்தில் தன் தாத்தாவை முதல் முறையாக கேள்வி கேட்க அவரோ அசராமல், " நீயும் இப்போ படிச்சிட்டு தான் மா இருக்க பெரியவங்க நாங்கள் பேசிட்டு இருக்கோம் ல எங்களுக்கு எது சரி னு தெரியும் டா கண்ணு...நீ போ டா "...என்று தன் சம்பந்தி முன்பு கேள்வி கேக்கும் பேத்தியை கண்களாலே என்னையே கேள்வி கேக்கும் அளவுக்கு வந்துட்டியா என்பது போல பார்க்க வெற்றி இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்தாலும், " கண்மணி ஒரு கப் பிளாக் டீ கொண்டு வர முடியுமா "...என்று கூறி விரட்ட பார்க்க அவ்ளோ அவனை பார்க்க இங்கே இருந்து போ என்று பார்வையாலேயே அவளை விரட்டினான்..
அவனை பார்த்து முறைத்து கொண்டே, "இரு டா நான் உண்மையை கேட்டா விரட்டவா செய்யுற இன்னிக்கு பிளாக் டீ க்கு பதிலா சில்லி டீ கொண்டு வரேன்"... என்று தாத்தாவின் மேல் வந்த கோபத்தை அப்படியே வெற்றியின் மீது இறக்கி கண்களாலேயே அவனை எரித்து விட்டு சென்றாள் வெற்றி...
அவனோ அவளை பார்த்து கண்கள் இடுங்க இலேசாக இதழ் பிரித்து விட்டு பின் விஜயராஜனை நோக்கியவன் வாங்க வெளியே போகலாம் என்று கூறியவன் வெளியேறும் முன், " கண்மணி டீ வேணாம்..ஈவ்னிங் குடிச்சுக்கறேன் "...என்று கூறிவிட்டு ஓடி விட்டான்..மாலை எதை குடித்தால் என்ன நடக்கும் என்று அவளுக்கு தெரியாதா அவன் குரலை கேட்டு கண்ணை உருட்டியவளை காணாமலே சிவக்க வைத்து விட்டான்...விஜயராஜனோ தன் கையில் அந்த கவரையும் எடுத்து கொண்டு அவனுடன் சென்றார்...
விஜயராஜனிடம் மேற்கொண்டு சுற்றி வளைக்காமல் நேரடியாக, " சொல்லுங்க தாத்தா "...என்று கூற அவரும், "வெற்றி நான் நேத்து சொன்னது தான் அவளுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வெச்சிடனும் பா..பெண் குழந்தை யை வெச்சிட்டு என்னால வயித்துல நெருப்பை கட்டிட்டு இருக்க முடியாது...இவ ஏதாவது செஞ்சு என்னோட மருமகளுக்கு ஏதாவது ஆகிடுமோ னு பயமா இருக்கு பா..அதுனால கல்யாணம் தான் இதுக்கு முடிவு "..என்று அவர் நடந்த விஷயத்தை எல்லாம் அவனிடம் தெளிவாக கூற எல்லாத்தையும் பொறுமையாக கேட்டவன் , "சரி தாத்தா என்கிட்ட சொல்லிட்டிங்க ல நான் பார்த்துக்கறேன் நீங்க இனி கவலையை விடுங்க...நீங்க ரெஸ்ட் எடுங்க...தேவை இல்லாமல் மனசை போட்டு குழப்பிக்காதீங்க"... என்று உறுதியோடு அவரின் கை பிடித்து உங்கள் சுமையை என் தோளில் இறக்கி வைத்து விட்டு சுகமாக இருங்கள் நான் பார்த்து கொள்கிறேன் என்று அழகாக கூறினான் வெற்றி...
அவனிடம் கூறிவிட்ட பின் விஜயராஜன் எப்படி உணர்ந்தார் என்றே தெரியவில்லை அவ்வளவு மனம் லேசாக இருந்தது....அந்நேரம் விஜயராஜன் தன் கையில் இருக்கும் கவரை வெற்றியின் கையில் திணித்து, " இதில் யாராவது ஒரு ஆளை நீயே முடிவு பண்ணு பா".. என்று அந்த முடிவையும் அவன் தலையில் இறக்கி விட்டு அவர் செல்ல வெற்றியின் கண்களோ யோசனையில் சுருண்டது...
அதன் படி யோசித்து கொண்டே அவன் இருக்க அந்த சமயம் சரவணனின் நினைப்பு வர சரவணன் காலையில் கோபமாக கிளம்பினான் னே என்று நினைத்து அவனை அழைத்து பார்க்க அவனோ இந்த முறை போனை எடுத்தான்.. வெற்றியோ, "எங்கே டா இருக்க "...என்று கேட்க
"நான் பெங்களூர் போயிட்டு இருக்கேன்"... என்று கத்தரித்து பேசினான் சரவணன்...சரவணனுக்கு ஒரு பயம் எங்கே இவனும் கேட்டு விடுவானோ என்று அவனுக்கு அவனின் அண்ணி முன் எல்லோரும் கேள்வி கேட்டது பிடிக்காமல் தான் ஓடி விட்டான்...
அது மட்டும் காரணம் இல்லை அவனுக்கே ஒரு பயம் எங்கே தான் அறியாமல் அனுவின் பெயரை கூறி எங்கள் காதல் இவர்கள் வாழ்க்கையை பாதிக்குமா என்று...காதலிக்கும் போது இது எல்லாம் அவனுக்கு தோன்ற வில்லை போலும் எல்லாம் நடந்து முடிந்த பின் தான் அவனுக்கு ஞானோதயம் வந்து இருக்கிறது போலும்...
மெல்ல மெல்ல வெற்றி சரவணனிடம் இயல்பாக பேச சரவணனும் மெல்ல மெல்ல பதில் அளிக்க தொடங்கியவன்...வெற்றி எவ்வளவு தூரம் கேட்டும் தான் அனுவின் பெயரையோ அவனின் காதலை பற்றியோ மூச் திறக்க வில்லை இறுதியில் சரவணனோ பேச்சை மாற்றும் பொருட்டு , "எங்கே இருக்கிறாய் "...என கேட்க..
வெற்றியோ ,"நான் கண்மணி வீட்டில அனுவுக்கு மாப்பிளை பார்க்கனும் சொல்லிட்டு தாத்தா கொஞ்சம் போட்டோஸ் கொடுத்து இருக்காரு அதை பார்த்துட்டு இருக்கேன் "...என்று கூற..
"வாட் என்னது"... என்று சரவணன் கேக்க...
வெற்றியோ , "ஆமாம் டா உனக்கு சரியா கேட்கலை யா"... என்று மீண்டும் கூறுவதற்குள் பயணம் செய்து கொண்டு இருப்பதால் லைன் கட் ஆகி போக சரவணனுக்கு பயத்தியம் பிடித்து விடும் போல ஆகி விட்டது...சரவணனுக்கு தெளிவாக கேட்டது வெற்றி கூறிய விஷயம் ஆனால் சரவணன் பதில் கூறும் முன் லைன் கட் ஆகி இருந்தது...சரவணனின் நிலையை என்னவென்று சொல்ல....
நேசம் தொடரும்...
