Share:
Notifications
Clear all

நேசம் 51

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

 

அத்தியாயம் : 51

நேசமடி நேசம்

    சரவணனின் அதிர்ச்சி வெற்றிக்கு ஏதோ புரிவது போல இருக்க தன் கையில் இருக்கும் அந்த புகைப்படங்களை எடுத்த வாக்கிலே உள்ளே வைத்தான்...இனி இதற்கு வேலை இருக்காது போல என்று நினைத்தவன்...

   யோசித்து கொண்டே வீட்டுக்குள் செல்ல அங்கே கண்மணி அவளிடம், " என்ன டி வந்ததில் இருந்து நான் பார்த்திட்டே இருக்கேன் உன் முகம் என்னமோ மாதிரி இருக்கு ஏன் இப்படி இருக்க "..என்று அவளிடம் விசாரித்து கொண்டு இருந்தாள்...

அனுவோ தனக்குள்ளே உழன்று கொண்டு இருந்தவள் தனக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்களோ என பயந்து கொண்டு இருந்தவள்  தன் அக்கா ஆதரவாக கேட்கவும் தன் அக்காவிடம் ஆவது உண்மையை கூறி விடலாமா என நினைத்து கூறினால் அவள் உண்மையை கூறினால் பின்னால் நடக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை எல்லாம் அவளது குட்டி மூளை யோசித்து கொண்டே , "அது வந்து அக்கா "...என்று தடுமாறி கொண்டு தொடங்கும் போதே வெற்றி அவர்கள் அறைக்குள் நுழைந்தான்...வெற்றியை கண்டதும் அனு எழுந்து நின்றாள்...

"என்ன அக்காவும் தங்கச்சியும் பண்றீங்க"... என்று கேட்டு கொண்டே வெற்றி வர அவனை கண்டதும் எழுந்து நின்றவள் அவன் கையில் இருக்கும் கவரை கண்டதும் அனுவின் மூக்கு நுனி சிவந்து விட்டது...

அவளை கவனித்து கொண்டு இருந்தாலும்  அவளிடம் இருந்து உண்மையை வரவழைக்கும் பொருட்டு, "கண்மணி இதுல நான் பார்த்துட்டேன் எல்லா ப்ரோபைல்ஸ் எல்லாம் நல்லா இருக்கு நீ  பாரு"....என்று அவளிடம் நீட்ட

கண்மணியோ வெற்றியை பொரிய தொடங்கி விட்டாள், " அவங்க தான் புரியாமல் பேசுறாங்க னா நீங்களுமா அவ இப்போ தான் படிச்சிட்டு இருக்கா அதும் சின்ன பொண்ணு அவளை போய் கல்யாணம் பண்ணி கொடுக்கணும் னு சொல்றீங்க ...அவங்களுக்கு தான் மூளை குழம்பி போச்சுன்னா உங்களுக்குமா".. என்று தன் தாத்தா மீது உள்ள கோபத்தில் அவன் மீது காய அவளுக்கு வருத்தம் சிறு பெண்ணிற்கு போய் திருமணமா என்று...

வெற்றியோ , "நீயும் படிச்சிட்டு இருக்கும் போது தானே கல்யாணம் பண்ணி இருக்க" ...என்று கூற

கண்மணியோ, " நானும் அவளும் ஒன்னா".. என்று தனக்கு ஆத்திரம் வருகிறது என்பதை தன் கண்களை உருட்டி வெற்றிக்கு உணர்த்த அவனோ அனுவை நோட்டம் விட்டு கொண்டு இருந்தான்..கண்மணியோ , "என்னங்க  நீங்க நான் சொல்லிட்டே இருக்கேன்..உங்களுக்கே தோணலையா"... என்று உண்மையான வருத்தத்துடன் கேக்க...தன் மனைவி கூறுவது சரி என்றாலும் இந்த இடத்தில் தவறு அல்லவா என நினைத்தவன் , "இதில் என்ன தவறு கல்யாணம் பண்ணிட்டு படிக்கட்டும் "...என்று வெற்றி கண்மணியின் எரித்தனலில் எண்ணெய் ஊற்ற கண்மணி நான் ஒத்துக்க மாட்டேன் என்று குதிக்க தொடங்கி விட்டாள்..

ஆனால் இவர்களின் உரையாடலை எல்லாம் கேட்டு கொண்டு இருந்தவள் தனக்கு வேண்டி தானே இவர்கள் இருவரும் சண்டை இட்டு கொள்கின்றனர் என அறிந்தலால் அதை நிறுத்தும் பொருட்டு, " மாமா நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் "...என்று கூறினாள் பட்டென்று...

அப்படி வா வழிக்கு என்று நினைத்த வெற்றி, " ஏன் கல்யாணமே பண்ணிக்க மாட்டியா இல்லை இதுல இருக்கிற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டியா "...என்று கேட்க

அனு வோ ,"நான் அதுல இருக்கிற யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் "...என்றாள் உறுதியாக

"ஏன் உனக்கு என்ன பிரச்சனை".. என்று வெற்றி கேட்க

என்ன தான் இருந்தாலும் தன் அக்கா வீட்டுக்காரர் ஆகிற்றே அதனால் கோபம் எழுந்தாலும் அதை அடக்கி மெதுவாக "எனக்கு ஒரு பிரச்சனை இல்லை மாமா.. எனக்கு கல்யாணம் வேண்டாம்  நீங்க தாத்தா கிட்ட சொல்லுங்க "...என்று அந்த சமயம் வெற்றியிடம் உதவியும்  கேட்டு வைத்தாள்....கண்மணியும் அனுவுக்கு துணை போகும் விதத்தில் பேசி கொண்டு இருக்க...

வெற்றியும் விடாமல் , "என்ன சொல்ல சொல்ல வர நீ ஒருத்தனை காதலிக்கிற அதனால கல்யாணம் பண்ணிக்க உனக்கு விருப்பம் இல்லை னா "..என்று பட்டென்று போட்டு உடைக்க அந்நேரம் கண்மணி முகத்தில் அதிர்ச்சி என்றால் அனுவின் முகத்தில் பேரதிர்ச்சி..எப்படி தன் மாமாவிற்கு தெரிந்தது என்று அவள் கண்கள் கண்ணீர் சிந்த , "மாமா "...என்று ஓடி வந்து வெற்றியின் தோளில் சாய்ந்து அழ ஒரு தந்தையாய் ஒரு சகோதரனாய் அவளை தாங்கினான்...

அவள் அழட்டும் என்று நினைத்தவன் கண்மணியின் அதிர்ச்சி யை கண்டவன் அவள் கையை பிடித்து மெல்ல இழுத்தவன் அவளையும் தன் தோளோடு சேர்த்தான்...அனுவை ஆறுதல் செய்து விட்டு ,"இப்போ சொல்லு"... என்றான்..

அவள் தன் அக்காவிடம் மற்றும் மாமாவிடமும் எல்லாம் உண்மைகளையும் கூறினாள்... நேற்று நடந்த வரை கூற அந்த ஆள் யாருன்னா யாருன்னா என தயங்க கண்மணியோ டென்ஷனில், " சொல்லி தொலை டி யாரது "...என்று கேட்க வெற்றி பதில் கூறினான் அது சரவணன் என்று..இப்போது கண்மணி என்ன சொல்வதென்றே தெரியவில்லை...

"சரவணனும் அனுவும் காதலிக்கிறாங்க லா"... என அதிர்ச்சியுடன் கண்மணி நம்ப முடியாமல் மீண்டும் கேக்க  வெற்றி ஆமாம் என்பது போல தலை ஆட்ட அவள் இதை எதிர்பார்க்க வில்லை என அவள் முகமே காட்டி கொடுத்தது..

அனு  வெற்றியின் கையை பிடித்து , "மாமா ப்ளீஸ் மாமா எங்களை பிரிச்சிறாதீங்க மாமா அவரு ரொம்ப நல்லவரு மாமா என்னை அவரு சந்தோஷமா வெச்சுப்பாரு மாமா அக்கா சொல்லு அக்கா "...என்று வாயை பிளந்து அதிர்ச்சியோடு நிற்பவளை கூட்டுக்கு அழைக்க  அனுவை கட்டு இட்டு  இருக்கும் கையால் இவ என்ன பேசிட்டு இருக்கா என ஓங்கி அடிக்க போனாள் கண்மணி...

வெற்றியோ கூலாக அவளது கையை பிடித்தவன் , "இந்த கையை வெச்சிட்டு எங்கே அடிக்க போற கொஞ்சம் அமைதியா இரு "...என்று தன் மனைவியை பார்த்து கூலாக கூறியவன் "என்னமா சொல்லு என் தம்பியை பத்தி என்கிட்ட சேர்ட்டிபிகேட்டே கொடுத்துட்டு இருக்க நல்ல விஷயம் தான் உனக்கு என் தம்பியை பிடிச்சு இருக்கு னு தெரியும் ஆனால் இது வயது கோளாறு னு நான் சொன்னா "...என்று அவளை மடக்கி எதிர் கேள்வி கேட்க

அந்த சிறு பெண் துளியும் பயமின்றி , "இது வயது கோளாறு இல்லை மாமா.. அப்படி இருந்தா என்னோட கண் எல்லோரையும் பார்க்கும் ஆனால் என்னோட கண் அவரை மட்டும் தான் பார்க்க துடிக்குது புரிஞ்சுக்கோங்க மாமா"... என்று அழுது கொண்டே அதே சமயம் உறுதியுடன் கூறினாள்...

இவள் இந்த அளவுக்கு பேசுவாளா விளையாட்டு பிள்ளை என்று அல்லவா நினைத்து இருந்தேன் என்று கண்மணி நினைக்க வெற்றியோ ,"இதோ பாரு அனு எனக்கு என் தம்பி வேற இல்லை உங்க அக்காவை எப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டேனோ அப்போ இருந்து இந்த குடும்பம் என்னோட குடும்பம் அதுனால நீயும் வேற இல்லை...இந்த வயசுல பல பட்டாம்பூச்சி பறக்கும் ஆனால் அது எல்லாம் சரி ஆகாது ...ஆனால் உன்னோட உறுதி எனக்கு பிடிச்சு இருக்கு...ஒரு நல்ல படிச்சு நல்ல வேலைக்கு போனதுக்கு பிறகு தான் உனக்கு கல்யாணம் நடக்கும் அப்போவும் என் தம்பி தான் உன்னோட மனசில் இருந்தான் னா அப்போ நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் உங்க ரெண்டு பேருக்கும்"... என்று கிளீர் ஆக தன் கருத்தை கூறியவன் கண்மணி பிரமை பிடித்தவள் போல நிற்பவளை தன் அருகே இழுத்து அவள் தோளில் கை இட்டு, "இதுக்கு என்னோட மனைவியும் ஒத்துக்குவா "...என்று கண்மணியை பார்த்து கண்ணடித்த படி கூற கண்மணியோ அவன் கூறிய விஷயம் சரி என்றாதால் அமைதியாக இருந்தாள்..அவளுக்கும் அனு படிக்க வேண்டும் என்று இருக்க வெற்றி தான் வேலைக்கு சென்ற பிறகு தான் மத்தது எல்லாம் என்று கூறி விட்டானே அதனால் அவளுக்கு பிரச்சனை இல்லை...

அதுமட்டுமின்றி சரவணனை அருகில் இருந்து பார்த்ததாலும் அன்னம் கூறி பல விஷயங்கள்  அவனை பற்றி தெரிந்தாலும் அவனிடம் உரையாட வில்லை என்றாலும் நல்ல மதிப்பு இருப்பது என்னவோ உண்மை தான் ...அதே சமயம் அவனை திருமணம் செய்தால் தன் செல்ல தங்கை தன்னை விட்டு எங்கேயும் போக மாட்டாளே என்று எல்லாம் கணக்கு கூட்டி கொண்டு இருந்தவள் தன் முட்டை கண்ணை விரித்து கொண்டே இருக்க அவளை கண்டவன் அவள் செவியில், " என் தம்பி என்னை விட அழகா அவனுக்கு வர போற மனைவியை பார்த்துப்பான் டி என்று அந்த இடத்தில் தன் தம்பியை விட்டு கொடுக்காமல் கூறி சிரிக்க அவளோ அவன் மார்பில் அடித்து , "அது இல்லை ங்க எனக்கும் சரவணனை பற்றி தெரியும்"...என கூறியவள் அனுவிடம் தனக்கும் இதில் சம்மதம் தான் என்பது போல தன் தங்கையை அணைத்தாள்...அனுவுக்கும் இரண்டு நாட்களாக உழன்று கொண்டு இருந்த விஷயத்தை இறக்கி வைத்ததும் அவளின் மனபாரமும் குறைந்தது...

அப்போது கண்மணி, "ஆமாம் இப்போ சரவணன் எங்கே"... என்று கேட்க வெற்றியோ , "இப்போ நான் போட்ட போடுக்கு அவன் கிடைச்ச பஸ் ல ஏறி வந்துட்டு இருப்பான்" ...அவனை பற்றி பேசவும் அனு வெக்கப்பட கண்மணிக்கு ஒரு பெண்ணாய் தன் தங்கையின் மனது புரிந்து போனது...

அங்கே சரவணனோ அவளை கண்டது முதல் இந்நேரம் வரை அவளின் குரலை கேக்க முடியவில்லை ,நேற்றே பதட்டத்தில் இருந்தாலே என்னை போல வீட்டில் மாட்டி இருப்பாளோ வெற்றி என்னிடம் கேள்வி கேட்டு விடுவானோ என்று ஓடி வந்தேனே இப்போ அவன் அனுக்கு மாப்பிளை பார்க்கிறேன் னு சொல்றானே... அவளை எல்லோரும் கொடுமை படுத்திறாங்களோ என்று எல்லாம் மனதை போட்டு குழப்பியவன் போனை எடுத்து அவளுக்கு அழைக்க போக இந்நேரம் அவளை அழைத்தால் யாரேனும் எடுத்தாலோ என்று என்றால் யோசித்தவன் வேகமாக கிடைத்த பஸ்சில் திருநெல்வேலி க்கு ஏறினான்...

அதற்குள் மதியம் உணவு முடிந்ததும் பெரியவர்கள் எல்லாம் கூடத்தில் அமர்ந்து இருக்க அதாவது வெற்றியின் பெற்றோர் ,ஜானகி,விஜயராஜன், கண்மணி,அனு எல்லோரும் அமர்ந்து இருக்க வெற்றி அனுவின் திருமண பேச்சை ஆரம்பித்தான்...

தாத்தா, "எனக்கு தெரிஞ்ச ஒரு மாப்பிளை இருக்கான் கம்ப்யூட்டர் இன்ஜினீயர்...பொண்ணை நல்லா பார்த்துப்பான்...கை நிறைய சம்பளம்" என்று எல்லாம் கூற பெரியவர்கள் வாயை பிளந்து இவன் கூறுவதை ஆர்வத்தோடு கேட்டு கொண்டு இருந்தனர்...

"பையன் குடும்பம் உங்களுக்கு தெரிஞ்சது உங்களுக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும் ...நான் அனு கிட்ட பேசிட்டேன் அவளுக்கும் சம்மதம் னு சொல்லிட்டா ...இனி நீங்க தான் முடிவை சொல்லனும் "..என்று கூற

அன்னம் வேறு இடையில், " பையன் போட்டோ இருக்கா டா "...என்று ஆர்வத்தில் கேட்க , "எல்லாம் உனக்கு தெரிஞ்ச பையன் தான் மா".. என்று கூறினான் வெற்றி...

"யாருடா அது"..என்று அவர் யோசிக்க, நம்ம சரவணன் தான் மா என்று கூறினான் வெற்றி அன்னம் மற்றும் வேல்முருகன் கண்களாலே வினவ கண்மணி மெல்ல அனுவை கூட்டி அன்னம் பக்கத்தில் கொண்டு வந்து நிறுத்த அவருக்கு புரிந்து போனது... அன்னத்திற்கு கசக்குமா என்ன ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என நினைத்து கொண்டு அவளை உச்சி முகர்ந்தார்...

"தாத்தா பையன் வீட்டுல சம்மதம் பொண்ணு வீட்ல என்ன சொல்றீங்க...இல்லை என்ன சொல்லலாம் இந்த பையனை பிடிச்சு இருக்கா நம்ம அனுக்கு சரியா இருப்பாளா "...என்று பெண் வீட்டுக்காரன் ஆகவும் பேச ஜானகிக்கு தன் மருமகனின்  குணம் கண்டும் இனி வர போகும் மருமகனை எண்ணியும் கண்கள் பனிக்க அனைவரும் சரி என்று கூற பேத்திகள் இருவரும் ஒரே வீட்டில் இருந்தால் நாளை அவர்களுக்குள் பிரிவு வராதே என நினைத்த விஜயராஜன் அவரும் சம்மதம் தெரிவித்தார்..

ஆனால் வெற்றி எல்லோர் முன்னிலையில் ஒரு நிபந்தனை விதித்தான் அதாவது இப்போது நிச்சயம் வைக்க வேண்டும் என்றும் திருமணம் அனு வேலைக்கு சென்ற பிறகு என்று கூற அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்...

இவர்கள் எல்லாம் மகிழ்ச்சி கடலில் இருக்க மாப்பிளையோ பஸ் மாற்றி பஸ் மாற்றி பயணம் செய்து கொண்டு இருக்கிறார்...

நேசம் தொடரும்....



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top