Share:
Notifications
Clear all

நேசம் 52

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

அத்தியாயம் :52

நேசமடி நேசம்

  
     சரவணன் எதிர் பார்த்தது போல பஸ் கிடைக்கவில்லை வீட்டுக்கு வரும் போது மாலை ஆகி இருந்தது...அந்நேரம் எல்லோரும் வீட்டில் இருக்க எல்லோர் முக பாவத்தையும் கணக்கிட்டு கொண்டே வந்தவன் யாரிடமும் ஒன்றும் பேசாமல் அவன் அறைக்கு செல்ல பார்க்க அவன் மனது முழுவதும் தவிப்பு இருக்க யாரும் கேள்வி கேக்காதது வேறு அவனுக்கு உள்ளுக்குள் தவிப்பை கிளறி விட அதில் வேறு அன்னம் மெல்ல சரவணனை கிளறி பார்க்கும் விதத்தில், " நம்ம அனுக்கு பார்த்த மாப்பிளை அழகா இருக்காங்க ல "...என்று கண்மணியை பார்த்து கேக்க இதை எல்லாம் கேட்டு கொண்டே சரவணன் உள்ளே போக வேல்முருகன் மட்டும் , "என்ன டா போன அதுக்குள்ள வந்துட்ட பஸ் பிடிச்சு விளையாடுறியா "...என்று கேட்டார்...

என்னது மாப்பிளை பார்த்து முடிவு பண்ணிட்டாங்களா  என அதிர்ச்சியுடன் இருந்தவனுக்கு தன் தந்தை வேறு கேள்வி கேட்கவும் யார் மீது காட்டலாம் என இருந்தவன் சும்மா இருப்பவரிடம் பொங்கி விட்டான்...

" ஏன் இந்த வீட்டுக்கு வர கூடாதா... ஒரு வாரம் லீவ் னு சொன்னாங்க அதான் வந்தேன்...இப்போ என்ன எல்லோரும் கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க "...என்று அவர்களை பார்த்து காய்ந்து விட்டு அவன் அறைக்குள் சென்று தாளிட்டு கொண்டான்...

இரவு எல்லோரும் சேர்ந்து உணவு உண்ணும் சமயம் வெற்றி மட்டும் , "இரண்டு நாள் கழிச்சு கண்மணி ஊர் திருவிழா அன்னிக்கு அனு வீட்டுக்கு பொண்ணு மாப்பிளை வராங்க அதுனால நாம எல்லோரும் போகனும் "...என்று கூற சரவணனோ , "நான் வரல "...என்றான் பட்டென்று...

"ஏன் நீ வரமாட்ட நாம எல்லோரும் போறோம் ...நீ வந்து இருக்க...சும்மா மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு இருக்க...என்ன னு சொன்னா தான தெரியும்...கேள்வி கேட்டா கோவிச்சிட்டு போவியோ உன்னை எதுவும் நாங்க கேக்க கூடாது அப்படித்தானே ...நீ வர...வராம எங்கே போற னு நான் பார்க்கிறேன்".. என்று முறைத்து கொண்டே கூறி விட்டு வெற்றி கூறி விட்டு சென்றான்...ஆம் எல்லோரும் சேர்ந்து சரவணனிடம் விளையாடி கொண்டு இருந்தனர்...

இது அறியாத சரவணனோ தன் நிலையை யார் கிட்டயும் சொல்ல முடிய வில்லையே என்று தன் நிலையை அறவே வெறுத்து யாரிடமும் பேசாமல் அறையே கதி என்று முடங்கி இருக்க கடந்த இரு நாட்கள் ஆக அனுவின் மொபைலிற்கு அழைக்கிறான் அவள் போனை எடுக்கவே இல்லை...இவர்கள் வேறு பெண் பார்க்கும் சடங்கு என்று எல்லாம் கூற அவளை பார்க்க முயற்சி செய்யவும் முடியாமல் தாடி வளர்த்தி வரும் தேவதாஸ் ஆகி இருந்தான்...

இரண்டு நாள் கழித்து எல்லோரும் தயாராகி கொண்டு இருக்க அன்னம் சரவணன் அறையில் , "இந்தா இந்த ட்ரெஸை போட்டுக்கோ "..என்று வெற்றிக்கு பெண் பார்க்கும் போது சட்டை , வேட்டி எடுத்து வைத்து இருந்தாரோ அதே போல சரவணனுக்கும் எடுத்து வைக்க அவனோ தன் தாயின் மீது உள்ள கோபத்தில் , "எனக்கு ஒன்னும் வேணாம் நான் வரல "..என்று கூற அவரோ ,"யப்பா வெற்றி உன் தும்பி வரலையாம்..நீயே வந்து என்னனு கேளு "...என்று கூறி விட்டு தன் வேலை முடிந்தது என்பது போல கிளம்ப அவனோ வெற்றியை மனதில் நினைத்து அந்த உடையை எடுத்து உடுத்தினான்...ஆம் அவன் வந்தால் முதலில் கை பேசும் என சிறு வயதில் இருந்தே வெற்றியின் தம்பிக்கு தெரியாததா...

சரவணனும் மனதில் பொண்ணு மட்டும் பார்க்க எவனாவது வரட்டும் அவன் முடிஞ்சான் என நினைத்தவன் ஒரு வேளை அவளுக்கு பிடிச்சு இருக்குமோ என்று யோசிக்க கூட அவன் மனம் இடம் தரவில்லை... இப்போது விட்டால் தனியாக அனுவை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்காது என்று நினைத்து இதோ தயார் ஆகி விட்டான்...

வெற்றியின் குடும்பம் வீட்டுக்கு கண்மணியின் வீட்டுக்கு வந்து அரைமணி நேரம் ஆகி இருக்க அன்று தன் அண்ணனின் பெண் பார்க்கும் சடங்கின் போது அமர்ந்து இருந்த அதே கும்பல் இன்றும் அமர்ந்து இருந்தது...வீடே பரபரப்பாக இருக்க ஆண்கள் மட்டுமே கூடத்தில் அமர்ந்து இருக்க பெண்கள் அனைவரும் சமையல் அறை , அனுவின் அறை என ஆங்காங்கே இருந்தனர்..வந்ததும் வரததுமாக கண்மணி அனுவின் அறைக்குள் ஓடி விட்டாள்... அன்னம் கண்மணி வகையில் ஒரு பாட்டி அங்கே அமர்ந்து இருக்க அவரிடம் சென்று அமர்ந்து கொண்டார்...

இவனும் அவளை பார்க்க முடியாமலும் என் காதலிக்கு என் கண் முன் இப்படி ஒரு சடங்கும் நடக்க இருக்கும் போது அதை நான் பார்த்து கொண்டு இருக்கிறேனே என்று முகம் எல்லாம் கடுமையை வரவழைத்து யாரை கண்டாலும் கொல்லும் ஆத்திரத்தோடு சரவணன் அமர்ந்து இருக்க தன் நிலைமை யாருக்கும் வர கூடாது என்று இறைவனை அந்நேரம் பிராத்தனை செய்ய தவற வில்லை...

"என்ன தம்பி என்ன பண்றீங்க "...என்று தன் மொபைலை வெறித்து கொண்டு இருக்கும் சரவணன் அருகில் வந்து அமர்ந்தார் கண்மணியின் மாமா வெற்றியின் பாஷையில் குசும்பு மாமா...

"மொபைல் பார்த்துட்டு இருக்கேன் பார்த்தா தெரில "...என்று சரவணன் எதிர் கேள்வி கேட்டு மொபைலை வெறித்தான்...

"மாப்பிளை தம்பிக்கு ரொம்ப தான் குசும்பு தமாசா பேசுறாங்க"... என்று கூறி அவர் சிரிக்க அவனோ , "டேய் வெண்ணெய் நானே எரிச்சல் ல இருக்கேன் நான் காமெடி பண்றேன் னா "..என மனதுக்குள் நினைக்க ஆனால் அந்நேரம் அவர் கூறிய மாப்பிளை தம்பி என்ற வார்த்தையை கவனிக்க வில்லை...

அங்கே நடக்க இருப்பது அனுவின் பெண் பார்க்கும் சடலம் என்று நினைத்து கொண்டு இருக்கிறான்... ஆனால் அவனுக்கும் அவளுக்கும் நடக்க இருக்கிறது என்று அவன் இப்போது வரை அறியவில்லை...அவனும் அனுவின் மாப்பிளை ஆக வர போகும் யாரோ ஒருவனுக்காக காத்து இருக்கிறான்...

அந்நேரம் கண்மணி அனுவை தயார் செய்து அவளை அழைத்து கொண்டு வர ஆடி அசைந்து வந்தாள் சரவணனின் தேவதை ...அவன் அருகில் அமர்ந்து இருந்த வெற்றி , "டேய் நிமிர்ந்து தான் உக்காரு டா சடங்கு புள்ள மாதிரி தலையை குத்த வெச்சே உக்கார்ந்து இருக்க "...என்று கூறியவன் நிமிர்ந்து பார்க்க அங்கே அவள் அவனின் அவள் முழு நிலவாய் தயார் ஆகி இருக்க வெக்கம் கலந்த சிரிப்புடன் அவன் அருகில் வந்து நின்றாள்...

அவனோ நிமிர்ந்து எல்லோரையும் பார்த்து அவளை கண்டதும் எழுந்து நிற்க, "என்ன மாப்பிளை பொண்ணே தைரியமா உங்களை பார்த்துட்டு நிக்குது... நீங்க இப்படி பேய் அறைஞ்ச மாதிரி  நிக்கிறீங்க"...என்று அந்த குசும்பு மாமா கூற கண்மணி ஓடி வந்து இருவருக்கும் ஆளுக்கொரு மோதிரத்தை கொடுத்து இட சொன்னாள்...

"சீக்கிரம் கொழுந்தனாரே இப்போ ஆச்சும் வாயை திறந்து உங்க அண்ணிகிட்ட பேசுங்க .அனுவையே பார்த்துட்டு நிற்காமல்”.... என்று கண்மணி கூறி சிரிக்க அங்கே எல்லோரும் சிரித்தனர்..எதையும் நம்ப முடியாமல் எல்லோரையும் சரவணன் பார்க்க அங்கே அனைவரும் மகிழ்ச்சி கடலில் இருப்பதை பார்த்து சரவணனுக்கு  மகிழ்ச்சியே பின்ன தன் காதலியே மனைவியாக வந்தால் யாருக்கு தான் பிடிக்காது அதும் குடும்பங்கள் அனைவரும் ஒத்து கொண்டு இப்படி நடக்க தானே ஒவ்வொரு காதலர்களும் எதிர் பார்பர் அது சரவணன் மற்றும் அனுவுக்கு நடந்தது...

எல்லோரின் முன்னிலையில் சரவணன் மற்றும் கண்மணியின் நிச்சயம் எளிமையான முறையில் நடந்தது...இருவரும் ஒரு நல்ல நிலையில் சென்ற பின் ஒரு ஐந்து வருடங்கள் கழித்து தான் திருமணம் என்ற நிபந்தனைக்கு இருவரும் ஒத்து கொண்டனர்...

இருவரின் தூய அன்புக்கு பரிசு தான் இந்த திருமண நிச்சயம் என்றும் கூறி அவர்கள் இருவரை திக்கு முக்காட செய்து விட்டனர்..

சரவணனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை... அவன் தேவதாஸ் போல மாறலாம் என்று இருக்க அவனை பிடித்து ஒரு குட்டி ஹீரோ ஆக்கி விட்டனர் எல்லோரும்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top