Share:
Notifications
Clear all

நேசம் நிறைவு 53

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

நேசம் : 53

எல்லாம் கழிந்த பின் தன் அண்ணனை கட்டி பிடித்து, "டேய் வெற்றி ரொம்ப நன்றி டா ...நான் நிஜமா இதை எதிர்பார்க்கலை... எப்படி டா உனக்கு தெரிஞ்சது"... என்று ஒரு அரைமணி நேரம் முன்பு வரை முகத்தை தூக்கி வைத்து இருந்தவன் இப்போது பல்லை காட்டி இளிக்க

வெற்றியோ , "பல் தேய்ச்சிட்ட போல வாயை மூடு"... என்று கடிந்தவன் பின் "உனக்கு என்ன டா கேடு வாயை திறந்து சொல்ல...நாங்க என்ன உன்னை கடிச்சா தின்ன போறோம்...அனு சொன்னதுனால எல்லாம் நல்லபடியா நடந்துச்சு ...அவளுக்கு இருக்கிற தைரியம் கூட உனக்கு இல்லையே...அதான் கொஞ்சம் தவிக்கட்டும் னு விட்டுட்டேன்"... என்று கூறியவன்...

"இப்போ நிச்சயம் நடத்துற ஐடியா எல்லாம் இல்லை ஆனால் உங்க தவிப்பை அன்பை மதிச்சு நாங்க நடத்தி இருக்கோம் அதுனால ஹோட்டல் ல அங்கே இங்கே னு சுத்தாம அளவா சுத்து "...என்று அனுவின் மாமாவாய் கூறினான்...இனிதே அந்த நல்ல நாள் நிறைவுற காதலர்கள் பேசி கொள்ளவும் சிறிது நேரம் ஒதுக்கி இருந்தனர்...அவர்களும் மனம் விட்டு பேச எல்லாம் இனிதே முடிந்தது...

                 *****

அன்று இரவு கண்மணி பால் எடுத்துட்டு உள்ளே வர அவளை பின்னால் இருந்து அணைத்த வெற்றியை , "என்ன சார் இன்னிக்கு உங்க தம்பிக்கு தான் நிச்சயம் நடந்து இருக்கு நமக்கு இல்லை"...

"நாம வேணா நிச்சயம் செய்துக்கலாமே பெல்லு"... என்றான் கொஞ்சலாக...

ஆம் இப்பொழுது எல்லாம் அவளை பெல்லு என்று தான் அழைக்கிறான் ...அவளுக்கும் அவன் அவளை அப்படி அழைப்பதில் விருப்பமே...ஆரம்பத்தில் அவன் அப்படி அழைக்கும் போது மணியும் நானும் ஒன்றா என அவள் கேக்க

அவனோ சத்தியமா நீயும் மணியும் ஒன்னு கிடையாது ஆனால் நீயும் முக்கியம் மணியும் முக்கியம் இப்போ பேச சமயம் இல்லை என்று அவளை தூக்கியவன் கட்டிலில் கிடத்தி அவள் மேல் படர்ந்தான்...காதல் முத்து எடுக்க தொடங்கினான் தனது அதிரடியில் அவளும் அவனோடு எப்போதும் போல  இயைந்து போனாள்... அங்கே காதலர்கள் இருவரும் போனில் குடும்பம் நடத்தி கொண்டு இருக்க அண்ணன் நேரிடியாக குடும்பம் நடத்த தொடங்கி விட்டான்...

வான் மேகங்கள் போட்டி போட நக்ஷத்திரங்கள் ஆர்ப்பரிக்க நிலா பெண் நாணம் கொள்ள ஒரு அழகிய பயணம் மேற்கொண்டு இருந்தனர் வெற்றியும் கண்மணியும் அவர்கள் ஓர் உடல் ஆகி சில நாட்களே ஆனாலும் பல நாள் கடந்த காதலர்களை மிஞ்சி விட்டனர் இருவரும்...

பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைத்த கல்யாணம் என்று இவர்கள் இருவரை கண்டால் யாரும் கூற மாட்டார்கள் அந்த அளவுக்கு ஒரு நண்பர்களை போல, ஒரு காதலர்களை போல ஒரு ஆதர்ச தம்பதிகள் ஆக மாறி போயினர் கண்மணியும் வெற்றியும்...

ஐந்து வருடங்களுக்கு பிறகு....

அனு வெட்ஸ் சரவண வேல்

    வெற்றி கூறியது போல அவள் பட்ட மேற்படிப்பு படித்து கேம்பஸ் இல் செலக்ட் ஆகி இப்போது வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறாள்...சரவணனோ அமெரிக்காவில் இப்போது வேலை செய்து கொண்டு இருக்கிறான்...திருமணத்திற்கு பிறகு இவர்கள் அங்கே செல்ல போகின்றனர்...

தங்கள் காதலை கருக விடாமல் வீட்டார் காப்பாற்றி கொடுக்க காதலர்கள் கொடுத்த வாக்கையும் காப்பாற்றி விட்டனர்...அங்கே அனுவை அலங்காரம் செய்து கொண்டு இருக்க வெற்றி கண்மணியின்  மகன் விசாகன் வெற்றி வேல் மூன்று வயதே ஆனாலும் சிறு துப்பாக்கியோடு தானும் தன் தந்தையை போல போலீஸ் தான் ஆவேன் என்று அந்த மண்டபத்தையே வலம் வந்து கொண்டு இருக்கிறான்...

கண்மணி இப்போது ஸ்மைல் டெண்டல் கேர் எனும் மருத்துவமனையை சுயமாக நடத்தி வருகிறாள் கண்மணி...பெரியவர்கள் நால்வரும் சேர்ந்து இப்போது ஒரே வீட்டில் தான் ஒற்றுமையாக இருக்கின்றனர் அதற்கு காரணம் பேரமகன் அவனுக்கு வேண்டி அனைவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர் ஒரே குடும்பம் ஆக ...

கண்மணி தனது எட்டு மாத பெரிய வயிற்றை கோவில் தேர் போல ஆடி கொண்டே நடந்து வர அனு பரபரப்பு ஆனாள்... “அக்கா இன்னும் மாமா வரல “.....என முதலிலே கண்மணி இருக்கும் டென்ஷனிற்கு மேலும் வித்திடுவது போல அனு புலம்ப, " வருவார் டி "...என்று அவளுக்கு ஆறுதல் கூறியவள் முதல் வரிசையில் அமர்ந்து இருக்கும் ஓய்வு பெற்ற நரசிம்மனை காய போய் விட்டாள்...

அங்கே மேடையில் அமர்ந்து கொண்டு சரவணன் கண்மணியிடம் கண் ஜாடை செய்ய அவளோ, " வருவாங்க "...என்று செய்கை செய்தாள்...

"என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க டிப்பார்ட்மெண்ட் ...அந்த மனுஷன் வருவாரா மாட்டாரா... பல் செக் பண்ண என்கிட்ட தான் நீங்க வந்து ஆகனும்"... என்று மிரட்டினாள் அவரோ தலையை ஆட்டி கொண்டே இருந்தார்...எல்லோரும் அவளை கேக்க அந்த கோபத்தை நரசிம்மனிடம் இறக்கி வைத்த பின்னரே அவள் அடங்கினாள்..

ஆம் இவர்கள் இருவருக்கும் இடையில் தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான உறவு தான் ...தந்தையும் மகளும் எப்படி இருப்பார்களோ அது போல தான் கண்மணியும் நரசிம்மனும்...உரிமையான உறவு பாலம் அது...

  டேனியல் முதல் இரு வருடம் மருத்துவமனையே கதி என்று இருந்தவன் இப்போது அமைச்சருடன் கம்பி எண்ணி கொண்டது இருக்கிறான்..அவனது குடும்பத்தை மிக சிறப்பாகவும் தைரியமாகவும் நடத்தி கொண்டு இருக்கிறாள் ஜெமி அவன் ஊரை அடித்து சம்பாதித்த பணங்களை துளியும் தொடாமல் இருப்பதை வைத்து சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்....ஆனால் வெற்றி எவ்வளவு தூரம் ஜெமிக்கு அறிவுரை கூறினாலும் அவள் திருமணத்திற்கு மட்டும் ஒப்பு கொள்ள வில்லை....எந்த பிரச்னை வந்தாலும் வெற்றியை அழைக்க அவள் மறப்பது இல்லை இப்பொழுது அவளாலும் அவள் குடும்பத்தாலும் திருமணதிற்கு வர முடியாத சூழலில் இருப்பதால் அவள் வரவில்லை...

இத்தனை பிரச்சனைக்கு எல்லாம்  காரணமானவன் அங்கே ஒரு கேஸ் விஷயமாக சென்று இருக்கிறான்...அவன் வேலையை பற்றி எல்லோர்க்கு தெரிந்து இருந்தாலும் காலையில் வந்து விடுவான் என்று தான் எல்லோரும் நினைத்தனர் ஆனால் திருமணம் நடக்க இருபது நிமிடம் வரை இன்னும் வராமல் இருக்க அனைவரும் டென்ஷனில் இருக்க அந்த டென்ஷனிற்கு காரணம் ஆன கமிஷனர் வெற்றி வேல் அதே வேக நடையுடன் சிறிதும் கம்பீரம் குறையாமல் காக்கி உடையுடன் அனைவருக்கும் தலை அசைத்தவாரே வர அவனை கண்டதும் கண்மணியின் கோபம் சிறிது மட்டு பட்டு இருந்தாலும் காஜல் இட்ட விழிகள் அவனை எரித்தன...

மேடையில் எங்கே நின்று கொண்டு இருந்தானோ வெற்றியின் தலையை கண்டதும் மகன் விசாகன் தன் தந்தையிடம் ஓடி வந்து தாவினான்...அவனை கொஞ்சி கொண்டே கண்மணி அருகில் வந்தவன் அவளை கூலாக்கும் பொருட்டு "பெல் வா வா என்ன இப்படி பார்த்துட்டு இருக்க..சைட் அடிச்சது போதும் மாமா க்கு ட்ரெஸ் எடுத்து கொடு வா "..என்று அழைத்து சென்றான்...உள்ளே போய் மகன் காணாமல் அவள் அவனை சிறப்பாக கவனிக்க அவனும் அவளை சிறப்பாக கவனித்து குடும்பம் சகிதம் மேடைக்கு வர இனிதே நல்ல சமயத்தில் சரவணன் அனுவின் கழுத்தில் தாலி கட்டி தன் மனைவியாக ஏற்று கொண்டான்...எல்லோரும் இன்முகத்துடன் மணமக்களை வாழ்த்தி  மகிழ்ச்சி கடலில் நீந்தி கொண்டு இருக்க , வெற்றி தன் மனைவி இத்தனை நேரம் நடந்து களைத்து இருப்பதை கண்டு அவளை ஒரு இடத்தில் அமர்த்தி பழச்சாறு அருந்த கொடுத்து தன் கடமையையும் குடும்பத்தையும் சரி விகிதத்தில் கொண்டு போய் கொண்டு இருக்கும் வெற்றி மற்றும் கண்மணி இதே போல பல ஆண்டுகள் இதே போல மகிழ்ச்சியுடனும் ,அன்பும் ,பண்பும் காதலும் நிறைந்து வாழ வாழ்த்தி நாமும் விடை பெறுவோம்... நன்றி..

  **சுபம்**



   
Quote
(@jeunifer)
Active Member
Joined: 4 months ago
Messages: 8
 

Wonderful and interesting story ❤️❤️💐💐🎁🎁



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top