மன்மதன் 8
.
அத்தியாயம் : 8
மன்மதன் தேசத்து மல்லிகை
மாயாக்கு சத்தியமாக இரண்டு நிமிடங்களாக என்ன நடக்கிறது என்று புரியவில்லை..நண்பன் என்று நெனைத்தவன் காதலை சொல்ல அதை ஏற்பதா வேண்டாமா என அவளது மனம் போராடும் சமயம் இதோ எதிரே அசோக் வந்து நிற்கிறான்...அசோக் மற்றும் மனு சும்மா பார்த்து கொண்டாலே பத்தி கொள்ளும் காலேஜில் அனல் தெறிக்கும் அப்படி இருக்க அசோக் மனுவின் விஷயத்தில் மூக்கை நுழைத்து இருக்க முதல் நாளே முட்டி கொள்ள போகிறது என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை என மாயாவுக்கு புரிபட அவன் சற்று முன் கூறிய காதல் கூட நியாபகத்துக்கு வராமல் திகைத்து நின்று கொண்டு இருந்தாள் மாயா..
மனுவோ மாயாவின் அதிர்ச்சியை கண்டு கொள்ளாமல் திரும்பி பார்த்து அசோக்கை அடிக்க தயாராகி தன் கைகளை முறுக்கி , "ஏன் பார்த்தா உன் வீடு மாதிரி தெரியுதா?? "...என்று முறைத்து கொண்டு கேட்க
அசோக்கோ , "பீச் மாதிரி இருக்கு உங்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்ல சூப்பர் சீனியர்ஸ் ஒரு சின்ன பொண்ணு முன்னாடி எப்படி பீஹேவ் பண்ணனும்னு அறிவு இல்லை "...என்று கேட்க
மனுவோ நக்கல் சிரிப்புடன், " அது அன்னிக்கு நீயும் , நிகிதாவும் காலேஜ் ஆடிட்டோரியம் பின்னாடி இருக்கிற புதருக்குள்ளே மறைஞ்சி குடியும் குடித்தனம் நடத்திட்டு இருந்திங்களே அப்போ தெரியலையா இது காலேஜ்ன்னு ??.."...மனுவின் வார்த்தைகளில் நக்கல் வெளிப்பட்டது..
"மனு ஸ்டாப் திஸ் நான் சென்ஸ்.. அது உனக்கு தேவை இல்லாத விஷயம்"...என்று அசோக் எகிற
"உனக்கும் இது தேவை இல்லாத விஷயம் அசோக் உன்னோட சேர்மன் கெத்து , பவர், திமிரு எல்லாம் உன்னோட வெச்சுக்கோ அது நான் உனக்கு போட்ட பிச்சை அதையும் நியாபகத்துல வெச்சுக்கோ ..அண்ட் என் விஷயத்துல மூக்கை நுழைக்கிற அளவுக்கு கூட உனக்கு தகுதி இல்ல.."...என்று தக்க பதிலடி கொடுக்க அசோக்கின் முகம் இருண்டது..
மனு கூறியது உண்மை தான் மனுவால் தான் அவனுக்கு இந்த பதவி கிடைத்து இருந்தாலும் இரு பெண்கள் முன்னால் தன்னை தாழ்த்தி கொள்ள மனமில்லாத அசோக் அவர்கள் இருவரையும் விட்டு வெண்ணிலாவை பார்த்து , "இங்கே வா மா "...என்று மென்மையாக வெண்ணிலாவை அழைக்க வெண்ணிலாவோ இங்கே நடந்த கூத்தில் பயந்தவள் வேகமாக அசோக்கின் முகத்தை பார்த்து அதில் இருந்த மென்மையில் தானாக கால்களை ஒரு அடி எடுத்து வைக்க மனுவோ, " இங்கே இருந்து ஒரு அடி எடுத்து வெச்ச உன் கால் இருக்காது"... என்று அடிக்குரலில் வெண்ணிலாவை சீறினான்..
வெண்ணிலாவோ அவன் கூறியதில் பயந்து அங்கேயே நிற்க அவள் கண்ணுக்கு சற்று முன் மாயாவிற்கு மனு கொடுத்த முத்தம் தான் அவளை இம்சித்து கொல்ல அவளுக்கு செல்ல வேண்டும் என்று அவள் கால்கள் பரபரக்க மனுவின் சீறலில் அங்கேயே பயந்து நின்று கொண்டு இருந்தாள்..
அதற்குள் அவளது பயத்தை கண்ட அசோக் அவள் அருகே வந்து, " பயப்படாத ..உன் பெயர் என்ன மா "...என்க
"வெண்ணிலா "...என்று மனுவை ஓரக்கண்ணால் பார்த்தபடி தயங்கி அவள் கூற..
"வெண்ணிலா வா போகலாம் என்னை பார்த்து பயப்படனும்னு இல்லை அண்ட் இங்கே இருக்கிற எவனை பார்த்தும் பயப்படனும்னு இல்லை "...என்று கூற வெண்ணிலாவின் கண்களோ ஒரு நொடி மனுவின் மீது பாய மனுவோ தான் அணிந்து இருக்கும் சட்டை பட்டன் தெறிக்கும் அளவுக்கு அஷோக் முன்னால் விறைப்பாக நின்று கொண்டு இருந்தான் அதனுடன் கண்களாலே நீ அவனுடன் சென்றால் இனி என்னிடம் இனியும் அனுபவிப்பாய் என்ற எச்சரிக்கை இருக்க வெண்ணிலாவுக்கு அவன் கூற வருவது புரிந்தாலும் மனதுக்குள், " முதல் நாளே இப்படியா ஆண்டவா"... என கண்களில் நீர் துளிர்க்க நின்று கொண்டு இருந்தாள்..அவளை பார்க்க மாயாவிற்கு பாவமாக இருந்தது..
மாயாவிற்கு இதெல்லாம் பழகி போன ஒன்று என்பதால் மாயா அவர்கள் இருவரின் இடையில் வந்து நின்று மனுவை பார்த்து சூடாக , "மனு போதும் கிளம்பு இங்கிருந்து..ஒரு நிமிஷம் நீ இங்க கூடாது".. என்று கூறி அவனை தரதரவென இழுத்து சென்றாள்..
செல்லும் அவர்களையே பார்த்து கொண்டு இருந்த வெண்ணிலாவை கண்ட அசோக், " உன் கிளாஸ் என்ன??"... என்று கேட்க
"பர்ஸ்ட் ஈயர் BE "...என்று கூற
" ஓகே உன் கிளாஸ்க்கு போ யாராவது உன்னையோ உன் பிரெண்ட்ஸ் யாரையாவது ரேக் பண்ணினா என்கிட்ட சொல்லு நான் பார்த்துக்கறேன்..நான் தான் இந்த காலேஜ் சேர்மேன் நான் கம்பலைன்ட் பண்ணிக்கறேன்..ஒரு லெவலுக்கு மேலே இங்கே யாரும் ரேக் பண்ண கூடாது ".. என்று கூற வெண்ணிலாவோ வேகமாக தலையாட்டி , "அங்கே என்னோட பிரென்ட்"... என்று கூற
வனிதாவோ தோப்புக்கரணம் இட்டதில் கால் முட்டி தேய அப்படியே அமர்ந்து இருந்தாள் அவளோ வாய் முழுவதும் அவளை செய்ய வைத்த குமாரை அர்சித்து கொண்டு இருந்தது...அவளது இஷ்ட தெய்வங்களுக்கு எல்லாம் இவர்கள் அனைவர்க்கும் பேதியாக போக வேண்டும் என்ற ஒரு நீண்ட வேண்டுதலை வைத்து கொண்டு இருந்தாள்..
அங்கே இருந்த வானர கூட்டத்தையும் காணவில்லை என்பதை கண்டவளுக்கு , "அப்போ இவரு தான் இந்த காலேஜில் ஹீரோ வா ..இவரை பார்த்து பயந்து அந்த பொறுக்கி அவனோட டீம் எல்லாம் ஓடியதை பாரு"... என்று மனுவை கேவலமாக நினைத்து அசோக்கை பார்த்து சிரித்துக் கொண்டே விடை பெற்றாள்...
அதில் இருந்து அசோக்கை பார்க்கும் போதெல்லாம் மெல்லிய புன்னகையை சிந்த மறப்பதில்லை வெண்ணிலா கல்லூரி தொடங்கி ஒரு வாரம் ஆகி விட்டது.. அதற்கு இடையில் கேன்டீனிலும் அவளது அறை வாசலிலும் மனுவையும் அவனது வானர படையை பார்த்தாலும் இவள் கண்டு கொள்வதில்லை அவனும் கண்டு கொள்வதில்லை இப்படி ஒருத்தி இருக்கிறான் என்ற பாவமே இல்லை..
என்ன தான் அசோக் சேர்மன் என்றாலும் அவனை விட மனுவிடம் தான் எல்லா பிரச்சனைகளும் செல்லப்பட்டன ..அவனும் அப்படி தான் அவனுடைய ஜூனியர்ஸுடன் பழகினான்...என்ன ஒன்று அவனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்க்கு அவன் செல்லம் என்றாலும் வெளியே அவன் ஒரு ரௌடி தான் முதலில் அடி பின் தான் பேச்சு எல்லாம்..அவனுடைய டிபார்ட்மெண்ட்டில் என்ன பிரச்சனை என்றாலும் அவன் அங்கே இருப்பான் எதிர் முனையில் அசோக் இருப்பான்..
இருவருக்கும் எப்போதும் ஒத்து போகாது.. அந்த விஷயம் எல்லாம் வெண்ணிலாவிற்கு அரசல் புரசலாக அவள் கேள்விப்பட்டு இருந்தாலும் அசோக்கை விட்டு ஏன் மனு பின்னாடி அனைவரும் செல்கிறார்கள் என்பது அவளுக்கு புரியாத புதிராக இருந்தது..
எது எப்படியோ அவன் அதன் பிறகு அவள் பக்கம் திரும்பவில்லை என்றாலும் மனுவை அவளுக்கு பிடிக்கவில்லை என்பதாலும் அவள் அசோக் பக்கம் தான் ...அதிகம் அசோக்கோடு உரையாடவில்லை என்றாலும் இது போல பார்க்கும் போது மென்னகை புரியாமல் இருப்பது இல்லை..
