மன்மதன் 7
.
அத்தியாயம் : 7
மனுவோ அவளது முகத்தை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்து அவளை போலவே , "நானும் அந்த மாதிரி பையன் இல்லை"... என்று அவளை போலவே கூறியவன், "ரொம்ப ஆசைப்பட்டுக்காத நீ இல்லை அதோ அவ "...என்று கூற
புஷ் என பொங்கிய அவளது மனம் இறங்கினாலும் அவளோ மனதுக்குள், " அதுக்கு நான் என்ன டா பண்ணனும் என்னை விட்டு தான் தொலையேன் டா "...என நினைத்தாலும் அவனை ஏறிட்டு பார்க்க
அவளின் பார்வை மொழி புரிந்தவன், "நீ எனக்கு உன் தாவணியில் குடை பிடிக்கனும்".…. என்று கூற
"அவளோ என்னால செய்ய முடியாது".. என்று அவனை ஏறிட்டு பார்க்க பனை மரம் வளர்த்தி இருப்பவனுக்கு எப்படி குடை அதிலும் தாவணி குடையா முடியவே முடியாது என்பது போல பார்க்க அவனோ அதே சமயம் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான் காலையில் எப்படி அவளை அளவிட்டானோ அதே போல அளவிட அவளோ அவன் தந்த பார்வை தந்த சூட்டில் முகம் சிவந்தாலும் என்னால முடியாது என்று கூற
"நோ வே நீ செஞ்சுதான் ஆகனும்"... என்று அவனும் வம்படியாக நிற்க அவளோ 5 அடி பாவை அதில் எங்கே இவன் உயரத்துக்கு உயர்ந்து இவர்கள் செய்யும் லீலைக்கு குடை பிடிக்க என்று நினைக்கவே அவளுக்கு மலைப்பாக இருக்க அவனோ அவளை பார்த்து, " இங்க வா இங்க வந்து நில்லு உன் தாவணியை "...என்று அவளது தாவணியை தொட போக
வெண்ணிலா இரண்டு அடி நகர்ந்து நிற்க மனுவோ , "ஓ ரொம்பத்தான்".. என்று நெனைத்தவன் அவளை பார்த்து, " உன் தாவணியை விரிச்சு எங்களை மறைச்சு நில்லு "...என்றான் அவளும் அங்கே வனிதா தோப்புக்கரணம் போடுவதை பார்த்தவளுக்கு நமக்கு இவ்வளவு தானே என்ற மிதப்பில் வானவில் போல அழகாக அவளது முந்தானையை விரித்து அவர்கள் இருவரை மறைத்த படி பிடிக்க ஒரு பகுதி ஆட்களுக்கு அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாது என்றாலும் மறுபகுதியில் உள்ளவர்களுக்கு தெளிவாக தெரியும் என்ன நடக்கிறது என்று அப்படி அவளும் நிற்க மாயாவிற்கு சுத்தமாக ஒன்றுமே புரியவில்லை வெண்ணிலாவிடம் என்ன பேசினான் என்பது கேக்காத காரணத்தினால் அவள் அமைதியாக நிற்க
மனு மாயாவின் அருகே சென்று வெண்ணிலாவை ஒரு முறை சரியாக தாவணியை விரித்து பிடிக்கறாளா என சரி பார்த்து மாயா புறம் திரும்பி, மாயா ரொம்ப நாள் யோசிச்சு தான் சொல்றேன்..நாம பிரெண்ட்ஸ் ..உன்னை பத்தி எனக்கும் என்னை பத்தி உனக்கும் நல்லாவே தெரியும்.. என்னை உன்னை தவிர வேற யாராலும் இவ்வளவு தூரம் புரிஞ்சுக்க முடியாது சோ மாயா ஐ லவ் யூ "...என்க மாயா இதை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என்று அவள் கண்களே கூற
அதற்குள் மனு மாயாவின் அருகே நெருங்கி நின்று அவள் கன்னத்தில் அவனது முத்திரையை பதித்தான் வெண்ணிலாவோ என்ன செய்றான் இவன் என்று பார்க்க மீண்டும் அவனது நச் சத்தம் அவளது காதை தான் சூடாக்கியது ..அவன் கூறிய காதல் மொழிகள் எல்லாம் கேட்டாலும் இந்த நச் அவளை வெகுவாக தொல்லை செய்தது..
என்னவோ மனு அவளுக்கு தான் கொடுத்தது போல சூடானவள் வேகமாக அவளது முந்தியை கீழே இறக்க அங்கே கூடி இருந்தவர்கள் அனைவரும் பார்க்க , "ஹே "...என்று ஆர்ப்பரிக்க பின்னால் இருந்து ஒரு கம்பீரமான குரல் வந்தது ," இது என்ன காலேஜ்ஜா இல்லை வேற ஏதாவதா".. என்று கேட்டவன் வேறு யாருமில்லை அசோக் ...அவன் தான் மாணவர்கள் சங்க தலைவன் சுருக்கமாக சொன்னால் மனுவின் எதிரி...
மன்மதன் வருவான்…
