மன்மதன் 6

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

.
அத்தியாயம் : 6

அவளை திரும்பி பார்க்க, " இவளா"... என திகைத்து விழித்தவனுக்கு அவள் ஓடி வரும் போது அவள் ஓடி வரும் போது அவளது பாவாடை சற்று மேலே தூக்கி இருக்க அவளும் பாவாடை தடுக்க கூடாது என பிடித்து கொண்டே ஓடி வர  அதில் அவளது வெண்ணிற கால் அவனுக்கு விருந்தாக அவனோ, " ஹ்ம்ம் இதுவும் பார்த்துட்டேன்"... என அவனின் மனது கூறினாலும் அதற்கு முன் காலையில் நடந்த பிரச்சனை நியாபகத்துக்கு  வர அதிலும் அந்த விருமாண்டி நியாபகத்துக்கு வர, " நீ இந்த காலேஜில் தா  படிக்கிறியா இரு நீ முடிஞ்ச உன்னை ஓட ஓட விரட்டல"... என நினைத்து இலேசாக பார்வையை அந்த பக்கம் திருப்ப அவளுக்கு முன்னே தன்னை நோக்கி ஓடி வந்து கொண்டு இருந்த வேறு ஒரு பெண்ணை குமார்  இடைமறித்து அழைத்தான், " ஹே இங்கே வா"... என்க அவளும் முறைத்து கொண்டே வர

"என்ன முறைப்பு ஊருக்கு புதுசா"...

"ஆமாம் அதுக்கு என்ன இப்போ"..

"என்ன சத்தம் எல்லாம் பலமா இருக்கு..சூப்பர் சீனியர்ஸ் கிட்டேயே லந்தா.. போ சத்தமா பேசமாட்டேன்னு சொல்லிட்டே தோப்புக்கரணம் போடு போ "...என்க

வனிதாவோ , "இந்தாருங்க இது எல்லாம் தப்பு நான் பிரின்சி கிட்ட கம்ப்லைன்ட் பண்ணுவேன் "...என்று எகிற

குமாரோ , "அப்படியா ஆத்தா எப்படி இருந்தாலும் அந்த சப்ப மூக்கி எங்களுக்கு சஸ்பெண்ட் தந்துடுவா அதுக்கு முன்னாடி உன் மூக்கை உடைச்சிட்டு ஜெயிலுக்கு போறேன்..நாங்க ரௌடி தெரியுமா"... என்று முறைத்து சும்மா பைக் கீ செயினில் வைத்து இருந்த கத்தியை காட்ட வாயாடி வனிதா வாயை மூடி கொண்டாள்..அவளது பேக்கையும் பிடுங்கி வாங்கி சரண் வைத்து கொள்ள வேறு வழியே இல்லாமல் வனிதா அடங்கி தோப்புக்கரணம் போட்டாள்..

தூரத்தில் ஓடி வரும் போதே தன் தோழி மாட்டிக்கொண்டாளே என அவளை தனியாக விட்டுட்டு செல்லவும் மனம் இல்லாமல் அவள் வேகமாக ஓடி வந்து அவர்களிடம் நின்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி நிற்க மனுவின் விழிகள் இங்கே ஒருத்தியை நிற்க வைத்து கொண்டு கூச்சமே இல்லாமல் மற்றவளை சைட் அடித்தது..அதும் ஏறி இறங்கிய அவளது பெண்மைகளில் அவனது பார்வை நிலைத்து தான் இருந்தது..

அவள் கண்களுக்கோ வனிதாவை தவிர வேறு யாரும் தெரியவில்லை அப்படி இருக்க , "அண்ணா ப்ளீஸ் அவளை விட்டுடுங்க அண்ணா"... என்று ராமிடம் கெஞ்ச ராமோ காதே கேக்காத பாவத்தில் இருந்து கொண்டான்..

குமாரோ , " நீ அண்ணான்னு சொன்னத்துக்கே உன் பிரென்ட் தோப்புக்கரணம் போடுவா "...என்று கூறியவன் மனதுக்குள், " காலையில் இருந்து வரவ பூரா அண்ணான்னு சொல்லியே வெறுப்பு ஏத்துறாங்க"... என்று புலம்பி கொண்டான்..

இங்கே மாயாவோ, "மனு வெயில் அடிக்குது டா இன்னும் எத்தனை நேரம் இப்படியே நிக்க வைப்ப "..என்று மாயா இந்த பக்கம் சிணுங்க ,

மனுவோ அந்த சிவப்பு தாவணியை கண்ட உற்சாகத்தில் , "மாயா ஜஸ்ட் வெய்ட் "..என்று கூறி, "டேய் கொக்கி"... என்று அழைத்து தன் இருப்பை அந்த சிவப்பு தாவணிக்கு உறுதி செய்ய அவளோ இவனை பார்த்து அதிர அது தானே மனுவுக்கும் வேண்டும் , "அவளை இங்கே அனுப்பு".. என்று செய்கை செய்தான்...

கொக்கி வனிதாவை கையை காட்ட," டேய்".. என தலையில் தட்டி , "அவ இல்ல டா அவ சிகப்பு தாவணி".. என்று கூற ,"போ மா அவன் கூப்பிடறான் பாரு..உன் பிரெண்டை நாங்க பத்திரமா பார்த்துக்கறோம் "..என்று கூற

அவளோ இவனை கண்டு அதிர்ந்து கொண்டே தயங்கி தயங்கி வர ஒரு கையில் பூங்கொத்தை பிடித்து கொண்டு மார்பில் கையை கட்டி அவளை துளைத்து எடுக்கும் பார்வை பார்த்து கொண்டே இருந்தவனின் விழிகள் அப்போதும் அவள் உடலில் ஏதாவது தட்டுப்படுகின்றதா என்று தான் ஆராய்ந்து கொண்டு இருந்தது...

அவனது ஊசி குத்தும் பார்வையில் எதுக்கு இவன் இப்போ நம்மல கூப்பிடுறான் என்று உள்ளுக்குள் அவன் முகத்தை பார்த்து பயந்தாலும் மெதுவாக தயங்கியபடியே அவனருகில் செல்ல ,

"என்ன கூப்பிட்டா சீக்கிரம் வர மாட்டியா ஆடி அசைஞ்சு வர"... என்று முதல் கேள்வியை அவன் வைக்க

அவளோ பதிலே அளிக்காமல் அவனை பார்க்க என்ன கேள்வி கேட்டா பதில் சொல்ல தெரியாதா?? என்றான்..

இங்கே தோப்புக்கரணம் இட்டு கொண்டு இருந்த வனிதாவோ, " எதுக்கு அவளை கூப்பிடுறீங்க அது தான் நான் பன்றேன்ல அவளை விடுங்க அவங்க அண்ணனுக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சது உங்களை சும்மா விட மாட்டார் பார்த்துக்கோங்க".. என்று கூற

ராமோ, " அவங்க நொண்ணன் வந்தா என்ன புடுங்குவான்னு நாங்களும் பார்க்கிறோம் நீ மூடிட்டு சொன்ன வேலையை செய் "..என்று அவனும் அந்த இடத்தில் எகிறினான்..

வனிதாவின் லௌட் ஸ்பீக்கர் ஒலி மனுவின் காதிற்கும் எட்ட அதே போல மாயாவின் காதுகளுக்கும் செல்ல மாயா கண்களை திறந்து , "மனு வாட்ஸ் கோயிங் ஆன்".. என்று அவள் பதட்டப்பட்டு கேட்க

"மாயா ஐ டோல்ட் யூ க்ளோஸ் யூர் ஐஸ் ..நானா சொல்ற வரை திறக்காத"... என்று மாயாவை முறைத்து கூற அவனது முகமே கூறியது மாயாவிற்கு மனு கோபத்தில் இருக்கிறான் என்று இருந்தும் , "மனு லீவ் ஹெர் பார்க்க ரொம்ப பாவமா இருக்கா சின்ன பொண்ணு வேற இருக்கா" ...என்று அவளுக்கு துணை போக

அவனோ விடுவதாக இல்லை போலும், "மாயா காலேஜ் டேஸ்ல ரேக்கிங் இதெல்லாம் சகஜம் இதெல்லாம் பேஸ் பண்ணாதவங்க யாரும் இருக்க மாட்டாங்க..இது எல்லாம் பேஸ் பண்ண முடியாதவங்க அதுக்கு தைரியம் இல்லாதவங்க எதுக்கு இந்த மாதிரி காலேஜில் சேரனும்??..இங்கே எல்லாம் இப்படி தான் ஏன் நீ செய்யல அப்புறம் என்ன".. என்று கூறி அவள் வாயை அடைத்தவன்

அவளை பார்த்து அவள் அருகே ஒரு அடி நெருங்கி நின்று, " உன் கூட வந்தவன் உன் அண்ணனா"... என்று கேட்க அவளோ குனிந்த தலை நிமிராமல், " ஆமாம்"... என்றாள்.. அவளுக்கு அவனை பிடிக்கவில்லை சுத்தமாக பிடிக்கவில்லை அதே நேரம் அவனது பேச்சு அவளுக்குள் எரிச்சலை மூட்டி கொண்டு இருந்தது..

"ஐ சீ "...என்று அவனது தாடையை இலேசாக சொறிந்தபடி ஏதோ யோசித்தவன் , "நான் இந்த காலேஜ்ல இருக்கிற வரை  நீ என்கிட்ட இருந்து தப்பவே முடியாது இங்கே உங்க அண்ணன் என்ன பன்றான்னு பார்க்கிறேன்..பெரிய இவனா அவன் ரொம்ப துள்ளுறான் "...என்று கூற

அவளோ அவனை விட்டு இரண்டு அடி நீங்கி நின்று , "என் அண்ணனை பத்தி பேசுற வேலை எல்லாம் வேணாம் உங்களுக்கு நான் என்ன செய்யணும் அதை மட்டும் சொல்லுங்க "...என்று மெல்ல என்றாலும் வார்த்தைகள் தெளிவாக அதே நேரம் எதிராளிக்கு சுருக்கென்று ஏறுவது போலவே கூற மனுவின் விழிகள் மேலும் ஆச்சரியத்தில் நெளிந்து , "ஓ அப்போ நான் என்ன சொன்னாலும் செய்வ"... என்று இரட்டை அர்த்தத்தில் கேட்க

அதன் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை என்றாலும்," இன்னிக்கு மட்டும் தானே ரேக் பண்ணுவீங்க இன்னிக்கு மட்டும் செய்வேன்"... என்றாள் அந்த மொழியில் அவன் சற்று முன் கூறினானே தைரியமில்லை என்று அதை உடைத்து எடுப்பது போல இருந்தது அவளது பதில்..

மாயா இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தாலும் மீறி பேசினால் மனுவிற்கு கோபம் வரும் என்று அமைதியாகவே இருந்தாள்.. ஆனால் மனுவோ அவ்வளவு எளிதில் அவளை விடுவதாக இல்லை போலும்..

"ஆமாம் உன் பேர் என்ன??"... என்க

அவளோ அவனை நிமிர்ந்து மென் குரலில் , "வெண்ணிலா"... என்றாள்..

அவனோ அவளது பெயரை மெல்ல உச்சரித்து பார்த்து விட்டு அந்த பெயர் அவனது நாவிற்கும் ருசியை தந்தாலும் அவளின் திமிர் பேச்சு அவனுக்கு சுத்தமாக பிடிக்காத காரணத்தினாலும் , "என்ன வெண்ணிலா வேகாத நிலான்னு ஒரு பேர் எதுவோ ஒன்னு இங்கே வா"... என்று அவன் அருகே அழைக்க

அவள் ஒரு எட்டு அவன் அருகே சென்று நிற்க , "இப்போ என்ன செய்யறனா நான்  ப்ரொபோஸ் பண்ணனும் "...என்று கூற

வெண்ணிலாவோ தன்னிடம் தான் காதலை கூற வருகிறானோ என நினைத்து, ' நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல..நான் படிக்க தான் வந்து இருக்கேன்"..என்று கூறும் போதே அவளது முகம் ரத்தமென சிவந்தது..



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

👌👌👌👌👌



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top