மன்மதன் 5
.
அத்தியாயம் : 5
"என்ன டி நான் பேசிட்டு இருக்கேன் நீ ஒன்னும் சொல்லவே மாட்டேங்குற".. என்று வாயாடி வனிதா கூற அவளோ காலையில் நடந்த விஷயத்தை கூற," அடப்பாவமே அது தான் உங்க அண்ணன் சண்டியரு உன்னை விட்டுட்டு விறைப்பா போனாரா"... என்று கேட்க இவளோ," ஆமாம் டி அதுக்கு அந்த தீவட்டி தான் காரணம் இப்போ கூட பாரு எப்படி போறான்னு".. என்று கூற என்று ,"இரு வரேன் அவனை என்னன்னு கேட்டுட்டு வரேன்".. என்று இவள் சண்டைக்கு தயாராக,
மற்றவளோ , "அடியே சும்மா இரு இன்னிக்கு முதல் நாள் ...அங்கே பாரு எல்லோரும் ரேக்கிங் பண்ணிட்டு இருக்காங்க இதுல நீயா போய் மாட்டிக்காத..வா நாம அப்படியே இந்த சந்து வழியா போய் நம்ம கிளாஸ்ல உக்கார்ந்துக்கலாம் "...என்று கூற
அவளோ காதிலே வாங்கி கொள்ளாமல் ஓட
"ஹே போகாத டி நில்லு"... என்று வனிதாவின் பின்னாலே ஓடினாள் ..
அங்கே மாயா தன்னை இடிப்பது போல வரும் புதிய பைக்கை பார்த்து திகைத்து அந்த பைக்கிற்கு வழி விட்டது போல கொஞ்சம் தள்ளி நிற்க முயற்சி செய்ய அந்த பைக்கோ வேண்டுமென்றே அவளை இடிப்பது போல அவள் அருகே வந்து நின்றது யாரது என்று மாயா முறைக்க கருப்பு நிற ஹெல்மெட்டை அவிழ்த்து தன் தலை முடியை ஸ்டைலாக கோத ராம்,சரண்,குமார் மூவரும் , "ஹே மச்சா".. என்று கத்தி அவன் அருகே வந்து அவனை அனைத்து கொண்டு, "மச்சி பிறந்த நாள் கிப்ட் ஆஹ் சூப்பர் டா..மிலிட்டரி இந்த முறை ஹார்லி டேவின்சன் வாங்கி கொடுத்துட்டாறா எங்கப்பனும் இருக்காரே ஐம்பது பைசா சாக்லேட் கூட வாங்கி தரமாட்டாரு "..என்று குமாரு கூறி கொண்டே வாழ்த்து கூற அவனுடன் மற்றவர்களும் வாழ்த்துக்களை கூற மனுவுக்கோ தன் தந்தையை எண்ணி மிக பெருமையாக இருந்தது...அதிலும் அவன் ஆசைப்பட்ட பைக்கை பார்க்க பார்க்க அவனுக்கு தெவிட்டவில்லை என்றே கூற வேண்டும்..
மாயாவோ அவர்களுடைய கொஞ்சல்கள் எல்லாம் முடியட்டும் என அமைதியாக நின்று கொண்டு இருந்தாள்..
"மச்சி அப்புறம் பொறந்த நாள் அதுவுமா எங்களுக்கு என்ன வாங்கி தர போற "..என்று குமார் கேட்க
"டேய் கொக்கி எப்போவும் அவன் தானே தருவான் கொஞ்சம் அடங்கு அதெல்லாம் மச்சான் தருவான் இல்லடா "..என்று சரண் எடுத்து கொடுக்க அதை எல்லாம் எங்கே மனு கேட்டான்
அவன் பார்வை முழுவதும் அவனது மாயாவின் மீது நிலைத்து மேலும் குமார் தொல்லை செய்ய ஆத்திரம் வந்த மனு, " டேய் குமாரு அதெல்லாம் சாயந்தரம் தான் காலேஜ் முடிஞ்சதும் போறோம் சரக்கு அடிக்கறோம்..கொண்டாடுறோம்"... என்று கூற அவர்களும் விலகி அவர்கள் ரேக்கிங் செய்து கொண்டு இருந்த இடத்திற்கு செல்ல ஸ்டைலாக வண்டியில் இருந்து இறங்கியவன் தன்னையே விழி மூடாமல் பார்த்து கொண்டு இருக்கும் மாயாவை பார்த்து அவள் அருகில் வர அவளோ கைகளை பின்னால் கட்டியபடி சிரித்த படி நின்று கொண்டு இருந்தாள்..
"என்ன மாயா சிரிக்கிற".. என்று அவளை தலை முதல் கால் வரை பார்க்கும் போது ஏனோ ஒரு நொடி அந்த தாவணி பெண் அவனது கண் முன் வந்து போனாள்..." ச்ச என்ன இது அவளை பத்தி யோசிக்கறோம்..அவள பார்த்தோமா விட்டோமான்னு இருக்கணும் "..என்று நினைத்தவன் தலையை உலுக்கி தன்னை சமன் செய்து, "என்ன அப்படி பார்த்து சிரிச்சுட்டு இருக்க மயக்கும் மோகினியே".. என்று அவளை பார்த்து கேட்க
மாயாவோ, "இல்ல இன்னிக்கு தான் குளிச்சு இருப்ப போல ரொம்ப அழகா தெரியுற என் கண்ணுக்கு மட்டும் தானா இல்லை நிஜமாவே குளிச்சிட்டியா"... என்று மாயா அவனை பார்த்து நக்கல் அடித்தாள்...
மனுவோ அவள் தலையில் செல்லமாக கொட்டி , "அதெல்லாம் நான் குளிச்சாச்சு மேடம் அதே மாதிரி மாயா யூ லுக் ஆசம்"... என்று கூற அவளோ நான் இவன் புதுசா இப்படி சொல்றான் எப்போவும் இப்படி எல்லாம் உளற மாட்டானே என நினைத்து , "என்ன டா கிண்டல் பண்றியா"... என குழம்பி கேட்க
அவனோ, " இல்ல மாயா என்ன தான் நீ பஞ்சு மிட்டாய் கலர் சட்டை போட்டு இருந்தாலும் இன்னிக்கு என் கண்ணுக்கு அழகா தான் இருக்க"... என்று கூற அவளோ அவனை நம்பாமல், " நீ இப்படி தான் ஏதாவது உலறிட்டு இருப்ப ஹாப்பி பெர்த் டே மனு "...என்று அவனை இலேசாக அணைத்தபடி அவள் கையில் இருந்த கிஃப்ட்டை கொடுக்க அதை வாங்கியவனோ வேகமாக பிரிக்க அதில் அர்மானி பிராண்ட் வாட்ச் பளபளத்து கொண்டு இருந்தது..
அந்த வாட்சை பார்த்ததும் மனுவோ, " ஹே பேபி தாங்க் யூ "..என்று அவளை அணைத்தபடி கூற அவளோ அந்த வாட்சை எடுத்து அவளே கட்டி விட்டாள்... மாயா ஒரு பெரிய ஆடிட்டரின் மகள் ..பணம் நிறைந்து இருந்தாலும் அதை எப்போதும் காட்டியது இல்லை ஆனால் அவளுக்கு எப்போதும் மனு ஸ்பெசல் தான்..
வேகமாக அவனது காதலை அவளுக்கு கூறிட மனு அவளை அழைத்து கொண்டு கிரௌண்டின் ஓரத்தில் மரத்தின் நிழலில் அவர்களது நண்பர்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு 20 மீட்டர் இடைவெளியில் மாயாவை நிற்க வைத்து, " மாயா நான் சொல்ற வரை கண்ணை திறக்காதே "..என்று கூற
"என்ன டா நீ இன்னிக்கு ஒரு மார்க்கமாவே பேசுற ..உனக்கு என்ன ஆச்சு..எங்கே கூட்டிட்டு போற.. என்ன டா செய்யற"... என்று அவள் சிரித்தபடியே ஆயிரம் கேள்விகளை கேட்க
"மாயா எனக்கு கிப்ட் கொடுத்த உனக்கு ரீடர்ன் கிப்ட் ஒன்னும் கொடுக்க வேணாமா சோ ப்ளீஸ் என்கிட்ட எதுவும் கேக்காத அதுக்கு பதில் சொல்ற மூட்ல நான் இல்ல..கொஞ்ச நேரம் போனா உனக்கே தெரிஞ்சிட போகுது..".... என்று கூற
அவளோ, " மனு என்னை வெச்சு ஏதாவது காமெடி பண்ணிடாத ஜூனியர்ஸ் வேற வந்துட்டு இருக்காங்க "...என்று கூற
"அதெல்லாம் பண்ணமாட்டேன் நான் சொல்ற வரை கண்ணையும் வாயையும் கொஞ்சம் பொத்திட்டு இங்க நில்லு "...என்று கூறி அவளை நிறுத்த..
அவளும் அவளது பாப்பை ஒரு முறை சரி செய்து விட்டு இடுப்பில் கை கொடுத்து இலேசாக சிரித்த படி நிற்க அவனோ ஏற்கனவே அவனது பைக்கில் வைத்து இருந்த அந்த சிவப்பு நிற ரோஜா பூக்கள் கொண்ட பொக்கேயை எடுத்து வந்து அவள் முகத்தை பார்க்க அவளோ கண்களை மூடினாலும் அவள் முகத்தில் சின்ன சிரிப்பும் அவன் என்ன செய்ய போகிறான் என்ற ஆர்வமும் தாண்டவம் ஆட அவளது ரோஜா இதழ்கள் விரிந்து அவள் சிரிக்க அவனோ சொக்கி போய் அவள் முன்னே பொக்கேவை நீட்டி , "மாயா".. என்று ஆரம்பிக்கும் முன் , "ஹே சொல்லிடாத இரு நான் வரேன்..வேண்டாம் சொல்லாத "...என்று மென் குரல் எங்கேயோ கேட்டது..
மனுவோ , "இது என்ன டா தடை என் காதலுக்கு ".. என நினைத்து திரும்ப அங்கே அதே சிவப்பு தாவணி புத்தகத்தை மார்பில் பிடித்து கொண்டு ஓடி வந்து கொண்டு இருந்தாள்..
