மன்மதன் 4
.அத்தியாயம் : 4
மன்மதன் தேசத்து மல்லிகை
சென்னை SSM பல்கலைக்கழகம் ஒரு நாற்பது ஏக்கரை விழுங்கி அதில் பல உயர்ந்த கட்டிடங்களால் காட்சி அளித்து கொண்டு இருந்தது..அந்த பல்கலைக்கழகம் இந்தியாவிலேயே மிக பெரிய கல்வி குழுமம்..பெயரும் புகழும் பெற்ற அந்த குழுமத்தில் மருத்துவம்,பொறியியல்,கலை மற்றும் அறிவியல் என அனைத்து துறை மாணவர்களும் படிக்கும் நிறுவனம்..பணக்கார மாணவர்களும் இருப்பர் அதே சமயம் நன்றாக படிக்கும் மாணவர்களையும் உள்ளடக்கிய நிறுவனம்.. அதனால் அந்த நிறுவனத்தின் பெயர் உலகம் முழுவதும் பரவி இருந்தது...
பாடசாலைகள் தான் நமது வாழ்க்கையில் நம் மனதோடு ஒன்றிய அழகிய காலம்..இளமை ததும்பும் காலம் இளம் ரத்தம் ஓடும் காலம்...நாம் அனைவரும் நம்முடைய அதீத மகிழ்ச்சியையும் கண்ட இடம் அதே போல அதீத உண்மையான வருத்தங்களையும் பெற்ற ஒரே இடம்..ரத்தம் சம்பந்தம் இல்லா உயிருக்கும் மேலான உறவுகளை பெற்ற இடம் அப்படி ஒரு அழகிய இடத்தில் பறந்து விரிந்த மரத்தின் அடியில் மாயா நின்று கையில் ஒரு கிஃப்ட்டுடன் நின்று கொண்டு இருந்தாள்..
எவன் சொன்னது இடை வரை கூந்தல் தான் அழகு இதோ பிரம்மனின் படைப்பில் இவளின் பாப் கட் கூட அழகு தான்..வட்ட முகத்தில் பிறை போன்ற நெற்றி அதில் வில் போன்ற புருவத்துக்கு மத்தியில் கடுகை விட சிறிதாய் பொட்டிட்டு கண்களில் அதீத காஜல் மிளிர சூரிய ஒளியில் பட்டு அவளின் ரோஜா நிற இதழ்களில் அவள் பூசி இருந்த லிப்கிளாஸ் மின்ன காண்போர் எவனையும் தீண்ட துடிக்கும் ..பிங்க் நிற ஷர்ட் அணிந்து டெனிம் ஜீன்ஸ் அணிந்து இருந்தாள்...அவள் பார்வையோ வாயிலிலே நிற்க இன்னும் மனு வரவில்லை..இரண்டு மாதம் விடுமுறை முடிந்து இன்று தான் கல்லூரியின் முதல் நாள் அதே சமயம் அவனுடைய பிறந்த நாளும் கூட...
அவனுக்காக தான் காலையில் இருந்து காத்து கொண்டு இருக்கிறாள்..அவன் தாமதம் ஆவதை கண்டு அவள் மெல்ல பார்வையை சுழல விட அங்கே சீனியர் மாணவர்கள் பலர் புதிதாக வந்து இருக்கும் ஜுனியர் மாணவர்களை ரேக்கிங் செய்து கொண்டு இருந்தனர்...
போன வருடம் தங்களை என்ன எல்லாம் அவர்களது சீனியர் மாணவர்கள் செய்தார்களோ அதை எல்லாம் இப்போது புதியவர்களை வைத்து செய்து கொண்டு இருக்க அதில் சூப்பர் சீனியர் மாணவர்களும் அடங்குவர்..
சூப்பர் சீனியர்கள் ME மாணவர்களான மனுவின் நண்பர்கள் ராம் , சரண், குமார் மூவரும் வேறு ஒரு சிலரும் குறிப்பாக அழகான பெண்களை மட்டும் குறி வைத்து ரேக் செய்து கொண்டு இருந்தனர்..அதில் ஏதேனும் அழகிய பெண்கள் வந்தால் அவர்களுக்குள்ளே சண்டை வரும் யார் முதலில் அந்த பெண்களிடம் பேசுவது என்று இதற்கு எல்லாம் பஞ்சாயத்து மாயாவிடமே வரும் அவளும் அவளது நண்பர்களின் செயல்களை கண்டு ரசித்து கொண்டு இருந்தாள்..
இதில் குமார் பெயர் திருக்குமரன் இவர்கள் அவனுக்கு வைத்த பெயர் குமாரு கொக்கி குமாரு ஆம் அவன் பார்க்க தனுஷ் போல இருப்பதால் தான் அந்த பெயர் அதிலும் அவன் என்ன சாப்பிட்டாலும் உடலில் தங்காது என்பதாலும் வாய் மட்டும் காது வரை நீளும் அதனாலேயே அவனுடைய பெயர் அவ்வாறாகி போக இவர்களுடைய எண்டர்டைனர் என்று தான் சொல்ல வேண்டும்..
இவர்கள் இங்கே வம்பு செய்து கொண்டு இருக்க அப்போது தான் புத்தம் புதிய ஒரு ஹார்லி டேவின்சன் பைக் வீலிங் செய்த படி அந்த கல்லூரி வளாகத்தில் நுழைந்தது..அந்த வண்டியை பார்த்து பலர் ஒதுங்க ஒரு சிலர் வாவ் என்று ஆர்ப்பரிக்க அங்கே இருந்த மாணவர்கள் பலர் விசில் அடித்து வரவேற்க ஒரே ஒருத்தி மட்டும் அந்த வண்டியை பார்த்தும் அதை ஒட்டி கொண்டு வந்தவனின் அழகை பார்த்து , " அந்த குரங்கு எப்படி ஒட்டிட்டு வருது பாரு அது தான் இரண்டு வீல் குடுத்து இருக்காங்க இல்ல அங்கே பார் ஒரு வீல்ல ஒட்டிட்டு வருது..இதெல்லாம் படிக்கற பிள்ளைங்க படிக்கற காலேஜ்ஜா "...என்று அவளுடைய தோழியும் ஊர்க்காரி வாயாடி வனிதா சொல்ல கூட வந்தவளும் அப்போது நிமிர்ந்து பார்த்தாள்..
ஒரு நிமிடம் அந்த வண்டியை பார்த்ததும் அவளுக்கு தலை சுற்றியது என்னவோ உண்மை தான் ஆம் அது அதுவே தான் அவனது வண்டியை புத்தம் புதிய கவர் கூட சரி வர பிரிக்க படாத சற்று முன் தான் விழுந்து சில்லறை வாங்கிய வண்டி தான் என்று நினைவுக்கு வர அதிலும் இந்த காலேஜில்லா அவன் படிக்கிறான் என்ற விஷயம் வேகமாக மனதில் ஓடவும் அவளுக்கு எரிச்சல் மேலும் மூண்டது..இன்னும் என்ன எல்லாம் பார்க்க வேண்டி இருக்குமோ என்று மானசீகமாக தலையில் அடித்து கொண்டாலும் இந்த வண்டிக்காரனை இனி தன் வாழ்க்கையில் பார்க்க கூடாது என்ற வேண்டுதலையும் வைத்தாள்...ஆனால் அந்த வேண்டுதல் என்றுமே நிறைவேற போவதில்லை என்பது அவளுக்கு அந்நேரம் தெரியவில்லை..
அந்த வண்டியை ஓட்டி வந்த மனுவோ எதை பற்றியும் கவலை படாமல் யார் கண் முன்னே வருகிறார்கள் போகிறார்கள் என்ற கவலை இல்லாமல் வீலிங் செய்து கொண்டே மாயாவையும் இவனது நண்பர்களையும் தேடிக் கொண்டே இவளை கடக்க அவன் வந்த வேகத்தில் இவளது தாவணி காற்றில் பறந்தது..
அவள் தாவணி காற்றில் பறப்பதை பார்த்த மாணவர்கள் சிலர் , "டேய் அங்கே பாரு டா மச்சி..மதுர மல்லி..பறக்குது தாவணி "...என்று கூறி சிரிக்க அவளோ தலைய குனிந்து வேகமாக தன் உடையை சரி செய்தாள்..அவளுக்கு அதற்குள் முனுக்கென்று கண்ணீர் எட்டி பார்த்தது.. அவளுக்கு இந்த பணக்கார சென்னை படிக்கவில்லை இந்த பணக்கார பிள்ளைகள் மட்டுமே படிக்கும் இந்த கல்லூரி பிடிக்கவில்லை..அவளுக்கு அவளது ஊர் தான் பிடித்து இருக்கிறது..அவளுக்கு அவளது ஊரில் இருக்கும் அரசு கல்லூரியில் படித்தால் போதும் ஆனால் அவள் வீட்டில் அவள் அண்ணனும் அப்பாவும் தான் இங்கே சேர்த்தி விட்டு அவளை பாடாதபாடு படுத்துகின்றனர்..அவளும் வீட்டில் இங்கே படிக்க விருப்பம் இல்லை அது இது என்று உருண்டு புரண்டு விட்டாள் ஆனால் யாரும் கேட்பதாக இல்லை இறுதியில் அவளது தாத்தாவும் பாட்டியும் கூட எடுத்து சொல்லி பார்க்க அவளது அண்ணன் செழியன் கேட்கவே இல்லை இங்கே கொண்டு வந்து சேர்த்தும் விட்டு இதோ அவளை கையோடு இந்த கல்லூரி வாயிலில் கொண்டு வந்து விட்டுவிட்டே செல்ல இப்போது அவளுக்கு என்று இருக்கும் ஒரே ஆறுதல் இந்த வனிதா தான் அதுவும் அவளது அண்ணன் செழியனின் ஏற்பாடு தான் வனிதா வேறு யாருமில்லை இவளுக்கு தோழி என்றால் இவளது அண்ணன் பசுபதி செழியனுக்கு நண்பன் இப்போது வலது கை செழியனின் கண் பார்வையின் பொருள் பசுபதிக்கு மட்டுமே தெரியும்..அப்படி இருக்க பசுபதி அவனது தங்கையையும் இந்த கல்லூரியில் சேர்த்தி விட்டான்..வனிதாவும் ஊரில் இருந்தால் தினமும் சாணி அள்ள வேண்டும் என நினைத்து இங்கே தாவி விட்டாள்..
