மன்மதன் 3

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

.
அத்தியாயம் : 3

பின்னால் இருந்து பார்ப்பவர்களுக்கு மனு அவளை இடித்தது போலவே இருக்க ஆனால் அவன் அவளுக்கும் அவனுக்கும் மூன்று அடி இடைவெளியிலே வண்டியை நிறுத்தி அவளை பார்த்து கொண்டு இருக்கும் போதே அவளுக்கு பின்னால் இருந்த காரில் இருந்து இறங்கிய ஆடவன் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை சகிதம் தனது கட்டுமஸ்தான உடலால் எந்த கொம்பனையும் அடித்து வீழ்த்தி விடுவேன் என்ற பார்வையில் தன் முறுக்கு மீசையை நீவிய படி ஓடி வந்தவன் , "அம்மு".. என்று கூறி ஓடி வந்தவன் கீழே விழுந்தவளை தூக்கி நிறுத்தியவன் , "உனக்கும் ஒன்னும் அடிப்படலையே கண்ணு "..என்று அவளின் உடலை ஒரு நொடியில் வேகமாக ஆராய அவள் , "இல்லை".. என்று கூறுவதற்குள் எதிரே புரியாமல் நின்று கொண்டு இருந்த மனுவை பார்த்து வேறு எதுவுமே அவன் யோசிக்காமல் அவனது புத்தம் புது வண்டியை உதைத்து , "என்ன திமிறா பொம்பளை புள்ள வரது கண்ணுக்கு தெரியல ???என்ன டா ??திமிறா பார்க்கிற ???என்று ஆத்திரத்தில் மனுவின் சட்டையை பிடிக்க மனுவுக்கு அவனது அதிகாரம் துளியும் பிடிக்காமல் போக அந்த வெள்ளை வேட்டியின் சத்ததிற்கு மனுவின் முடி கூட அசையாமல் இருந்த இடத்திலேயே மார்பில் தன் கைகளை கட்டி தீர்க்கமாக எதிரே இருந்தவனை பார்த்து, " அப்போ நான் இடிச்சேன்னு சொல்ல வர ??.."

"ஆமாம் டா நீ இடிச்சதுனால தானே அவ விழுந்து இருக்கா"...

"இப்போ என் மேல வெச்சி இருக்க உன் கையை நீயா எடுக்கல இந்த நிமிஷம் வரை அந்த பொண்ணு மேல நான் வண்டியை ஏத்தல.. ஏத்த வெச்சிடாத ..வரே வா..நல்ல பிளான் விழுகிற மாதிரி விழுந்து பணம் சம்பாதிக்க இப்படி ஒரு ட்ரிக்கா உங்களை மாதிரி ஆளுங்களை எல்லாம் எவ்ளோ பார்த்து இருப்போம் இந்த சென்னையில.. கொஞ்சம் அடங்கு..என்னமோ உனக்கு மட்டும் தான் அடிக்க தெரியும்னு நெனைச்சுட்டு இருக்கியா நாங்க அடிச்சாலும் அடி விழும் "....என்று அவனும் எகிற

கூட இருந்த அந்த பாவாடை தாவணி அணிந்த அந்த பெண்ணோ தயங்கிய படி மனுவை நிமிர்ந்து பார்க்க மனுவும் அந்த நொடி அவளை பார்க்க இடையை தாண்டி கூந்தல் அதை பின்னி நல்ல மணக்கும் மல்லிகை பூ வைத்து இருந்தாள் மேலும் அவளுக்கு பிறை போன்ற நெற்றியில் அவளது முன் உச்சி முடி புரள  வில் போன்ற புருவத்துக்கு மத்தியில் சிறு ஸ்டிக்கர் நிற பொட்டு கூரான மூக்கில் சிறிய சிவப்பு நிற முக்கூத்தி அணிந்து சிவப்பு சாயம் பூசமாலே அவள் அதரம் சிவந்து இருக்க முகமோ பயத்தில் மொத்தமாக சிவந்து இழுக்க மனுவின் பார்வை மேலும் கீழ் இறங்கி செல்ல அவளது வெண் சங்கு கழுத்தில் மெலிதான செயின் அணிந்து இருக்க சிவப்பும் நிற தாவணி அடர் நீல நிற தாவணி அதற்கு தகுந்த ரவிக்கை அணிந்து இருக்க அவளை இஞ்ச் பை இஞ்ச் ஆக அளவெடுத்தவன் கண்களில் கீழே விழுந்ததில் அவளது மாராப்பு விலகி இருப்பதை பார்க்க ஒரு நொடி அவனது பார்வை அங்கேயும் பட்டு வெளியே விறைப்பாக ஹல்க் போல அவன் நின்று கொண்டு இருந்தாலும் உள்ளே மனதுக்குள், " ப்பா செம்ம ஹாட் "...என்று ஒரு நொடி வந்து போனது என்னவோ உண்மை தான் அதே நேரம் அவளின் பெண்மையில் இருந்த அவனது பார்வை அடி கீழ் இறங்க சிறுத்த இடை அதும் எலுமிச்சை நிறத்தை உள்வாங்கி இருக்க யாரும் பார்க்க கூடாது என்று ரவிக்கையோடு சேர்த்து பின் குத்தி இருப்பாள் போலும் ஆனாலும் இந்த கள்வன் கொஞ்சமே கொஞ்சம் பார்த்து விட ஒரு நொடி தான் அளவிட்டாலும் எல்லா விஷயங்களையும் அவன் உள்ளே பரப்பி கொண்டது என்னவோ சத்தியம் தான் அவளோ அவனது துளைத்து எடுக்கும் பார்வை அவளது தேகத்தை கூச செய்ய வேகமாக தன்னை பார்த்து விலகிய மாராப்பை சரி செய்து அவனை பார்த்து முறைக்க

மனுவிற்கு அவளது செய்கை கோபத்தை கொடுக்க அந்த கோபத்தில் , " நான் உன்னை இடிச்சேனா சீ பணத்துக்கு வேண்டி எந்த எல்லைக்கும் நீ எல்லாம் போவ..ஆளையும் அவளையும் பாரு..கோவிலுக்கு கூல் ஊத்த போற மாதிரி".. என்று அற்ப புழுவை போல பார்ப்பது போல பார்க்க அவளோ அவனின் பார்வை தந்த மொழியில் தனக்கு வக்காலத்து வாங்கி கொண்டு இருந்தவனிடம் அவனது கையை பிடித்து இழுத்து மெதுவாக , "நீ வா பிரச்சனை பண்ணாதே".. என்று இழுத்து கொண்டு போக அந்த இளைஞன் விடுவதாக இல்லை போலும் ..

" யாருக்கு டா பணம் வேணும் பிச்சைகார நாயே..உனக்கு எவ்ளோ பணம் வேணும்னு சொல்லு பிச்சை போட்டுட்டு போறேன்."... என்று உச்சாதிதியில் தொடங்கவும் இங்கே மனு வண்டியை விட்டு இறங்கவும் ஒருவருக்கு ஒருவர் கைகலப்பு ஆனது.. அதுவரை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த ஒரு சிலர் இருவரையும் விலக்கி விட அந்த இளைஞனோ, " உன்னை சும்மா விட மாட்டேன் டா .. ராஸ்கல்..மீண்டும் நாம சந்திப்போம் ..சந்திக்க வைப்பேன்"... என்று சவடால் விட மனுவோ," அதுக்காக நான் காத்து இருக்கேன் போடா..பொறம்போக்கு  "...என்று கூறி விட்டு தனது கூலர்ஸை அணிந்து கொண்டு சில பல திட்டுக்கள் முறைப்புகளோடு அவரவர் வழியில் சென்றனர்...

அந்த பெண்ணோ அந்த ஆடவனிடம், " எத்தனை தடவை உன்கிட்ட சொல்றது பிரச்சனை பண்ணாதேனு நான் தான் விழுந்தேன்..அவன் ஒன்னும் பண்ணல..இதுக்கு தான் இந்த ஊரே வேணாம்னு சொன்னேன் நீ தான் கேக்கலை..இப்போ ஒன்னும் கெட்டு போகல வண்டியை ஊருக்கு விடு..ஊருக்கு போகலாம் "...என்று அவனை வம்படியாக இழுத்து கொண்டு காரில் பிடித்து தள்ளினாள்..ஆனால் அந்த ஆடவனோ எளிதில் மனுவின் செயலை மறக்கவில்லை என்றாலும் அந்த பெண்ணின் கடைசி வரியில் அடங்கினான்..

மல்லிகை மணம் வீசும்...



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

👌👌👌👌👌



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top