மன்மதன் 2
.
அத்தியாயம் : 2
அவனுக்கு அவனுடைய அப்பா,அம்மா,மாயா அதற்கு அடுத்தது அவனுடைய நண்பர்கள் தான் வாழ்க்கை..நண்பர்களுக்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான் அதற்கு ஒரு சாட்சியே அவனது சென்னை வாசம்..மேற்படிப்பு படிக்க வெளிநாடு செல்லும் அளவிற்கு வசதி இருந்தாலும் அவர்களுக்கு வேண்டி தான் அவன் அவனுடைய படிப்பை சென்னையிலே தொடர்கிறான்..
ரவீந்தர் பல இடங்களுக்கு மாற்றல் ஆகி இருந்தாலும் ஒரு சில காலம் அவர்கள் சென்னையில் வாழ்ந்ததாலும் அவனுக்கு ஏனோ சென்னை அவன் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது..
இந்த பக்கம் படப்பட பட்டாசாய் பல்லவி கொஞ்சம் அவனை திட்டியும் கொஞ்சம் மகனை கொஞ்சியும், கொஞ்சம் மகனிடம் கெஞ்சி கொண்டு இருக்க அப்போது தான் வாக்கிங் முடித்து வீட்டுக்கு வந்த ரவீந்தர் மனைவியிடம் இருந்து போனை வாங்கி, " ஹலோ".. என்று தன்னுடைய சிம்ம குரலில் கூற தந்தையின் குரல் கேட்ட நொடியில் அதுவரை இருந்த தாலாட்டும் உறக்கம் எங்கே போய் தொலைந்ததோ அவன் அறியான்.. இதோ வேகமாக எழுந்து அமர்ந்தவன் , "எஸ் டாட் "..என்க
"ஹாப்பி பெர்த் டே மை சன்.. எக்ஸ்சைஸ் பண்ணிட்டியா".. என்று முதல் கேள்வியில் தொடங்கி ஒவ்வொரு கேள்வியாக கேட்க, " எஸ் டாட் பண்ணிட்டேன் ..இதோ குளிக்க போறேன்".. என்று பொங்கி வந்த கொட்டாவியை அடக்கி கொண்டு அவரின் கேள்விக்கு இணையாக ஒவ்வொரு பொய்யாக அவனும் கூற ,
அவனின் பொய்யை உணர்ந்த ரவீந்தர் மேற்கொண்டு எந்த கேள்வியும் கேக்காமல் அவனிடம், " ஓகே நீ குளிச்சிட்டு கோயிலுக்கு போயிட்டு எனக்கு வீடியோ கால் பண்ணு..முக்கியமா கோவிலுக்கு பஸ்ல போ "..என்று கூறி வைத்து விட்டார்..
அது தான் ரவீந்தர் மகன் பிறந்த நாள் அன்று கோவிலுக்கு கூட செல்லமாட்டான் என்பதை மிக சரியாக உணர்ந்து அங்கே சென்று அழைக்க சொல்லி விட அவனோ, " டாட் "..என்று பல்லை கடித்து கோபத்தை அடக்கி தலையை சொறிந்த படி குளிக்க சென்றான்..
சென்னையில் புகழ் பெற்ற சிவன் கோவில் வாசலில் நின்று கொண்டு ,"மாம் டாட் கிட்ட போனை கொடுங்க சீக்கிரம் எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்கிறாங்க ..இன்னிக்கு கார்ல வர வேணாம்ன்னு சொல்லிட்டார்..பாருங்க இந்த டிராஃபிக்ல பஸ்ல வந்து எனக்கு எப்படி வியர்த்து இருக்குன்னு.. இந்த டாட் ஏன் தான் இப்படி செய்யறாரோ...அண்ட் கோவிலுக்குள்ள மொபைல் கொண்டு போக கூடாது "..என்று தன் தாயிடம் புலம்பி கொண்டே சொல்ல பல்லவி போனை ரவீந்தரிடம் கொடுக்க எரிச்சலில் கோவில் வாயிலில் நின்று கோவிலை வீடியோ கால் மூலம் காட்ட அதை பார்த்த ரவீந்தர்,
" ஓகே மனு ..இனி கோவிலுக்கு உள்ள போய் சாமி கும்பிட்டு காலேஜ்க்கு அதோ திரும்பி பார் அதுல போ "...என்று அதே கண்டிப்பான குரலில் கை காட்டி கூற தந்தையின் பின்னால் இருந்து பல்லவி செய்கையால் கொஞ்ச மகனோ தன் தந்தை தரும் எரிச்சலில் இருந்து எப்போது தான் தனக்கு விடுதலையோ என நினைத்து திரும்பி பார்க்க அங்கே புத்தம் புதிய ஹார்லி டேவின்சன் வண்டி அலங்காரங்களுடன் நின்று கொண்டு இருந்தது ...
கூடவே இருவர் ஒரு பூங்கொத்தை கையில் பிடித்துக்கொண்டு அவனுக்காக சிரித்த முகத்துடன் காத்து இருக்க அதை கண்டதும் , " டாட் யாஹூ"... என்று சந்தோசத்தில் ஆர்ப்பரிக்க பல்லவியும் மகனது மகிழ்ச்சியில் மகிழ இதற்கு எல்லாம் காரணமான ரவீந்தர் இலேசான சிரித்த முகத்துடன் மகனை பார்த்து, " திஸ் இஸ் பார் யூ மை டியர் சன்.."..என்று கூற அவனோ போன் என்று கூட பாராமல் பலர் தன்னை கடக்கும் போது ஒரு மாதிரி பார்க்கிறார்கள் என்ற போதம் துளியும் இல்லாமல் போனின் திரையில் காணும் தன் பெற்றோர்களுக்கு முத்த மழையை பொழிந்தான்...
அவனை பார்ப்பவர்கள் சத்தியமாக இவனை நல்ல விதமாக நினைத்து இருக்க மாட்டார்கள் அது வேறு விஷயம்..அதிலும் இந்த காட்சியை கண்டு கொண்டே அவனை கடந்த இருவர் சொல்லவே வேணாம் அவனது செய்கை அவர்களுக்கு முக சுழிப்பை தான் தந்தது..அதிலும் அந்த இருவரில் ஒரு பெண் இருக்க அந்த பெண்ணுக்கு இவனை கடக்கும் போது முத்தத்தின் சத்தம் அவள் செவிக்குள் தான் நச் நச் என்று கேட்க அந்த சத்ததிற்கே அந்த பெண்ணின் செவி கூசி சிவந்தது...சத்தத்தை கேட்டதும் அவளது கை நடுங்க வேகமாக தன் அருகில் வந்து கொண்டு இருந்த ஆணின் கையை இறுக்கமாக பிடித்து கொண்டாள்...பயத்தில் அந்த பெண்ணின் கையில் இருந்து ஒழுகும் வியர்வையை வைத்தே அவள் பயந்து இருக்கிறாள் என புரிய மனுவின் செய்கையை கண்ட அவனும் ,"பொறுக்கி".. என முணுமுணுத்து விட்டு அவனை கடந்து சென்றான்..
அதை எல்லாம் காதில் கேட்டு கொள்ளாத மனுவோ, "டாட் யூ ஆர் க்ரேட் டாட்.. சத்தியமா இந்த கிஃப்ட்யை நான் எதிர் பார்க்கல.. யூ ஆர் த பெஸ்ட் டாட் எவர்..இதுக்கு தான் நீங்க என்னை பஸ்ல வர சொன்னீங்களா".. ..என்று சந்தோஷ மிகுதியில் கேட்க அவரோ, "ஹ்ம்ம் யா மனு..ஓகே இப்போ ஹாப்பி தானே இனி சிரிச்சுட்டே கோவிலுக்கு போயிட்டு காலேஜ்க்கு போ ஈவ்னீங் கால் பன்றேன்..அண்ட் வீக்லி டூ டேஸ் மட்டும் தான் பைக் அன்டெர்ஸ்டேண்ட் ..ஓகே".. என்று கூற அதில் அவனுக்கு விருப்பம் இல்லையென்றாலும் தன் தாயை வைத்து காரியம் சாதித்து கொள்ளலாம் என நினைத்து தலையை ஆட்ட தாய் தந்தை இருவரும் போனை வைத்து விட்டனர்..
மனு அந்த பைக்கை தொட்டு பார்க்க அவனது கை சிலிர்த்தது..எத்தனையோ முறை தன் தந்தையிடம் பைக் கேட்க அவரோ பின்னே பார்க்கலாம் என்று கூறி அவனுக்கு புதிய காரை வாங்கி கொடுக்க அவனது பைக் கனவு கானல் நீராக போய் விடுமோ என அவன் வருத்தத்தில் இருக்க அதை பொய் என நிரூபித்து மகன் எப்போதோ கேட்டதை இப்போது வாங்கி கொடுத்து அசத்தி விட்டார் ..மகனின் மகிழ்ச்சியை கண்டு ரசித்தும் விட்டார்..தன் தந்தையை எண்ணி மெச்சிய படியே கோவிலுக்குள் சென்று லார்ட் சிவனிடம் கோரிக்கை வைத்து கொண்டு இருந்தான் மனு..
"காட் சிவு நான் எப்போவோ உன்கிட்ட கோரிக்கை வெச்ச வேண்டுதலை நிறைவேத்திட்ட அதே மாதிரி என்னோட மாயா அவளையும் எனக்கு இன்னிக்கு கொடுத்திடு".. என்று கூறி விட்டு தனது ஹார்லி டேவின்சனை ஸ்டார்ட் செய்ய அது மின்னல் போல ஸ்டார்ட் ஆனது..
அவனது கனவு இந்த அந்த நொடியை நினைவு ஆக்கியது அவனது தந்தை அவர் எப்போதும் இப்படி தான் முகத்தில் கடுமையை வைத்து இருந்தாலும் மகனின் மீது அளவு கடந்த நேசத்தை உடையவர்..மனுவும் தனக்கு இப்படி ஒரு பைக் கிடைத்த மகிழ்ச்சியில் துள்ளியவன் சிறுத்தை போல சீறிய வண்டியை ஆன் செய்தவன் வண்டியை முறுக்கி இலேசாக வண்டியை முன்னோக்கி ஓட்ட அவனுக்கு எதிரே வந்த பெண் ஏதோ யோசனையில் இருந்த அந்த பெண்ணும் சற்று முன் இவனது நச்சால் கூசி சிலிர்த்த பெண்ணே..
முதலில் இவனது வண்டியை கவனிக்காமல் நிலம் பார்த்து நடந்து வந்தவள் தீடிரென அந்த வண்டியை முறுக்கிய சத்தத்திலும் அவளது பார்வையில் மனு அவனது வண்டியால் அவளை இடிக்க வருவது போல அவளுக்கு தோன்ற அப்படியே அவனது வண்டியின் முன்னாலே விழுந்தாள்..
