மன்மதன் 1

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

 

அத்தியாயம் : 1

     பால் வண்ண நிலவை மறைத்து செங்கதிரொன் கிழக்கே உதித்து தன் அழகிய  ஒளிக்கற்றையால்  தன் வரவை உலக மக்களுக்கு பறை சாற்றி கொண்டு இருக்கும் ஒரு அழகிய காலை பொழுது...பொழுதுகளும் இரவுகளும் தான் மனிதர்கள் அனைவருக்கும் இடையே பாகுபாடு இல்லாமல் இருப்பது...பல நேரங்களில் நம்மிடையே பணக்காரன்,ஏழை,படித்தவன்,படிக்காதவன்,நிறமானவன் ,நிறமற்றவன்,கிராமத்தான்,நகரத்தான், மொழி புலமை பெற்றவன் , மொழி புலமை இல்லாதவன்,ஏற்றம் உடையவன் ஏற்றம் இல்லாதவன் என பல நிறங்கள் நம்மிடையே இருந்தாலும் பொழுதுகள் எப்போதும் அதன் நிறங்களை மாற்றி கொள்வதில்லை..அதே போன்ற ஒரு காலை பொழுதில் தான் பல அடுக்கு வீடுகளை கொண்ட ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் ஒருவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்..அவனுடைய போன் விடாமல் அடித்து கொண்டே இருக்க மெதுவாக அதில் எரிச்சல் மண்டி கண்களை பிரித்தவன் போனை எடுத்து செவியில் வைக்க

"மனு குட்டி ஹாப்பி பெர்த் டே "...என்ற குரலோடு அழகிய சிரிப்பொலி கேட்க இவனோ தேங்க்ஸ் பல்லு மா..நௌ ஐயம் நாட் குட்டி மாம்..ஐயம் ட்ர்னிங் 24 ".. என்று மனு கூறினாலும் தன் தாயிடம் தன் வயதுக்கும் மீறி கூடுதலாக சிணுங்க

மறுமுனையில் , "மனு உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது பல்லு கொள்ளுன்னு என்னை கூப்பிடாதேன்னு அம்மான்னு சொல்லி கூப்பிடு டா இல்லாட்டி பல்லவின்னாவது என் பேரை முழுசா சொல்லி தொலை.. என் பேரை இப்படி கொலை பண்ணாதே..அண்ட் உனக்கு 24 ஆனாலும் சரி 50 ஆனாலும் எனக்கு எப்போவும் நீ 6 மன்த்ஸ் பேபி தான் டா"...என்று அவர் சிணுங்கி கொண்டு கூற அதை எங்கே அவன் கேட்டு கொண்டு இருந்தான் அவன் தான் மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டானே..அவரோ அது கூட தெரியாமல் மகனை கொஞ்சி கொண்டு இருந்தார்..

அவர் பெயர் பல்லவி ரவீந்தர்.. ரவீந்தர் மிலிட்டரி கர்னல்..பள்ளி காதல் திருமணத்தில் முடிவடைய இதோ மிலிட்டரி மேனின் மனைவியாக வலம் வருகிறார்..பல்லவி மற்றும் ரவீந்தர் தம்பதிகளின் ஒரே வாரிசு மனு பரதன் அம்மா செல்லமோ செல்லம் ..அப்பா கண்டிப்பு+சுதந்திரம்+ செல்லம் ..பல்லவி படப்பட பட்டாசு என்றால் ரவீந்தர் பொதுவாகவே பேச்சு குறைவு அதில் வேறு இப்போது அவர் கர்னலாக இருந்தாலும் நாட்டுக்காக போராடிய போர் வீரன் என்பதால் அந்த பதிவிசு பொதுவாகவே அவரிடம் இருக்கும் மகனே என்றாலும் தவறு செய்தால் கடுமையான தண்டனைக்கு பின் தான் செல்லம், பாசம் எல்லாம்..

காதலித்து மணந்த மனைவியை இன்றைய நொடி வரை கடுங்சொல் கூறியது இல்லை அதே போல ரவீந்தரிடம் கற்று கொள்ள வேண்டிய ஒரு விஷயம் எப்படி மனைவியை நேசிக்க வேண்டும் என்றும் எப்படி தன்னை நம்பி வந்த பெண்ணை பார்த்து கொள்ள வேண்டும் என்றும் தன் இணைக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை அவரை பார்த்து தான் கற்று கொள்ள வேண்டும்..மொத்தத்தில் அவர் ஒரு ஜெம்..

அந்த ஜெம்மின் 25 வருட காதல் வாழ்க்கையின் பரிசு தான் மனு வயது 24 ME பைனல் இயர் மாணவன்..தந்தையும் தாயும் டெல்லியில் இருக்க மனு மட்டும் சென்னையில் பிளாட்டில் வசித்து வருகிறான்..அவனை பற்றி கூற வேண்டுமெனில் அந்த ஜெம்மிற்கு பிறந்த கருங்கல் என்று தான் கூற வேண்டும்.. ஒரு ராணுவ வீரன் எப்படி ஒழுக்கத்தோடு இருப்பானோ அதற்கு நேர் எதிர் தான் இவனுடைய வாழ்க்கை..எதை பற்றியும் பெரிதாக அலட்டி கொள்ளாத ஒருவன்..அவன் பெண்களின் அன்புக்கு ரசிகன்..இயற்கையை எப்படி நாம் ரசிப்போமோ அதே போல பிறவியிலே இயற்கையான அழகை பெற்ற அனைத்து பெண்களிடமும் அவனது பார்வை படும்..அவன் மீது விழும் பெண்களுக்கும் அவன் ள்அவனது அன்பை ஒரு எல்லை வரை கொட்டி குளிப்பாட்டுவான்..

இப்படி இருக்க இப்போது எல்லாம் அவன் அலட்டும் நேசிக்கும் ஒரே ஆள் அவனுடைய மாயா..அந்த பேரை அவன் உச்சரிக்கும் போதே அவன் மது குடிக்காமலேயே போதையில் ஆள்வான்.. தன் தந்தையிடம் அவனுக்கு பிடித்த ஒரே விஷயம் தன் தாயின் மீது அவர் வைத்துள்ள அளவு கடந்த காதல் மனுசன் எப்படி இப்படி காதலிக்கிறார் என்று பருவ வயது வந்தது முதல் அவனுக்கு தோன்றிய விஷயம் இதோ இப்போது என் தந்தையை போல காதலித்து தான் மணம் புரிவேன் என்பதில் வந்து நிற்கிறான்..அதற்காக அவன் தேர்வு செய்த ஆள் அவனுடைய மாயா...

பெண்கள் விஷயத்தில் அவன் ஒரு ஸ்ரீ ராமன் இல்லையென்றாலும் பெண்கள் மனதை மயக்கும் கிருஷ்ணன் தான் நம் மனு..மாயாவை காதலிக்க போகிறேன் என்பதற்காக பெண்களை சைட் அடிக்க கூடாது என்று எல்லாம் கூறினால் அவனால் ஒத்து கொள்ள முடியாது...அதை பற்றி அவனிடம் கேட்டால் அது வேறு இது வேறு என்று வடிவேலு ஸ்டைலில் கூறுவான்...

மாயா அவனுடன் படிக்கும் மாணவி, தோழி அவனுடைய வெல் விசர் இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்..அவனுடனே சதா சுற்றி கொண்டு இருக்கும் பெண்..அவனுக்கு ஒன்று என்றால் எந்த எல்லைக்கும் செல்பவள்.. அவளுக்கே தெரியவில்லை தான் ஏன் மனுவை இந்த அளவிற்கு நேசிக்கிறோம் என்று அந்த மாசு மரு இல்லாத அன்பு தான் மனுவை அவள் பால் புரட்டி போட்டது என்றே கூறலாம்...

மாயா பெயரை போல ஒரு பேரழகி அவள் அழகு இப்போ கொஞ்ச நாட்களாக தான் அவனை பித்து பிடிக்க வைத்து இருக்கிறது..இதுவரை தான் ஏன் இவளை இப்படி ரசிக்கவில்லை என அவன் மனது அவனிடமே கேள்வி கேக்கிறது...

அன்று அவளை அந்த ஆகாய வண்ண புடவையில் பார்த்தது முதல் மனு அவனாக இல்லை..அவளை அள்ளி எடுத்து பருக வேண்டும் என்ற ஆவல் அவனை ஆட்கொள்ள செய்கிறது...அதிலும் அன்றைய தினம் மாயா அவனை இலேசாக அணைத்த போது அவனுள் ஒரு மின்னல் வெட்டியது என்றே கூற வேண்டும்..அதனால் தான் இதோ இப்போது நண்பன் என்ற ஒரு படியில் இருந்து மேலேறி மாயா மீது காதல் என்ற படியை மிதித்து இருக்கிறான் மனு..அவளிடம் இன்னும் அவன் காதலை கூறவில்லை..அதற்கு ஒரு காரணமும் உண்டு இன்று அவனுடைய பிறந்த நாள் கல்லூரியின் நிறைவு வருடம் தொடங்கும் முதல் நாள்..

அவனுக்கு மாயாவின் மீது கண்டதும் காதல் எல்லாம் வரவில்லை பழக பழக அவள் பால் ஈர்க்கப்பட்டு அவள் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை வந்த போதே அவன் இந்த முடிவை எடுத்து இருக்கிறான் இந்த விஷயம் அவனுடைய மாயாவுக்கே தெரியாது..அவனுடைய பிறந்தநாளில் அவள் எப்படியாவது ஏதாவது ஒரு சப்ரைஸ் செய்வாள் என்று அவனுக்கு நன்றாக தெரியும் ஆனால் இன்று அவன் அவளுக்கு தரும் சப்ரைஸ் அவன் ..எஸ் முழுதாக அவனை அவளிடம் ஒப்படைத்து அவன் காலம் முழுவதும் அவளுடனான அவனது காதலுக்கு அடிமையாக வாழ இருக்கிறான்..
.



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

👌👌👌👌👌



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top