மன்மதன் 10
.
அத்தியாயம் : 10
அவன் சொன்னதை கேட்டு அவள் கண்களில் இருந்து நீர் தழும்பி, " நான் யார் கூட போனாலும் யார் கூட பேசினாலும் உங்களுக்கு என்ன கவலை உங்க வேலையை மட்டும் பாருங்க என் பின்னாடி நீங்க தான் இப்போ சுத்திட்டு இருக்கீங்க..அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் மாதிரி உங்க கண்ணுக்கு யாரை பார்த்தாலும் தப்பா தெரியுது ஏன்னா நீங்க கெட்டவங்க அதுனால தான் அப்படி தெரியுது"... என்று மென் குரலில் என்றாலும் தெளிவாகவே கூறியவள் அவன் முகம் பார்க்க பிடிக்காமல் சென்று விட்டாள் அவள் கூறிய வார்த்தைகள் மீண்டும் அவன் மனதில் தேங்கி வன்மத்தை வளர்த்து கொண்டது...அன்றிலுந்து வெண்ணிலா அவன் இருக்கும் திசை பக்கமே செல்ல மாட்டாள்...
ஒரு மாலை நேரம்
கல்லூரி விட்டு ஒரு மணி நேரம் கடந்து இருந்தது வனிதாவுக்காக வெண்ணிலா காத்து இருந்தாள்..கிட்டத்தட்ட கல்லூரியே காலியாக இருந்தது..வனிதாவின் பேட்ச்க்கு கம்ப்யூட்டர் வகுப்புகள் இருக்க இவளது பேட்ச் ஏற்கனவே முடிந்து விட அவளுக்காக வெளியே கிரௌண்டின் மரத்தடியில் காத்து இருந்தாள்..
அப்போது அந்த கல்லூரியின் துப்புறவாளர் ஒருவர் அங்கே ஓடி விளையாடி கொண்டிருந்த முயல் குட்டிகளை எல்லாம் பிடித்து அதனுடைய கூண்டில் இட்டு கொண்டு இருந்தார்..அப்போது ஒரு குட்டி முயல் குட்டி அழகாக தாவி தாவி குதித்து ஓடியது..
அதை கண்டதும் வெண்ணிலாவிற்கு அதை பிடிக்க ஆசையாக இருக்க சுற்றி முற்றி பார்க்க யாரும் இல்லாததை கண்டு மெல்ல அந்த முயல் குட்டி பின்னால் ஓடினாள்..அதுவோ அவளுக்கு போக்கு காட்டி அங்கே பேஸ்கெட் பால் ஸ்டேடியம் இருக்கும் பக்கம் ஓடி விட்டது..இவளும் மெல்ல மெல்ல அங்கே செல்ல அதுவோ பாஸ்கெட் பால் ஸ்டேடியம் வழி செல்ல இவளோ எங்கே என்று அந்த கட்டிடத்தின் பின்பக்க வழியாக தேடி கொண்டு இருக்க அங்கே வெறித்தனமாக பேஸ்கெட் பால் விளையாடி கொண்டு இருந்தான் மனு..அவன் ஒருவனே அந்த ஸ்டேடியம் முழுவதும் ஆக்கிரமித்து தனித்து விளையாடி கொண்டு இருந்தான்..
அதற்குள் அந்த முயல் குட்டியோ வேகமாக ஸ்டேடியத்துக்குள் நுழைந்து கொண்டது...இவளும், " ஹே எங்கே போற நில்லு".. என்று சிரித்து கொண்டே முயலின் பின்னால் ஓடி ஸ்டேடியத்துக்குள் நுழைய அங்கே மனு மட்டும் விளையாடி கொண்டு இருந்தான்..
அதிலும் அவன் அணிந்து இருந்த பனியன் எல்லாம் நனைந்து இருக்க முகம் முழுவதும் வியர்த்து குளித்து இருக்க அவனது விளையாட்டில் காட்டுத்தனம் தெரிந்தது.. அதிலும் அவன் அவனது பனியனை கழட்டி வியர்வை வழிந்த அவனது வெற்று உடல் மீது அங்கு அவன் குடித்தது போக மீதம் இருந்த நீரை எடுத்து அவன் தலை முதல் ஊற்றி கொள்ள என்ன சத்தம் என்று முயலை தேடி வந்தவள் அங்கே ஈரம் சொட்ட சொட்ட ஆடையில்லா மனுவை பார்க்க அவளின் அடி வயிற்றில் பட்டாம் பூச்சி பறந்தது..."ஐயோ".. என்று கூறி திரும்பி கண்களை மூடி கொண்டாள்..
அவனோ இவள் எங்கே இங்கே வந்து இருக்கிறாள் என சுற்றி முற்றி பார்த்து கொண்டு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து அவள் அருகே வர இவளுக்கு மனம் தடக் தடக் என்று ரயில் ஓடியது..பேசாமல் ஓடி விடலாமா என நினைத்து ஓட எத்தனிக்கும் போது ஸ்டேடியத்தின் வாயிலை அடைத்தான் மனு..
அவன் தான் வியர்த்து குளித்து இருந்தான் என்றால் இப்போது அவனது செய்கை அவளுக்கு வியர்வையை கொடுத்தது..
"என்ன செய்யறீங்க..கதவை திறங்க எனக்கு போகணும் "..என்று மென் குரலில் என்றாலும் தீர்க்கமாக அவனிடம் கூற அவனோ , "கதவை திறக்கலனா என்ன செய்வ???"...என்று கேட்டான்..அவனுக்கும் அவளை ஏதாவது செய்ய வேண்டுமென தோன்ற வம்புக்கு இழுத்தான்...
அவளோ அந்த திரும்பி அவனை பார்க்க நெடுநெடுவென தேக்கு மரம் போல இருப்பவனின் உடற்கட்டு மூலம் முறுக்கேறி கொண்டு இருக்கும் உடல் அவள் கண்களுக்கு விருந்தாக அமைய வேகமாக அவள் கண்களை மூடி திரும்பி நின்று கொண்டாள்..
அவனோ கைகளை கட்டி கொண்டு அவளுக்கு பின்னால் வந்தவன் வெண்ணிலாவிற்கு மிக அருகில் அவளை நெருங்கி நின்றான் ..அவளின் உடலோடு உடல் உரசும் படி நெருங்கி நின்று இருந்தான்...அன்று என பார்த்து அவள் ஆசையாக பாவாடை தாவணி அணிந்து இருக்க தனக்கு முதுகு காட்டி இருக்கும் பெண்ணின் இடையும் முதுகும் அவளின் உடலின் வாளிப்பும் அவனுக்கு விருந்து வைத்தது...அவன் கண்காளாலே அவளை கபளீகரம் செய்து கொண்டு இருந்தான்..
