Share:
Notifications
Clear all

மன்மதன் 11

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

.
அத்தியாயம் : 11

அவனுக்கும் ஏதோ ஒரு உந்துதல் இருக்க நெருங்கி நிற்க இவளோ  விதிர்விதிர்த்து, " இதோ பாருங்க என்னை விடுங்க இல்லாட்டி கத்திடுவேன் "..என்று கூற அவனோ மேலும் நெருங்கி அவளோடு ஒன்றி நிற்க அவன் சற்று முன் அவனது தலையில் ஊற்றிய நீர் அவனது வியர்வையுடன் கலந்து அவளின் முதுகில் ஒவ்வொரு துளியாக பட இங்கே வெண்ணிலாவின் கால்கள் வெடவெடக்க துவங்கின..

வெண்ணிலாவோ வேகமாக இரண்டு அடி தள்ளி நின்று கதவின் அருகே வந்து கதவை திறக்க போக அவள் பிடித்து இருந்த தாழ்ப்பாளின்  மீது அவன் அவனது கையை வைத்து இருக்க அவளது கை அவனது வசம் ஆனது...அந்த இடமும் மறைவாக தான் இருந்தது இவளோ விலக பார்க்க விலக முடியாதபடி அவளது ஒரு கையை பிடித்தும் மறு கையால் அவன் அவளின் மென் இடுப்பை வளைத்து பிடித்து இருந்தான்..மேலும் அவளின் உடல் மீது அவனது முழு உடலும் படும் படி உரசி நிற்க அங்கே மெல்லிய உஷ்னம் இரு உடல்களுக்கு இடையே உருவானது...

வெண்ணிலாவிற்கு கூடவே அடி வயிற்றில் இருந்து பூச்சி பறக்க துவங்கியது அதிலும் அவனது மூச்சு காற்று அவளது காது மடலில் பட்டு அவளின் செவியை கூசி சிலிர்க்க செய்ய வெண்ணிலா கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழக்க துவங்கி இருந்தாள்... அவள் மூளை சொன்னது வெளியே போ என அவளது மனமோ ஒன்றி போக அவளது உடலை சிறிது கூட அவளால் அசைக்க முடியாத படி அவன் கையில் சிக்குண்டு இருந்தது..

வெண்ணிலாவிற்கு தான் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என நினைத்து சப்த நாடியும் அடங்க, " என்னை விடுங்க..இல்லாட்டி கத்துவேன் "...என்று மென் குரலில் கூற

"அப்போ கத்தி தான் பாரு டி "...என்று கூறியவன் அவளை அசுர வேகத்தில் தன் பக்கம் திருப்பியவன் அவளின் முகத்தை அவனது ஒற்றை கையால் நிமிர்த்தி அவள் கண்களை பார்க்க அவனின் செய்கையில் உச்சகட்ட பயத்தில் மருண்டு அவனை பார்த்து விழிக்க அவளின் கூரான நாசியில் இருந்து வெளியேறும் சூடான காற்று அவன் மீது பட்டு அவனை மேலும் அவள் அருகே செல்ல உந்துதலாய் இருக்க அவளின்  தேன் ஊரும் இதழ்கள் அவனை அவள் பக்கம் சுண்டி இழுக்க அதற்கு மேல் அவன் ஒன்றும் யோசிக்காமல் அவளின் மென் இதழை தன் இதழ்களோடு சேர்த்து கொண்டான்..முரட்டு தன்மான ஆழ்ந்த முத்தம் அவளின் இதழ்களில் இருந்து ஒரு சொட்டு அமுதத்தை கூட விட்டு வைக்க விருப்பம் இல்லாதவன் போல அவளிடம் இருந்து தேன் உறிஞ்சி எடுத்தான் அதன் பலன் அவளுக்கு மூச்சு விட சிரமப்பட்டு ஆக்சிஜன் பற்றாக்குறை வர அதற்கும் நக்கல் சிரிப்பை உதிர்த்து அவனே ஆக்சிஜனும் கொடுக்க வேண்டியதாகி போனது..

கண்கள் திறந்து பார்க்கும் போது அவனது ஆக்சிஜன் அவளின் வாய் வழியே உள்ளே செல்ல அது வேறு அவளுக்கு என்னவோ செய்ய வேகமாக தன் உதட்டை ஈர படுத்தினாள்... அதுவும் அவனது மோகத்திற்கு வடிகால் இட மீண்டும் தேன் ஊரும் பூக்களில் அந்த முரட்டு வந்து தேன் உறிஞ்சி எடுக்க பதினெட்டு வயது பாவைக்கு பயத்தில்  கை கால்கள் தொய்ந்து பலம் இல்லாமல் அவன் கைகளிலே துவள அவனோ அவளை மேலும் சோதிக்காமல் மெதுவாக விலக்கியவன் மேலும் அவள் கன்னங்களில் மாறி மாறி நச் நச் என்று முத்தம் வைக்க அந்த சத்தம் அவள் காதை அடைக்க அவள் முகம் எல்லாம் அவனது முத்த மழையால் நனைந்து போய் இருக்க வேகமாக கண்களை திறந்து பார்த்தால் வனிதாவின் குறட்டை சத்தம் அந்த அறையை பிளந்து கொண்டு இருந்தது ..

அறை எங்கும் கும்மிருட்டாக இருக்க வேகமாக விளக்கை இட்டு பார்த்தவள் கண்களை கசக்கி திறக்க சற்று முன் நடந்தது எல்லாம் கனவு என்று விளங்கியது.. முகம் எங்கும் வியர்வை முத்துக்கள் தான் பூத்து இருந்தன.. முத்த மழை அல்ல அது என  தெரிந்தும் மனுவின் மீது நம்பிக்கை இன்றி அவளின் கன்னம் ,உதடு என எல்லாம் பாகமும் பரபரவென தேய்த்தவளுக்கு இன்னும் அவன் கையில் துவள்ந்து கொண்டு இருப்பது போல இருக்க அறை முழுவதும் தேடினாள் எங்கேயாவது மனு இருக்கிறானா என்று இல்லை என தெரிந்ததும் மணியை பார்த்தாள் விடியற்காலை நான்கு மணி என காட்ட சற்றும் யோசிக்காமல் அவள் வீட்டுக்கு அழைத்தாள்..அவளுக்கு பிரம்மை பிடித்து இருந்தது தான் என்ன செய்கிறோம் என்ற சிந்தை கூட தெளிவாக இல்லை வீட்டுக்கு அழைத்து விட்டாள்..

அவள் நினைத்தது போலவே போனை அவளது தாய் அன்னகிளி எடுக்க தாயின் குரலை கேட்டதும் வெண்ணிலாவுக்கு அழுகை முட்டி கொண்டு வர, " அம்மா"... என்று குரல் இறங்கி இவள் அழைக்கவும்

" அடி யாத்தே அந்த நாசமா போன ஊர்ல படிக்க வைக்க வேணாம்னு சொன்னா எந்த எடுபட்ட பயலாவது கேட்டானா?? என் புள்ள நாலு மணிக்கு போனை போட்டு இருக்கே.."...என்று கத்தி ஊரையே கூட்டி விட்டார் வெண்ணிலாவின் அம்மா..

"எதுக்கு டி கத்துற போனை கொண்டா"... என்று தன் காது வரை நீண்டு இருக்கும் முறுக்கு மீசையை நீவியபடி போனை வாங்கினார் சண்டித் தேவன்..அந்த ஊரின் சண்டியர் பெரிய மனிதர் வம்பு தும்புக்கு பெயர் போனவர் இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்..அதற்கு எல்லாம் அவரது பெயர் பொருந்தும் அதே போல உண்மையான பாசத்திற்கு மட்டுமே அடிபணியும் சண்டியர்...

"அம்மு குட்டி"... என்று தந்தை கூறவும், தந்தையின் குரல் கேட்டு , "அப்பா".. என்று வெண்ணிலா குரல் உடைந்தது..

"சண்டியரோ என்ன ஆச்சு தாயி "...என்று மகளிடம் விசாரிக்க

"அப்பா எனக்கு இந்த காலெஜ் வேணாம் பா அண்ணனை அனுப்பி வைங்க பா நான் நம்ம ஊர்லயே படிச்சுக்கறேன் "..என்று கூறி கதற

"ஏன் தாயி அண்ணன் வெளியூர் போய் இருக்கான் பாப்பா என்ன விஷயம்ன்னு அப்பா கிட்ட சொல்லு டா "...என்று முகத்தில் தீவிரத்தையும் குரலில் பாசத்தையும் கொட்ட

அவளோ மெல்ல கூறலானாள்.."அப்பா இங்கே ஒரு பையன் என்னை என்னை.....".. வார்த்தைகள் தட்டுப்பட்டன..இருந்தும் அவள் கல்லூரியில் மனு ரேக் செய்த விஷயத்தை எல்லாம் பயத்தில் உளறி கொட்டி இருந்தாள்...

மகள் கூற வந்ததை தெளிவாக கொஞ்சம் அதிகமாகவே மனதில் ஏற்றிய பாசக்கார தந்தையோ அவளிடம் நயமாக பேசி சமாதானம் செய்து போனை வைத்தவர் முகம் இறுக, " டேய் காளி சென்னைக்கு ஒரு டிக்கெட்டை போடு டா"... என்று அந்த வீடே அதிரும் அளவுக்கு கத்தினார்...அவரின் முறுக்கு மீசை துடித்தது தன் மகளை வேதனைப்படுத்தியவனை வேர் அறுக்க????...

மல்லிகை வீசும்..

 



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top