Share:
Notifications
Clear all

மன்மதன் 12

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

.
அத்தியாயம் : 12

மன்மதன் தேசத்து மல்லிகை

சென்னை ரயில் நிலையம்

  மகளின் அழுகுரல் கேட்டதும் மகன் செழியன் வேறு ஒரு வேலை விஷயமாக டெல்லி வரை சென்று இருக்க இதோ சண்டி தேவனே மகளை காண வந்து இறங்கி விட்டார்...

மகள் மீது உயிரை வைத்திருக்கும் சண்டியர் மகளின் அழுகையை தாங்குவாரா  மகளிடம் கல்லூரி என்றால் அப்படி தான் இதற்கு எல்லாம் அழுவார்களா என்று எல்லாம் கூறி சமாதானம் செய்த அவர் இதோ மனம் கேக்காமல் வந்து விட்டார்..

சென்னை ரயில் நிலையத்தில் இருந்து பஸ்ஸில் ஏறிய சண்டியர் ..ஆனால் அவரது விதி வண்டி பஞ்சர் ஆகி வழியிலேயே பயணிகள் இறக்கி விடபட இவரும் இறங்கினார் ..

இவரோ இங்கிருந்து எப்படி செல்ல என்று முழிக்க, "இன்னும் கொஞ்சம் தூரம் போனா காலேஜ் வந்திடும்".. என்று ஒரு பயணி கூற இவரும் பொடி நடையாக நடக்க துவங்க எவ்வளவு தூரம் தான் நடப்பார் இருந்தும் மகளுக்காக நடந்தார்..வெண்ணிலா மீது வைத்திருக்கும் அளவு கடந்த பாசம் அவரை நடக்க வைத்தது என்றே கூற வேண்டும்...இவருக்கு என்றால் இந்த சத்தம், நெருக்கம்,  மாசு மிகுந்த ஊர் அலர்ஜி வேறு அதனாலே இங்கே வர அவர் தவிர்ப்பார்

   செழியன் தான் வெண்ணிலாவை கல்லூரியில் சேர்த்தியது முதல் அவளை கவனித்து வருவது அவன் தான் என்றாலும் செழியனும் தான் வந்து பார்த்து கொள்கிறேன் என தன் தந்தையிடம் கூறி இருந்தாலும் அதை சண்டி தேவன் கேப்பாதாக இல்லை..அவர் சரியாக கல்லூரி பேருந்து நிலையம் வரை வந்த பின் நான்கு வழி சாலை வேறு பிரிவதால் எங்கே செல்வது என  தடுமாறியவர் கண்களுக்கு ஒரு கார்  சீறி கொண்டு அவரை நோக்கி வருவது தென்பட்டது ..

கையை காட்டி அந்த வண்டியை நிறுத்த அந்த வண்டியை ஒட்டி கொண்டு வந்தது வேறு யாரும் இல்லை அவர் இரவோடு இரவாக மகளுக்காக அடிக்க தேடி வந்த மனுவே தான்...

மனுவும் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை சகிதம் முறுக்கு மீசை என கிராமத்து அடையாளத்தில் இருக்கும் நபரை கண்டவனும் வண்டியை நிறுத்த , "தம்பி இங்க ஒரு பெரிய காலேஜ் இருக்கே ஏதோ எஸ் புஸ் ன்னு "...என்று கூற

அவர் மீசைக்கும் அவர் கூறியதை கேட்டு இலேசாக சிரிப்பு வர அவனோ சிரிப்பை அடக்கி, " ஆமாம் சார் சொல்லுங்க இங்க தான் இருக்கு நான் அங்கே தான் போறேன் உங்களுக்கு போகனுமா வாங்க நான் கூட்டிட்டு போறேன் "...என்று கூறினான்..

சண்டி தேவனுக்கும் தான் என்ன கேட்க நினைக்கிறேனோ அதற்க்கு முன்னே அதற்கான பதிலும் வழியையும் ஏற்படுத்தி கொடுக்க அவருக்கு ரொம்பவே பிடித்து போனது..

அந்த உயர்ந்த நெட்டை மீசைக்காரர் காருக்குள் ஏறியதும் அவரது கழுத்தில் ஏதோ கருப்பாக தெரிய , "சார் அது என்னது சார் கழுத்து கிட்ட கருப்பா நீட்டிட்டு இருக்கு "..என்று மனு சாதாரணமாக கேட்க

"அதுவா தம்பி".. என்று அசால்ட்டாக அந்த மனிதர் குனிந்து ஒரு மூன்று அடி வீச்சு அரிவாளை எடுத்து அவன் கண் முன்னே நீட்ட மனுவுக்கு ஒரு நிமிடம் தலை சுற்றியது..

"என்ன சார் இது இவ்ளோ பெரிய அரிவாள் எடுத்துட்டு எதுக்கு காலேஜ்க்கு போறீங்க"... என்று பதட்டத்தோடு கேட்க

"ஒன்னுமில்லை தம்பி என் புள்ள அந்த காலேஜில் படிக்குது ஏதோ ஒருத்தன் என் புள்ளைய கிண்டல் பண்ணிட்டே இருக்கனாம் அது தான் என்ன சேதின்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன்"... என்று கூலாக மனுவின் கண் முன்னே பட்டை தீட்ட பட்ட அரிவாளை ஒரு முறை அவர் நீவி கொடுக்க இங்கே மனுவோ, " என்ன இப்படி கிளம்பிட்டானுங்க"... என்ற பார்வையில் பார்த்து வைத்து , "சார் அதை இங்கே தாங்க முதல்ல "...என்று அந்த அரிவாளை வம்படியாக தன்னை வெட்ட தான் அந்த அரிவாளுடன் வந்து இருக்கிறார் என அறியாமல் அதை வாங்க அவரும் அவனை வெட்ட இருக்கும் அரிவாளை அவனிடமே கொடுக்க அவனும் கார் டிக்கியில் இட்டவன்," சார் இதெல்லாம் காலேஜ்க்குள்ள கொண்டு போக கூடாது..கொண்டு போனா உங்களை உள்ளே விட மாட்டாங்க..".. என்று பொறுமையாக அவன் கூறவும் சம்மதம் இல்லை என்றாலும் அவனுக்காக அவர் சம்மதித்தார்..

"ஆமாம் எதுக்கு இதை எடுத்து போறீங்க உங்க பொண்ணை யார் என்ன சொன்னா??"...என்று மனு ஒன்றுமே தெரியாதவன் போல அவரிடம் விசாரிக்க

"இல்ல தம்பி படிக்க வந்தா படிக்கணும் அதென்ன வயசு புள்ளைங்கல கிண்டல் பண்றது ..மானம் கெட்ட பயலுக ..இதுக்கு தான் அவங்க வீட்டுல படிக்க அனுப்பறாங்களா"... என்று அவர் எகிற

அவனோ மெதுவாக காரை ஓட்டி கொண்டே மென்மையாக சிரித்து அவரை பார்த்து , "சார் காலேஜ் டேஸ்ல இதெல்லாம் சகஜம் அதுவும் உண்மையை சொல்லனும்னா இந்த கேலி கிண்டல் எல்லாம் இந்த லைஃப் ல நல்லா என்ஜாய் பண்ணனும் சார் இதெல்லாம் திரும்ப வராது..எங்க காலேஜில் ஒரு எல்லைக்கும் மேல யாரையும் யாரும் கேலி கிண்டல் பண்ண மாட்டாங்க அது ஒரு ரூல் இதுக்காக நீங்க அரிவாள் எல்லாம் காலேஜ்க்கு கொண்டு வர தேவை இல்லை..

எனக்கு என்னமோ உங்க பொண்ணு உங்க கிட்ட தப்பா சொல்லி இருக்கலாம் சின்னதா கிண்டல் பண்ணினதை பெரிசா சொல்லி இருக்கலாம்... இது எல்லாம் கண்டுக்காதீங்க சார் "...என்று கூற

"அப்படி இல்ல தம்பி என் பொண்ணு நேத்து காலையில் அழுதுச்சு பா அது தான் மனசு கேக்கலை "...என்று கூற

அந்த முகம் தெரியாத இவரின் மகள் மீது ஏனோ கோபம் வந்தது, " என்ன அப்படி ஒரு தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது..அப்படி என்ன பெற்றவரை பதற வைப்பது...எதுவாக இருந்தாலும் எதிர் நோக்க வேண்டாமா..பெற்றவர் பின்னே இப்படி தான் ஓடி ஒளிந்து கொள்வதா "... என்றும் அந்த பெண் மேல் கோபப்பட்டவன் பாவம் மகள் கூறினால் என்று இவரும் ஓடி வந்து விட்டார் என நினைத்தவன்,

" சார் நான் ஒன்னு சொல்றேன் தப்பா எடுக்காதீங்க நான் சொல்றது உங்களுக்கு அதிகப்படியா இருக்கும் ஆனால் உங்களை பார்த்ததும் ஏனோ எனக்கு பிடிச்சு இருக்கு அதுனால சொல்றேன் உங்க பொண்ணை எவ்வளவு நாள் இப்படி தன்னம்பிக்கை இல்லாமல் வளர்க்க போறீங்க ??"...என்று கேட்க

அவரோ அவன் சொல்வதன் வீரியம் உணர்ந்தாலும் கிராமத்தில் அவர் இருந்தாலும் அவருக்கும் பெண் பிள்ளைகளை கட்டுப்பெட்டியாக வளர்க்க விருப்பம் இல்லாத காரணத்தால் தான் வெண்ணிலா இன்று வரை இங்கே படித்து கொண்டு இருக்கிறாள் என புரிந்தும் அவன் கூறிய விதத்தில் சிந்தித்து பார்க்க கொஞ்சம் அவசரம் தான் பட்டு விட்டோமே என நினைத்து ஒன்றும் கூறாமல் பயணம் செய்ய அதற்குள் காலேஜ் வந்து விட்டது..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top