மன்மதன் 13
.
அத்தியாயம் : 13
"சார் நான் சொன்னதை நீங்க ஒன்னும் தப்பா நினைக்கலையே"... என்று மனு கூற
"அவரோ ச்ச அப்படி இல்ல தம்பி.
நானும் என் பொண்ணை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு இதை சாக்கா வெச்சு ஒரு எட்டு பார்த்துட்டு போயிடறேன்".. என்று கூற
அவனோ சிரித்து , "அதை வேணா செய்ங்க..ஆனா அரிவாளை எடுக்காதீங்க".. என்று கூறி ஏதேதோ பேசி கொண்டு வர இருவருக்குள்ளும் மெல்லிய நட்பு உருவாகி இருந்தது..அதிலும் சண்டியர் மனதில் பொறுப்பு உள்ள நல்ல பிள்ளை என சிம்மாசனம் இட்டு அமர்ந்து விட்டான் மனு..
அதற்குள் காலேஜ் வர , "சார் உங்க பொண்ணு எந்த டீபார்ட்மெண்ட்ல படிக்கிறாங்க??"...
"BE படிக்குது தம்பி..நான் போய்க்கறேன் தம்பி"... என்று காரை விட்டு இறங்க முற்பட என்க
"அதுல நிறைய டிவிஸின் இருக்கு சார் ..இங்கே நிறையா பேர் படிக்கிறாங்க இதுல எங்கேன்னு சொல்லி தேடுவீங்க இருங்க நான் ஹெல்ப் பண்றேன் "...என்று கூறி அவனது வருங்கால மாமானார் மனதை மனு குளிர்வித்து கொண்டே இருக்க அவர் அந்த குளிரில் நடுங்கத்தான் இல்லை..ஆனால் சுகமாக நனைந்து கொண்டே வந்தார்...
"தம்பி உங்களுக்கு சிரமம்மா இருக்காதா தம்பி"...மீண்டும் கேட்க
"அதெல்லாம் ஒன்னுமில்ல நீ வாங்க முதல்ல உங்களை பார்த்தா ஒன்னும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்கன்னு நெனைக்கிறேன் வாங்க ஏதாவது சாப்பிட்டுட்டு உங்க பொண்ணை தேடுவோம் "...என்று கூறியவன்
அவரை கேன்டீனுக்கு அழைத்து சென்று உணவு வாங்கி கொடுத்தவன் அவர் பணம் கொடுக்க போக அவன் மறுத்து அவனே கொடுத்தவன் அவர் டீ குடித்து கொண்டு இருக்க அவர் குடித்து முடிக்கும் வரை அவருக்காக எதிர் இருக்கையில் காத்து இருந்தான்..
அந்நேரம் என்று பார்த்து வெண்ணிலா வர மீண்டும் அவன் கண்கள் அளவிட்டது...இன்று பிங்க் நிற குர்தி அணிந்து இருக்க, " ஓ இன்னிக்கு மேடம் வேற ட்ரேஸ் போட்டு இருக்காங்க..இன்னிக்கு எவன் கூட வந்தாலோ "...என்று நெனைத்தவன் குனிந்த தலை நிமிராமல் வந்து கொண்டு இருந்த பெண்ணை விழி மூடாமல் பார்த்து தனக்கு ஒரு டேபிள் முன்னே அவள் அமர பின்னாலே வனிதாவும் அதற்கு பின்னாலே தூரத்தில் வர
அதற்கு பின்னால் தூரத்தில் ஒரு மரத்தின் அடியில் அசோக் அண்ட் அவனது நண்பர்கள் நிற்பது இவனுக்கு தெளிவாக தெரிய, " ஓ காதலனை பார்த்துட்டு தான் வரியா என்று நினைத்தவன் |...அவள் பின்னால் திரும்பி யாரையோ பார்க்க அவளின் கண்கள் பின்னால் செல்வதை கூட தாங்க கொள்ள முடியாதவன் அவளது கவனத்தை கலைக்கும் பொருட்டு தான் இங்கே தான் இருக்கிறேன் என்பதை அவளுக்கு உணர்த்தும் பொருட்டும்,
தன் டேபிளில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ஒரு மிடறு விழுங்கியவன் சத்தத்தோடு வைத்து, " சார் உங்க பொண்ணு பேர் என்னன்னு சொன்னீங்க??"... என்று இதுவரை கேட்காத கேள்வியை சத்தத்தோடு அவளுக்கு கேக்கும் படி வைக்க அவரோ, " வெண்ணிலா தம்பி"... என்று அவர் எதார்த்தமாக கூற அவன் குடித்து கொண்டு இருந்த நீர் அவர் கூறிய பெயரை கேட்டதும் உள்ளேயும் போகாமல் வெளியேயும் போகாமல் தொண்டைக்குள்ளே ஆட்டம் காட்டி அவனுக்கு புரை ஏறியது...
அவனை பார்த்து அதிர்ந்த விழிகள் சட்டென்று திரும்பி அவனை பார்த்தாலும் தந்தையின் குரல் கேட்கவும் , "அப்பா"...என்க
இந்த ட்விஸ்டை மனுவே எதிர்பார்க்கவில்லை அதை விட அவனது நியாபகத்துக்கு வந்தது அந்த அரிவாளும் அவர் கூறிய காரணங்களும், "ஓ என்னை வெட்ட தான் நீ ஆளை வர சொல்லி இருந்தியா "...என நினைத்தவன் அமைதியாக அங்கேயே அமர்ந்து இருந்தான்..
நடக்கிறது நடக்கட்டும் என்ன பண்ணிட போறான்னு நானும் பார்க்கிறேன் என்று தந்தையை கண்ட சந்தோசத்தில் கண்கள் கலங்கி அவரை கட்டி கொண்டு அவரது மடியில் அமர்ந்து இருக்கும் அவளை இவன் முறைத்து பார்க்க ,
சண்டியரோ , "பாருங்க தம்பி வயசாகுது இன்னும் சின்ன குழந்தை தான்"... என்று தன் மகள் தன் மடியில் அமர்ந்து இருப்பதை பெருமையாக கூற அவனோ அதை கண்டு அவனுக்கு எரிச்சல் தான் வந்தது ஆனாலும் நல்ல மனிதர் ஆச்சே என நினைத்து வராத சிரிப்பை வலிய சிரித்து வைக்க,
அவளோ தந்தையை கண்டதும் அவன் அங்கு இருப்பதை மறந்தவள் அவன் பார்க்கிறானே என நினைத்து மெல்ல தன் தந்தையின் மடியில் இருந்து இறங்கி அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவள், " எப்போ அப்பா வந்திங்க வரேன்னு ஒரு வார்த்தை சொல்லல"...
"ஒன்னுமில்லை பாப்பா நீ தான் அழுதியா அதுக்கு தான் வந்தேன்"... என்று கூற
அவளுக்கு அப்போது தான் அவள் மறக்க முயற்சி செய்த அந்த பொல்லாத கனவு நியாபகம் வர எதிரே ஒருத்தன் கண்களை மூடாமல் அவளையே உறுத்து விழித்து கொண்டு இருக்க தீடிரென அந்த கனவை எண்ணிய வெண்ணிலா அதற்கு காரணமானவன் எதிரே காரணமே அமர்ந்து குப்பென்று சிவந்தாள் வெண்ணிலா...
கால்கள் மீண்டும் தள்ளாட அவனுக்கு நேர் எதிரே தான் அவள் அமர்ந்து இருக்க அவளது முக சிவப்பை அடக்க செருப்பை கழட்டி கால் விரல்களை நிலத்தில் வைத்து அழுத்த மேலும் சிவக்கத்தான் செய்தது..
காரணம் மனு தனது நீண்ட கால்களை அவள் புறம் நீட்டி வைத்திருக்க இவள் கால் பெரு விரலை அழுத்தவும் அவளது பளிங்கு கால் அவனது கால் முட்டை தொட்டு முட்ட இருவரும் கரண்ட் ஷாக் அடித்தது போல விலகினர்..
முதலிலே தவறாக நினைத்து கொண்டு இருப்பவன் அவள் தானே அவனை முட்டினாள் என நினைத்து அவளை பார்த்து முறைக்க அவளோ கண்காளாலே அவனிடம் இறைஞ்ச வேண்டிய நிலைக்கு தள்ள பட இறைஞ்சினாள் அவன் தான் கண்டு கொள்ள வில்லை..
"ஏன் டி என்னை அடிக்க உன் அப்பனை வர சொல்லிட்டு இங்க என் கால்லை தடவுறியா பார்க்க ஒண்ணும் தெரியாதவ மாதிரி இருந்துட்டு என்கிட்டேயவா உன் வேலையை காட்டுற"... என்று அவனது உள்மனம் பொங்க , "சார் நீங்க பேசிட்டு இருங்க நான் கிளம்பறேன்"... என்று சண்டியரை பார்த்து கூறினான்..
"தம்பி இருங்க தம்பி போகலாம்"... என்று கூறியவர்
ஒன்றும் பேசாமல் தலை கவிழ்ந்து இருப்பதை பார்த்து அமர்ந்து இருக்கும் மகளை பார்த்து , "பாப்பா தம்பி நல்ல பையன் ...அவரும் இங்கே தான் மேற்படிப்பு படிக்கிறாங்க...காலேஜ் ல கேலி,கிண்டலன்னு யாராவது செய்யறது தான் டா அதுக்குன்னு போய் அழுவாங்களா உனக்கு ஏதாவது னா நம்ம தம்பி இருக்காங்க அவங்க கிட்ட சொல்லு நல்ல பையன் உன்னை பார்த்துப்பாரு"... என்று மகளை அவன் முன்னே குறைபட
அவளோ என்ன செய்வது என்று புரியாமல் தவித்தாள் அதாவது வாய் வரை வந்து முட்டி நிற்குமே அது போல தன் கையை நீட்டி இவன் தான் அது என்று காட்ட வேண்டும் என்று அவள் நாவு துடிக்க அவனோ சொல்லு டி இப்போ சொல்லு டி என வடிவேலு காமெடி ஸ்டைலில் அவளை முறைத்து கொண்டு இருந்தான்..
அவனுக்கு அவரை பார்த்து பயம் ஒன்றும் இல்லை எதையும் ஒரு கை பார்க்கும் தில் அவனிடம் இருக்கிறது அதனாலே அவன் அமைதியாக இருக்க அவளோ தந்தையின் ஆறுதலுக்கு வெறும் தலையை மட்டும் ஆட்ட
"பாப்பா உனக்கு ஏதாவது இருந்தா இதோ இந்த தம்பி கிட்ட சொல்லு தம்பி பார்த்துப்பார் நல்ல மனுசன்"... என்று மீண்டும் மீண்டும் அவனது புகழ் பாட அவளது செவி கூசி போனது தான் மிச்சம் இப்போ எதுக்கு தன் தந்தை வந்தார் என்ற கேள்வி தான் அவளுக்கு எழுந்தது..
"அப்பா எனக்கு இந்த காலேஜ் வேணாம் பா "...என்று ஒரு வழியாக தன் தந்தையின் முகத்தை பார்த்து கூற
இங்கே இவனுக்கோ பொங்கியது, " ஏன் இங்க எவனும் சிக்கலையா அங்கே உனக்காக ஒரு பரதேசி நிற்கிறானே "..என்று அசோக் ரொம்ப நேரமாக மனு மற்றும் வெண்ணிலா ஒரே டேபிளில் அமர்ந்து இருப்பதை கவனித்து கொண்டே இருக்க அதை கவனித்த மனு அவனை பார்த்து முறைத்து விட்டு , "என்னமோ பண்ணி தொலைங்க டா "...என நினைத்து , "சார் நீங்க பேசிட்டு இருங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு"... என்று கூறியவன் மேற்கொண்டு அவர் மறுக்க மறுக்க கிளம்பி விட்டான்..
