மன்மதன் 14
.
அத்தியாயம் : 14
அவன் சென்றதும் அவளை பிடித்து விட்டார் சண்டியர் இங்கே தான் நீ இருந்து ஆக வேண்டும் கல்லூரி என்றால் அப்படி இருக்கும் என்று கூறி ஒரு வழியாய் மகளை சமாதானம் செய்து வெளியே வந்தவர் திரும்பி செல்ல இருக்கும் சேர் ஆட்டோவில் ஏறி கொண்டார்..
செல்லும் அவரையே பார்த்து கொண்டு இருந்தவள் அவளது வகுப்புக்கு செல்ல இப்படியே இரண்டு நாட்கள் சென்றது ..
அவனும் கண்டு கொள்ளவில்லை அவளும் கண்டு கொள்ளவில்லை கிட்டத்தட்ட அவள் தான் அவனை பார்க்க கூடாது என வேண்டி இருந்தாள்... தன் தந்தை பேசிய விதத்திலேயே அவளுக்கு புரிந்து போனது அவர் எல்லா விசயத்தையும் அவனிடம் கூறி விட்டார் என்று அதனாலே ஓடி ஒளிந்தாள்..
ஆனால் அதற்கு நிம்மதியாக செழியன் விட வில்லை அவள் தந்தை சென்ற நான்கு நாட்களில் செழியன் தன் தங்கையை காண வந்தான்," யார் கிண்டல் செய்தான் சொல்லு "...என்று அவளை கேட்க
அவளோ வாயை திறந்தாள் இல்லை அந்நேரம் பார்த்து மனு அவனுடைய பைக்கில் சீறி கொண்டு அவர்களை கடக்க செழியனால் அவனையோ அவனது வண்டியையோ மறக்க இயலுமா அவனுக்கு புரிந்து போனது ஒரு வேளை மனுவாக இருக்குமோ என நினைத்து, " இவன் தான உன்னை கிண்டல் செஞ்சது"... என்று தங்கையை கேட்க
அவளோ நிமிர்ந்து ஒரு நொடி பார்த்தவள் பதில் ஏதும் கூறாமல் இருக்க தன் தங்கையின் ஒற்றை விழி பார்வை போதாதா அவள் அண்ணனுக்கு செய்தி புலப்பட பொங்கி விட்டான் செழியன்...
கல்லூரி என்று கூட பார்க்காமல் செழியன் வேட்டியை மடித்து கட்டி பைக் பார்க்கிங் இல் நண்பர்களுடன் பேசி சிரித்து கொண்டு இருந்தவன் முன் புயல் போல வந்து நின்றான்..
இவனை எதுக்கு என் முன்னாடி வந்து நிற்கிறான் என்று அவனை எதிர் கொள்ள அவனது சட்டையை பிடித்து," எதுக்கு டா என் தங்கச்சியை கிண்டல் பண்ணின "...என்று கேட்க
செழியன் தீடிரென அதுவும் அவனது நண்பர்கள் ஜூனியர்ஸ் முன்னே அவன் மேல் கை வைத்தது அவனுக்கு துளியும் பிடிக்காமல் போக செழியன் மனுவின் இமேஜை தொட்டு தீண்டி இருக்கிறான் விடுவானா மேற்கொண்டு எதுவும் யோசிக்கவில்லை ஓங்கி ஒரு அறை விட்டான் மனு...
தன் அண்ணன் ஏதாவது செய்து விடுவான் என்று பயந்தே அவனின் பின்னால் வெண்ணிலா ஓட அதற்குள் இருவரும் ஒருவரை ஒருவர் மீண்டும் தாக்க துவங்கி இருக்க மனுவின் கோட்டைக்குள் செழியன் வீரனே என்றாலும் நுழைந்து அவனை அடிக்க முடியுமா அடித்தால் என்ன ஆகும் என்று அந்த காலேஜில் படிக்கும் அனைவருக்கும் தெரிய வேண்டாமா?? அவனது நண்பர்களும் களத்தில் இறங்கி இருக்க ஒத்தை ஆளாக அவர்களுடன் போராடி கொண்டு இருந்தான் செழியன்..
வெண்ணிலா இடையே வந்து தன் அண்ணனை பிடித்து இழுக்க எந்த பிரயோஜனமும் இல்லை செழியனும் ஆம்பிளை தானே அவனும் வயதுக்கு குறைந்த ஒரு பொடியனிடம் அடி வாங்கியதை அவனது தன்மானம் இடம் கொடுக்காமல் அவனும் வெளுத்து வாங்க விஷயம் காட்டுத்தீ போல கல்லூரியில் பரவ கல்லூரியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் வந்தனர்..
அதிலும் ஒரு பேராசிரியர் வேகமாக ஓடி வந்தார் அவர் வேறு யாருமில்லை மாலதி செழியன் ..செழியனின் ஒரு நாள் மனைவி..திருமணம் முடிந்த மறுநாளே வீட்டை விட்டு வெளியேற அவர் வேகமாக வந்து , "என்ன நடக்குது இங்கே இது காலேஜா இல்லை வேற எதாவதா??"...என்று கத்த அவரது சத்தத்தை கேட்டதும் அடிதடி செய்வோர் விலகினர்..
மாலதியும் செழியனுக்கு தற்போது பேசி கொள்வதில்லை கிட்டத்தட்ட ஆறு மாதம் கழித்து இருவரும் சந்தித்து கொள்ள அதுவும் இந்த சூழ்நிலையில் அவரை சந்திப்போம் என மாலதி எதிர்பாராததால் மாலதி செழியனை குற்றப்படுத்துவது போல பார்க்க செழியன் என்னும் புலி அந்த பார்வையில் பூனையாகி நின்றது..
இங்கே இளம் ரத்தம் ஓடும் மனுவுக்கு கோபம் அடங்கவில்லை தன் கோபத்தை எல்லாம் கை முஷ்டியில் அடக்கி பின்னால் கையை கட்டி நிற்க கல்லூரி முதல்வர் அவனுடைய அப்பா ரவீந்தரின் நண்பர் நேராக அவர் முன்னே சென்றவன் , "அங்கிள் என்னை நீங்க டிஸ்மிஸ் பண்ணினாலும் பரவாயில்லை நான் இவனை அடிக்கமால் விட மாட்டேன்".. என்று எகிற அவரோ, " மனு கீப் குவைய்ட் "..என்று அவனை அடக்கியவர்
செழியனை பிடி பிடியென பிடித்து கொண்டார்..
"என்ன மிஸ்டர் காலேஜ் உள்ள வந்து ரவுடி தனம் பண்ணிட்டு இருக்கீங்க ..உங்க கோபத்தை காட்ட நான் இங்கே காலேஜ் வெச்சு நடத்தல நீங்க எப்படி என்னோட ஸ்டூடெண்ட் ஐ காலேஜ்க்குள்ள புகுந்து அடிக்கலாம்..ஏதாவது இருந்தா நீங்க என்கிட்ட சொல்லணும் அதெப்படி நீங்க என் ஸ்டுடென்டை அடிக்கலாம்"... என்று கேள்வி கேட்க
"சும்மா புரியாமல் பேசாதீங்க சார் அவன் என்னோட தங்கச்சியை கிண்டல் செஞ்சான் "...என்று கூற
"அதை இங்கே எல்லோரும் தான் புதுசா வந்தவர்களை ரேக் பண்றாங்க இது எல்லாம் டேக் இட் ஈஸி ஆஹ் எடுக்காமல் சண்டை போடுறது சரி இல்லை ஸ்டுடெண்ட்ஸ் பிரச்னையை அவங்களே தீர்த்துப்பாங்க"...கூறியது வேறு யாருமில்லை மாலதியே தான்..
மாலதியும் செழியனும் பிரிந்து இருக்கலாம் அதற்காக எல்லோர் முன்னும் அவனை குற்றப்படுத்துவது செழியனால் பொறுத்து கொள்ளவில்லை இருந்தும் அடங்கி நிற்க அது மாலதியின் கண்களுக்கு படவில்லை மாலதி செழியனை ரௌடியாகவே கணக்கில் கொண்டாள்..
இறுதியில் முதல்வர் இரு பக்கமும் சமரசம் செய்ய மனு அடங்கவில்லை இவ்வளவு தூரம் சென்ற பிறகு ஒன்று அவள் இங்கே இருக்க வேண்டும் இல்லை நான் என்ற முடிவுக்கு வந்தவன், " அங்கிள் ஒன்னு நான் இல்லை அந்த பொண்ணு இங்கே இருக்கணும் "...என்று அவரிடம் கூற
அவரோ, " இரண்டு பேரும் இருக்கணும் உங்க தனிப்பட்ட கோபத்தை வெளியே வைங்க இங்கே கொண்டு வராதீங்க"... என்று கூற அனைவரும் சமரசமாகி பிரிந்தனர்..ஆனால் செழியனும் நடந்த விஷயத்தை மறக்கவில்லை மனுவும் அவ்வளவு எளிதில் நடந்த விஷயங்களை மறப்பவன் அல்ல..
இதற்கு எல்லாம் காரணமாவளை அவ்வளவு எளிதாக அவன் விட அவனுக்கு விருப்பம் இல்லை அவளை பழி வாங்க தக்க தருணத்துக்காக மனு காத்திருந்தான்..அதற்கான நாள் அவனுக்கு வெகு விரைவிலேயே கிடைத்தது..
ஒரு நாள் மாலை கல்லூரி விட வெண்ணிலாவுக்கு தேவையான ஒரு புத்தகத்தை எடுக்க நூலகத்துக்கு சென்றாள் வெண்ணிலா...
அது பெரிய நூலகம் ஒவ்வொரு டிப்பார்ட்மெண்ட் என்று தனி தனியாக நூலகம் இருந்தாலும் மொத்தமாக ஒரு பெரிய நூலகம் அந்த கல்லூரியில் இருந்தது எல்லா பிரிவு மாணவர்களும் அங்கே வருவர்..
கிட்டத்தட்ட நான்கு அடுக்கு கட்டிடங்களை கொண்ட நூலகத்தில் நான்காவது தளத்தில் கடைசி வரிசையில் யாருமில்லா இடத்தில் தனக்கு தேவையான நூலை தேடி கொண்டு இருந்தாள் வெண்ணிலா..
கொஞ்ச நேரமாக துளைத்தெடுக்கும் பார்வையில் யாரோ தன்னை ஊசி குத்துவது போல இருக்க அவளது கவனம் புத்தக அடுக்கில் இருந்து அந்த உணர்வு வரும் திசைக்கு செல்ல அங்கே மார்பில் கைகளை கட்டி கொண்டு நின்று கொண்டு இருந்தான் மனு பரதன்..
அவன் அவளை பார்க்கும் பார்வையில் என்னவோ சரியில்லாத உணர்வு அவளுக்கு கொடுத்தது இங்கே இருந்து செல் என அவளது மூளை அறிவுறுத்தியது..அவள் செல்ல வேண்டுமெனில் அவனை கடந்தே செல்ல வேண்டும்..
அவனை கடக்க வேண்டுமெனில் அவன் அருகே செல்ல வேண்டும் அதற்கு அவன் வழி விட அது வேறு ஒரு வழி பாதை வேறு ...ஒருவர் கடந்தால் மட்டுமே மற்றொருவர் செல்ல முடியும் என்று இருக்க மனுவோ அவளை நோக்கி தனது கன்னங்களை தேய்த்து கொண்டே ஒரு அடி எடுத்து வைத்தான்...
அவளுக்கு தூக்கு வாரி போட்டது..அவன் என்னவோ தன்னை செய்ய போகிறான் என்று அவள் உள்மனம் சிந்தித்தது..அவள் சிந்தனையும் சரியே அவன் அவளை தேடி தான் இவ்வளவு தூரம் வந்து இருக்கிறான்...
அவன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க அவளது மான் விழி மிரட்சியுடன் யாராவது இருக்கிறார்களா என தேட அவள் கெட்ட நேரம் என்று தான் கூற அவள் நிற்கும் திசையில் யாருமே இல்லை..அவளது மார்பில் பிடித்து புத்தகமோ அவள் மனது படபடக்க அந்த புத்தகமும் சேர்ந்து படபடத்தது..
அவனோ அவளது ஒவ்வொரு அசைவையும் நோக்கி கொண்டே அடி எடுத்து வைக்க இவளுக்கு அவனை பார்த்த அதிர்ச்சியில் வார்த்தைகள் வராமல் அவளது நாவு மேல் அன்னத்தோடு ஒட்டி கொள்ள முகமெல்லாம் நனைந்து ஒழுகியது..
அவன் நெருங்கி விடுவான் நெருங்கி விடுவான் என்று நினைத்து அவள் பின்னால் செல்ல அங்கே இருந்த சுவர் போதும் இதற்கு மேல் வழி இல்லை இடமும் இல்லை என அவளை தடை செய்ய ஒரு வழியாக அவன் அவள் அருகே எட்டி விட்டான்..
பயத்தில் நடுங்கி கொண்டு இருப்பவளை தன் இரு கைகளால் சிறை செய்து நெருங்கி நின்று அவள் கண்களை பார்க்க அவளோ நடுங்கி, " என்னை விடுங்க எனக்கு போகனும்".. என்று நடுங்கிய குரலில் கூறியவளுக்கு கடந்த வாரம் அவள் கண்ட கனவு வந்து தேவையில்லாமல் இம்சிக்க அந்த கனவை நினைவு ஆக்க தானே வந்து இருக்கிறான் இந்த மன்மதன்..
அவனோ அவளை அளவிட்டவன், " அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுடுவேன்னு உனக்கு தோணுதா இந்த இடத்தில் வாங்கி இருக்கேன் உன் அண்ணன் கிட்டே "...என்று அவனது கன்னத்தை தேய்த்த படி கூற
அவளோ விட்டால் அழுது விடுவாள்," போல மன்னிச்சிடுங்க அண்ணா தெரியாம "....என்று கூறி முடிப்பதற்குள்
"தெரிஞ்சே தான் நீ சொல்லி தானே உன் அப்பா என்னை அடிக்க வந்தாரு உன் அண்ணன் நீ நினைச்ச மாதிரி அடிச்சிட்டு போயிட்டான்.."...என்று கண்களில் பழி உணர்வோடு கூற
"ப்ளீஸ் விட்டுடலாமே "...என்க
"விடவா அப்படி எல்லாம் விட முடியாது"... என்று மேலும் அவள் அருகே நெருங்கி நின்றான்..
அவளது உடலோடு உடல் உரச அவளது அங்கங்கள் அவனை தீண்ட அவளது ஏறி இறங்கிய மார்புகள் அவனிடம் கெஞ்ச கொஞ்சம் கூட இளகவில்லை மனு...
அவள் எந்த நுனியிலும் சென்று விட கூடாதே என அவளை மேலும் நெருங்கி நிற்க முகமோடு முகம் உரசும் அளவுக்கு நெருங்கி நின்று இருந்தான்..
இருவரின் மூச்சுக்காற்றும் இருவரையும் தீண்டி கொண்டு இருந்தது அவனது நெருக்கமும் அவன் அடித்து இருந்த ஸ்ப்ரேயின் மணமும் அவளது நாசியை தாக்கி இலேசான மயக்கத்தை கொடுக்க அவள் காதில் அவனது நச் எங்கேயோ ஒலிக்க அவள் அதிர்ந்து நிற்கும் போதே அவனும் அவளை நச் செய்தான்..
முதலில் அவளது பிறை போன்ற நெற்றியில் தன் அச்சாரத்தை பதித்தவன் அவள் அதிர அவனோ நமட்டு சிரிப்புடன் , "தொடங்கி தானே இருக்கிறேன்..கூல் பேபி..ஓட்டுக்கா லாஸ்ட்ல ஷாக் ஆகிக்கோ "...என்று அவளது பட்டு போன்ற வல கன்னத்தில் முத்தம் வைத்தான்...
அவளோ பேய் அறைந்தது போல இருந்தது அவனுக்கு வசதியாக போய் விட அவளது இட கன்னத்தையும் மனு ருசி பார்த்தான்..
பின் அவளது துடிக்கும் செவ்விதழ்கள் அவனை அழைக்க அதை மற்றும் விட்டு வைப்பானேன் அதிலும் அவனது முத்திரையை பதித்தான் ஆழ்ந்த முத்தம் கிட்டத்தட்ட நான்கு வினாடிகள் அவளது உதட்டை அவன் வசப்படுத்தி இருந்தான்..அதற்குள் அவள் விழிகள் நீர் சுரக்க அவளை விட்டு விட்டான்..
பின் நெருங்கி நின்று அவளது மோவாயை ஒரு கையால் பிடித்து, " இதையும் உன் அண்ணன் கிட்ட சொல்லு டி அவன் வரனும் என்கிட்ட.. அப்போ காட்டறேன் நான் யார்னு என் மேல கையை வைச்சா என்ன ஆகும்னு தெரிய வேணாம்?? "...
அவளோ அதுக்கு என்று அவனை குற்றப்படுத்தி பார்க்க
"வேணும்னு தான் கிஸ் பண்ணேன் உன்னை கிஸ் பண்ண தான் வந்தேன் இதுக்கும் நீ ஸீன் போட்டு எவனை கூட்டிட்டு வந்தாலும் ஐ டோன்ட் கேர்"... என்க
அவளோ அவனை மரத்து போய் பார்த்தாள் என்ன மனுசன் இவன் என்று அவனை ஒதுக்கி தள்ளி செல்ல முடியாத படி அவள் அவனது முத்த மயக்கத்தில் இருந்தாள்.. கால்கள் வலுவிழந்து அவனிடமே சாயந்தது...
அவனுக்கும் மயக்கமே அதை ஒத்து கொள்ள தான் வேண்டும் ஒற்றை முத்தத்தில் அவளை பயப்படுத்த வந்த அவனுக்கு அவளது முகமும் அவளது கொள்ளை கொள்ளும் அழகும்(இந்த நொடி அவள் அழகை பற்றி பேசினால் ஒத்து கொள்ள மாட்டான்)அவளது வாளிப்பும் அவனை அவள் பக்கம் சுண்டி இழுக்க நெற்றியில் தொடங்கிய ஊர்வலத்தை இதழில் முடித்தான்..
சிவந்த அதரங்கள் மீண்டும் அவனை சுண்டி இழுக்க மீண்டும் தேன் குடிக்கும் ஆசை வந்தது..முதன் முறையாக தேன் குடித்து இருக்கிறான்..மீண்டும் அவளை மனு நெருங்க அவளே சிலை போலவே அந்த சுவற்றில் ஒட்டி இருக்கும் பல்லி போல இருக்க மீண்டும் அவளது இதழை ருசிக்க நிலை குழைந்து போனாள் வெண்ணிலா..அவன் மீதே அவள் கால்கள் வலு இல்லாமல் சாய்ந்து விட்டாள்... அவனுக்கு வசதியாக போக அவளது இடையில் ஒரு கையை வைத்து அழுத்தி மறு கையால் அவளது செவி மடலை தீண்டி கொண்டே உணர்ச்சி பிளம்பில் தவித்தான் மனு...
அவள் இதழ் என்னும் தேனை ருசித்து கொண்டு இருக்கும் போதே, " நூலகத்தில் அந்த புக் இல்லையா மேம் "..என்று படிகளில் வேகமாக யாரோ யாரிடமோ பேசி ஏறி வந்து கொண்டு இருக்க அந்த சத்தத்தை அவன் கேட்டான் இருந்தாலும் அவர்கள் வர இன்னும் இரு வினாடிகள் இருக்கிறதே என மீண்டும் தேன் குடிக்க அவளுக்கும் அந்த சத்தம் நன்றாகவே கேட்டது ..வந்தது வேறு யாருமில்லை வெண்ணிலாவின் அண்ணி மாலதி...
மல்லிகை மணம் வீசும்…
