மன்மதன் 15
.
அத்தியாயம் : 15
மன்மதன் தேசத்து மல்லிகை
உணர்ச்சி பிளம்பில் இருவரும் தவித்து நிற்க அதில் இளம் சிங்கத்திடம் தொய்ந்து போனது என்னவோ அந்த இளம் மான் தான் அதிலும் தன் அண்ணியின் குரலை கேட்டதும் அவளுக்கு தூக்கி வாரி போட அவள் கால்கள் தள்ளாடி அவன் மீதே தொய்ந்து போக அவளின் ஒவ்வொரு அங்கு அசைவையும் தனது குறும்பு விழிகளில் தீர்க்கமாக பார்த்தவன் அவள் முகத்தை பார்த்து பழி வாங்க வேண்டும் என்று வந்தவன் இப்போது இளகினான்..
ஆம் அவன் தந்த இதழ் ஒற்றலால் சிவந்து போய் இருந்த அதரம் நொடி பொழுதில் பயத்தில் வெளிறி போக அவளது கோலி குண்டு கண்கள் அலைபாய முகமெல்லாம் வியர்வையில் குளித்து கழுத்தில் இருந்து ஒரு குண்டு மேலேயும் கீழேயும் ஏறி இறங்கி அவள் தவிப்பை அவனுக்கு உறுதி செய்ய அவன் கண்கள் மேலும் கீழிறங்கி செல்லும் முன்,
அருகில் அவளது அண்ணியின் சத்தத்தை கேட்டதும் பயத்தில் அவனது சட்டையை பிடித்து அவனிடமே தஞ்சம் புகுந்து வெண்ணிலா ஒளிய முற்பட அவனோ தன் மார்போடு பதுங்கி இருக்கும் அந்த சிறு மானை காக்க வேண்டிய கடமையில் இருந்தான் இல்லையேல் அவனுக்கும் பிரச்சனை தானே ..
வேகமாக அவளை அவனது அகன்ற முதுகில் பதுக்கி ஒளித்து வைத்தான் என்றே கூற வேண்டும்...அங்கே ஒரு தூண் போன்று இருப்பதால் அதில் ஒளியும் அளவுக்கே அவள் தேகம் இருப்பதால் அங்கே அவளை மறைத்தான் அவளுக்கு முன்னே அவளது மூச்சு காற்று படும் இடத்தில் அவன் நின்று கொண்டு தன் நீண்ட கைகளால் ஒரு புக்கை தேடுவது போல பாவலா செய்ய தொடங்கினான்..
பயத்தில் புசுப்புசு வென அவள் இழுத்து விடும் மூச்சு அவனது சட்டையை தாக்கின...அதிலும் மாலதியின் சத்தம் அருகில் கேட்கவும் மேலும் பதட்டம் அடைந்தவள் அவனை ஒன்றி அவனது சட்டையை கொத்தோடு பிடித்து என்னை காப்பாற்று என்ற நிலையில் அவனிடமே தஞ்சம் புக அவனும் அவளுக்கு அரணாக மாறினான்..
அவளின் சூடான வியர்வை வழிந்த தேகம் தன் மீது உரசி கொண்டே இருக்க வேண்டும் என்றே அவள் மீதே சாய்ந்து அவன் நிற்க அதுவும் அவளுக்கு அவஸ்தையாகி போனது என்று தான் கூற வேண்டும்...அவனது உடல் வாசனை அவளது நாசியில் தாக்கி அந்த சிறு பெண்ணுக்கு ஒரு வித மயக்க உணர்வு தான் எழுந்தது...அவனுக்கும் அவளது அருகாமை பிடித்து இருந்தாலும் அவளை காக்க வேண்டி அமைதியாக இருந்தான்...
இந்த இடத்தில் அவன் ஒன்றை மறந்து விட்டான்.. இந்த நொடி அவளை காக்க நினைக்கும் நீ அதையே செய்த அண்ணனுக்காக அவனின் தங்கையை தாக்கவே நீ இங்கு வந்து இருக்க, செழியன் ஒரு அண்ணனாய் உடன் பிறந்த தன் தங்கையை சீண்டியவனை தான் அவன் அடித்து இருக்க அதுக்கே மனு அவளிடம் அத்து மீறி இருந்தான்..
இப்போது செழியன் அவளை காப்பது போல ஒரு நாள் மனுவும் இவள் பின்னாலே எவன் கண்களாவது இவள் மீது படுகிறதா என கண்காணிக்க தான் போகிறான் என்றும் அதே நேரம் பிறர் கண்கள் அவள் மீது தீண்டுவதை கூட தாங்கி கொள்ளாமல் யார் கண்கள் அவள் மீது விழுகிறதோ அவர்களை தன் கைகளால் அடித்து நொறுக்க போகிறான் என்று அவன் இந்நேரம் அறியவில்லை...அவளும் அந்நேரம் அதை அறியவில்லை...
அவர்களும் ஒவ்வொரு வரியாக புத்தகங்களை தேட மிக சரியாக மாலதி இவர்கள் நிற்கும் இடத்திற்கு வரவும் அதற்குள் அவருடன் வந்தவர், " புக் கிடைச்சிடுச்சு மாலதி மேம் "...என்று கூறவும் மாலதியின் முன்னே வெண்ணிலாவை மறைத்த படி நின்று தூரே இருந்து பார்த்தால் அவன் மட்டும் தான் புத்தகத்தை தேடி கொண்டு இருப்பது போல தோன்ற அவன் என்னமோ சாதாரணமாக இருப்பது போல நிற்க பாவம் அந்த சிறு மொட்டோ பயத்தில் செத்து கொண்டு இருந்தாள்... அவரும் இவனை ஒரு பார்வை பார்த்து விட்டு வேறு புறம் சென்று விட்டார்...
என்ன தான் அண்ணி என்றாலும் வெண்ணிலா அவரிடம் உரையாடியது இல்லை அவர் முன்னே அவளுக்கு அவமானப்பட விருப்பம் இல்லை அதனாலே அவள் இப்படி நடந்து கொண்டாள்..
அதுவரை பின்னால் இருந்து அவனது சட்டையை பல்லி போல பிடித்து கொண்டு இருந்த சிறு மானிடம் திரும்பி நக்கலாக சிரித்து அவனது நக்கல் சிரிப்பிலும் வசீகரம் இருக்கும் ..அந்த வசீகரிக்கும் சிரிப்போடு அவளோடு இதழ் ஒற்றிய பிறகு அவன் மனம் சற்றே சாந்தமானது போல இருக்க அவன் மனமும் இளகி இருக்க , "ஹே ரொம்ப நெர்வஸ் ஆகி நீயே காட்டி கொடுத்துடாத அவங்க போயிட்டாங்க..கூப்பிடவா?? அவங்க கிட்ட இவன் என்னை கிஸ் பண்ணிட்டாங்கன்னு சொல்லனுமா".. என்க
அவளோ அவன் கூறியதில் கோபத்தில் முகம் சிவந்து உதடு துடிக்க , "ச்சீ "...என்று முகத்தை திருப்பி கொண்டாள் அவளுக்கு அவனை பார்க்கவே விருப்பம் இல்லை...அவன் செய்த காரியம் அத்தகையது நான் இன்னும் அவனை கொல்லாமல் அவன் பேசுவதை கேட்டு கொண்டு இருக்கிறோமே என்று சுயம் கோபம் எழுந்தது..
அவளது மூக்கு நுனி சிவந்து அவனை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஆத்திரத்தில் நிற்பவளை பார்த்து அவளை மீண்டும் சிறை செய்தவன் மூச்சு காற்று படும் அளவுக்கு அவள் உடலோடு உரசி நின்றவன், " என்ன என்னை உன் அண்ணன் அடிச்ச மாதிரி அடிக்கணுமா அடி டி..ஐயம் வைட்டிங்..நீ அடிச்ச பிறகு தான் வேற எங்கே கிஸ் பண்ணனும்ன்னு நான் யோசிக்கனும் பிகாஸ் இதை விட அதிகமாக தண்டனை கொடுக்க வேணாமா "...என்று அவள் முகம் பார்த்து அவளின் சிவந்த உதட்டை வருடி கொண்டே நக்கலாக அவள் செவியில் கிசுகிசுப்பாக ஹஸ்கி குரலில் கூறியவனின் அருகாமை அவளை விதிர்விதிர்க்க செய்ய மென்மையான குணம் கொண்ட அந்த பாவம் பெண்ணிற்கு உன்னை தண்டிக்க எல்லாம் எனக்கு தைரியம் இல்லை ஆனால் எனக்கு இங்கிருந்து சென்றே ஆக வேண்டும் என்று உந்துதல் ஏற்பட அவன் மார்பில் கை வைத்து அவனை நகர்த்த போக அவனது புருவம் ஆச்சரியத்தில் நெளிந்தாலும் ஒரு அடி கூட அந்த சிறு மானால் அவளை தள்ள முடியாமல் போக அவனிடம் இந்த நெருக்கத்தில் நிற்க மனமின்றி," எனக்கு போகனும்"... என்றாள்..விட்டால் அழுது விடுவாள் போல..
ஆனால் அவளை அவன் விடாமல், " உன் கண்ணை பார்த்தா அதுவே சொல்லுது டி உனக்கு என்னை கொல்லனும் போல உனக்கு இருக்கும் இருக்கணும்..இருந்தாலும் நான் தான் கிஸ் பண்ணேன் ..ஒத்துக்கறேன்...ஆனால் உனக்கு பிடிக்காத மாதிரி எல்லாம் தெரியலயே.. உன் அண்ணன் கிட்ட சொல்லும் போது இதையும் சேர்த்து சொல்லு எனக்கும் பிடிச்சு இருந்துச்சுன்னு சொல்லு"...என்று கூறியவன் அவள் இதயத்தை ரணப் படுத்த வேண்டும் என்றே நெனைத்தவன் ரணப்படுத்தி விட்டே சென்றான்...
