மன்மதன் 16
.
அத்தியாயம் : 16
அவன் கூறியது உண்மை தானே என்ற இடி அவளது உள்ளே இறங்கி உண்மை சுட அவள் செய்வது அறியாது நின்றாள்...ஒரு கனவு நடந்ததற்கே ஆர்ப்பாட்டம் செய்து தந்தை அண்ணனை வரவைத்து தேவை இல்லாமல் ஒரு பிரச்சனையை தான் உருவாக்கி அவனை வெறுப்பேற்றி இப்போது நானே அவனிடம் சிக்கிய மீன் போல ஆகிவிட்டனே..
இப்போது உண்மையை வெளியே கூறினால் அவன் இப்போ கூறியது போல தானும் அவனின் ஒற்றலுக்கு அடி பணிந்து தானே போனோம் என்று எல்லாம் குமுறியவள் எப்படி ஹாஸ்டல் வந்து சேர்ந்தாள் என அவள் அறியாள்..
புத்தி பேதலித்தவள் போல சுற்றும் தன் நண்பியை கண்ட வனிதா என்ன விஷயம் என்று கேட்க மூச் கூட விடவில்லை அந்த 18 வயது சிறு பெண் வெண்ணிலா..அன்றிலிருந்து வெண்ணிலா யாரிடமும் நெருங்காமல் பேசாமல் தானுண்டு தன் வேலை உண்டு என மாறி தேவையின்றி வனிதாவிடமும் உரையாடுவதை சற்று குறைத்து இருந்தாள்..
அவன் செய்த தவறுக்கு அவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள் என அவளுக்கு நினைக்க தோன்றினாலும் அது நினைக்கா வண்ணம் மனுவே அவளது மென் இதயத்தை ஆக்கிரமித்து இருந்தான்...கண்களை மூடினாலே அவன் வந்து அவளிடம் அதிரடி காட்ட சதா எந்நேரமும் அவனை பற்றிய நினைப்பில் உழன்று போக அதுவுமே அவளுக்கு நெருப்பை வாரி இறைத்தது போல தான் இருந்தது...
நண்பர்கள் என யாருமில்லாமல் தனியாக ஒரு மரத்தின் அடியில் போடப்பட்டு இருக்கும் பெஞ்சில் அமர்ந்து எங்கேயோ வெறித்து அமர்ந்து இருப்பதை இரு ஜோடி கண்கள் கண்டது...ஒன்று மனு இரண்டாவது அசோக்...
அசோக் அன்று அவள் அண்ணன் மற்றும் மனுவின் சண்டையை எண்ணி தான் இவள் இப்படி சோகமாக அமர்ந்து இருக்கிறாளோ என நினைத்து ஒரு நாள் தனியாக அமர்ந்து நிற்கும் அவள் அருகில் வந்து அமர்ந்தான் அசோக்..
"என்ன அன்னிக்கு நடந்ததை நெனைச்சுட்டு இருக்கியா "...என்று மொட்டையாக கேட்க
"இவன் பார்த்து விட்டானா"... என்று அதிர்ச்சியாகி விழி விரிக்க
"மனு அப்படி தான் அவனுக்கு கோபம் வந்தா அவன் என்ன செய்யறான்னு அவனுக்கே தெரியாது "...என்று அசோக் கூற
அவளோ ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தாள்...
மீண்டும் அஷோக்கே, "அன்னிக்கு நடந்ததை இந்த காலேஜில் உள்ள எல்லோரும் பாரத்துட்டாங்கன்னு நினைச்சு அதையே நினைச்சு வருத்தப்படாத "...என்று கூற
இவளது உயிரே போய் அவனிடம், " என்னது அனைவரும் கண்டு விட்டனரா?? இல்லையே அன்று அவனையும் என்னையும் தவிர அங்கே யாருமில்லையே "...என்று அவள் தடுமாற
அஷோக்கோ," பரவாயில்லை விடு ஒரு அண்ணன் இருந்தா இப்படி தான் இருப்பாங்க மறுப்படியும் மனு ஏதாவது தொல்லை செஞ்சானா???"...
அந்த நேரம் பார்த்து மனுவின் பார்வை வட்டத்துக்குள் இவர்கள் இருவரும் மரத்தடியில் ஒரு பெஞ்சில் அமர்ந்து பேசி கொண்டு இருப்பது மிக சரியாக பட்டது...
அவனோ அன்றைய தினத்திற்கு பிறகு அவளை கண்டு கொள்ளவே இல்லை ...உண்மையை கூற வேண்டுமெனில் அவன் கண்ணில் அவள் படவில்லை என்று தான் கூற வேண்டும் ...அவள் தான் அவனுக்கு எதிர் திசையில் அவன் எப்போதும் இருக்கும் இடங்களை அழகாக தவிர்த்து வருகிறாளே பயம் அவன் மீண்டும் அவன் தன்னிடம் வரைமுறை மீறி விடுவானோ என்ற பயம் அவள் தவறு செய்தது போல ஓடி ஒளிய அதற்கும் காலன் விட வில்லை போல..
இதோ மனுவின் கழுகு கண்களுக்கு பட அவன் முகம் கோபத்தில் சிவந்தது எதற்காக அவளை காணும் போது இந்த அளவுக்கு டிஸ்டர்ப் ஆகிறேன் என்று இன்று வரை மனுவிற்கே புரியாத புதிர் தான் அதே இன்றும் தொடர அவன் கண்கள் அவர்கள் இருவரும் என்ற பேசி கொள்கின்றனர் என அவனுக்கு சரியாக கேட்க வில்லை என்றாலும் வள வள மாயா , குமார் மற்றும் அவனது நண்பர்கள் உரையாட அவன் கண்களோ அவர்கள் மீது நிலைத்து இருந்தது..
அதிலும் வெண்ணிலா அந்தி மந்தாரை போல அன்று அவன் அருகில் இருந்த போது எப்படி இருந்தாலோ அதே போல அவள் இன்றும் இருக்க அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்து அவளின் அதரம் தன் எதிரியிடம் என்ன கூறுகிறது என்பதை கவனிக்க
இந்த பக்கம் வெண்ணிலாவோ ஒரு பக்கம் அவர்களின் முத்தக்காட்சியை யாரும் பார்க்கவில்லை என்ற சமாதானம் வந்தாலும் அசோக்கிடம் எப்படி பொய் சொல்வது அதன் பிறகு தான் இருவரும் சந்தித்தனரே என நெனைத்தவள் , "இல்ல ..அது வந்து"... என்று அவள் தயங்க
"சி வெண்ணிலா நீ என்னை பேர் சொல்லியே கூப்பிடலாம் நோ மோர் பார்மாலிட்டிஸ்"... என்று கூறியவன்,
" என்னை ஒரு நண்பனா பாரு உனக்கு யார் இல்லாட்டியும் நான் இருக்கேன் "...என்று ஆறுதல் கூற அவளும் அவனது மென்மையான பேச்சில் உடைந்தாள்..
அவனிடம் நடந்த விஷயத்தை பற்றி ஒன்றுமே கூறாமல் அவள் அழ அவளது தோளை தொட்டு அவன் சமாதானம் செய்தான் அசோக்.. அவளுடைய மனமும் கலங்கி இருப்பதால் அவன் இலேசாக தொட்டு ஆறுதல் படுத்தியத்தில் மேலும் அழுது கரைய அஷோக்கோ, " சி வெண்ணிலா இப்படி தான் எல்லா விஷயத்துக்கும் பயப்பட்டு அழுத்துட்டு இருப்பியா?? எதுவா இருந்தாலும் தைரியமா எதிர்நோக்க வேணாமா மொதல்ல அழுகறதை நிறுத்து "...என்று உண்மையான அக்கறையுடன் கூற
அவளும் மெல்ல விசும்பலுக்கு மாறியவளுக்கு அவன் கூறுவதை கேட்க எல்லாம் நன்றாக இருந்தாலும் தைரியம் வர வேணுமே??
"யாரா இருந்தாலும் தைரியமா பேசு ..இப்படி பயந்து ஒளிஞ்சிட்டு இருக்காத அப்படி ஓடி ஒளியற அளவுக்கு நீ எந்த தப்பும் செய்யல புரியுதா?? அப்படி தப்பே செஞ்சாலும் ஓடி ஒளியனும் ன்னு அவசியம் இல்லை "... என்று கூறியவன் மேற்கொண்டு அவள் அருகே இருந்து பேச அவள் முகம் கொஞ்சம் தெளிவானது..
இறுதியில் அவளுக்கு முக்கியமான பிடித்த நண்பர்கள் இடத்தில் அசோக்கை வைத்தாள்.. ஆம் அவள் மனதில் நண்பன் என்னும் இடத்தை நிரப்பினான் அசோக்..அசோக்கிற்கும் மாயா போன்ற அல்ட்ரா மாடர்ன் பெண்களில் இருந்து இவள் மிக வேறுபட்டு தெரிய இவளது அமைதியும் சாந்தமும் அவனுக்கு பிடித்து தான் இருந்தது..
அதனாலே அசோக் வழிய வந்து அவளிடம் பேசி நட்பை வளர்த்து கொள்கிறான்...இவர்களின் நெருக்கத்தை கண்ட மனுவுக்கு முதலிலே காதில் புகை வந்து கொண்டு இருந்தது அதை மேலும் ரத்தம் வர வைக்கும் முயற்சியில் குமார் , "அடேய் என்னடா அந்த நல்லவன் அந்த பச்சை கிளியை வளைச்சுட்டான் மச்சக்காரன் மச்சா... அவனுக்கு எல்லா பொண்ணுங்களும் ஈசியா மடியுது நீயும் தான் சிக்ஸ் பேக் வெச்சு பார்க்க அழகா இருக்க எவலாச்சும் திரும்பி பார்கிறாலுங்களா..எங்கே எப்போ பார்த்தாலும் ரௌடி மாதிரி முறைச்சுட்டே இருந்தா எந்த பொண்ணு வரும் "....என்று கூற
" குமாரு கொஞ்சம் அடங்கு".. என்று கூறியவன் குமாரின் தலையில் அடிக்க மாயாவும் , ராமும் கூட வெண்ணிலா மற்றும் அசோக்கை தான் பார்த்து கொண்டு இருந்தனர்..
இங்கே மனுவுக்கு உள்ளம் துடித்து ஓடி சென்று அவளை நாலு அறை அறைந்து விடுவோமா என்று கூட எண்ணம் வந்தது ..அதிலும் அவன் தொட்டு பேசிட்டு இருக்கான் இவளும் அவன் கிட்ட அழுது ஸீன் போட்டுட்டு இருக்கா இவளை எல்லாம் என்ன செய்ய மனு கன்ட்ரோல் யூர் செல்ப் இங்கேயே இருந்தா நீ நெனைச்சுட்டு இருக்கிறதை போய் செஞ்சாலும் செய்வ சோ இங்கே இருந்து கிளம்பறது தான் உனக்கு நல்லது என்று அவனது உள்மனம் கூற அப்படியே செல்ல அவனது மனம் விடவில்லை..அவளுக்கு தான் இங்கே தான் இருக்கிறோம் என்பதை காட்ட வேண்டும் என்று அவனது மூளை அறிவுறுத்த அதற்குள் அவனது வகுப்பில் படிக்கும் நிர்மல் அங்கே செல்வதை பார்த்து இங்கிருந்தே, " நிர்மல் "...என்று கத்த அது நிர்மலை சென்று அடைந்ததோ இல்லையோ வெண்ணிலாவை சென்றடைந்தது...
அவனை கண்டதும் இவ்வளவு நேரம் அசோக் கூறியது எல்லாம் மறந்து போக மீண்டும் அவள் கால்கள் வெடவெடக்க வேகமாக எழுந்தவள்," எனக்கு போகனும் "..என்று கூற," சரி வா நானும் அங்கே தான் போறேன்".. என்று கூறிய அசோக் அவளுடன் நடந்தான்..
தன்னை பார்த்ததும் அவள் முகம் மாறியதே மனுவுக்கு கிடைத்த வெற்றி தானே என நெனைத்தவனுக்கு உள்ளுற மூண்ட சிரிப்பையும் அடக்க முடியவில்லை அதே நேரம் செல்லும் அவள் மீது தனது கண்களையும் அகற்றவில்லை..
இப்படியே ஒரு மாதம் போனது இந்த ஒரு மாதத்தில் அசோக்கின் கேங்கில் அசோக்கின் விடா முயற்சியால் வெண்ணிலா ஒருத்தி ஆகி போனாள்... அவள் எங்கே போனாலும் வந்தாலும் அவளுடன் யாராவது ஒருவர் இருக்க அவளுக்கும் சற்று மனுவின் மீது உள்ள பயம் அகன்றது... வெண்ணிலாவுக்கு வனிதாவுக்கு பிறகு அசோக் என்றாகி போனான்..அவளுக்கு ஏதாவது வேண்டும் என்றாலும் அவனிடம் தயங்காமல் கேட்கும் அளவுக்கு அசோக் அவளை மாற்றி இருந்தான்...இதை எல்லாம் ஏன் செய்கிறான் என்றால் வெண்ணிலா அசோக்கை நண்பனாக பார்க்க அசோக் அவளை காதலியாக பார்த்தான்..இன்னும் மூன்று மாதத்தில் வரும் காதலர் தினத்தில் தன் காதலை அவளிடம் சொல்ல காத்து இருக்கிறான் அசோக்....இந்த விஷயம் மனு அறிந்தால்???
இப்படியே நாட்கள் செல்ல ஒரு நாள் மனு அவனது வகுப்பு முடிந்து வெளியே வரும் நேரம் அவனது தாய் பல்லவி அழைத்து இருந்தார்...அவர் கூறிய விஷயத்தை கேட்டதும் அவனுக்கு அதிர்ச்சி தான் ஆகியது...
மல்லிகை மனம் வீசும்
