மன்மதன் 17
.
அத்தியாயம் : 17
மன்மதன் தேசத்து மல்லிகை
"டேய் கண்ணா உன்னோட மாமா அண்ட் உன்னோட தாத்தாக்கு ஆக்சிடெண்ட் டா "...என்று பல்லவி மனு போனை ஆன் செய்தது முதல் அழ அவன் குழம்பி போனான்...
"என்ன மம்மி சொல்றீங்க??உங்களுக்கு ஒரு பேமிலி இருக்கா??அதை ஏன் மம்மி என்கிட்ட சொல்லல".. அவனுக்கு தன் தாயின் குடும்ப வீடு உண்டு என்பதே அதிர்ச்சி தான் என்றாலும் கண்ணீரோடு பேசும் தாயிடம் மேற்கொண்டு விவாதிக்காமல்
"இப்போ நான் என்ன செய்யனும்"...
"மனு என்னோட அப்பா ,என்னோட அண்ணன் அண்ட் அவரோட பையன் மூணு பேருக்கும் பயர் ஆக்சிடெண்ட் ஆகி இருக்கு "..என்று அழுது கொண்டே கூற
இந்த தீடீர் குடும்பத்தையே நம்ப முடியாமல் இருப்பவனிடம் அதற்குள் அவர்களுக்கு ஆக்சிடெண்டா என நினைக்க, " நடந்ததை கொஞ்சம் தெளிவா சொல்லுங்க இல்லாட்டி டாட் கிட்ட போனை கொடுங்க மம்மி"..என்க
அவருக்கோ பதட்டத்தில் வார்த்தைகள் வராமல் ரவீந்தரிடம் போனை கொடுக்க அவர் தெளிவாக கூறினார்..
ரவிந்தரும் பல்லவியும் காதலித்து வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டவர்கள் அதே நேரம் பல்லவியின் பிடிவாத்தால் ரவீந்தருடன் வீட்டை விட்டு ஓடி வந்தவர்..
அப்படி இருக்க பல்லவியின் குடும்பமும் அவர்களை ஒதுக்கி தலை முழுகி விட்டது...அப்படி இருக்க இன்று மதியத்துக்கு மேல் பல்லவிக்கு அழைப்பு வந்தது..அதில் அவருடைய அப்பா சென்று இருக்க ரைஸ் மில்லில் நெல்லு மூட்டை பற்றி எரிந்ததில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது என்றும் அவரை காப்பாற்ற போன மகன் மற்றும் பேரனுக்கு இலேசான காயங்கள் என்று கூற இப்போது மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி அவரை வந்தடைய சாகும் முன் தன் மகளை காண வேண்டும் என பல்லவியின் அப்பா கூறி இருக்கிறார் அதனால் தாங்கள் இப்போது டெல்லியில் இருந்து கிளம்புவதாகவும் நீயும் உடனடியாக கிளம்பு என்று கூறியவர் மேலும் ஒரு குண்டை அவனிடம் வீசினார்..
" உன்னோட மாமா பொண்ணு உன் காலேஜில் தான் படிக்கிறதா சொன்னாங்க அந்த பொண்ணையும் அழைச்சிட்டு வர முடியுமான்னு உன் அத்தை கேட்டாங்க சோ அவளையும் கூட்டிட்டு வந்திடு அந்த பொண்ணு கிட்ட உன் நம்பர் கொடுக்க சொல்லி இருக்கேன் "...என்று கூற மனுவோ" சரி அப்பா".. என்று கூறினான்..
அவனால் புது சொந்தத்தையே இப்போது வரையில் நம்ப முடியாத வேளையில் இதில் மாமனுக்கு மகள் வேறா என்று நெனைத்தவன் சரி அப்பா சொல்லி விட்டாரே என்று அந்த முகம் தெரியாத முறை பெண்ணுக்கு காத்து இருக்கலானாள்...
இதோ கல்லூரி விட்டதும் அவன் செய்தி அறிந்தவன் அவளுக்காக காத்து இருந்தவன் என்ன இந்த பொண்ணு இன்னும் கூப்பிடல வேற எவனாவது கூட்டிட்டு போயிட்டாங்களா என நினைத்து கொண்டு இருக்கும் போதே அவனது போன் அலறியது..
புது எண்ணில் இருந்து அவளாக தான் இருப்பாள் என்று நெனைத்தவன் போனை எடுத்து," ஹலோ".. என்று கம்பீரமாக கூற அந்த குரல் அந்த பெண்ணின் மூச்சை ஒரு நொடி நிறுத்தினாலும் அவளது மெல்லிய விசும்பல் தான் அவனுக்கு கேட்டது..
அவளுக்கு பேசும் சக்தி இருக்காது அடிபட்டது அவள் வீட்டு ஆண்களுக்கு அல்லவா என நினைத்து மேலும் சற்று இறங்கி , "எங்கே இருக்க"...
"ஹாஸ்டல் வாசலில்"... அதற்குள் அவள் தேம்ப ஆரம்பித்து இருந்தாள்..அவனோ அந்த பெண்ணின் நிலை கருதி ,"நான் அங்கே வரேன் "...என்று மட்டும் கூறியவன் நண்பர்களிடம் எல்லாம் கூறி விட்டு ஹாஸ்டல் விரைய அங்கே ஹாஸ்டல் வாயிலில் நின்றவளுக்கும் ஹாஸ்டல் வாயிலை அடைந்தவனுக்கும் அதிர்ச்சி காத்து இருந்தது..
ஆம் அங்கே வெண்ணிலா தான் அழுது வீங்கிய முகத்துடன் நின்று கொண்டு இருந்தாள் கூடவே வனிதாவோ அவளை தேற்றி கொண்டு இருக்க வனிதாவுக்கே அவனை கண்டதும் அதிர்ச்சி என்றால் வெண்ணிலாவுக்கோ அதிர்ச்சியின் உச்சத்துக்கு சென்று இருந்தாள் ...
இவன் தான் அத்தை மகனா என்ற கேள்வி அங்கே எழுந்தாலும் அதை விட அவளது துக்கம் பெரிதாக இருக்க அவள் அழுது கொண்டே இருந்தாள்..
அவனும் இவளை கண்ட அதிர்ச்சியில் காரை விட்டு இறங்காமல் இருக்க அவள் வீட்டில் இருந்து முதலிலே அழைத்து கூறி இருப்பதால் ஹாஸ்டெல் வார்டர்ன் அவனுடன் வெண்ணிலாவை அனுப்பி வைத்தார்...
அவனை கண்டது முதல் பேய் அறைந்தது போல வெண்ணிலா நிற்க அத்துடன் அவளுடைய தாத்தா,அப்பா,அண்ணன் மூவரும் அடிபட்டு இருப்பதை எண்ணி துடித்து கொண்டு இருப்பவளின் மேல் கரிசனம் எழ மேற்கொண்டு எதுவும் பேசாமல் காரில் இருந்து இறங்கியவன் அவள் இன்னும் தயங்கி கொண்டே காரில் ஏறாமல் இருப்பதை கண்டவன் அவள் அருகே சென்று அவள் வைத்திருந்த அவளுடைய பையை வாங்கி வண்டியின் பின்னால் இட்டவன் முன்பக்க கதவை திறந்து , "போய் உக்கார்".. என்று கூற
அவளோ தயங்க அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், " இங்க வெச்சு ஸீன் போட்டுட்டு இருந்தீன்னா அதை விட நான் ஸீன் போடுவேன்.. உன்னை தொட்டு தூக்கி காரில் உக்கார வைக்க வேண்டி இருக்கும் ரொம்ப பெரிய ஸீனா போயிடும்..அண்ட் உன் பட்டிக்காட்டு ஊருக்கு இப்போ கிளம்பினா தான் விடியறதுகுள்ளே போய் சேர முடியும் அங்கே நடக்கிற சிரியஸ்னஸ் தெரிஞ்சு நடந்துக்கோ"... என்று அடிக்குரலில் சீர ஏற்கனவே அவனது நெருக்கம் அவளை நொறுக்க மேலும் அவன் கூறிய உண்மை புரிய வேகமாக காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்..
தான் இதுவரை கண்டிராத தாத்தா மாமா ,மாமாவின் மகன் அடிபட்டு இருக்கிறார்கள் என்று கூறவும் உண்மையை கூற வேண்டுமெனில் பெரிதாக எந்த வருத்தமும் அவனுக்கு எழ வில்லை தன் தாய் வருத்தப்படுகிறார்கள் ஒரு மூன்று உயிருக்கு ஆபத்து என்று மட்டுமே நெனைத்தவன் இப்போது இவளது தந்தை தான் தன்னுடைய மாமா என்ற உண்மை அறிந்தவுடன் அந்த நல்ல மனிதனுக்காக இவளை பத்திரமாக கொண்டு போய் சேர்க்க முடிவு செய்தான்..
அதன் படி தேவையின்றி காரில் ஏறியது முதல் அவன் எதுவுமே அவளிடம் பேசவில்லை...அவளை மிக நன்றாக பார்த்து கொண்டான் என்றே கூறவேண்டும் ..
