Share:
Notifications
Clear all

மன்மதன் 18

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

.
அத்தியாயம் : 18

ஒரு கட்டத்தில் அழுது அழுது ஓய்ந்தவள்  அப்படியே AC யின் குளிரில் அப்படியே உறங்க அவளை கவனித்து கொண்டே வண்டியை ஒட்டியவன் அவள் தலை அங்கே காரின் கதவில் இடித்து கொண்டே வருவதை பார்த்து மெதுவாக காரை ஓரம் கட்டியவன் பின்னால் இருந்த தலையணையை எடுத்து அவள் அருகே நெருங்கி அவளது தலையை பிடித்து அவன் வைக்க போக முதலிலே அவனுடனான பயண பீதியில் இருப்பவளுக்கு அவனது தற்போதைய நெருக்கம் மீண்டும் அவன் முத்தமிட போகிறானோ என்ற பயத்தை கொடுத்து , "என்ன செய்யறீங்க "...என்று கோபமாக கேட்டவளுக்கு அன்று அவன் முத்தமிட்ட தினம் தான் மீண்டும் நியாபகத்துக்கு வந்தது..

விட்டால் அவள் அழுது விடுவாள் போல இருப்பவள் அவனது நெருக்கத்தை கண்டு கதவோடு மேலும் ஒன்றியவள், "தயவு செய்து என்னை விட்டுடுங்க"... ..என்று கை எடுத்து கும்பிடவும் அவனுக்கு என்னவோ அவள் தன்னை கேவலமாக நினைப்பது போன்ற எண்ணத்தை கொடுக்க அது அவனின் அகங்காரத்தை வெளி கொணர, " எனக்கு உன்னை ரேப் பண்ற ஐடியா எல்லாம் இல்லை அதுனால ரொம்ப ஓவரா பண்ணாம வா "...என்று அவளை வேதனை படுத்தவென வார்த்தையை விட அந்த பெண்ணிற்கு ஏற்கனவே இருந்த தலை பாரத்திற்கு இதுவும் கூட்டு சேர்ந்து ஊமையாக அழுதாள்...

அதன் பிறகு அவளுக்கு ஒரு பொட்டு உறக்கம் வரவில்லை...இடையில் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தியவன் அவளுக்கும் அவனுக்கும் உணவை வாங்கி கொண்டு வந்து அவளிடம் நீட்ட அவளோ மறுத்தாள்..

அதற்கும் அவனுக்கு கோபம் எழ, " இதுல விஷமோ இல்லை போதை மருந்தோ கலக்கலை தைரியமா சாப்பிடலாம் "..என்க

அப்போதும் அவள் மறுக்கவே ஒன்றும் கூறாமல் அவனது உணவை மட்டும் ஆற அமர உண்டவன் கார் சீட்டை நீக்கி வண்டியை எடுக்காமல் கார் சீட்டை நீக்கி கண்களை மூடி படுத்து கொண்டான்...

அவளும் பொறுமையாக பார்த்து கொண்டே இருக்க அவன் வண்டியை எடுப்பதற்கான விடயமே இல்லாமல் இருக்க அவளோ அவன் முகத்தையே பார்க்கும் அந்த கள்வனோ கண்களை திறந்தான் இல்லை , "என்னங்க வண்டியை எடுங்க".. என்று மெல்ல கூற

அவனோ கண்களை திறக்காமலே, " நீ சாப்பிட்டு முடிச்சிட்டு சொல்லு தென் வண்டியை எடுக்கறேன்"... என்று கூறியவன் அப்படியே சாய்ந்து கொள்ள அவள் தான் இறங்கி உணவை உட்கொள்ள வேண்டியதாக போனது...

மிக சரியாக அவள் உணவை உண்டு தண்ணீரை குடித்த சமயம் வண்டி மீண்டும் புறப்பட்டது உணவு உண்ட மயக்கத்தில் சற்று முன் தன்னை ஏதாவது செய்து விடுவானோ என்ற கலக்கத்திலே அவனிடம் சண்டையிட்டவள் அவனுடைய தோளிலே இளைப்பாறினாள்...தன் தோள் சாய்ந்தவளை அவனும் விலக்கவில்லை அவளும் விலகவில்லை...

பூம்பாறை கிராமம்...

கிட்டத்தட்ட சென்னையில் இருந்து பத்து மணி நேர பயணத்திற்கு பின் தந்தை குறுந்தகவல் அனுப்பிய இடம் வர அது கிட்டத்தட்ட பழநிக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமம் இயற்கை எழில் கொஞ்சும் அந்த கிராமத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருக்க எங்கு பார்க்கினும் பச்சை பட்டு உடுத்தியது போல காட்சி அளித்தது..

நிலவு மறைந்து ஆதவன் அந்த தன் ஒளி கற்றையால் ஒளியை இந்த பூமிக்கு வாரி வழங்க காரின் முன்பக்க கண்ணாடி வழியே அடித்த வெயிலின் தாக்கத்தில் கண் விழித்தாள் வெண்ணிலா...

எதன் மீதோ சாய்ந்து படுத்து இருக்கிறோம் அந்த நெடி அவளுக்கு மிக பழக்கமான நெடி என்பதை உணர்ந்தவளுக்கு இதயம் படபடவென அடித்து கொள்ள நிமிர்ந்து பார்க்க அவனது தோளில் முகத்தை புதைத்து தான் படுத்து இருக்கிறோம்..அவன் ஒன்றும் கூறாமல் இருக்கிறானே என நெனைத்தவள் சட்டென்று விலக அவனோ அதற்கும் ஒன்றும் கூறினான் இல்லை..

நேராக அவனது வாகனம் அந்த ஊரின் பிரபல மருத்துவமனைக்கு செல்ல வெண்ணிலாவின் இதயம் அடித்து கொண்டது... என்ன ஆகி  இருக்குமோ என அவள் பதற அவள் கண்கள் குளம் கட்ட தொடங்க மனுவோ அவளின் முகத்தை பார்த்தவன் மெல்ல அவளது கையை பிடித்து , "ஒன்னும் ஆகி இருக்காது தைரியமா போ "..என்று ஆறுதல் கூற அவளும் காரில் இருந்து இறங்கினாள்..

அந்த மருத்துவமனையின் முன்னே ஊரே கூடி இருந்தது... பின்ன அந்த ஊரின் பெரிய குடும்பத்தில் உள்ள மூன்று தலை முறையினரும் கோர விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்றால் அவர்கள் மீது வைத்துள்ள காரணத்தால் ஊரே கூடி இருக்க காரில் இருந்து வெண்ணிலா இறங்கவும் ஊர் பெண்கள் எல்லோரும் அழுது அவளது தன்னம்பிக்கையை உடைக்க வேகமாக அவள் உள்ளே ஓடினாள்..

கூடவே காரை பார்க் செய்து விட்டு இறங்கும் மனுவை கண்ட மக்கள், " இது யாரா இருக்கும் "...என்று யோசிக்க ஒரு சிலர் ,"நம்ம பல்லவ தேவன் அய்யா பேரன் தான் நம்ம பல்லவி அம்மா பையன் அது தான் நேத்து நயட் பல்லவி அம்மாவும் அவங்க புருஷன் ரவிந்தரும் வந்தாங்களே "...என யாரோ ஒருவர் கூற கூட்டத்தில் மனுவை கண்டதும் சலசலப்பு ஏற்பட்டது..

அதை எல்லாம் கடந்து அவன் உள்ளே செல்ல அவன் அப்பாவும் அம்மாவும் எதிர் கொண்டனர்...கூடவே ஒரு வயதான பாட்டி அமர்ந்து இருக்க வெண்ணிலா ஒருவரை கட்டி பிடித்து அழுது கொண்டு இருந்தாள்..அது அவளது அம்மா என அவன் கண்டதும் புரிந்து கொள்ள," மனு குட்டி".. என பல்லவி அழ,

"மாம் ப்ளீஸ் காம் டௌன் அவங்களுக்கு ஒன்னும் ஆகாது "..என்று கூறியவன்," டாட் எப்படி ஒரே நேரத்துல மூணு பேருக்கும் அடி பட்டுச்சு"... என்று கேட்க

"பெரியவர் எப்போவும் போல மில் கோடனுக்கு போயி இருக்காரு பா மின் கசிவு ஏற்பட்டு தீ பிடிச்சு அவர் உள்ளே மாட்டிக்கிட்டாரு..அதுக்குள்ள தீயை பார்த்ததும் பெரியவருக்கு வலிப்பு வந்துடுச்சு அதுனால அவரை சண்டி தேவனால தூக்க முடியல ..அதுக்குள்ள அவரோட கையில் தீ பிடிக்கவும் செழியனும் அங்க  வேலை செஞ்சுட்டு இருந்த ரெண்டு மூணு பேர் ஹெல்ப் பண்ணி இருக்காங்க...அவரை காப்பாத்த போய் சண்டி தேவனும் செழியனும் மாட்டி கிட்டாங்க"... என்று கூற விஷயத்தை கேட்டவன் தன் தாயை பார்க்க அவரோ அவரது தாய்க்கு சமாதானம் செய்து கொண்டு இருந்தார்..

பல்லவி கண்காளாலே மனுவை அழைக்க , "அம்மா இதோ என் பையன்".. என்று அவனை அறிமுக படுத்தி வைக்க அந்த வயதான செல்லக்கிளி பாட்டி அவனை கண்கள் குளம் கட்டி அவனை ஆர தழுவி தன் பேரனை உச்சி முகர அவனுக்கு என்னவோ போல ஆகி விட்டது..

"நான் உன் பாட்டி ராசா அப்படியே அவங்க தாத்தா மாதிரி இருக்க யா உன்னோட தாத்தாவை பார்த்தியா"... என்று அவரது சங்கடத்தை கூற அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை...

அதற்குள் டாக்டர் வர ரவீந்தர் அவர்களது நிலைமையை விசாரிக்க பெரியவர் நிலைமை மோசம் தான் என்றும் மற்ற இருவர்கள் அபாய கட்டத்தை தாண்டி விட்டனர் மேலும் செழியனும் கையில் இலேசான காயங்கள் தான் என்றும் சண்டி தேவனுக்கு கை கால்கள் வயிற்றில் தான் தீ பரவி இருக்கிறது என்றாலும் அவருக்கு பெரிய ஆபத்து இல்லை ஆனால் அவர் மிகவும் பயந்து விட்டார் என்று கூற நீங்கள் உள்ளே போய் பார்க்கலாம் பெரியவர் இன்னும் எவ்வளவு நேரம் உயிரோடு இருப்பார் என்று கூற முடியாது என்று கூற

அவரது குடும்பம் அனைவரும் பெரியவரை காண செல்ல பெரியவரோ உடல் முழுவதும் தீக்கு இரையாகியவர் தன் முழு குடும்பத்தை கண்டவருக்கு தான் ஒதுக்கி வைத்த தனது சொல் பேச்சு கேளாமல் சென்ற தனது அன்பு மகளை கண்டதும் அவருக்கு கண்களில் கண்ணீர் வர அவரால் அதிகம் பேச முடியாமல் தினறினார்..

"அப்பா"... என பல்லவி துடிக்க  "கண்ணு உன்னை திரும்ப பார்ப்பேன்னு நெனைக்கவே இல்ல தாயி "...என்று கூற

பல்லவி உடைந்து ,"அப்பா என்னை மன்னிச்சுடுங்க பா "..என்று கூற

"இல்ல தாயி நான் தேடி இருந்தாலும் இப்படி ஒரு மாப்பிளை கிடைச்சு இருக்க மாட்டாங்க தாயி அதுக்காக வருத்தப்படாத சிங்கம் மாதிரி எங்க ஐயா மாதிரி மகனை பெத்து வெச்சிட்டு எதுக்கு தாயி அழுவற உன் அப்பன் திரும்பி வருவேன் தாயி கவலை படாதே "..என்று கூற அதற்குள் பெரியவரின் வேண்டுகோளின் படி ஸ்கெச்சரில் சண்டி தேவன் மற்றும் செழியனை கொண்டு வந்தனர்..

செழியனுக்கு பெரிதாக எதுவும் அடி படாத காரணத்தினால் அவன் சாதாரணமாக இருக்க அவனுக்கு அங்கே வந்த புது சொந்தத்தில் அவனது ஆசை அத்தையை தவிர்த்து மீதம் உள்ள இருவரையும் காணும் போது தீயை வாரி இறைத்தது போல கோபம் கொண்டான்..

அதிலும் ரவிந்தரை காட்டிலும் மனு அவனை எதிரி போல காண மனுவுக்கு அவனுக்கு அடிப்பட்டதில் வருத்தம் இருந்தாலும் அவனை காணும் போதே எழும் எரிச்சலை அவனால் பொறுத்து கொள்ள முடியவில்லை..

சண்டி தேவனும் தனது தங்கை குடும்பத்தை கண்டவருக்கு கண்ணீர் வர அங்கே ஒரு உணர்ச்சி காவியம் ஓடி கொண்டு இருக்க எதிலும் ஒட்டாமல் மனு நின்று கொண்டு இருந்தான்..

இறுதியில் பெரியவர் தன் மகளிடமும் மகனிடமும் தனது இறுதி ஆசையை கூற அங்கே இருந்த அனைவரும் அதிர்ந்தனர் அது என்னவெனில் மனு மற்றும் வெண்ணிலாவின் திருமணம் இப்போதே நடக்க வேண்டும் அதை கண்டால் நான் நிம்மதியாக கண் மூடுவேன் என்று கூற ரவீந்தர் தன் மகனை பார்க்க மகனோ தந்தையிடம் கண்காளாலே நோ என்றான்..

ஆம் ஏனெனில் பெரியவர்  விஷயத்தை கூறியதும் முதல் ஆளாக மறுத்தது வெண்ணிலா அப்படி இருக்க எனக்கு மட்டும் என்ன ஆசையா அவளை திருமணம் செய்து கொள்ள என்று மறுத்து விட்டான்..

பெரியவர்கள் என்ன செய்யலாம் என திணற அதற்குள் இங்கே பெரியவருக்கு இழுக்க தொடங்கி விட அவர் தன் தனது கையை அசைத்து பேர பிள்ளைகளை அழைக்க கண்ணீரோடு மனுவிடமும், வெண்ணிலாவிடமும் கேட்க இருவரும் திகைத்து விழித்தனர்..

அதற்குள் சண்டி தேவன் மனுவின் மீது அவர் வைத்துள்ள அபார நம்பிக்கையால் மகன் முறைத்து கொண்டு இருக்கிறான் என்பதை கூட கண்டு கொள்ள சமயம் இல்லமால்," எனக்கு என் பொண்ணை என் மருமகனுக்கு கொடுக்க சம்மதம்"... என்று கூற பல்லவியும் கணவனை ஒரு பார்வை பார்த்து கொண்டே," எனக்கும் சம்மதம்"... என்று கூற ரவீந்தர் முகமே கூறியது அவருக்கு விருப்பம் இல்லை என்று இருந்தாலும் மனைவிக்காக சம்மதம் தெரிவிக்க இறுதியில் செழியன்,மனு,வெண்ணிலா வின் பேச்சு அங்கே எடுபடவில்லை..

மருத்துவமனையில் இருந்த கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த தாலியை பெரியவர் முன்னிலையில் மனு வேண்டா வெறுப்பாக வெண்ணிலாவின் கழுத்தில் கட்டி அவளை மனைவி ஆக்கி கொண்டான்...

இவர்களின் திருமணத்தை கண்டதும் பெரியவர் மகிழ வெண்ணிலா தன் கழுத்தில் ஊஞ்சல் ஆடிய தாலியை கண்டு அழவும் பெரியவர் சந்தோசமாக தன் பேர பிள்ளைகளின் கைகளை பிடித்தபடி இயற்கை எய்தினார்...

மல்லிகை மணம் வீசும்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top