மன்மதன் 19
.
அத்தியாயம் : 19
மன்மதன் தேசத்து மல்லிகை
தன்னை தொட்டு தாலி கட்டி விட்டு நிற்பவனை ஏறிட்டு பார்க்க அவனோ அவளை எரித்து விடுவது போல பார்த்தவன் தான் அதன் பிறகு அவள் முகம் பார்க்கவில்லை..
அவனால் ஒத்து கொள்ளவே முடியவில்லை அவனால் அம்மாவின் தீடீர் சொந்தத்தையே சொந்தமாக ஏற்று கொள்ள முடியாமல் நின்று கொண்டு இருப்பவனுக்கு அவன் தாத்தா மூலம் இப்படி ஒரு இடி விழும் என்று கனவிலும் நினைக்கவில்லை தாலி கட்டியதும் மரித்து போன அவனது தாத்தாவை பார்த்தும் அவனுக்கு பெரிதாக எந்த பாசமும் புதிதாக கொம்பு முளைத்து தலை தூக்கவில்லை என்றாலும் தனது தாயை நன்றாக முறைத்து விட்டு விறு விறுவென்று அந்த அறையை காலி செய்தான்...
அவனுக்கும் மட்டும் நடந்தது அதிர்ச்சி அல்ல அவளுக்குமே அதிர்ச்சி தான் இவனை ஒரே கல்லூரியில் கண்டாலும் ஒளிந்து ஓடுபவளை அவனிடம் இருந்து ஓடவே முடியாத படி இப்படி ஒரு இக்கட்டுக்குள் ஆளாக்கி விட்டு சென்ற அவளது தாத்தாவை இறந்தாலும் அந்த பேதை பெண் குற்றப்படுத்த மறக்கவில்லை..ஆம் அந்த மனிதன் தான் அவர் மட்டும் இறக்கவில்லையே தனது பேர மகளின் வாழ்க்கையும் சேர்த்து சீரழித்து சென்று விட்டாரே என அவள் அழுக அவளுடன் சேர்த்து இப்படி உன் தாத்தா போயிட்டாரே என மொத்த குடும்பமும் வெண்ணிலாவை இழுத்து வைத்து கொண்டு அழுதது..இந்த சிறு பெண்ணோ அவன் கட்டிய தாலியை சுமந்து கொண்டு செய்வது அறியாது நின்று கொண்டு இருந்தாள்..
இதோ இன்றோடு பெரியவர் இறந்து சட்டதுக்குள் போட்டோவாக மாற்றப்பட்டு பத்து நாட்கள் ஆகிறது...அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு மாறி கொண்டு வருகின்றனர்...
"மனு குட்டி சாப்பிடு டா எல்லோரும் சாப்பிட்டுட்டாங்க நீ மட்டும் தான் இன்னும் சாப்பிடலை "...என்று பல்லவி உணவை எடுத்து தன் மகனுக்கு ஊட்ட போக," மா லீவ் மீ அலோன் மா எரிச்சலை கிளப்பாத"... என்று கூற
அவருக்கு புரிந்தது அவனுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று இருந்தும் தன் தந்தை இறக்கும் தருவாயில் ஒரு ஆசையை கேட்க அதை நிறைவேற்றி வைக்கவில்லை என்றால் தான் மகளாக அவருக்கு பிறந்ததில் அர்த்தம் இல்லை என்று தான் இப்படி ஒரு முடிவை எடுத்தார் அதிலும் அவரை பொறுத்தவரை வெண்ணிலா அவனுக்கு பொருத்தமான ஜோடியே..
அவனின் அடாவடிக்கும் அவளது அமைதி ஒத்து போகும் இந்த பத்து நாட்களாக அவர் தான் பார்க்கிறாரே அந்த வீட்டில் அவளது அம்மாவிற்கு இணையாக அத்தனை வேலையையும் இழுத்து போட்டு செய்து கொண்டு இருக்கிறாள்.. நல்ல பெண் தேடினாலும் இது போல கிடைக்காது அப்படி இருக்க மகனின் கோபத்தை அவர் பெரிதாக கண்டு கொள்ளவில்லை..
மகனோ அவனது ஆசை கனவு எல்லாம் வேரோடு அறுத்த அம்மாவை அவனுக்கு இப்போது பிடிக்கவில்லை அவர் மீது அவன் கோபாமாக இருக்கிறான்..
"மனு அவ டால் மாதிரி அழகா குயூட்டா இருக்கா டா பாரு"... என்று அவர் அவள் இருக்கும் இடத்தை காட்ட அவனும் நீ எல்லாம் ஒரு அம்மாவா சைட் அடிக்க சொல்றியே என மனதுக்குள் கூறியவன் தவறாமல் அவளை ஏறிட்டான் ..
கிணற்றில் இருந்து தண்ணீரை வாளியில் எடுத்து குடத்தில் ஊற்றியவள் மயில் வண்ண நிற புடவை அணிந்து இருந்தாள்..
திருமணம் ஆனதை அவனுக்கு நினைவு படுத்தும் வகையில் நெற்றியின் வகிட்டில் திலகம் இட்டு இருக்க நெற்றியில் கொஞ்சம் பெரிய சைஸ் பொட்டு இட்டு மூக்கில் மூக்குத்தி மாற்றி இருப்பாள் போலும் எப்போதும் சிவப்பு கல் அணிபவள் இன்று மரகத பச்சை அணிந்து இருக்கிறாள்..சூரிய ஒளியில் பட்டு அவளின் சிவந்த அதரம் மின்ன அப்படியே அவன் பார்வை அவளது கழுத்துக்கு கீழே இறங்க அவன் பத்து நாட்களுக்கு முன் கட்டிய பொன் மஞ்சள் நிற தாலி மின்னி கொண்டு இருந்தது..
அதை கண்டவன் அதிர்ந்து பார்க்க ஒல்லியான தேகத்தை கொண்டவள் அவளது சேலையை இடுப்பில் தூக்கி சொறுகி அவளின் சிவந்த வெற்றிடையில் அந்த நீர் நிறைந்த குடத்தை அசால்ட்டாக தூக்கிய காட்சியை கண்டவனுக்கு பார்க்க பூனை மாதிரி இருந்துட்டு குடத்தை தூக்கிட்டு போறாளே..அம்மா சொன்ன மாதிரி டால் மாதிரி எல்லாம் இல்ல தகர டின் மாதிரி தான் இருக்கா என நினைத்து செல்லும் அவளையே திரும்பி பார்க்க அந்த இடத்தில் வீரப்பன் போல சேரில் செழியன் அமர்ந்து இருந்தான்...
