மன்மதன் 20
.அத்தியாயம் : 20
இவனையே பார்த்து கொண்டு இருப்பதை முழு வேலையாக வைத்து இருப்பான் போலும் இரண்டு நாட்களுக்கு முன் வீட்டுக்கு வந்தவன் முதல் இதோ இப்போது வரை அவனை தான் பார்த்து கொண்டு இருக்கிறான் அவனை கண்டதும் மனுவின் உடலும் கோபத்தில் விறைத்து டேய் மனு இப்படி போய் மாட்டிக்கிட்டியே டா ..எல்லாம் கொலைகாரனுங்க மாதிரியே இருக்காங்களே என அலுக்க,
மனுவுக்கு வெண்ணிலாவை பிடிக்க வைத்திடும் முயற்சியில் தாய் பல்லவி இறங்க அவனுக்கு அதற்கு கோபம் வந்து, " மாம் டோன்ட் பீ சில்லி ..அது தான் கல்யாணம் பண்ணி வெச்சிட்டீங்களே நான் பார்த்துக்கறேன் நீங்க கிளம்புங்க"... என்று கூறியவனுக்கு மட்டும் ஏனோ உள்ளுக்குள் ஆத்திரம் மட்டுப்படவில்லை...
அவனுடைய தாத்தா இந்த வேலையை கடைசி நிமிடத்தில் பார்ப்பார் என்று யாரும் கனவிலும் எதிர் பார்க்கவில்லை கூடவே அவனுக்கோ அவரது போட்டோவை பார்க்கும் போதெல்லாம் , "சாகும் போது எனக்கு ஆப்பு வெச்சிட்டு நீ மட்டும் சிரிச்சிட்டு இருக்கியா மவனே உனக்கு என்ன யா பாவம் பண்ணினேன் நான் ஒரு அஞ்சு நிமிஷம் பார்த்து இருப்பியா அதுக்குள்ள என்ன வெளக்கெண்ணை.. என்னை பத்தி தெரியும்னு உன் வீட்டு பொண்ணை என் தலையில் கட்டிட்டு போய் சேர்ந்துட்டியே".. ..என்று அவன் இறந்தவரையும் விட்டு வைக்கவில்லை...
ஆம் அவனை பொறுத்தவரை அவர் அவனுடைய அம்மாவின் அப்பா அவ்வளவு தான் மரியாதை ..அவருக்கு மட்டுமல்ல அந்த வீட்டில் உள்ள அனைவரிடமும் அவ்வளவு தான் மரியாதை ...என்னிடம் எல்லை மீறாதீர்கள் என்பது போல விறைத்து கொண்டே திரிந்து வந்தான்..
இதை எல்லாம் கூட அவன் பொறுத்து கொள்வான்..தாத்தா வின் இறுதி காரியத்தை சண்டி தேவன் மற்றும் செழியன் உடல் நிலையை கருத்தில் கொண்டு இவன் தான் இறுதி காரியங்கள் செய்ய அவன் பதினாறு நாட்கள் வெண்ணிலாவின் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டான்...அவனுக்கு அங்கே நெருப்பில் நிற்பது போல இருந்தது..அதிலும் வெண்ணிலாவின் அம்மாவின் தொல்லையும் அவளது பாட்டியின் தொல்லையும் தான் தாங்கவே முடியவில்லை ..
ஆம் அவன் காலையில் எழும் நேரம் வெண்ணிலா கையில் காபியோடு தயங்கி தயங்கி நிற்பாள் ..அவன் கண் விழிக்கும் போதே அவள் முகத்தில் விழிக்க பின் அவனுக்கு தேவையான பணிவிடைகளை அவளை கொண்டு செய்ய சொல்லும் போது அது மனம் ஒத்த தம்பதிகள் என்றால் பரவாயில்லை அதிலும் இவர்கள் ஒரு இக்கட்டில் திருமணம் செய்தவர்கள் மேலும் இன்னும் அவர்கள் படிப்பை கூட முடிக்கவில்லை அப்படி இருக்க இவர்கள் இருவரும் சேர்ந்து அவளை அவனிடம் வற்புறுத்தி தள்ள நெனைப்பது போலவே மனுவுக்கு பட்டது.. அவனால் அவனுக்கு கல்யாணம் ஆகி விட்டது என்பதையே ஏற்று கொள்ளாமல் திரிபவனுக்கு அவள் வந்து தயங்கி கொண்டே முனகி கொண்டே அவனை ஏறிட்டு பார்க்காமல் அவன் தன்னை ஏதாவது செய்து விடுவானோ என்ற மிரட்சியில் திரிபவளை எப்படி அவனது மனைவியாக ஏற்று கொள்வான்...
அந்த மாதிரி வற்புறுத்தி அவளை என்னிடம் பழக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் அது அவனுக்கு அவமானமாக இருப்பது போல படவும் இதை பற்றி அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்ற முடிவுடன் ஒரு நாள் காலை அவன் குளிக்க சென்றான்...
எப்போதும் போல வெண்ணிலாவை வம்படியாக காபி கொண்டு போய் அவனிடம் கொடுக்க சொல்ல அவளும் தயங்கியபடியே அவனது அறையை அடைந்தாள் இது தான் கடந்த பத்து நாட்களாக நடந்து கொண்டு இருந்தது.. இன்றும் துளியும் மாற்றம் இல்லாமல் அதுவே நடக்க
அவள் உள்ளே வரவும் மனு குளித்து முடித்து ஈரம் சொட்ட சொட்ட குளியல் அறையை திறந்து கொண்டு வெளியே வரவும் சரியாக இருக்க ஆடையில்லாமல் துண்டோடு வந்தவனை பார்த்தவள் முகம் முழுவதும் சிவப்பாக மாறி இதயம் படபடவென அடித்து கொள்ள சிறு பெண்ணிற்கு வெட்கமா இல்லை வேறு எதாவதா என இனம் புரியாத அவளை ஆட்கொள்ள உடல் முழுவதும் சட்டென்று சூடாவது போல இருக்க அவனை மேற்கொண்டு ஏறிட்டு பார்க்காமல் வேகமாக பார்வையை தாழ்த்தி கொண்டு கையில் பிடித்து காபியோடு வெளியே செல்ல முற்பட அவனோ யாரை கடிப்பது என்ற நிலையில் இருந்தவன் வெண்ணிலா வந்து சிக்கவும் வெளியே செல்லும் அவளை, " ஹே நில்லு"... என்று கூற ஒவ்வொரு அடியாக அவள் அருகே நெருங்கவும் இவளோ பின்னாலே சென்றாள்..
அவள் இதயம் பழைய எண்ணங்களை சூடி கொள்ள விதிர்விதிர்த்து போனவள் அருகே அவன் நெருங்க கையில் இருந்த காபி அவளின் உடலின் இருந்த நடுக்கத்தில் காபியும் ஆடி கொண்டு இருந்தது...
