மன்மதன் 21
அத்தியாயம் : 21
இப்போது கொட்டி விடுவேன் என்ற நிலையில் அவள் இருக்க அவனும் அவள் அருகே நெருங்கி நின்றவன் அவள் கையில் இருந்த காபி டம்ளரை அவளின் மென் விரல்கள் படும் படி வாங்கி அருகே வைத்து விட்டு அவள் விழியோடு விழி கலந்தவன் தன்னை காணும் போது அலை பாயும் அவளது கண்களை பார்த்து கொண்டே , "என்ன பெர்பெக்ட் வைப் ஆகலாம் ட்ரை பண்ணிட்டு இருக்கியா..இல்ல அப்படி எப்படி ஆகிறதுன்னு ட்ரையல் பார்த்துட்டு இருக்கியா "...என்று அவள் முகத்தை பார்த்து கொண்டே கேட்க
"அப்படி எல்லாம் இல்ல அம்மா தான் கொடுக்க சொன்னாங்க "...என்றாள் அவன் விழிகளை பார்க்காமல் கீழே குனிய அவனது பரந்த மார்பும் உடல் பயிற்சியால் ஒட்டி போயிருந்த வயிறு தெரிய வேகமாக முகம் சூடாகி அதற்கு அவன் முகமே பரவாயில்லை என்று நெனைத்தவள் மெல்ல இமை என்னும் குடையை மேலே உயர்த்தி அவனை ஏறிட்டாள்..
தைரியமாக தன் கண்களை பார்ப்பதை பார்த்து அவன் புருவம் ஆச்சரியமாக நெளிய , "அதை எல்லாம் செய்ய எனக்கு எங்க அம்மா இருக்காங்க நீ செய்யணும்னு எந்த அவசியமும் இல்ல..தாலி கட்டினான்னு சொல்லி அப்படியே இருந்துக்கலாம்னு நெனைப்பா??"...
"அப்படி எல்லாம் இல்லை"... என்று கூறியவளுக்கு அவன் என்ன சொல்கிறான் என்பது புரியாமல் முழிக்க
அவளது கண்களை பார்த்து கொண்டே , "என் கூட வாழனும்ன்னு ஆசையா இருக்கா?? "...என்று நக்கல் கேள்வியை கேட்டவனை பார்த்து
"எனக்கு அந்த ஆசை எல்லாம் இல்ல ...நீங்க உங்க வாழ்க்கையை வாழ நான் தடையாக இருக்க மாட்டேன்.. "...என மாயாவை எண்ணி கூற
அவனோ அவள் கூறிய பதிலில் இலேசான எரிச்சல் உற்றவன், " ஓஹோ உனக்கும் அந்த தடையா நான் இருப்பேன் போல"... என்று அசோக்கை நினைத்து அவன் பதில் கூற
அவனிடம் பேசி கொண்டு இருந்தால் ஏடாகூடமாக ஏதாவது செய்வான் என்பதை முன்பே அவளுக்கு தெரியும் ஆனதால் அவனிடம் இருந்து விலகவே அவள் மனம் துடித்து,' எனக்கு போகணும் என்னோட அம்மா தேடுவாங்க "...என்று அவள் கூறி கொண்டு இருக்கவும் அவன் விட்டால் தானே மெல்ல அவளை தன் கைகளால் சிறை செய்ய அவளின் உடலோடு உடல் உரசி சரியாக துவட்டாத தலையை அவள் முகத்துக்கு அருகே கொண்டு சென்று தலையை சிலுப்ப அவன் தலையில் உள்ள நீர் அவள் முகத்தில் தெறிக்க அவளோ வேகமாக கண்களை மூடி அவன் முத்தமிட போகிறான் என்று அவள் மூளை அறிவுறுத்த உதடு துடிக்க நின்று கொண்டு இருந்தவளை ஆராய்ச்சி பார்வை பார்த்து மேலும் நெருங்க அவள் மூச்சை இழுத்து பிடிக்கும் நிலையை அடைய மேலும் அவளிடம் தன் சித்து விளையாட்டை காண அவன் நெருங்க
வீட்டுக்குள் இருந்து செழியனின் குரல் அறைக்கு வெளியே வெகு அருகில் கேட்க வேகமாக கண்ணை திறந்த அவளோ அவன் மீதே இழுத்து வைத்த சூடான மூச்சுக்காற்றை வெளியே விட இப்போது குப்பென்று சிவப்பது மனுவின் முறை ஆனது...ஒரு நொடி அந்த மூச்சாகி போனால் என்ன என்று கூட அவனது பின் மூளை வேலை செய்ய அதற்குள் அவளோ , "ஐயோ அண்ணா கூப்பிடுறாங்க".. என்று கூறவும்
மனுவிற்கு தோன்றிய மெல்லிய உணர்வுகள் நிறுத்தப்பட்டு உள்ளுக்குள் இறுகியவன் அவளது கையை வேண்டும் என்றே முறுக்கி பிடித்தான்..அவளின் சிவந்த கை மேலும் கன்றி போகும் அளவுக்கு இறுக்கி பிடிக்க அவளோ , "விடுங்க அண்ணா கூப்பிடறார்..பார்த்திட போறார் "... என்று கூறவும்
அவனது கை மேலும் இறுக்கி கொண்டே போக வெண்ணிலா மெல்ல திமிறினாள்..
"உங்க அண்ணன் பார்த்தா என்ன டி வரட்டும் பார்த்துக்கறேன்"..என்று கோபமாக கூற
அவன் தன்னை வேணாம் என்று கூறி விட்டானே பிறகு எதற்கு என்னை தொல்லை செய்கிறான் என அவள் அவனிடம் இருந்து விடுபட போராட செழியன் அவர்கள் இருவர் இருக்கும் அறையை அடையவும் சரியாக இருக்க தனது தங்கை அவனது கைக்குள் அகப்பட்டு இருக்கிறான் என்பதை அறிந்து ஒரு அண்ணனாய் சிலிர்த்து எழ அதற்காகவே காத்து இருந்தவன் போல மனு , செழியனின் கண் முன்னே அவளது இடையை சட்டென்று தன் அருகே இழுத்து நிறுத்தினான்..
வெண்ணிலாவோ அவனது வெற்று உடலில் அவனது அருகில் நிற்க கூசி சிலிர்த்தவள் மேலும் அவளது அண்ணன் முன் தான் இப்படி அவனுடன் நெருக்கத்தில் நிற்கிறோம் என்று நெனைத்தவள் விலக நினைக்க அவனுக்கோ இங்கே செழியனை கண்டதில் சிலிர்த்து எழுந்தவன் மேலும் மனு அவளை தன்னோடு சேர்த்து நிறுத்த , "டேய் என்ன டா நெனைச்சுட்டு இருக்க விடு டா என் தங்கச்சியை" என செழியன் கூறவும் அது வேறு மனுவின் கொம்பு சீவ போதுமானதாக இருக்க அவளின் வெற்று இடையில் அழுத்தம் கொடுத்து செழியன் கண் முன்னே பிடித்து இருந்தான் அதில் அவள் இப்போ என்னுடையவள் முடிந்தால் கையை வைத்து பாரடா என்ற பொருள் இருக்க அடிக்க ஓங்கிய கையை அப்படியே தாழ்த்தி இறக்கினான் செழியன்..
ஆம் இப்போது அவனின் ஆசை தங்கை அவனுடைய மனைவி ஆகிற்றே ஆனால் அதை தான் செழியனால் இப்போது வரை ஏற்று கொள்ள முடியவில்லை அதிலும் மனு மீது துளியும் நல்ல எண்ணம் செழியனுக்கு இல்லை அதை விட மிக முக்கியமான விஷயம் அவனுக்கு நகரங்களில் வாழும் மெத்த படிப்பு படிப்பவர்கள் படித்து முடித்தவர்களை அவனால் இன்று அளவும் நம்ப முடியவில்லை அவர்களுக்கு எல்லாம் திமிர் அதிகம் என்ற போர்வையில் சொந்த வாழ்வில் ஏற்பட்ட காயம் அவனை அப்படி இரும்பாக செழியனை மாற்றி இருக்க பிறகு ஏன் அவனது தங்கையை படிக்க வைக்கிறான் அதுவும் தலை சிறந்த இடத்தில் என்றால் அதுவும் வைராக்கியமே , "படிப்பை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ரௌடி தனம் செய்யறவங்க தானே "...என்று முதல் இரவு அன்று மாலதி கூறியதற்காகவே ஒரு பிடிவாதத்திற்கு படிக்க வைத்து கொண்டு இருந்தவன் தலையிலும் இடியை இறக்கி விட்டு அவனது தாத்தா செல்ல செழியனின் துடிப்பை வாய் விட்டு வெளியே கூற முடியாமல் தவித்து கொண்டு இருந்தான் என்றே கூற வேண்டும்..தன் தங்கையை தன் கண் முன்னே பிடித்து இருக்க அவனை இப்போது அடிக்கும் இடத்தில் நீ இல்லை அவள் அவனுடைய மனைவி என்ற புத்தி உரைக்க அமைதியாக சென்றான் செழியன்..
அண்ணனின் கண் முன்னே அவளை தனது தோள் வளைவிலே வைத்து கொள்ள தன் கண் முன்னே அவளை அடிக்க இயலா கைலாகாத தனத்தை எண்ணியும் தன் தங்கையின் கழுத்தில் நான் எவ்வளவோ மறுத்தும் அவன் கட்டிய தாலி இருப்பதை பார்த்து பேசாமல் சுவற்றில் குத்தி விட்டு சென்றான்..அதை தவறாமல் ரவீந்தர் கண்கள் அந்த காட்சியை படம் பிடிக்க அவருக்கும் இந்த திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லை..
ஆனால் அவருக்கு மட்டும் தான் விருப்பம் இல்லையே தவிர அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் விருப்பம் ஆகி இருக்க பெரியவரின் காரியம் முடிந்த பிறகு இவர்களுக்கு ஒரு நல்ல நாள் பார்த்து சாந்தி மூகூர்த்ததுக்கு நாள் குறிக்க வேண்டும் என்ற செய்தியை கேட்டதும் அவர் இயல்பாக இல்லை...
தன்னை கை வளைவில் அவன் இன்னும் பிடித்து வைத்திருந்தாலும் வெளியே அவளது பாட்டி அவளது அப்பாவிடம் அவரது லௌட் ஸ்பீக்கர் வாயால் விசேஷத்துக்கு நாள் குறிக்க சொல்ல அந்த வார்த்தையை கேட்ட நால்வரும் கொதித்தனர்..
செழியனோ இதை கேட்டதில் இருந்து கொதிக்க அதே போல ரவீந்தரும் குழம்ப அதே நேரம் அறைக்குள் இருந்த அவர்கள் இருவரும் விஷயத்தை கேட்டதும் மனு ஒரு விதத்தில் அதிர்ந்தான் என்றால் வெண்ணிலா பயத்தின் உச்சிக்கே செல்ல அவள் உடல் குலுங்குவதை அறிந்த அவனோ என்ன நெனைத்தானோ என்னவோ வேகமாக தன்னிடம் இருந்து விலக்க அவளும் வேகமாக அவனை விட்டு வெளியே ஓடினாள்..
அதை நினைத்து தான் மதியம் அவன் வெளியே அமர்ந்து இருக்கும் போது தான் அவனுடைய அம்மா அவருடைய சோறு ஊட்ட வர கொதித்து கொண்டு இருந்தான்..
அவளும் தண்ணீர் குடத்தை ஏற்று நடந்து கொண்டு இருந்தாலும் அவளது மனதும் இந்த பத்து நாட்கள் அவன் அருகே செல்லாமல் தன்னை காத்து கொண்டவளுக்கு பெரியவர்கள் செய்யும் இந்த செயல் சுத்தமாக பிடிக்கவில்லை என நினைக்க கிராமத்தில் பொறுத்தவரை அவள் கல்யாண வயதை எப்போதோ அடைந்து விட்டாள் அதனால் அவள் பெற்றோருக்கு அவளது வயது பெரிதாக தெரியவில்லையோ...18 வயதும் 24 வயதும் திருமணம் நடக்க ஏற்புடைய வயது அல்லவே என நினைத்த ரவீந்தர் என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தார்...
ஏதேதோ யோசித்து கொண்டு ஒரு முடிவுக்கு வந்த ரவீந்தர் இதை பற்றி முதலில் தன் மகனிடம் தான் பேச வேண்டும் என முடிவு எடுத்தவர் தன் மகனை தேட வீட்டின் பின் பக்கம் ஒரு தோப்பின் ஓரத்தில் அங்கே ஒரு மரத்தின் நிழலில் நின்று போனில் மாயாவிடம் உரையாடி கொண்டு இருந்த தன் மகனை அழைத்தார்..அவனும் அவசரமாக அவளிடம் ஏதோ சொல்லி போனை வைத்தவன் மறந்தும் வெண்ணிலாவை அவன் திருமணம் செய்த விஷயத்தை கூறவில்லை மேலும் அவள் வீட்டில் தான் இருக்கிறேன் என்பதையும் கூறவில்லை அம்மா வழி தாத்தா இறந்து விட்டதால் அம்மாவின் வீட்டில் இருக்கிறேன் இன்னும் ஒரு வாரத்தில் வந்து விடுவேன் என்று மட்டும் கூறியவன் தந்தை வரவும் வேகமாக போனை அணைத்தான்...
"மனு கம் ஜஸ்ட் வாக் போலாம் "
..என்று அழைக்க அவனும் தன் தந்தையுடன் போனான்..
மல்லிகை மனம் வீசும்...
காபி டம்ளரை அவளின் மென் விரல்கள் படும் படி வாங்கி அருகே வைத்து விட்டு அவள் விழியோடு விழி கலந்தவன் தன்னை காணும் போது அலை பாயும் அவளது கண்களை பார்த்து கொண்டே , "என்ன பெர்பெக்ட் வைப் ஆகலாம் ட்ரை பண்ணிட்டு இருக்கியா..இல்ல அப்படி எப்படி ஆகிறதுன்னு ட்ரையல் பார்த்துட்டு இருக்கியா "...என்று அவள் முகத்தை பார்த்து கொண்டே கேட்க