மன்மதன் 22
அத்தியாயம் : 22
மன்மதன் தேசத்து மல்லிகை
ரவீந்தர் பல்லவியை காதலித்து மரியாதையாக பெண் கேட்க இந்த வீட்டுக்கு 25 வருடம் முன்னே வீட்டு படியை மிதிக்க அப்போது பல்லவ தேவன் மற்றும் சண்டி தேவனால் அவமானப்பட்டு அந்த வீட்டில் இருந்து இறங்கியவர் தான் இப்போது பல்லவதேவன் மரணத்திற்கு தான் வந்து இருக்கிறார்..அவருக்கு அதனால் இவர்கள் குடும்பத்தின் மீது கோபத்தை காட்டிலும் நிறைய வருத்தம் உண்டு ஆனால் தன் வருத்தத்தை தன் மனைவியிடம் காட்டி அவரை வேதனைப்படுத்த அவரது காதல் கொண்ட மனத்திற்கு வரவில்லை..அதனாலேயே அவர் அமைதியாக இருக்க ஆனால் தன் மகனின் எதிர்காலத்தை சீர்படுத்த வேண்டிய நிலையில் ஒரு தந்தையாக அவருக்கு கடமை நிறையவே உண்டு...மேலும் அவனுக்கு திருமணம் யாரும் எதிர்பாராத தருணத்தில் நடந்து இருந்தாலும் அது மட்டுமே வாழ்க்கை ஆகாதே என நினைத்தவர் தன்னுடன் இயற்கையின் எழிலை ரசித்தப்படி வந்து கொண்டு இருந்த மகனை திரும்பி பார்த்தவர்,
"மனு இன்னும் ஸ்டடீஸ் முடிய ஐ திங்க் இன்னும் ஏழு மாசத்தில் முடியும் இல்லையா"...
"எஸ் டாட்"...
"அதுக்குள்ள உனக்கு எதிர்பாராத விதமா கல்யாணம் நடந்துடுச்சு"... என்று அவர் கூறவும்
அவன் என்ன கூற வருகிறார் இது தான் நடந்து முடிஞ்சுடுச்சே என அவர் முகத்தையே பார்க்க,
"டாட் ஸ்டில் நௌ எனக்கு இந்த பாண்டிங் இஷ்டம் இல்லை ..இது சுத்த இடியட்டிக்கா இருக்கு.. "...என்று உண்மையாக தன் மனதை அவன் அவரிடம் வெளிப்படுத்த
"மனு நான் உன் அம்மாவை கல்யாணம் செய்யும் போது எனக்கு உன் வயசு தான் ஆனால் எனக்கு அப்போ வேலை இருந்துச்சு நான் மிலிட்டரி மேன்.."...
"ஹ்ம்ம்"...
"பட் நீ இன்னும் படிக்கிற இப்போ மேரேஜ் அப்படிங்கறது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்"... என்று கூறியவரை பார்த்து
"என்னோட ஆசை கனவு எல்லாத்தையும் மம்மி கலைச்சுட்டாங்க சில்லி சென்டிமெண்ட்ல என்னை இப்படி சிக்க வெச்சுட்டாங்க.."என்று தாயின் மீது குறைப்பட்டு கூறியவன் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக இலேசாக தன் தந்தையின் பக்கம் கூடுதலாக சாய தொடங்கி இருக்கிறான்...தாயின் மீது உள்ள வெறுப்பே அதற்கு முக்கிய காரணமும் கூட
"மனு கல்யாணம் நடந்து போச்சு அதை உன் வாழ்க்கையில் இருந்து மாத்த முடியாது மேரேஜ் அப்படிங்கறது லைஃப் ல ஒன்ஸ் தான் நடக்கும் உனக்கு கொஞ்சம் ஏர்லியர் ஆஹ் நடந்துச்சு இதுல நீ குழப்பிக்க எதுவும் இல்லை "...என்று அவர் அவனை சமாதானம் செய்ய
"டாட் நீங்க கல்யாணம் அந்த வே யில் தான் பார்க்கறீங்க..பட் நான் பேசிட்டு இருக்கறது மனசு சம்பந்தப்பட்ட விஷயம் நீங்க என்கிட்ட ஓபன்னா பேசறதுனால நான் சொல்றேன் எனக்கு உங்களையும் மம்மி மாதிரி லவ் மேரேஜ் பண்றதுல தான் விருப்பம் டாட் இது எனக்கு இரீடேட்டிங் ஆஹ் இருக்கு.. ".. என்று கூற
"கண்ணா மனு கல்யாணம் பண்ணியும் லவ் பண்ணலாம் மனு உனக்கு இப்போ கல்யாணம் நடந்ததுல எனக்கும் விருப்பம் இல்லை தான் ஆனால் இந்த கல்யாணமே விருப்பம் இல்லாமல் இல்லை..
லைஃப் நீ நினைக்கிற மாதிரி டேக் இட் ஈஸி டைப் இல்ல மனு நீ எங்க லைஃப் பார்த்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும் சொல்ற அந்த அளவுக்கு நாங்க உனக்கு பிரீடம் கொடுத்து வளர்த்தி இருக்கோம் அதை நினைச்சு நான் பெருமை படுறேன் அண்ட் நீ ஓபன்னா சொல்றதும் எனக்கு பிடிச்சு இருக்கு..
பட் எல்லோரோட லைஃப்பும் ஒரே மாதிரி ஒரே ஸ்கேல்ல போகாது மனு எல்லோருக்கும் விதம் விதமான விதத்தில் லைஃப் சேஞ்ச் ஆகி இருக்கும்..உனக்கு என்ன மாதிரி லைஃப் கிடைச்சு இருக்கோ அதில் உன்னை புகுத்தி வாழ்ந்து பார் நான் இப்போவே வாழ்ந்து காட்டுன்னு அவங்களை மாதிரி சொல்லமாட்டேன் பட் உன்னால அந்த பொண்ணு கூட வாழ முடியும் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு...
அவங்க சொல்ற கல்யாணம் நடந்து முடிஞ்சா நெக்ஸ்ட் லைஃப் ஸ்டார்ட் பண்ணு ன்னு சொல்ல வரல முதலில் படிச்சு முடி தென் ஜாப் அதுக்குள்ள அந்த பொண்ணும் படிச்சு முடிக்கட்டும் அந்த பொண்ணு அவங்க அம்மா கிட்ட பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன் ரொம்ப பயத்தில் இருப்பா போல இவங்க வேற உங்களோட பீலிங்ஸ் புரிஞ்சுக்காமல் தேவையில்லாத ஏற்பாடு எல்லாம் பண்ணிட்டு இருக்காங்க..
அவ அண்ணன் முகத்தை பார்த்தாலே தெரியுது அவனுக்கும் இதில் விருப்பம் இல்லைன்னு"...என்று அவர் கூறும் போதே
"டாட் அவனுக்கு பிடிக்குதா இல்லையான்னு எனக்கு கவலை இல்லை டாட்"...என்று எரிச்சல் மிகுந்த குரலில் கூற
"அந்த பொண்ணு பாவம் படிக்கணும்னு சொல்லிட்டு இருந்தா.. யாரும் கேட்ட மாதிரி தெரியல..
அவளுக்கும் உன்னை மாதிரி ஆசைகள் இருக்க தானே செய்யும் என்னால அந்த வீட்டில் போய் இந்த சடங்கு இப்போதைக்கு வேணாம்னு சொல்ல முடியாது அதுக்கு ரீசன் பயம் இல்லை அவங்க எல்லாம் பழைய பஞ்சாங்கத்தில் ஊறி போனவங்க இன்க்குலிடிங் உன் அம்மாவையும் சேர்த்து தான் சொல்றேன்..நான் சொன்னா அது இந்த சமயம் வேறு விதமா கூட முடியலாம் ஆனால் உன்னால கட்டுப்பாடா இருக்க முடியும் அந்த பொண்ணுக்கு நல்ல லைஃப் கொடுக்க முடியும்..
நான் இதை எல்லாம் சொல்லும் போது உனக்கு புரியுதா இல்லை அதுக்கான பக்குவம் வந்து இருக்கான்னு தெரியல ஆனால் நீங்க இரண்டு பேரும் படிச்சு முடிச்சு உங்க மேரேஜ் லைஃப்பை தொடங்குங்க..அப்போ நான் சொன்னதோட மீனிங் புரியும்.. அது தான் இரண்டு பேரோட எதிர் காலத்துக்கு நல்லது "..என்று இன்றைய சடங்கை நீங்கள் எதிர் கொள்ள நேரிட்டாலும் இது போல பல தருணங்களை சந்திக்க நேர்ந்தாலும் கொஞ்சம் சிறிது காலத்திற்கு விலகி இருங்கள் என அவனது தந்தை சொல்லாமல் சொல்லியது கூறியது அவனுக்கு புரிந்ததது அதுவே அவனுக்கு இந்த நொடி சரி என்று பட மேலும் எனக்கு வெண்ணிலாவுடன் இருக்க விருப்பம் இல்லை என்பதை ஆழ் மனதில் அவன் பதித்து வைத்திருப்பதால் அவளிடம் அவன் விலகி இருக்க முடிவு செய்ய ஆனால் அவனே அவனுடைய தந்தைக்கு கொடுத்த வாக்கை மீற போகிறான் அதுவும் அவனது படிப்பு முழுமையடையும் முன்னே என்பதை அவன் இந்நேரம் அறியவில்லை..
ஓரிரு நாட்களில் பெரியவரின் சடங்குகள் எல்லாம் கழிய , "மனுவோ எனக்கு காலேஜ் போகனும் இன்னும் எவ்வளவு நாள் என்னை இந்த பட்டிக்காட்டில் பிடிச்சு வைக்க போறீங்க"... என்று தான் தாயின் காதை அவன் கடிக்கவும் ரவீந்தரும் நாசுக்காக படிப்பை பற்றி சண்டி தேவனிடம் கூற
அவரோ கேட்ட பாடில்லை , "என்ன மச்சான் படிப்பு பொல்லாத படிப்பு இவங்க உக்கார்ந்து படிச்சா கூட நம்ம சொத்தே நாலு தலைமுறைக்கும் வரும் "...என்று கூறி சிரிக்க
மனுவோ இந்த மனிதர் விவரம் அறிந்து தான் பேசுகிறாரா என நினைக்காமல் இருக்க முடியவில்லை மனுவால்..
அதே நேரம் வெண்ணிலாவும் இவர்கள் இந்த சடங்கு சம்பிரதாயம் எல்லாம் வைக்கும் முன் சென்னை செல்ல வேண்டும் என்று முனைப்பில் தன் தாயின் செவியை கடிச்சு, " அம்மா காலேஜ் போகனும் மா "...என்க
"மாப்பிளையே இருக்காங்க உனக்கு என்ன கேடு"... என்று அவர் அவளை கடித்தார்..
