மன்மதன் 23
அத்தியாயம் : 23
அவன் இருந்தா நானும் இருக்குனுமா என்ற கேள்வி எழுந்தாலும் இந்த பந்தத்தில் இருந்து எப்படி விடுபட வேண்டும் என்று துடித்து கொண்டு இருப்பவனா என்னுடன் வாழ்க்கையை வாழ போகிறான் அவனுக்கே விருப்பம் இருந்தாலும் என்னால் அவனுடன் வாழ தன்னால் இயலாது என நெனைத்தவளுக்கு தனது குடும்பத்துக்கு அவன் என் கண் முன்னே இன்னொரு பெண்ணுடன் காதல் என்ற பெயரில் சல்லாபித்து கொண்டு இருப்பது தெரிய வந்தால் என்ன ஆகும் என்பதையும் மனக்கண்ணில் கொணர்ந்தவளுக்கு அழுகையை தவிர வேறு எதுவும் வெளியே வரவில்லை...
ஆனால் அந்த வீட்டில் அவள் அண்ணனை தவிர வேறு யாரும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்து கொள்ளாததில் அவளுக்கும் வருத்தம்தான்..
இதோ பெரியவர் இறந்து 20 நாட்களுக்கு பிறகு நாளை மனு கல்லூரிக்கு சென்றே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இருக்க அதனால் இன்று இரவு அவர்களுக்கு சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்து இருந்தனர்...
அதன் படி அவளை அவளது அம்மாவும் அத்தையும் தயார் செய்து கொண்டு இருக்க பெரியவர்கள் முன் அழமால் இருக்க மிகவும் பிரயத்தனம் பட்டு கொண்டு இருந்தாலும் அவளுக்கான சமயம் இதோ வந்து விட்டதே..
புத்தம் புது மலரை போல அவளை அலங்காரம் செய்தவர்கள் அவளிடம் ஒரு பால் சொம்பை கொடுத்து அவளை அனுப்பி வைக்க பதைப்பதைக்கும் விழிகளோடு அவன் தற்போது தங்கி இருக்கும் அவளது அறையை அடைந்தாள்..
ஆரஞ்சு வண்ண பட்டுடுத்தி அடுக்கு மல்லி சரம் சரமாக அவளின் தோள் வரை தொங்க பிறை நெற்றியில் பயத்தால் வழியும் வியர்வையை ஒரு கையால் துடைத்து கொண்டே எளிமையான அழகில் தேவதையென ஒளிர்ந்து கொண்டு இருந்தவள் அறைக்குள் காலை வைக்க ஆயிரம் முறை யோசித்து கொண்டே அறை வாயிலில் நிற்பவளை பார்த்து எரிச்சல் மிகுந்த குரலில் , "இன்னும் எவ்வளவு நேரம் வெளியே நின்னு என் மானத்தை வாங்க போற ..நான் ஒன்னும் உன்னை கடிச்சு தின்னுட மாட்டேன்"...என்று கட்டிலில் அமர்ந்து கொண்டு அவன் கோபமாக கூறவும் வேகமாக உள்ளே நுழைய , "கதவை அடை டி அதுக்கு வேற யாராவது சொல்லனுமா "...என்று கூறி கொண்டவன் பக்கத்து அறையில் தான் பாட்டியின் அறையாக இருக்க கிழவியின் அதிசாமர்த்தியம் வேறு அவனுக்கு இன்று காலை தான் தெரிய வந்தது..
ஆம் இன்று நல்ல நாள் நடத்தியே ஆக வேண்டும் என்று கிழவி கூப்பாடு போட அந்த கிழவியையும் அந்த பெரியவருக்கு பக்கத்தில் ஒரு போட்டோவாக மாற்றினால் கூட என்னவென்று அவன் யோசிக்க தொடங்கி விட்டான்..
அதனால் கிழவி ஒட்டு கேட்டு கொண்டு இருக்கும் என்று தான் அவன் கூற அவளோ பயத்தில் மெல்ல வந்தவளுக்கு இவன் தன்னை ஏதாவது செய்து விடுவானோ என்ற பயம் இருந்தாலும் கதவை மெல்ல அடைத்தவளுக்கு எம்பி தாழ்ப்பாள் போட முடியாமல் கைகள் வியர்வையில் வழுக்க அவள் திரும்பவும் அவளை பார்த்து கொண்டே இருந்தவனுக்கு இடை வரை கூந்தலில் தோள் வரை பூவை சூடி தலையை தூக்கி எம்பி நின்றவளின் பின்னழகின் மீது அவன் குறும்பு கண்கள் அவ்வளவு கோபத்திலும் செல்ல அவள் இடையில் விலகிய புடவையில் அவளது இடை மின்னி அவள் நிறத்தை அவனுக்கு எடுப்பாக காட்டி கொடுக்க அதில் அவனது இளமை உணர்வுகள் இலேசாக தூண்டி விட அவனின் வயது அவளை வெட்கமே இல்லாமல் பார்க்க சொன்னது..அவனும் சாவதனாமாக அவளை ரசித்து கொண்டு இருந்தான்...அந்நேரம் இவளிடம் ஏதோ மயக்கம் இருப்பது அவனுக்கு புரிந்தாலும் அதே போல அன்றைய முத்தம் இன்றும் அவனின் மனதை குடைய,
அவளோ தாழ்ப்பாள் வழுக்கி கொண்டே இருக்க கதவை அடைக்க முடியாமல் பாவமாக திரும்பி அவனை பார்க்கும் போது அவன் அவள் பின்னால் மூச்சு கூட வெளியே விடாமல் பூனை போல உடல் உரசும் அளவுக்கு நெருங்கி நின்று கொண்டு இருந்தான் மனு..
அவள் சூடி இருந்த மல்லிகைப்பூ அவனின் மூக்கின் உள்ளேயே நுழைந்து விடும் போல மெல்ல கைகளை தூக்கி அவளை நெருங்கி அவளை விடாமல் தாழ்ப்பாள் இட்டவன் அப்படியே அவளது தூக்கி இருந்த ஒரு கையை அவனது ஒரு விரலால் அளவிட்ட படியே அவனது கழுத்தில் வளைவில் விரலால் கோலமிட்டவன் மெல்ல அவளது வெற்று முதுகிலும் கோலம் இட்டு கொண்டே அவளை உணர்ச்சி பிராவாகத்துக்குள் அவளை தள்ளி கொண்டே அவனும் அவள் மீது இருந்து விரலை எடுக்க முடியாமல் பாடுபட மேலும் நெருங்கி அவளது செவியில் , "இன்னிக்கு நமக்கு என்ன டேன்னு தெரியும்ல"... என்று கிசுகிசுப்பாக கேட்க
வெண்ணிலா செத்து விட்டாள் என்றே கூற வேண்டும் அன்றாவது இவன் அவளிடம் வரைமுறை மீறினான் இன்று அவன் உரிமை உள்ளவன் வரைமுறை மீறினாலும் கேட்பதற்கு யாரும் இல்லை என்று நெனைத்தவள் கண்களை மூடி அவளது உணர்ச்சிக்களை அடக்க
மேலும் அவனது நெருக்கம் அவளை வாட்ட அவளோ கதவோடு ஒன்றவும் முடியாத படி அவள் கையில் இருந்த பால் சொம்பு இடிப்பட இவனோ அவளை சற்று முன் காய்ந்து திட்டினாலும் அவள் அருகாமையில் மேலும் நெருங்கி நிற்க அவளின் முதுகில் மேலும் அவனது மார்பை வைத்து அழுத்தம் கொடுத்தவனுக்கு மல்லிகை பூவின் மணம் அவளோடு வாசனையும் கலந்து அவனை சொர்க்கத்துக்கு அழைத்து செல்ல மெதுவாக அவளது கழுத்து வளைவில் தன் இதழ்களை பட்டும் படாமலும் உரசினான்..
அந்நேரம் அவளது உடல் நடுங்கியது தெளிவாக புரிந்தாலும் அவனுக்கு விலக தோன்றாமல் அங்கேயே நிற்க இப்போது விழுந்து விடுவேன் என்ற நிலையில் நடனம் ஆடி கொண்டு இருந்த பால் சொம்பு தவறி விழ அது அவனது கஷ்டப்பட்டு உடுத்தி இருந்த வேட்டி மற்றும் அவளது சேலையில் தெறித்து அவனது மோன நிலையை கலைத்தது...
அப்போது தான் அவனது தந்தை சொன்ன அறிவுரை நியாபகத்துக்கு வர மெல்ல அவளிடம் இருந்து விலகி தன் தலையை அழுந்த கோதி தன்னை நிலைப்படுத்தி கொண்டவனுக்கு , "இவளை தான் பிடிக்கலைன்னு சொல்லிட்டு ஏன் டா மனு அவன் பின்னாடியே சுத்திட்டு இருக்க"... என்ற கேள்வி அவனுள் எழ," மச்சி பிகருன்னு இருந்தா கண்ணு அங்கே இங்கே பார்க்க தான் செய்யும் அதிலும் இவ என்னமோ நம்மல மயக்கவே இந்த மாதிரி எல்லாம் ட்ரெஸ் பண்ணுவா போல சும்மா சொல்ல கூடாது நல்லா தான் இருக்கா "..என்று அவன் மனதுக்கு பதில் அளித்தவன் மெல்ல சாந்தம் ஆகி அவன் போய் படுக்கையில் படுக்க வெண்ணிலா என்ற நிலவு அந்த கதவிலேயே பல்லி போல ஒட்டி கொண்டு நிற்க அதை பார்த்து மெல்ல அரும்பிய சிரிப்பை உள் அடக்கியவன், " ஹே திரும்பு அப்படியே நின்னுட்டு இருக்காத..நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு "...என்று கூற
அப்போது மூச்சு சரியாக வர அவளும் அவன் கூறியதில் மெல்ல திரும்பி அவனை பார்க்க, " சி ரொம்ப பயந்துட்டு இருக்கிற மாதிரி ஆக்ட் எல்லாம் வேணாம்...சும்மா ஹெல்ப் பண்ணலாம்ன்னு வந்தா ரேப் பண்ற மாதிரி நடிச்சிட்டு நின்னுட்டு இருக்க".. என்று கூசாமல் பொய் சொல்ல அவளோ ,"டேய் நீ என்ன ஹெல்ப்பா டா பண்ணின பின்னாடி வந்து உரசிட்டு எப்படி பேசுறான் பாரு "..என்று மனதுக்குள் அவளை வறுத்தெடுக்க
அவனோ அவளது மனதை படித்தவன் போல , "அதுக்கு தானடி உன்னை மேக்கப் போட்டு இங்கே அனுப்பி வெச்சு இருக்காங்க நீயும் இங்கே வந்து நின்னு போஸ் கொடுத்துட்டு இருக்க"...
"நான் ஒன்னும் அதுக்காக வரல எனக்கு இதில் விருப்பமும் இல்ல அத்தையும், அம்மாவும் தான் "...என்று அவனுக்கு மெலிதான குரலில் பதில் கொடுத்தாள் வெண்ணிலா
அதை கேட்டவன், "அவங்க சொன்னா நீ வந்து நின்னுடுவியா இப்படி வந்து நின்னா இப்படி எல்லாம் தான் நடக்கும்" என்று கூறியவன்
பே என்று விழிக்கும் அவளை பார்த்து,
"உனக்கும் இந்த கல்யாணத்துக்குல விருப்பம் இல்லை தானே ...உனக்கு ஏதாவது விருப்பம் இருக்க "..என்று மீண்டும் அவள் முன்னே எழுந்து நின்று மார்பில் கையை கட்டி நெற்றியை சுருக்கி ஒற்றை புருவத்தை தூக்கியபடி கேட்க
அவளும் வேகமாக பிடிக்கவில்லை என்று தலையாட்ட
அவளின் உடல் மொழியை பார்த்து "ஓஹோ".. என்று கூறியவன் நேரிடையாக விஷயத்துக்கு வந்தான்..
" இதோ பார் எனக்கும் விருப்பம் இல்லை உனக்கும் விருப்பம் இல்லை நாம இணைஞ்சு ட்ராவல் பண்றது இப்போதைக்கு நடக்காத காரியம் சோ யாரு என்ன சொன்னாலும் என் பின்னாடி நீ நில்லு நான் பார்த்துக்கறேன் நீ கொஞ்சம் அசந்தா கூட உன் குடும்பம் என்கூட சேர்த்து வெச்சிடும் அதையும் நியாபகத்துக்கு வெச்சுக்கோ..திரும்ப இப்போ ட்ரையல் பார்த்த அது நடந்தாலும் நடக்கலாம் "..என்று கூற அவளோ வேகமாக சரி என்பது போல தலையாட்ட சில விஷயங்களை அவளிடம் கூறவும் அவளுக்கு அதை கேட்டவளுக்கு அப்போது தான் உயிரே வந்தது என்று கூறலாம்..
பிறகு அவன் மேலே படுத்து கொள்ள அவளோ கீழே ஒரு போர்வையை விரித்து சுருண்டவள் அடுத்த நாள் கல்லூரிக்கு செல்ல தயாராகவும் சண்டி தேவனுக்கும் பாட்டியும் சேர்ந்து, " இப்போவே வா போறீங்க"... என்று கேட்க அவனும் ஆமாம் என்றான்...
அவனுடன் அவனது தாயும் தந்தையும் டெல்லி செல்ல தயாராகி கொண்டு இருக்க மெல்ல பல்லவியிடம் வந்த சண்டி தேவன் , "கண்ணு சின்ன சிறுசுங்க அவங்களுக்கு ஒன்னும் தெரியாது பெரியவங்க யாராவது போய் கூட இருந்து அவங்கள பார்த்துக்கலாம்ல என்ன தான் அங்கே வீடு சாமான் எல்லாம் இருந்தாலும் எனக்குன்னு செய்ய வேண்டிய கடமை இருக்கே கண்ணு அதுனால நானும் அவளும் மாப்பிளை கூட போய் செய்ய வேண்டியதை செஞ்சுட்டு ஒரு வாரம் இருந்துட்டு வரோம் "..என்று கூற
பல்லவிக்கு ஏற்கனவே இந்த விஷயத்தை பேசி அவருக்கு அவனிடம் வயிறு வெடிக்கும் அளவுக்கு கிடைத்து இருப்பதால் கலங்கிய விழிகளோடு தனது தமையனை பார்த்து , "அண்ணே இப்போதைக்கு யாரும் போக வேணாம்னு மனு சொல்றான் அண்ணே அவனே பார்த்துக்கறேன்னு சொல்லிட்டான் அது மட்டும் இல்லாமல் அவன் இப்போ பிளாட்க்கு வெண்ணிலாவை கூட்டிட்டு போகலையாம்..ஹாஸ்டல்ல இருக்கட்டும்னு சொல்றான் "...என்று மெதுவாக கூற அதை கேட்ட அந்த வீட்டினர் செழியன் உள்பட எல்லோரும் அதிர்ந்தனர்..ஆனால் ரவீந்தர் மட்டும் அசராமல் மகனை நினைத்து பெருமையாக நினைத்து கொண்டு இருந்தார்..மகனின் ஒழுக்கம் தெரிந்தால் மனிதர் அவ்வளவு தான்...
"என்ன சொல்ற கண்ணு கல்யாணம் பண்ணிட்டு இரண்டு பேரும் தனியா இருக்க போறாங்களா??".. என்று கேட்க
"தனியா இல்ல அண்ணே அது தான் காலேஜ்ல ஒன்னா தானே இருக்க போறாங்க கொஞ்ச நாள் கழிச்சு கூட்டிட்டு போறேன்னு சொல்றான்"... என்று கண்டு கொள்ளாமல் தனது உடையை எடுத்து வைத்து கொண்டு இருந்த மனுவை பார்த்து கொண்டே கூற
"எவ்வளவு நாள் கழிச்சு என் தங்கச்சியை உங்க மகன் கூட்டிட்டு போவாரு "...என்று கோபத்துடன் கேட்டது செழியனே தான்
அதை கேட்டதும் மனுவோ வேகமாக, "எனக்கு விருப்பம் இருக்கும் போது அவளை கூட்டிட்டு போவேன்"...என்று செழியனுக்கு பதில் கொடுக்க
"உங்களுக்கு விருப்பமா என்ன சொல்றிங்க ??"..ன்று அவளது அம்மா கேள்வி கேட்க
பேசாமல் தலை கவிழ்ந்து யாருக்கு வைத்த விருந்தோ என நினைத்து கொண்டு இருந்தவளை ஒரு பார்வை பார்த்து விட்டு
"இதோ பாருங்க இன்னும் இரண்டு வாரத்தில் எக்ஸாம் வர போகுது அதுக்கு படிக்க வேணாம் அல்ரெடி மூணு வாரம் லீவ் ஆகிடுச்சு சோ அவ ஹாஸ்டல்ல இருக்கட்டும் "...என்று கூற மற்றவர்கள் எதுவும் பேசவில்லை என்றாலும் செழியனின் துளைத்தெடுக்கும் பார்வையை சர்வ சாதாரணமாக எதிர் கொண்டான் மனு பரதன்...
அவனிடம் பேசி பிரயோசனம் இல்லை என்பதை புரிந்து வெண்ணிலாவின் அம்மா வெண்ணிலாவின் அருகில் சென்று, " என்ன டி மாப்பிளை இப்படி சொல்றாங்க நீ எதுவும் பேச மாட்டேன்ற "...என்று கூற
"அது தான் அவர் சொல்றாரே மா"... என்று மட்டும் தயங்கி கொண்டே கூறியவள் வேறு எதுவும் கேட்டு விட போகிறார்கள் என நினைத்து வேகமாக அவன் அருகே சென்று நின்று கொண்டாள்..
அதன் பிறகு தன் மகளுக்கு ஆயிரம் அறிவுரை கூறி மகளை மனுவுடன் அனுப்பி வைக்க சண்டி தேவனோ மிகவும் சந்தோசமாக காணப்பட்டார் ஏனெனில் அந்த நிமிஷமும் அந்த வெள்ளந்தி மனிதருக்கு தனது மருமகன் மீது நம்பிக்கை இருந்தது..
இவ்வளவு தூரம் மனு அவளை ஹாஸ்டலில் இருக்க சொல்பவன் விரைவிலேயே அவனே அவளை தேடி வருவான் என்றும் அவளே அவனுடைய வீட்டுக்குள் வந்து தங்க போகிறாள் என்றும் இவர்களின் இந்த சித்து விளையாட்டை எல்லாம் அவர்களது குடும்பமே உடைத்தெறிய போகிறது என்பது அறியாமலே அவனுடன் அவனுடைய காரில் சீறி பறந்து கொண்டு இருந்தாள் வெண்ணிலா மனு பரதன்..
அவர்கள் உடைத்தெறியும் முன் கல்லூரி வாயிலில் அசோக்கை எதிர்கொள்ள நேரிடும் என்பதை அறியமால் அவர்களது பயணம் இனிதே தொடங்கியது...
மல்லிகை மணம் வீசும்…
