மன்மதன் 24
அத்தியாயம் : 24
மன்மதன் தேசத்து மல்லிகை
மனுவின் ஆடி கார் சென்னை நோக்கி நெடுங்சாலையில் சீறி கொண்டு பறந்து கொண்டு இருந்தது..காரில் ஏறியது முதல் அவன் புறம் திரும்பாமல் வேடிக்கை பார்த்து கொண்டு வர ஒர கண்ணால் அவளை பார்த்து கொண்டு இருந்தாலும் வண்டியை அதீத வேகத்தில் அவன் செலுத்த அவளுக்குள் இலேசான கிலியை கொடுத்தது..
"எதுக்கு இப்படி ஸ்பீடா போறாங்க"... என நெனைத்தவள் அவன் புறம் திரும்பி பார்க்க அவன் அவளை கண்டு கொள்ளாமல் அந்த நெடுஞ்சாலையில் வண்டியை செலுத்தி கொண்டு இருந்தான்...மனதிலோ , "மவளே காலேஜ்க்கு போய் சேறதுக்குள்ள உன்னை பரலோகம் எப்படி இருக்குன்னு காட்டாமல் விட மாட்டேன் டி "...என்று கருவிக் கொண்டே,
இன்னும் அதீத வேகத்தில் செல்ல சீட்டை முறுக்க பிடித்தபடி அமர்ந்தவளின் மொபைல் சிணுங்கி கொண்டே இருந்தது..வேகமாக தனது ஹாண்ட் பேக்கில் இருந்து போனை எடுக்க அதில் அசோக் என்ற பெயர் ஒளிர மனுவின் கழுகு பார்வையில் இந்த காட்சி அழகாக படம் ஆகியது..
கூடவே அவன் மனமோ அமைதியை இழந்து, " இந்த பரதேசி எதுக்கு இப்போ கூப்பிடறான்"... என அவன் நெனைத்தாலும் கண்டு கொள்ளாதவன் போல வண்டியை செலுத்த இவன் முன்னே எடுப்போமா வேணாமா என யோசித்து முடிக்கும் முன் போன் கட் ஆக கொஞ்சம் நிம்மதி அடைந்த அவள் மனதிற்குள் எழ அதற்குள் மீண்டும் விடாமல் அழைத்தான் அந்த விடா கண்டன் அசோக்..
இவளும் வேகமாக பதறி மனுவை பார்த்து கொண்டே போனை எடுத்தவளின் கை தவறி ஸ்பிக்கரில் டச் ஆகி இருக்க அவள் போனை எடுத்து மெதுவாக , "ஹலோ".. என்பதற்குள் , "வெண்ணிலா என்ன ஆச்சு இன்னிக்கு தானே வரேன்னு சொன்ன எப்போ வருவ??..கிளம்பிட்ட போல..நயட்குள்ள நீ வந்துடலாம் ..அண்ட் எனக்கு கொஞ்சம் அந்த பக்கம் ராத்திரி வேலை இருக்கு.. நான் வெய்ட் பன்றேன் ஹாஸ்டல்ல மீட் பண்ணுவோம்"... என்று விடாமல் அவன் எதிர்புறத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை கூட கவனிக்காமல் அசோக் கூற,
இங்கே வெண்ணிலா அவனுக்கு பதில் அளிக்காமல் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியில் மனுவின் முகத்தை ஏறிட்டு பார்க்க, மனுவின் கண்கள் ஒரு நொடி அவள் மீது சீற்றத்தை வெளிப்படுத்தி பின் சாலையில் பதிந்தாலும் அவன் உள்மனம் கொதிப்பது அவனுக்கு நன்றாக உணர்ந்தது ...
அதற்குள் வேகமாக ஸ்பீக்கரை அணைத்தவள் அவனிடம், " இல்ல நான் நாளைக்கு காலேஜுக்கு வந்திடுவேன் ..வந்ததும் சொல்றேன் "...என்று கூற எதிர் புறம் அவனோ, " நோ நோ எனக்கு கொஞ்சம் அந்த பக்கம் வேலை இருக்கு ..நீ ரீச் ஆகுற சமயத்தில் நான் அங்கே இருக்கேன்..உனக்காக நான் வெய்ட் கூட செய்ய மாட்டேனா நீ பொறுமையா வா"...என்று கூறியவனிடம் என்ன பதில் கூறுவது என நினைத்தவள் ஓர கண்ணால் மனுவை நோட்டம் விட்டு கொண்டே, " ஹ்ம்ம் சரி.. அசோக் நான் அப்புறம் கூப்பிடறேன்"... போனை வைக்க
ஸ்பீக்கரை அணைத்தாலும் நிசப்தமான அந்த காரில் அசோக்கின் குரல் தெளிவாக மனுவின் செவியை சென்றடைய அவன் கோபத்தை வண்டியில் நன்றாகவே காட்டினான்..
வெண்ணிலாவோ அவன் எதுவும் கூறாததில் சாந்தம் அடைய அவள் கண்கள் சாலையை வெறிக்க அதற்குள் மீண்டும் அவள் போனிற்கு மெசேஜ் டோன் விடாமல் வந்து கொண்டே இருந்தது வேகமாக போனை எடுத்தவள் இந்த முறை வனிதா தான் குறுங்ச்செய்தி அனுப்பி இருக்க இவளும் மலர்ந்த முகத்துடன் போனை நோண்டி கொண்டு இருந்தாள்..
ஆனால் மனுவின் மனமோ அவள் இறுதியாக அவனை அசோக் என்று அழைத்தத்திலே இருக்க நிலை கொள்ளாமல் , "என்னை பார்த்தா மட்டும் பேச வாய் இருக்கான்னு தேடனும் அந்த நாய் அஷோக்கா இருந்தா என்ன பேச்சு பேசுறா??..இதுல அந்த பரதேசி அங்கே வெயிட் பண்றானாம் இவ அதுக்கு சரின்னு சொல்ற அதுவும் என் முன்னாடியே எப்படி நீங்க மீட் பண்றீங்கன்னு பார்க்கிறேன் டி".. என்று உழன்று கொண்டு இருந்தவன் மெல்ல திரும்பி அவள் முகத்தை பார்க்க அவளது முகம் மலர்ந்து இருப்பதை பார்த்து கடுப்பானவன் என்ன நெனைத்தானோ சட்டென்று அவளது போனை வாங்கி அணைத்து அவனது பாக்கெட்டில் இட்டு கொண்டான்..
அவளோ அவனது செய்கையில் கோபம் கொண்டு, "என் போனை எதுக்கு பிடுங்குனீங்க தாங்க "...என்று கூற
சீற்றத்துடன் அவளை பார்த்தவன்," ஏன் டி என்ன பிரச்சனையில் போனோம் என்ன பிரச்சனையை சந்திச்சு முடிச்சு இப்போ சென்னை போயிட்டு இருக்கோம் அதை பத்தி எல்லாம் கவலை இல்லாமல் நீ பாட்டுக்கு கண்டவன் கூட பேசிட்டு இருக்க உனக்கு என்னை பார்த்தா கேன பைய மாதிரி இருக்கா ?? இதுல அவன் உனக்காக வெய்ட் பண்றானா"...என்று கேட்க
அவளோ அவனை பார்த்து முறைக்கும் முன் மீண்டும் போன் அடித்தது இந்த முறை மனுவின் போன்..வேகமாக போனை எடுக்க அதில் , "மாயா டியர்".. என்று ஒளிர அது மிக தெளிவாக இந்த முறை வெண்ணிலாவுக்கு தெரிய அவள் அவனை பார்த்து, " என்னை மட்டும் சொன்னியே இப்போ உன் லட்சணத்தை பார் "..என்பது போல அவள் பார்க்க அவள் பார்வையை கவனிக்காமல் போனை எடுத்தவனிடம் ஆயிரம் கேள்விகள் கேட்டாள் மாயா..
அதில் ஒவ்வொன்றிற்கும் சமாதானமாக பதில் அளித்து வந்தான் வெண்ணிலாவின் கணவன்..வெண்ணிலாவோ காதை தெளிவாக தீட்டி வைக்கவும் மாயாவின் கேள்விகள் மெல்ல அவளது காதுக்கும் சென்றது..
"மாயா நான் நாளைக்கு காலேஜிக்கு வந்திடுவேன் அங்கே மீட் பண்ணுவோம் அண்ட் நாங்க வந்துட்டு இருக்கோம் "...என்று அவனே அவனது குழிக்கான பாதையை மனுவே தோண்ட
மறுமுனையோ, " நாங்களா யார் கூட நீ வந்துட்டு இருக்க "...என்று தெளிவாக மாயா கேட்க
தானே உலறி கொட்டி கொண்டு இருக்கிறோம் என புத்தியில் உரைக்க வேகமாக, " ஹே மாயா நான் மட்டும் தான் டி நாங்கன்னு தெரியாமல் சொல்லிட்டேன் நீ போனை வை முதல நான் ட்ராபிக் இருக்கேன் அப்போ தான் அது இது ன்னு கேள்வி கேப்பியா "...என்று காய ஆளே இல்லாத சாலையை வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள் வெண்ணிலா மனதிலோ வாயை திறந்தாலே பொய் தான் சொல்வான் போல என நெனைத்தவள் அவனை பார்த்து முறைக்க,
"என்ன டி முறைக்கிற உன்கூட தான் வந்துட்டு இருக்கேன்னு சொல்ல சொல்றியா..இதோ பார் பூம்பாறையிலே உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆனதை மறந்துடு சென்னை வரைக்கும் இதை இழுத்துட்டு வராத.. "...என்று கூற
"நான் ஒன்னும் அதை இழுத்துட்டு வரல நீங்க இழுக்காம இருந்தா சரி"... என்று அவள் தெளிவாக தைரியமாக பதில் கூற,
அப்போது தான் மனு ஒன்றை கவனித்தான் அவளது வீட்டிலும் சரி இதற்கு முன் அவளும் அவனும் ஒன்றாக இருந்த தருணங்களிலும் சரி வாயே திறக்காமல் பூனை போல இருந்தவள் இதோ இந்த பயணத்தில் அவனது பேச்சுக்கு எதிர் பேச்சு பேசி கொண்டு இருக்க, " என்ன டி என்ன சென்னை தானே போறோம்ன்னு அப்படிங்கற திமிரா அப்படியே வண்டியை யூ டர்ன் போட்டு உன் வீட்டில கொண்டு போய் தள்ளிடுவேன்"... என்று மனு அவளை மிரட்டி கூற
வெண்ணிலாவோ இவன் செய்தாலும் செய்வான் என நினைத்து மீண்டும் தன் ஓட்டுக்குள் நத்தையாக சுருங்கி கொண்டாள்..
