Share:
Notifications
Clear all

மன்மதன் 25

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 25

அவனோ அவள் வாயை கப்பென்று மூடி கொண்டு இருப்பதை பார்த்து மனதுக்குள் சிரித்தாலும் வெளியே அதற்குள் அவளிடம், " இதோ பார் தெளிவா நான் சொல்றதை கேட்டுக்கோ யார் கிட்டேயும் உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆனதை நீயும் சொல்லாத நானும் சொல்ல மாட்டேன்..பூம்பாறையிலே நீ மறந்துடு நமக்கு கல்யாணம் ஆன விஷயத்தை சென்னையில் நீ யாரோ நான் யாரோ...நீ உன்னோட இஷ்டத்துக்கு எப்படி இதுக்கு முன்னாடி இருந்தியோ அதே போல இரு..

நான் எப்படி இருந்தாலும் இன்னும் ஏழு மாசத்துல என்னோட படிப்பு முடிஞ்சுடும் தென் நான் US ல இப்போவே என்னோட ஜாப்க்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன் சோ நான் US போயிடுவேன் இனி இங்கே உன் படிப்பை கன்டின்யூ பண்ணிக்கோ தென் அவங்க அவங்களுக்கு பிடிச்ச வேய் ல போலாம் ..பிடிச்ச லைஃப் ஸ்டார்ட் பண்ணிக்கலாம்..

அதுக்கு முன்னாடி இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும் உன் வீட்டில் சரி என் வீட்டிலும் சரி இதை பத்தி மூச் விட கூடாது "..என்று அவன் கூற அவளும் வேகமாக தலையாட்டினாள்...

ஏனெனில் என்னால் அவனுடைய காதல் பாழாய் போக அந்த சிறு பெண்ணுக்கு விருப்பம் இல்லை இவனுக்காக இல்லை தன்னை எப்போது பார்த்தாலும் மென்னகை புரியும் மாயாவிற்காக அவள் அவன் கூறுவதை ஒத்து கொண்டாள்...

ஆனால் அவன் கூறியது போல படிப்பை வேண்டுமானால் அவள் முடிக்கலாம் இன்னொரு வாழ்க்கை என்று யோசிக்கும் போதே அவளுக்கு ஏதோ ஒவ்வாமையை தர அதே நேரம் மனுவுக்கும் அவள் வேகமாக தலையாட்டியது விருப்பமின்மையை கொடுக்க அந்த சமயம் பார்த்து மனுவின் காரை இடிப்பது போல வந்த லாரியில் இருந்து தப்பித்து கொள்வதற்காக அவன் காரை சட்டென்று எதிர்பாரா விதமாக கொஞ்சம் ஒடித்து ஓட்ட கார் வேகமாக குலுங்க ஏதோ நினைவில் இருந்தவளும் சீட் பெல்ட் அணியாமல் இருந்த காரணத்தினால் நிலை தடுமாறி அவன் மீதே சாய்ந்தவள் அவனது சட்டையை முறுக்கி பிடித்து அவன் கன்னத்தில் அவளது முதல் அச்சாரத்தை பதித்தாள் ..

இருவருக்குமே அதிர்ச்சி கார் நிலை தடுமாறியதால் அல்ல ..வெண்ணிலாவின் செய்கையால்..

ஒரு வினாடிக்கு முன் என்ன நடந்தது என்று மனுவின் மனம் வேகமாக ரீவைண்ட் செய்து பார்க்க அவள் எனக்கு முத்தம் கொடுத்தாளா?? என்ன நடந்தது இதோ சில்லென்று என் கன்னம் சிலிர்த்ததே இன்னும் சிலிர்த்து கொண்டு இருக்கிறதே.. அது  அவளின் ரோஜா பூவின் மென்மையை விட மென்மையான அவளது உதட்டில் இருந்து வந்தது தானா என அவளை அவன்  பார்க்க அவளது கை இவன் காரை ஒடித்து திருப்பியதில் அவன் மீதே விழுந்தவள் தான் ஒரு பிடிக்காக அவனது சட்டையை இன்னும் விடாமல் கெட்டியாக பிடித்து அவன் மீதே விழுந்து இருந்தாள்..

நடந்தது உண்மை தானா என அவளை பார்க்க உண்மை தான் என்பது போல அரக்க பறக்க அவனிடமிருந்து விடுபட்டவள் வேகமாக தன் முகத்தை திருப்பி கொண்டாள்..அவள் முகம் சிவந்து கொண்டு இருப்பது மனுவுக்கு புரிந்தது...

அவள் மனதிலோ இதுவரை அவன் மட்டுமே அவளை சீண்டி இருக்க முதன் முறையாக தன் பக்கம் இருந்து இதுபோன்ற செயல் அதை அவள் எதிர்பார்க்கவில்லை என்றே அவள் முகம் கூற மீண்டும் அவனது வாசனையை நுகர்ந்த வெண்ணிலா வேகமாக வெட்கம் என்ற பூவை சூடி அதை அவனுக்கு அவள் முகத்தை காட்டாமல் வேகமாக திருப்ப அவனுக்கும் இது புது உணர்வை தான் கொடுத்து இருந்தது...

இது நாள் வரை அவனே சீண்டி இருக்க இப்போது முதல் முறை அவளிடம் இருந்து ஒரு ஒற்றல்.. இதுவரை அவனை பெண்கள் முத்தமிட்டதே இல்லை என்று எல்லாம் கூற முடியாது ஆனால் இவளின் முத்தம் அவனுக்கு புதிது ஒரு மெல்லிய உணர்வை அந்த முத்தம் தர மீண்டும் அது போன்ற ஒரு முத்தத்திற்கு அவன் மனம் ஏங்கியது என்னவோ உண்மை தன..

மீண்டும் சற்று முன் நடந்ததையே  எண்ணி கொண்டே சாலையில் கவனம் பதிக்க இடையில் ஒரு பக்கம் உரையாடாமல் இரவு உணவை முடித்தவர்கள் மீண்டும் பயணத்தை தொடங்க சென்னையை அடைந்தனர்..அது வரை அந்த காருக்குள் நல்ல மனநிலையே இருந்தது ..அதை கெடுக்கும் விதமாக ஒரு நிகழ்வு நடந்தது...

இரவு பத்து மணி ஆகி இருக்க காலேஜ் ஹாஸ்டலை அடைய  ஒரு முன் ஒரு இருபது மீட்டர் தொலைவிலேயே வெண்ணிலாவுக்கு புரிந்ததோ இல்லையோ மனுவுக்கு தெளிவாக புரிந்து போனது அசோக்கின் பைக் அங்கே நிற்பது அதை கண்டு முகம் கடுகடுத்தவன் அப்படியே காரை சடர்ன் பிரேக் இட்டு நிறுத்தியவனுக்கு மீண்டும் அவர்கள் உரையாடியது மனதில் வந்து போக

வேகமாக அவளை பார்த்து கோபத்துடன், "ஏன் டி எந்த நேரம்னு இல்லையா அந்த நாயை வர சொல்றதுக்கு "...என்று கூற

அவளோ அப்போது தான் பார்த்தாள் அஷோன் அங்கே நின்று கொண்டு இருப்பதை

"நான் எல்லாம் வர சொல்லல அவரே தான் வரேன்னு சொன்னாரு"... என்று அவனை பார்த்து அசோக் கூறியதை சாதாரணமாக கூற

மனுவோ அதை எக்குத்தப்பாக எடுத்து கொண்டு அவள் கையை பிடித்து சட்டென்று இழுத்து , "என்ன அவனே வந்தானா??? நீ வர சொல்லி தானே டி ராத்திரின்னு கூட பார்க்காமல் வந்து நிற்கிறான்..யார் கிட்ட பொய் சொல்ற நான் தான் எல்லாத்தையும் கேட்டேனே "...

அவளோ அவளது கையை அவன் முறுக்கி பிடித்தில் முகம் சுணுங்கி, " என்னை விடுங்க ..கை வலிக்குது ..அவர் என்னை பார்க்க வந்தா உங்களுக்கு என்ன..நீங்க தான் உங்களுக்கும் எனக்கும் சென்னை வந்தா சம்பந்தம் இல்லன்னு சொன்னீங்களே "...என்று கூற

மனுவோ சட்டென்று அவள் கையை விட்டவன் ஆமாம் அவள் கூற வருவதை போல அவன் அவளை பார்க்க வந்தால் தனக்கு என்ன இருந்தாலும் அவன் மனம் புகைவது அவனுக்கு வெட்ட வெளிச்சமாக தெரிய

"எனக்கு ஒன்னும் இல்லை இதோ இப்போவே அவன் முன்னாடி போய் காரை நிறுத்தறேன் அண்ட் எல்லோர் கிட்டேயும் நீ தான் என் பொண்டாட்டின்னு சொல்லிடறேன்"... என்று கூறியவன் சட்டென்று அவளது இடையை தன் புறம் நோக்கி இழுத்தவன் மீதே அவள் விழ தன்னை எரிச்சல் கலந்த மருட்சியுடன் பார்த்து கொண்டே விலக முற்படுவளை விலக்க விடாமல் தன்னோடு சேர்த்தி இறுக்கியவன், " நீ சொல்றது எல்லாம் பார்த்தா என்கூட வாழனும்னு ஆசை உனக்கு இருக்கு போல தோணுது"... என்று அவள் பிடியில் அழுத்தம் கொடுத்து கேட்க

அவளோ திமிறிக்கொண்டு ,"விடுங்க எனக்கு அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல..எந்த ஜென்மத்திலும் எனக்கு அந்த ஆசை இல்ல "...என்று அவனிடம் இருந்து விலகவே பார்க்க

ஒரு நொடி அவளையும் அசோக்கையும் மாறி மாறி பார்த்தவன், " அவன் எப்படி உன்னை இன்னிக்கு பார்க்கிறான் பேசுறான்ன்னு பார்க்கிறேன் டி "...என்று கூறியவன் வேண்டுமென்றே வண்டியை ஆன் செய்து அசோக் அருகே வண்டியை கொண்டு சென்று அவன் காணும் தொலைவில் வண்டியை நிறுத்தி அவனை பார்க்க அஷோக்கோ இவர்களை கவனிக்காமல் போனை நோண்டி கொண்டு இருந்தான்..

"என்ன செய்யறீங்க நீங்க இப்போ நான் அவர் கூட இருக்கறதை பார்த்துட்டா"..என மாயாவை எண்ணி கேள்வி கேட்க

"பார்க்கட்டுமே"...கூலாக கூற

"அப்போ அவர் எல்லோர் கிட்டேயும் விஷயத்தை சொல்லிட்டா ??"...என்று யோசிக்கும் போதே மாயாவின் முகம்  வெண்ணிலாவை வேதனை கொள்ள செய்ய இவனுக்கு தான் அறிவில்லை பாவம் அவங்க என்று அவர்களுக்காக அசோக்கிடம் இருந்து தன் முகத்தை மறைத்து கொள்ள  அவளது துப்பட்டாவை தலையில் போட்டு முகத்தை வேகமாக மறைத்து கொண்டாள்..

அவளது செயல் மனுவை மேலும் உசுப்பேற்றவே செய்தது , "ஏன் டி தாலி கட்டின புருஷன் இங்கே உன் பக்கத்தில் இருந்தா அந்த நாய்க்கு முகம் தெரிய கூடாதுன்னு உன் முகத்தையா மறைக்கிற "...என்று நெனைத்தவன் அதை அவளிடமே கூறி அவளை சட்டென்று தன் அருகே இழுக்க அவன் பார்வையின் தீவிரம் சொன்னது அவன் என்ன செய்ய போகிறான் என்று அவளுக்கு தான் இந்த பார்வை பழகி போன ஒன்று ஆகி போனதே ..ஆனால் இதில் வெண்ணிலா தெளிவாக மனு என்ன கூறினால் என்பதை தலையில் ஏற்றி கொள்ளவில்லை அவளுக்கு அவன் அவளை பிடித்து இழுப்பதே ஓடி கொண்டு இருக்க அவன் கூறியதை அவள் சரியாக கேட்கவில்லை..

ஆனால் மாயாவை விரும்பி அவளிடம் இவன் இடையிடையே அத்துமீறி நடப்பதை தாங்கி கொள்ள முடியாதவள் , "இதோ பாருங்க இப்படி என்னை தொட்டு பேசிற வேலை எல்லாம் வேணாம் என்னை விடுங்க"....என அவள் திமிற

"பேசினா என்ன டி செய்வ"...

"இப்போவே காரை விட்டு இறங்கிடுவேன்"...

"அப்போ இறங்குற முன்னாடி இதையும் வாங்கிட்டு போ "...என்று கூறியவன் சட்டென்று அவளை இழுத்து முரட்டுத்தனமாக இதழ் முத்தம் கொடுத்தான்..இதழோடு இதழ் மோதி அங்கே வன் யுத்தத்தை செலுத்தி கொண்டு இருந்தான் மனு...உரிமையான முத்தம் அவள் என் உரிமை என அசோக் மற்றும் அவளுக்கும் புரிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருப்பவன் தலையில் ஏனோ அது உரைக்காமல் போனது வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்...

ஆழ்ந்த முத்தம் அங்கே நடந்து கொண்டு இருக்க மனுவுக்கு அவளை விட மனது இல்லை...அவளை விடாமல் அவளிடம் தன்னுடைய உரிமையை நிலைநாட்டி கொண்டு இருந்தான்...

ஏற்கனவே ஒரு கார் வந்து தன் பின்னால் நிற்பதை உணர்ந்த அசோக் அவன் பாட்டிற்கு போனை நோண்டி கொண்டு இருக்க இடையிடையே வெண்ணிலாவின் போனுக்கு மெசேஜ்ஜூம் அனுப்பி கொண்டு இருந்தான்..

அவளிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே அவளை அழைத்து கொண்டே மெல்ல திரும்பி பார்க்க அசோக் அதிர்ந்தான் ஏனெனில் அந்த கார் மனுவுடையது..

இவன் எங்கே இந்த பக்கம் என காரை உற்று நோக்க அவன் ஒரு பெண்ணுடன் இருப்பது புரிய யார் அந்த பெண் என அவன் கூர்ந்து பார்க்க அதற்குள் இங்கே முத்தத்தின் தீவிரத்தால் அவளுக்கு சுவாசம் தடைப்பட மெல்ல அவளை விலகியவன் மீண்டும் அவள் முகத்தை அஷோக்கு தெரியாமல் இருக்க வேகமாக தன்னுடைய மார்பில் இழுத்து அணைத்து கொண்டவன் அவளிடம் இருந்த மொத்த சக்தி எல்லாம் அவன் அவளது வாய் வழியே உறிஞ்சி எடுத்து கொள்ளவும் அவளோ மூச்சுக்காக பெரிய பெரிய மூச்சை இழுத்து அவன் மார்பிலே சோர்ந்து போய் கிடந்தாள்..

மனுவும் தன்னை அசோக் பார்த்து விட்டான் என்ற வெற்றி களிப்பில் அசோக்கை பார்த்து கண்ணடித்து தன் மார்பில் விழுந்து கிடந்தவள் நெற்றியை இலேசாக தூக்கி முத்தம் கொடுத்தான் அசோக் பார்ப்பதற்காகவே..

அஷோக்கோ யார் அந்த பெண் இவனுடன் இருக்கிறாள் என கூர்ந்து கவனிக்க அவனோ மூச்சை சீர்படுத்தி கொண்டு இருப்பவள் செவியை மறைத்து இருந்த முடியை மென்மையாக ஒதுக்கியவன் அசோக்கை பார்த்து கொண்டே வெண்ணிலாவின் செவிக்குள் , "நான் கட்டின தாலியை கழட்டி கொடுத்துட்டு காரில் இருந்து இறங்கு "...என்று கூற அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தாள் வெண்ணிலா...

மல்லிகை மணம் வீசும்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top