மன்மதன் 26
அத்தியாயம் : 26
மன்மதன் தேசத்து மல்லிகை
அவன் கூறியது சரி தானா என அவள் ஏறிட்டு பார்க்காமல் இருக்க அவளது மென் கழுத்தை அவளுக்கு நோவாமல் பிடித்து இருந்தவன் அசோக்கை பார்க்க அசோக் யாரவள் என்ற சிந்தையிலே இருக்க மனுவும் நிலாவை விட்டான் இல்லை அதே போல வெண்ணிலாவோ என்ன தான் இங்கே படித்து இருந்தாலும் அவளுக்கு தாலி சென்டிமெண்ட்ஸ் அதிகம் உள்ளவள் அவள் வளர்ந்த விதம் ஒருவனுக்கு ஒருத்தி தான் என்ற போதனையில் வளர்ந்த பெண்..
எவன் தாலி கட்டுகிறானோ அவனே வாழ் நாள் முழுமைக்குமான உறவு என தாய் மற்றும் பாட்டி அனைவரும் போதித்து இருக்க அதை பின்பற்றி வந்தவளுக்கு இவன் கூறிய அனைத்திற்கும் ஒப்பு கொண்டவளுக்கு ஏனோ இந்த விஷயம் ஒப்பு கொள்ள இயலவில்லை...
அதிலும் இவன் கூறியது தாள இயலாமல் அவனை நிமிர்ந்து பார்த்து கண்ணீர் வடிக்க கூட இயலாமல் அவன் அவனை மென்மையாக பிடித்து இருக்க அந்த மென்மையில் கரைந்தவள் அவன் மார்பிலே சாய்ந்து அழ அவளின் கண்களின் ஈரம் அவனது சட்டையின் வழியே அவனின் இதயத்தை உலுக்கியது...இதயத்தை ஊடுருவி அவள் கேள்வி கேட்பது போல அவனுக்கு தோன்றியது..அவனோ அவளை தேற்றுவது போல தேற்றி கொண்டு இருந்தான்...
மனு அந்த பெண்ணை கட்டி பிடித்து கொண்டு இருப்பதை பார்த்து யார் அந்த பெண் என்று அறியாமல் உற்று நோக்கியவனுக்கு அந்த பெண் யார் என்று மட்டும் புலப்படவில்லை கூடவே நமக்கு என்ன வந்தது என நினைத்து வெண்ணிலாவை போனில் தொடர்பு கொள்ள முயற்சிக்க அதுவும் தொடர்பு கிடைக்காமல் போனது... மேலும் அவனது வீட்டில் இருந்து அழைப்பு வர அசோக் தன்னை நோக்கும் மனுவை ஒரு மாதிரியாக பார்த்து கொண்டு இருந்தான்..
மேலும் அந்த பெண்ணும் அவனை விடுவதாக தெரியவில்லை என நெனைத்த அசோக் பார்க்க ,
மனுவோ விடா கண்டனாக அசோக்கை துளைத்து எடுக்கும் பார்வையை வீசி கொண்டே இருக்க அசோக் அங்கிருந்து சென்று விட்டான்..
அவன் சென்று விட்டான் என்பதை உறுதி செய்து விட்டு தேம்பி கொண்டு இருந்த அவளின் பூ முகத்தை தன் கைகளில் ஏந்தி அவளை பார்க்க கண்கள் சிவந்து மூக்கு விடைத்து இப்போ உடைந்து விடுவோம் என அவள் இருக்க தெரு விளக்கு வெளிச்சத்தில் பெண்ணவளின் சிவந்த முகம் அழுததில் மேலும் சிவந்து இருக்க அவனது பார்வையை எதிர் கொள்ளாமல் இருக்க ஆனால் அவனோ இப்போதும் அவளை பார்த்து, " தாலியை கழட்டி கொடுத்துட்டு காரில் இருந்து இறங்கு"... என்று கூறவும்
மற்றவள் அவனிடம் இருந்து வேகமாக கோபத்துடன் திமிறி அவனிடமிருந்து விடுபட்டவள், "என்னால கழட்ட முடியாது" ... என்று கூற
அவளது கலங்கிய விழிகளையே கூர்மையாக பார்த்தவன் , "அடியே என் கிராமத்து குத்து விளக்கே உனக்கு என் கூட வாழவும் விருப்பம் இல்லை தாலி மட்டும் வேணுமா???...
இப்படியே மஞ்சள் கயிறை கட்டிட்டு காலேஜ் போனா முதல் கேள்வி எப்போ கல்யாணம் பண்ணினன்னு கேப்பாங்க சோ அதை கழட்டி தா..இங்கே எல்லாம் இது சகஜம் தான் எல்லோரும் ஆணியில் ல தாலியை மாட்டி வெச்சு இருக்காங்க..நீ இதுக்கு போய் இவ்ளோ சீன் க்ரியேட் பண்ணி அழனும்ன்னு இல்ல "....என்று பொறுமையாக கூலாக கூற எதனால் தாலியை கேட்டேன்.. என்று அவளிடம் விளக்க
அவளுக்கு அப்போது தான் அவன் கேட்டதின் அர்த்தம் தெளிவாக புரிந்தாலும் அவன் கேட்டதில் கோபம் வர
"இந்த தாலியை யாருக்கும் தெரியாமல் பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு அந்த கவலை உங்களுக்கு வேணாம் ..இந்த தாலினால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது அதுனால என்கிட்டேயே இருக்கட்டும் "....என்று கூறியவள் மேலும் எங்கே இருந்தால் அவன் தாலியை கேட்டு விடுவானோ என்ற பயத்தில் வேகமாக அவன் முன்னே தாலியை அவளின் உடையில் மறைத்தவள் கழுத்தை சுற்றி அவனை பார்த்து முறைத்து கொண்டே பின்னால் திரும்பி தனது பேக்கை எடுத்தவள் விருட்டென்று காரை விட்டு இறங்கி விட்டாள்..
அவளின் ஒவ்வொரு செயலையும் கண்டவன் இதுக்கு மேல உன் இஷ்டம் என்பது போல அவனும் வண்டியை அவனது பிளாட்டிற்கு கிளப்பி விட்டான்..
விடியல் யாருக்கும் காத்திருக்காமல் அழகாக விடிந்தது வெண்ணிலாவின் அறையில் வனிதா மட்டும் இருப்பதால் வனிதா அவளது ஊர்க்காரியும் அதே நேரம் அவளது அண்ணன் பசுபதி செழியனின் நண்பன் வேறு அதனால் அவளுக்கு வெண்ணிலா கூறாமலே விஷயம் தெரிந்து இருக்க அறைக்குள் வந்த வெண்ணிலாவை கண்டது முதல் கேள்வி மேல் கேள்வி கேட்டவளை நேற்று இரவே வெண்ணிலா கூறி விட்டாள் , "இதை பற்றி வெளியே யாருக்கும் தெரிய கூடாது"... என்று, "வனிதா எதற்கு"... என்று தோண்டி துருவ அவள் பதில் ஏதும் கூறாமல் படுத்து கொள்ள இதோ இன்று காலை கல்லூரியில் மனு மாயாவை பைக்கில் ஏற்றி கொண்டு இவர்களை கடந்து செல்லும் காட்சியை வெண்ணிலா கண்டு கொள்ளாமல் இருந்தாலும் வனிதாவுக்கு அப்படி இருக்க முடியவில்லை..
"ஹே என்ன டி உன் புருஷன் உன்னை விட்டுட்டு இப்போவும் அந்த அக்கா கூடவே சுத்துறாங்க ?? "
..என்று கேள்வி கேட்க
"அதுக்கு என்ன இப்போ உன் வேலைய பார்த்துட்டு வா "..என்று முனகி கொண்டே குனிந்த தலை நிமிராமல் வெண்ணிலா வந்து கொண்டு இருக்க, வனிதாவோ , "நீ என்ன லூசா டி".. எல்லாம் பார்த்திட்டு சும்மா இருக்க என்று கோபம் கொள்ள
"உனக்கு என்ன பிரச்சனை நானே அமைதியா இருக்கேன் உனக்கு என்ன பிரச்சனை உன் வேலையை பார்"...என்று கூறியவள் மேலும் , "இனி அவரை பத்தி என்கிட்ட பேசுற வேலை வெச்சுக்காதே"... என்று கூறவும் மறக்கவில்லை...
அதே நேரம் வெண்ணிலாவை கண்ட குமார், "என்ன மச்சா நீயும் லீவு அந்த பச்ச கிளியும் லீவுன்னு கேள்வி பட்டேன்"... என்று பைக் பார்க்கிங்கில் குமார் கேள்வி கேட்க,
ஒரு நொடி மனு தடுமாறினாலும் அதை வெளியே காட்டாதவன், " என்ன லந்தா யாரை யார் கூட கம்பேர் பண்ற?? அந்த பொண்ணு வராட்டி நானா பொறுப்பு ..நம்ம ரேஞ்சுக்கு அவ எல்லாம் என் கிட்டவே வர முடியாது" .. என்று காலரை தூக்கி விட்டபடி மனு கூற
மேலும் மனுவே, "ஆமாம் உனக்கு யார் சொன்னா அதும் ப்ரெஸ்ட் ஈயர் பொண்ணு அவ காலேஜ்க்கு வரலன்னு உனக்கு எப்படி தெரியும் என்ன சைட் அடிக்கிறியா".. என்று சந்தேகமாக ஏனெனில் வெளியே பந்தா காட்டினாலும் உள்ளுக்குள் அவனுக்கு எரிச்சலை கொடுக்க வெண்ணிலாவையே பார்த்து கொண்டு இருக்கும் குமாரை சொடக்கிட்டு அழைத்த மனு , "என்ன சைட்டா "...என்று ஒரு மாதிரி குரலில் கேட்க,
" ஆமாம் அந்த என்னை பார்த்துட்டாலும் உன்னையே கண்டுக்காமல் தான் போகுது.. அந்த வாயாடி வனிதா தான் தினமும் தனியா போயிட்டு இருந்துச்சு அதை வெச்சு சொன்னேன் "...என்று கூறவும் தான் மனு உள்ளே இழுத்து பிடித்த மூச்சு வெளியே வந்தது என்று கூறலாம்..
தன்னை கண்டும் காணாமல் செல்லும் அவளை கண்டு அவனின் உள்மனம் புகைந்தாலும் அதை வெளியே காட்டி கொள்ளாமல் இருந்தவனுக்கு அவளை நேராக அசோக் வந்து கொண்டு இருப்பதை கண்டு தான் கடுப்பு எழ அவன் கண்கள் எப்போதும் போல அவர்கள் இருவரை மேய்ந்து..அதிலும் வெண்ணிலா கழுத்தில் தாலி இருக்கிறதா என்ற ஆராய்ச்சியில் அவளது கழுத்தையும் , உரிமையாக கழுத்துக்கு கீழேயும் (உரிமை இல்லையென்றாலும் அவனுக்கு கழுத்து கீழ் பார்ப்பதில் எந்த தடையும் அவனுக்கு இல்லை)பார்க்க அதிலும் விட்டால் அவளது உடைக்குள் சென்று பார்த்து விடுவான் போல அவனது கண்கள் எனும் லென்ஸ் எவ்வளவு நுண்ணியமாக படம் பிடித்தாலும் அவள் தாலி அணிந்து இருக்கிறாளா என்பதை மனுவால் கண்டு பிடிக்க முடியவில்லை..ஆனால் தாலி இருக்கிறதா என தெரிய வேண்டிய ஆவல் அவனுள் எழுந்தது நிஜம்...
அதே நேரம் தன்னை அவன் துளைத்து எடுக்கிறான் என்பதை வெண்ணிலாவுக்கு புரிந்தாலும் அவனது பார்வையை கண்டு கொள்ளாமல் வந்தவளை அசோக் பிடித்து கொண்டு, "என்ன வெண்ணிலா உன்னை எத்தனை தடவை அழைக்கிறது ".. என்று கூறவும் ,
தான் நேற்று மனு போனை வாங்கி வைத்திருப்பது நியாபகம் வர அதை அவனிடம் இருந்து வாங்க வேண்டும் என்று மனதில் குறித்து கொண்டவள் அசோக்கிடம், "போன்ல சார்ஜ் இல்ல ஹாஸ்டல்ல இருக்கு"... என்று கூறி சமாளிக்க என்ன தான் அவள் சமாளித்தாலும் அவளுக்கு அவளது தாலியை யாரேனும் பார்த்து விடுவார்களோ என்ற பயம் இருந்தது..அதனாலே எல்லோரிடமும் அவள் வேகமாக நழுவி கொண்டு சென்று கொண்டு இருந்தாள்..அவளது உடையோடு கழுத்தை சுற்றிலும் துணியோடு சேர்த்து பின் குத்தி வைத்து இருந்தாள் வெண்ணிலா...
