Share:
Notifications
Clear all

மன்மதன் 27

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 27

அன்று மாலை கல்லூரி முடிவடைந்ததும் அவளது போனை வாங்க அவனுக்காக பைக் பார்க்கிங்கில் காத்து கொண்டு இருந்தாள்..

அவனும் அவளின் பொறுமையை சோதிக்காமல் வந்தாலும் அவளை கண்டு கொள்ளாமல் செல்ல இப்போ எப்படி போனை வாங்கிறது பார்த்துட்டும் பார்க்காமல் போறான் பாரு எருமை எங்கே இவன் மட்டும் தனியா வரான் ..இவன் கூட ஒட்டிட்டே வர மாயா அக்காவை காணோம் என்று அவள் திட்ட அந்த திட்டு அவனது மனதுக்கு தெளிவாகவே புரிந்தது..

மெல்ல திரும்பி அவளை பார்த்தவன் என்ன என்பது பார்க்க யாரும் காணா வண்ணம் போன் என்பது போல சைகை காட்ட அவனுக்குள் , "இப்போ எதுக்கு அவளுக்கு போன் அந்த நாய் கூட பேசவா "...என நினைத்து இன்று காலை முதலே அவனுடன் தானே சுற்றி கொண்டு இருக்கிறாள் என்பதை நினைத்து அருகே இருந்த பேஸ்கெட் பால் ஸ்டேடியம் பக்கமாக அவளை வர சொல்ல அவளோ என்ன ஸ்டேடியமா என்று யோசிப்பதற்குள் அவளுக்கு அந்த கனவு வந்து தொல்லை செய்ய அதுனால் தானே இத்தனை தொல்லை என நெனைத்தவள் மறுக்க ,

அவன் எங்கே அவளை கண்டு கொண்டான் அவள் வந்தால் தான் போனை தருவேன் என்பது போல செல்ல அவளும் சுற்றும் முற்றும்  பார்த்து யாருமில்லை என்பதை உறுதி செய்து மெல்ல ஸ்டேடியத்துக்குள் சென்றாள்...

யாரும் காணா வண்ணம் ஸ்டேடியத்தின் வாசலில் நின்று கொண்டே கையை மட்டும் உள்ளே நீட்டி , "தாங்க எனக்கு போகனும்"... என்று கூற அவனோ, " உள்ளே வா தரேன் "..என்க

அவளோ மறுக்க,  விடுவானா அவளது கணவன்??.. அவளது கையை பிடித்து உள்ளே இழுக்க இழுத்தவன் மார்பில் நொடி பொழுதில் வீழ்ந்தவள் விசையில் அவளது தாலி அவன் மார்பில் தாலி மோத அவன் மனமோ, " ஓ உள்ளே தான் வெச்சு இருக்கியா" .. என்று உள்ளுக்குள் சில்லென்ற உணர்வு வந்தது என்னவோ உண்மை தான்...

அவளோ , "என்ன எப்போ பார் இதே வேலையா வெச்சு இருக்கீங்க..என்னை விடுங்க முதல்ல"..என்று எரிச்சல் கொண்டு விலக முற்பட்டாள் ,

அவனோ, " நான் எப்போ டி உன்கிட்ட வந்தேன் நீ தான் என்னை தேடி வந்து இருக்க??"...

"நான் வந்தேன் தான் அதுக்குன்னு எதுக்கு இப்படி இழுக்கறீங்க யாராவது பார்த்தா என்ன ஆகறது???..என்னை விடுங்க எப்போ பார்த்தாலும் பிடிச்சு இழுக்க வேண்டியது"...என்று வாய்க்குள் முணுமுணுக்க

"நான் என்ன எப்போ பார்த்தாலும் உன்னை பார்க்கும் போதெல்லாம் இப்படி தான் முத்தம் கொடுக்கிறேன்னா".. என அவளை இழுத்து அவள் கன்னத்தில் இதழ் பதிக்க அவனின் அருகாமையில் தவித்து கொண்டு இருந்தவளின் முகம் இப்போது செந்தனலாய்  கொழுந்து விட்டு எரிந்தது...

அவனோ அவளை மேலும் எரிய செய்யும் விதத்தில் அவளது கழுத்தை கையில் ஏந்தி அவனது கைகள் முடிக்குள் விட்டு அவளது முடிகளை அளந்தவன் அவளது தகிக்கும் முகத்தை வாரி அணைக்க துடித்த மனதை அடக்க இயலாமல் மேலும் அவன் அவளது இதழ் நோக்கி குனிய வெண்ணிலாவுக்கு நன்றாக இவனை பற்றி தெரியும் ஒரு முத்தத்தில் இவன் நிறுத்த மாட்டான் என்று அவள் மோதியதும் அவன் அணிந்து இருந்த சட்டையின் பாக்கெட்டில் தான் போன் இருக்கிறது என்பதை உணர்ந்தவள் மெல்ல அவளது கையை அவனது மார்பில் வைத்து மெல்ல அவன் முகம் பார்த்து கொண்டே அவளது இதழ் என்னும் போதையை ருசிக்க செல்ல அந்த நொடி அவன் அவனை அவளுள் தொலைத்த தருணம் வெண்ணிலா உஷாராக போனை அவனது பாக்கெட்டில் கை விட்டு எடுத்தவள் அதே விசையில் அவனை பிடித்து தள்ளிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள்...

இதை சற்றும் எதிர்பார்க்காத மனுவோ தனது மோக நூல் அறுபட்டதில் அவனது உள்ளம் சுணுங்க அவனது முகமோ , "எப்படியும் என்கிட்ட சிக்காமலா போய்டுவா அப்போ பார்த்துக்கறேன் டி "...என கருவி கொண்டான்...

அதன் பிறகு மனு மனுவின் நண்பர்களோடு திரிய வெண்ணிலாவோ படிப்பு அவளது நண்பர்கள் என அவளது வாழ்க்கை எந்த வித சலனமும் இல்லாமல் போய் கொண்டு இருந்தது..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top