மன்மதன் 28
அத்தியாயம் : 28
மனுவும் அவளை கண்டாலும் காணாதது போல செல்ல அவளும் அப்படியே தான் திரிந்தாள்... மாலதி செழியனுடன் ஓட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் இருப்பதால் அவளுக்கு செழியன் வீட்டில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை அறியாள்..அவளும் இவளை எங்கே 20 நாள் காணவில்லை என மனதில் நினைத்தாலே ஒழிய வேறு எதுவும் அவளை கண்ட போது கேட்டு கொள்ள அவளது திமிர் அவளை வெண்ணிலாவிடம் இறங்கி வர செய்யவில்லை..
இதற்கு இடையே தான் அவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அவர்களது கல்லூரியில் நடந்து கொண்டு இருந்தது..மாணவ மாணவிகள் படிப்பில் பிசியாக சுற்றி கொண்டு இருந்தனர்...வெண்ணிலாவும் ராவும் பகலும் பாராது விழுந்து விழுந்து படித்து கொண்டு இருந்தாள் அவள் சந்திக்க போகும் முதல் தேர்வு வேறு பயம் அவள் வயிற்றை பிசைந்து கொண்டு இருந்தது...
எப்போதும் அவளுக்கு இருக்கும் ஒரு நிகழ்வு தான் நன்றாக படித்து இருந்தாலும் அவளது பயமே அவள் படித்ததை பாதி தின்று விட புலம்பி கொண்டே எக்ஸாம் நடக்கும் அவளுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் ஹாலின் வெளியே காரிடாரில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தாள்...
அந்த சமயம் வந்து கொண்டு இருந்தான் மனு இவளின் பதட்டத்தை கண்டு கொண்டே வந்தவன் மீதே தெரியாமல் இவள் மோத பூ குவியலாக அவளை இடை பிடித்து தாங்கியவன் அந்த இடையில் அழுத்தம் கொடுத்து அவளை நிறுத்தியவன் அவளின் மான் விழியோடு தன் விழியை ஒரு நொடி கலக்கவிட்டு அவளை பார்க்க அவளோ சுற்றும் முற்றும் கருதி அவனிடம் இருந்து விடுபட முயல அவனும் அவளது இடையில் சிறு அழுத்தம் கொடுத்து நிறுத்தியவன் அன்று அவள் அவனிடம் இருந்து விடுபட்டத்தை மனதில் வைத்து கொண்டு, "கண்ணை எங்கே வெச்சு இருக்க..ஆள் வரது தெரியல.. நீ மட்டும் தான் படிக்கிறியா ??..ஓரமா உக்கார்ந்து படி போ..பெரிய இவ மாதிரி சுத்திட்டு இருக்கா"... என்று கூறி விட்டு செல்ல
அந்த நொடி அவளது தேர்வின் பயம் போய் அவனை வறுத்தெடுத்து கொண்டு இருந்தாள் வெண்ணிலா.."எருமை எப்போ பார் எங்கேயாவது தொட்டு கிட்டே இருக்கான் வெளில பார்க்கும் போது திட்ட வேண்டியது ஆனால் செய்யுற வேலையை பார்".... என்று அவன் சென்ற பின் யாரும் அறியாமல் கண்ணிய இடையில் இலேசாக தடவி கொடுத்தாள் வெண்ணிலா...
இதற்கே அவள் நொந்து போனாள் என்றால் அவளும் அவனும் ஒரே எக்ஸாம் ஹால் மற்றும் ஒரே டெஸ்கில் அருகருகே அமர்ந்து தான் அவர்களது தேர்வை எழுத வேண்டிய நிலைக்கு வெண்ணிலா தள்ளப்பட்டாள்..
அதிலும் இருவரும் முறைப்பு தான் மனுவோ ஒரு பேனா மட்டும் எடுத்து வந்து இருக்க வெண்ணிலாவோ ஒரு பௌச்சில் மூன்று பேனா மூன்று பென்சில் மூன்று விதமான கலர் பேனா ஒரு சாமி போட்டோ ,மயில் தோகை, ரப்பர் அதுவும் குழந்தைகள் போல பொம்மை ரப்பர் வெச்சு இருக்க அவள் அவன் அருகே அமர்ந்ததும் விழி விரித்து அவள் அதிர்ந்தாலும் அவனது அருகாமை அவளது உள்ளில் நடுக்கத்தை கொடுத்தாலும் அவன் முகம் காணாமல் டெஸ்கின் விளிம்புக்கே போய் அவள் அமர்ந்து இருக்க அவனோ அவனது கையையும் காலையும் கேசுவலாக ஆட்டி கொண்டும் அவளது கால் முட்டியில் உரசி கொண்டும் அமர்ந்து இருந்தான்..
தேர்வு தொடங்கியதும் மனு எழுத துவங்கியதும் அவனது பேனா மக்கார் செய்ய அவனோ வேகமாக அவளிடம் இருந்து ஒரு பேனாவை அவளிடம் கேக்கமால் எடுத்து எழுத துவங்கி விட இவளுக்கு தான் கோபம் பொத்து கொண்டு வந்தது..
"என்னோட லக்கி பேனாவை எடுக்கிறான் பாரு"... என்று முறைத்து கொண்டே தேர்வு எழுதினாள்..அவனை வறுத்தெடுத்து கொண்டு இருந்ததால் என்னவோ எப்போதும் வரும் பதட்டம் இன்று காணாமல் போய் இருந்தது... இருவரும் ஒருவழியாக அவர்களின் தேர்வை எழுதி முடித்து விட்டனர்..
இதோ இன்று கடைசி தேர்வும் வந்து விட்டது.. இரண்டு வாரம் போனதே தெரியவில்லை.. இந்த வருட முதல் செமஸ்டர் தேர்வு முடிவடைந்து விட்டது..மாணவர்களுக்கு ஒரு மாதம் விடுமுறை அறிவிக்கப்பட வெண்ணிலா மிகுந்த சந்தோசமாக வீட்டுக்கு செல்லலாம் என நினைத்து கொண்டு இருந்தாள்..
அதே போல அவள் தேர்வு முடிந்த அன்று வீட்டில் அழைக்க அவளது நேரம் என்று பார்த்து போனை எடுத்தது அவளது பாட்டி செல்ல கிளி ,
"கண்ணு எப்படி தாயி இருக்க பரீட்சை எல்லாம் முடிஞ்சுதா "...என்று கேட்க
"முடிஞ்சது பாட்டி நான் நாளையில் இருந்து லீவ் தான் அண்ணா எங்கே பாட்டி எப்போ வருதுன்னு கேட்கணும்??"...
"எதுக்கு தாயி?"...
"வீட்டுக்கு வர தான் பாட்டி இங்கே இருந்து என்ன செய்ய சொல்ற ???"...
"உன் வீட்டுக்கு போ தாயி"... என்று அங்கே சரியாக நெத்தியடி அடித்தார் செல்லக்கிளி பல்லவதேவன்..
"என் வீடா??"... என அவள் அதிர
"ஆமாம் உன் புருஷன் அங்கே தானே இருக்கான் அது தான் பரீட்சை முடிஞ்சா கூட்டிட்டு போறேன்ன்னு சொன்னான்ல நீ போ நாங்களும் ரெண்டு நாளில் உனக்கு செய்ய வேண்டிய சீர் எல்லாம் வாங்கிட்டு வரோம் "...என்று ஒரு பெரிய குண்டை தூக்கி தலையில் இட்டார் அவளது பாட்டி அவள் அதிர்ந்து," பாட்டி "...என கூற அவரோ, "சரி தாயி நான் வைக்கிறேன் உன் அப்பா ,அம்மா கிட்ட சொல்லிடறேன்"...என்று பேச்சையும் முடித்து விட்டார்..
அதே நேரம் டெல்லியில் இருந்து பல்லவி அழைத்து தன் மகனிடம், " மனு குட்டி எக்ஸாம் முடிஞ்சதுல வெண்ணிலாவுக்கு லீவ் தானே "...என்று தொடங்கும் முன்
"அதுக்கு என்ன இப்போ"... என்று அவன் எகிற தொடங்க
"இல்ல டா உன் பாட்டி அண்ட் மாமா எல்லாம் டூ டேஸ்ல சென்னை வராங்கலாம்.. நானும் வரேன் அப்பானால வர முடியாது.. சோ வீடு எல்லாம் கொஞ்சம் அல்லியை விட்டு கிளீன் பண்ணி வை"... என்று கூற
அவனோ மனுவோ வெறுப்பின் உச்சிக்கே சென்று, "இப்போ எதுக்கு இங்கே எல்லோரும் வரீங்க ??
நான் கோவா போலாம்ன்னு பிளான் பண்ணி இருக்கேன் எனக்கு போகனும் ..அவளை அவளோட வீட்டுக்கு போக சொல்லுங்க..அவங்களை வர வேணாம்னு சொல்லுங்க"....
"மனு கல்யாணம் ஆன பொண்ணை அவ வீட்டுக்கு எல்லாம் போக சொல்ல முடியாது ..அவங்களும் நம்ம வீடு எல்லாம் பார்த்தது இல்லை ..அவங்களுக்கும் அவங்க பொண்ணை பார்க்கனும்னு இருக்கும் ..சோ அவங்களை நீங்க ரெண்டு பேரும் போய் ரீசீவ் பண்ணுங்க..அண்ட் உன் அப்பா தான் இதை சொல்ல சொன்னார்".... என்று கூறி முடித்து கொண்டார்..
அவனுக்கோ எங்கே போய் முட்டி கொள்ளலாம் என்று இருந்தது...."எல்லாத்துக்கும் காரணம் அவள் தான்"... என கருவி கொண்டே அவளை அழைக்க அன்று இரவு பத்து மணிக்கு அவளது ஹாஸ்டல் வாயிலில் நின்று கொண்டு இருந்தான் மனு..அவளும் மனமே இல்லாமல் அவனுடன் செல்ல தயாரானாள்...
இவர்கள் அவரவர் வழியை பார்க்க நினைக்க வீட்டாரோ இவர்களை சேர்த்தி வைக்கும் முயற்சியில் இறங்க இனி அவர்கள் ஒரே வீட்டில் சொந்த பந்தங்களுடன் இருக்க நேர்ந்தால் என்ன ஆவது???..முன்பே அவள் அருகாமையில் மனம் தடுமாறுபவன் இப்போது அவளின் அருகாமையில் இருக்க நேர்ந்தால் ????...
மல்லிகை மணம் வீசும்....
