மன்மதன் 29
அத்தியாயம் : 29
மன்மதன் தேசத்து மல்லிகை
மனுவின் கார் உறுமிக்கொண்டு இருக்க வெண்ணிலா எல்லோரையும் போல கிளம்பினாள் என்பதால் யாருக்கும் எந்த வித சந்தேகமும் இல்லாமல் சென்றாள்... அவனுடைய காரில் ஏறி அமர்ந்ததும் அவன் பொங்க தொடங்கி விட்டான்..
"என்ன டி நெனைச்சுட்டு இருக்கீங்க அப்படியே செட்டில் ஆகலாம்ன்னு நெனைப்பா??"...
"நான் என்ன செய்யறது சும்மா என்னையே குறை சொல்லாதீங்க"...என்றாள் வெடுக்கென்று,
"ஏன் உன் வீட்டில் இருந்து தானே கிளம்பி வராங்க???...உனக்கு தெரியாது?? எல்லாமே நடிப்பு டி என்கிட்ட பிடிக்கலைன்னு சொல்றது அப்புறம் உன் வீட்டில் இருந்து ஆளுங்கல வர சொல்றது..
உன்னால என்னோட பிளான் எல்லாம் சொதப்பல் ...இதோ பார் எண்ணி நாலு நாள் சமயம் தருவேன் அதுக்குள்ள அவங்களை கூட்டிட்டு ஊருக்கு கிளம்புற வழியை பாரு இல்லாட்டி நடக்கிறதே வேற ??"....என்று எகிற
அவள் மனமோ வீட்டிலும் என்னை ஒதுக்க அவனும் ஒதுக்க யாருக்கும் தான் வேண்டாமா என்ற எண்ணம் கூட அந்த நொடி அந்த சிறு பெண்ணுக்கு வந்து போனது..மனுவோ அவனுடய ஆத்திரம் தீர அவளிடம் பொங்கியதும் சாந்தமானவன் அமைதியாகி வண்டியில் கவனம் செலுத்தினான்...
அதற்குள் கோபம் என்று சூடு இறங்கியதும் அவனுக்கு பசி வயிற்றை கிள்ள அந்த நேரம் என்று கூட பார்க்காமல் அவன் ஒரு ஹோட்டல் வாயிலில் வண்டியை நிறுத்தியவன் அவனுக்கு உணவு வாங்க போக இறங்க அவன் எத்தனிக்கும் முன் அவள் முகத்தை பார்க்க அவளின் விழி ஓரம் நீர் கோர்த்து இருப்பதை பார்த்து மீண்டும் கடுப்பு ஆனவன், "இப்போ எதுக்கு டி மூஞ்சியை அப்படி வெச்சு இருக்க உண்மையை சொன்னா கசக்குதா என்னோட வீட்டுக்கு என்னோட பிரெண்ட்ஸ் எந்த நேரத்தில் வருவாங்கன்னு தெரியாது அப்படி இருக்கும் போது உன்னை அங்கே பார்த்தா என்ன ஆகும்ன்னு யோசிச்சியா ..அந்த நேரத்தில் உன்னையும் உன் குடும்பத்தையும் பார்த்தா என்ன ஆகிறது???".. என்று அவனது பயத்தையும் அதே நேரம் அவளிடம் கோபப்பட்டதற்கான காரணத்தையும் கூற அப்போதும் அவளது கண்கள் அழுகையை நிறுத்தாமல் இருந்தாள்..
ஏனெனில் எப்போதும் அவனுக்கு அவனுடைய சுயநலம் மட்டும் தானே முக்கியம்..எந்த சூழ்நிலையிலும் அவன் காதலை காப்பாற்ற அவன் எந்த அளவுக்கும் செல்வான் என்று நினைக்கவே அவளுக்கு அவன் மீது வெறுப்பாக இருக்க அவனோ அவள் முகத்தையே பார்த்தவன் ஒன்றும் பதில் கூறாமல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவளை அவளின் சிந்தனையை கலைக்கும் பொருட்டு , "சாப்பிட்டியா??"... என்று கேட்க
சுய உணர்வு பெற்ற அவளோ அவன் முன் தன்னுடைய கசங்கிய முகத்தை மறைத்து கொண்டு, " எனக்கு வேணாம் "...என மறுக்க,
அவனுக்கு அவளது செய்கை கோபத்தை அளிக்க ஓ என்கூட இருந்தா அந்த பரதேசி கிட்ட மாட்டிப்பன்னு அழுதுட்டு இருக்கியா இப்படி உன்னை பார்க்கும் போது தான் டி அவன் கண்ணுல நீ சிக்கணும்ன்னு தோணுது.. என்று நெனைத்தவன் தனக்கு முதுகு காட்டி அமர்ந்து இருக்கும் அவளை நெருங்கி அவள் முதுகை தொடலாம் என பரபரத்த கையை அடக்கி ஒன்றும் கூறாமல் தோளை குலுக்கி விட்டு அவன் மட்டும் காரில் இருந்து இறங்கி உணவு வாங்க செல்ல அதற்கும் அவளுக்கு கண்களை கரித்து கொண்டு வர அவளுக்கு விதிக்கப்பட்ட வாழ்வு இது தானா என அவள் மனம் வெதும்பி இருக்கும் போதே உணவு பொட்டலங்களுடன் அவன் வந்தான்...
அவள் அழுது கொண்டு இருப்பதை அவன் உணர்ந்தாலும் வண்டியை ஒன்றும் பேசாமல் செலுத்த அவன் மனதுக்குள் தன்னுடன் வருவது அவளுக்கு பிடிக்கவில்லையோ என தோன்ற அவனது கார் சீறி கொண்டு பறந்தது அந்த உயர் ரக மக்கள் மட்டுமே வாழ கூடிய அந்த குடியிருப்பு பகுதிக்கு...
சுமார் இருபது அடுக்கு தளங்களை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு இருட்டில் மின்னி கொண்டு இருக்க அவனுடைய பார்க்கிங் சிலாட்டில் வண்டியை நிறுத்தியவன் அவள் புறம் திரும்ப அவளோ ஏதோ யோசனையில் அவன் காரை நிறுத்தியதை கூட உணராமல் இருக்க அவள் இருக்க அவளது செய்கை மேலும் அவனுக்கு எரியூட்ட , "கண்டவனை நெனைச்சுட்டு இருக்கிறது போதும்..இறங்கு "...என்று கடுமையாக கூற
அவளோ மனதுக்குள் நானா கண்டவனை நெனைக்கிறேன் என அந்த நொடி மீண்டும் அடிபட்டு தான் போனாள்..அவனிடம் மீண்டும் வாக்குவாதம் செய்யும் மனநிலையில் இல்லாத காரணத்தினால் அமைதியாக இறங்கி பதினெட்டாவது தளத்தில் அவனது குடியிருப்பு இருவரும் சென்றனர்..
ஒரிருவரை தவிர வேறு யாரும் இவர்களை கவனிக்கவில்லை கவனித்தாலும் யாரும் கேள்வி கேக்க போவதுமில்லை அது வேறு விஷயம்...
ஒரு வழியாக மனு அவனது வீட்டை திறந்து திரும்பி அவளை பார்க்க வெண்ணிலாவோ கையில் அவளது பேகை வைத்து கொண்டு தயங்கி கொண்டு நிற்க அதை கண்டும் கடுப்பு ஆனவன் , "வா உள்ளே"... என்று அழைக்க ,
வெண்ணிலாவின் மனதிலோ ஆயிரம் கேள்விகள் வந்து குடைந்து கொண்டு இருக்க அதே நேரம் அவன் மீது உள்ள வெறுப்பின் உச்சியில் இருப்பதால் அவள் எதையும் கவனிக்காமல் அவனுடன் அவன் பின்னே ஏதோ ஒரு கீ கொடுத்த பொம்மை போல செல்ல வீட்டின் உள்ளும் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள்..
வீட்டுக்குள் சென்றதும் தான் அவளது காலில் ஏதோ பட அவள் தன்னிலை பெற்று வீட்டை பார்க்க அவ்வளவு அழகான மேல் தட்டு வீடு ஆனால் அது இருக்கும் லட்சணமோ?? மகா கேவலம் அதே நேரம் என் காலில் என்ன தட்டியது என அவள் கீழே பார்க்க அங்கே ஒரு பீர் பாட்டில் தான் அவளை ஆரத்தி எடுத்து கொண்டு இருந்தது....
ஆம் வடநாட்டில் திருமணம் முடிந்தால் மணப்பெண் மணமகன் வீட்டுக்குள் நுழையும் நேரம் ஒரு கலத்தில் அரிசியை வைத்து அதை மிதித்தே மணமகள் உள்ளே நுழைவாள் ஆனால் இங்கே என்ன இருந்தாலும் கல்யாணம் எப்படி இருந்தாலும் முதன் முறையாக வெண்ணிலா அவனது வீட்டுக்குள் நுழையும் நேரம் அவள் மிதித்தது ஒரு பீர் பாட்டில்...
ஆம் அவள் கால் அந்த பாட்டிலில் தட்டியதில் பாட்டில் உருண்டோடி அவனின் காலுக்கு அடியில் ஓடி ஒளிந்து அவனையும் வரவேற்க சுயநினைவு பெற்று அவள் நிமிர்ந்து பார்க்க அந்த வீட்டின் அலங்கோலம் அவள் முகத்தை அஷ்டகோணலாக்கி இருந்தது...
ஆம் அது என்ன இன்டிரியர் வீடா இல்லை குப்பை மேடா என்பது போல வீடு முழுவதும் அலங்கோலம் ஆகி இருக்க அவனோ அவனது ஷூ காலால் எல்லா பொருட்களையும் நீக்கி அவள் உள்ளே வர வழி செய்து கொண்டு இருக்க அவளோ அந்த வீட்டின் அலங்கோலத்தை ரசித்து(நொந்து) கொண்டு இருந்து இருந்தாள்..
அந்த வீடு முழுவதும் பீர் பாட்டில்கள் ,அவனுடைய ஜீன்ஸ்,உள்ளாடைகள், சாப்ட் ட்ரிங்ஸ் பாட்டில்கள்,லேப்டாப் ஒரு பக்கம் அதனுடைய சார்ஜரில் அவன் எப்போதோ அணிந்து இருந்த பனியனை காயபோட்டு இருந்தான்..அதிலும் ஒரு கால்பந்து சேற்றிலும் அழுக்கிலும் புரட்டி எடுத்து சுவர் முழுவதும் அந்த அழுக்கு கால் பந்து மூலம் கோலம் வரைந்து வைத்து இருந்தான் எப்போதோ குடித்த காபி கப் இன்னும் கழுவப்படாமல் வறண்டு போய் இருந்தது... இது போல பல்வேறு குப்பைகள் சிதறி இருக்க அவளுக்கு இதை எல்லாம் கண்டு தலையே சுற்றுவது போல இருந்தது..
அவளது அதிர்ச்சியை பார்த்து குழம்பிய மனு என்ன இப்படி முழிக்கிறா???.. வீட்டுக்குள்ள தானே கூப்பிட்டேன்..என்னமோ என் ரூம்குள்ள கூப்பிட்ட மாதிரி ஷாக் கொடுக்கிறா??? என்று நினைத்தவன்,
"இன்னும் எவ்வளவு நேரம் அங்கேயே இருப்ப உள்ளே வா"... என்று மீண்டும் அழைத்தவன் அவன் பாட்டுக்கு உள்ளே சென்று அவன் சோஃபாவின் மீது அவனது சட்டையை கழட்டி எறிந்தவன் ஹாயாக அமர்ந்து உணவை உள்ள அவளும் மெல்ல உள்ளே , "நுழைய கதவை சாத்து அதுக்கு வேற யாராவது வருவாங்களா"... என்று மனு கூறவும்
அப்போது வரை இல்லாத பயம் இப்போது அவளுக்கு தொற்றி கொண்டது... அவனை பார்க்கும் போதே பெண்களுக்கே உரித்தான பயம் அவளுள் எழ அதிலும் அவன் வேறு அவளது தாலி கட்டிய கணவன் அவனது அருகாமை வேறு அவளுக்கு மேலும் தவிப்பை கொடுத்தது..
