Share:
Notifications
Clear all

மன்மதன் 30

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 30

அவனோ இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவன் பாட்டுக்கு எழுந்து சென்று பிரிட்ஜை திறக்க அதில் முழுவதும் பீர் பாட்டில்கள் நிரம்பி இருக்க அதில் இருந்து ஒன்றை எடுத்து அவன் சாதாரணமாக தண்ணீர் குடிப்பது போல எடுத்து குடிக்க இவளுக்கு இங்கே வியர்க்க தொடங்கியது..

அதிலும்  அவன் குடித்துக் கொண்டே அவளை ஒரு மாதிரியாக பார்க்கவும் அவளுக்கு இவன் தன்னை ஏதாவது செய்து விடுவானோ என்ற அச்சம் துளிர் விட வெண்ணிலா மெல்ல தனது பூனை கண்களால் வீட்டை சுற்றி பார்க்க அந்த வீடே அவளுக்கு பயத்தை கொடுத்தது.. பயத்தை கொடுத்தது அந்த வீடா??இல்லை அவனா???அது அவனே தான் என்பது போல மனு அவளின் பயத்தை உணர்ந்து அவளை சும்மா பயம் காட்டலாம் என நினைத்து ஒவ்வொரு அடியாக எடுத்து  வைத்து கொண்டு இருந்தான் ..

அவளோ அவன் அருகில் வந்தால் என்ன செய்வான் என்பதை முன்பே அறிந்தவள் உள்ளுக்குள் அவன் மீது பயம் இருந்தாலும் வெளியே தைரியமாக இருப்பது  போல காட்டியவள் , "இதோ பாருங்க நாம ஒரு இக்கட்டில் இருக்கோம் எனக்கும் உங்களுக்கும் ஓட்டுக்கா இருக்க துளியும் விருப்பம் இல்லை கவலைப்படாதீங்க ..நான் என் வீட்டில் இருந்து அவங்க வந்ததும் இரண்டு நாளில் நாங்க போயிடுவோம்..அது வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க..நான் இந்த வீட்டில் இருக்க போற கொஞ்ச நாள் நீங்க யாரோ நான் யாரோ"... என்று கண்ணை மூடிக்கொண்டு ஆவேசமாக கூறியவள் அங்கே நிலவும் நிசப்தத்தை கண்டு மெல்ல கண்களை திறக்க,

   அந்த நேரம் அவனோ அவளை விழுங்கி கொண்டே அவள் அருகில் வரவும் நொடி பொழுது தாமதித்தாலும்  அவன் ஏதாவது செய்வான் என்பதை உணர்ந்து வேகமாக தன்னருகே வந்து நின்ற அவனை அவனது மார்பில் கை வைத்து எதிரே உள்ள சோபாவில் தள்ளிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி அங்கே இருந்த வேறு ஒரு அறையில் புகுந்து கொண்டாள்...

அவனும் அப்படியே சோபாவில் சரிந்தவனுக்கு அவ்வளவாக போதை இல்லை என்றாலும் அவளுடைய பயம் அவனுக்கு ஒரு போதையை அளித்தது என்றே கூற வேண்டும்..

அந்த இனிமையில் இதழ்களில் மென்னகை புரிய உறக்கத்தில் ஆழந்தவன் மறு நாள் அவள் எழும் முன்பே எழுந்தவனுக்கு அவள் அவனை தள்ளி விட்டது நியாபகம் வர நேற்றைய இனிமை இப்போது அவனுக்கு காணாமல் போய் இருந்தது...

இனி அவள் புறமே செல்ல கூடாது சென்றால் தானே எனக்கு இப்படி எல்லாம் தோன்றுகிறது தான் ஏன் அவளை காணும் போதெல்லாம் அவளது அருகாமையை நாடுகிறேன் என நினைக்கும் போதே அவனுக்கு அவளது மதி முகம் மட்டுமே நினைவில் வந்தது..அதில் காதல் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை இல்லை ஒரு வேளை இனகவர்ச்சியா அதற்கும் அவனிடம் விடை இல்லை..

அவன் ஒன்றும் பக்குவம் நிறைந்த ஆண் மகன் அல்லவே...அவனும் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறான்..அவனுக்கும் எல்லாம் விஷயங்களும் தெரிய வேண்டும் என்று இல்லை..

தான் தாலி கட்டிய கணவனே இருந்தும் என்னை தள்ளி விட்டு என் அருகாமையை வேண்டாம் என நினைக்கிறாள் என்றால் அதற்கு காரணம் அவனே அசோக் இவர்கள் இடையில் இருக்கும் காதல் என்று காலையிலே சுபமாக தன்னை குழப்பி கொண்டு விடியலை துவங்கியவன் அவனது தவறை அவன் உணராமல் அவள் மீது கோபம் வன்மத்தை வளர்த்து கொண்டான் மனு..

அவளின் இரு முறை உதாசீனம் அவனுக்கு அவளை வெறுப்பின் உச்சிக்கு கொண்டு செல்ல அவன் எப்படியாவது அவளை அவனது வாழ்க்கையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற முடிவுக்கே வந்து விட்டான்...

அதன் படி வேகமாக அவனது அறைக்கு சென்றவன் குளித்து முடித்து வெளியே வந்து அவள் தங்கி இருந்த அறையை நோக்க அந்த நேரம் பார்த்து அவளது கதவு திறக்கப்பட்டது..அவளது கண் முன் அவன் வர மீண்டும் அவளுக்கு அச்சம் மேலோங்க

அதை கண்டவனுக்கு அதற்கான காரணமும் புரிய நேற்றைய பார்வையை விட கோபமாக இருந்தவன் அவளை பார்த்து, " இதோ பார் நேத்து சொன்னியே அதே மாதிரி இரண்டு நாள்ல உன் வீட்டுக்கு போக ரெடியா இரு..என்னை பார்த்தா ரேப்பிஸ்ட் மாதிரி உனக்கு தோணுதா தள்ளி விட்டுட்டு போற??..என் வீட்டுக்குள்ள இருந்துட்டு என்னையே தள்ளிட்டு போறீனா உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்???..ஏன் அந்த கதவை நீ சாத்திட்டினா என்னால திறக்க முடியாதுனா நெனைச்சுட்டு இருக்க...அண்ட் ஸ்டில் நௌ நீ என்னோட வைப் தான் உன்னை என்ன வேணாலும் செய்ய எனக்கு உரிமை இருக்கு...எவனும் கேள்வி கேட்க முடியாது... நீ ஓவரா என் முன்னால நடிச்சு என்னை வைலண்ட்டா ஆக்கிடாத".... என்று கூறியவன் வீட்டை விட்டு கிளம்பினான் வீட்டுக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்க செல்ல அவன் முகத்தை பார்த்தவள் பயத்தின் உச்சிக்கு தான் சென்றாள் என்று கூற வேண்டும்..அதிலும் அவன் கூறிய வார்த்தைகள் அவளை மேலும் பயத்தை கொணர்ந்தாலும் இன்னும் இரண்டு நாட்கள் இவனை எப்படியாவது சமாளித்து விட வேண்டும் என்று முடிவு செய்தாள்..

நேற்று அவனை தள்ளி விட்டு சென்றதும் அறைக்குள் சென்று கதவை அடைத்தவள் கதவின் சாவி துவாரம் வழியே அவனை பார்க்க அவன் பார்வை என்னவோ அந்த கதவிலே இருக்க அவன் கதவை உடைத்து வந்து விடுவானோ என்று அவள் மனம் படபடத்து கொண்டு இருந்தது..

பின் அப்படியே மடிந்து அமர்ந்தவள் தன் வாழ்க்கை போக்கை எண்ணி அழ ஆரம்பித்தாள்..எவ்வளவு நாட்கள் இப்படி ஓடி ஒளிய முடியும் என அவள் எண்ணி அப்படியே உறங்கி போனாள்...புதிய இடம் என்பதால் விடியும் பொழுதே எழுந்தவளுக்கு வெளியே சென்று அவனை ஏறிட்டு பார்க்க தைரியம் இல்லை..பயம் மீண்டும் அவன் வந்து விடுவானோ என்று அவனை காணாமல் அவள் வெளியே வர அவன் அந்நேரம் வரவும் சரியாக இருக்க ஒரு நொடி அதிர்ந்தவள் அமைதியாக இருக்க அவனே அவள் மீது கோபம் கொண்டு கத்தி விட்டு சென்றும் விட்டான்..

அவன் சென்றும் அவள் மனம் நிம்மதி இல்லை அவன் கூறியது உண்மை தானே என்று எல்லாம் நினைத்து அந்த சிறு பெண் மனம் வெதும்பியது எவ்வளவு நேரம் சிலை போல நின்றாளோ அவன் மீண்டும் வரும் வரை அவள் நிற்க அதை கண்டவன், " இன்னும் எவ்ளோ நேரம் இப்படியே நிக்கிறதா உத்தேசம் ..இப்படியே நின்னுட்டு இருந்தினா நாளைக்கு உன் வீட்டுக்கு ஆளுங்க வந்திடுவாங்க.." என்று கூறியவன் மேலும் வீட்டை சுற்றி பார்த்து விட்டு ,

" வீடு கிளீன் பண்ற அக்கா வெளியூர் போய் இருக்காங்க வேற யாராவது கிடைக்கிறங்களான்னு பார்க்கிறேன் வீட்டை சுத்தம் பண்ண???? வேற ஏதாவது நான் செய்யனுமா".. என்று சற்று முன் நடந்தது எல்லாம் ஒன்றுமே இல்லாதது போல அவன் கேட்டான்...

அவளோ அவனை கண்டதும் ஏதாவது சொல்வானோ என்று இருக்க அதற்குள் இவன் இப்படி கேட்கவும் அதிசயமாக அவள் விழி விரிய, அதற்கும் ஒரு காரணம் உண்டு சற்று முன் தான் அவனது அம்மா இன்று இரவு செல்லும் விமானத்தில் சென்னை வர இருப்பதாக கூற வெண்ணிலாவின் வீட்டாரும் இன்று இரவு ரயில் ஏறி விடுவர் என்று கூறி தன் மகனின் செயல் அறிந்து வீட்டை சுத்தப்படுத்தி வைக்க கூறி இருந்தார்..அதற்காவே அவன் கோபத்தை ஒதுக்கி அவளிடம் பேசி கொண்டு இருந்தான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top