Share:
Notifications
Clear all

மன்மதன் 31

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 31

அது அறியாத அவளோ , "இல்லை நானே "..என்று கூறியவள் கீழே குனிந்து பார்க்க பீர் பாட்டில்கள் அவளை பார்த்து சிரித்து கொண்டு இருந்தது..

அவனும் குனிந்து அவளை பார்த்தவன் அதுவரை இருந்த இலேசான இளக்கம் போய் அவள் பார்வையை கவனித்து , "எஸ் நான் ட்ரிங்கர் தான் உன் அப்பா , அண்ணா கிட்ட சொல்லி வீட்டை விட்டு வெளியே போறதா இருந்தா இன்னிக்கே போகலாம் "...என்று அதற்கும் காய்ந்தான்..

அவளுக்கு புரிந்தது நேற்று அவள் மறுத்ததற்கு தான் அவன் இப்படி நடந்து கொள்கிறான் என்று என்னால் இவனை போல மாயா அக்காக்கு துரோகம் செய்ய முடியாது என்று நெனைத்தவள் விழி நீர் இலேசாக குளம் கட்ட துவங்கும் முன் அதை அவன் காணாமல் மறைத்து வீட்டை சுத்தப்படுத்த சென்றாள்..

அவனும் அவளை காயப்படுத்தி விட்டோம் என்று நெனைத்தவன் பிறகு என்ன நினைத்தானோ அவளுக்கு உதவி செய்தான்..அவள் மறுக்க மறுக்க அவன் உதவி செய்தான்...இருவரும் வேகமாக சுத்தப்படுத்தி வீட்டை பார்க்க வீடு வீடாக காட்சி அளித்தது அதே போல அவனும் கொஞ்சம் அமைதியாகி, " நான் லன்ச் வாங்கிட்டு வரேன்"... என்று கிளம்ப அவளோ , "நானே சமைக்கிறேன் "...என கூற ,

"உனக்கு சமைக்க எல்லாம் தெரியுமா"..என ஆச்சர்யமாக பார்க்க அவளோ அதில் இலேசாக கன்னம் சிவந்தவள் தலையை மட்டும் ஆட்டி வேகமாக உணவையும் தயார் செய்தாள்..அவளின் அந்த கன்னசிவப்பை அந்த கள்வன் கண்டு கொண்டான்...

அவள் உணவு தயாரிக்கும் போது அவன் அவளையே பார்த்து கொண்டு இருந்தவன் மனதுக்குள் மிக பெரிய குழப்பம் தான் ஏன் அவளை நாடுகிறேன் என்று அவனுக்கு பதில் இல்லை ஆனாலும் அவளது அழகு அவனை ஈர்க்கிறது இதுவும் உண்மை இதோ வியர்வையில் குளித்து நிற்கும் அவளை அப்படியே அவன் கைகள் பருக துடிக்க அவளின் சிவந்த அதரம் அவனை மீண்டும் அழைத்தது...

சற்று முன் தான் அவள் மீது வன்மத்தை விதைத்து கோப கனல் வீசியவன் இதோ இப்போது ரசிக்க அவனுக்கே அவன் செய்கை பிடிக்கவில்லை தான் ஏன் இப்படி இவள் பின்னால் சுற்றுகிறோம் என்று அவன் சிந்திக்க அந்த சமயம் பார்த்து தான் அவனுக்கு மாயா சொன்னது நினைவுக்கு வந்தது..

கிட்டத்தட்ட அவன் அவனுடைய காதலை கூறி ஒரு வாரம் கழித்து ஒரு நாள் மாயாவும் அவனும் காலேஜ் கேன்டீனில் அமர்ந்து இருக்க மனுவோ அன்று காதலை கூறிய பின் அவளிடம் அதை பற்றி பேச வில்லை ஆனால் அவளுக்கு தான் உள்ளுக்குள் ஒரு போராட்டமே நடந்து கொண்டு இருந்தது தன்னுடைய நண்பன் இப்படி கேட்டு விட்டானே என்று வேதனையில் உழன்றவள் , "மனு நீ நேத்து சும்மா தானே லவ் பன்றேன்னு சொன்ன???"...

"மாயா யாராவது அப்படி செய்வாங்களா ரியலி உன்னை லவ் பண்ணலாம்ன்னு தோணுது"...

"எப்போ இருந்து மனு"...

"சரியா சொல்ல தெரியல மாயா"... என்று கைகளை விரிக்க,

"ஏன் மனு எதனால உனக்கு அப்படி தோணுச்சு வீ ஆர் பிரெண்ட்ஸ்..என்னால உன்னை அப்படி நினைச்சு கூட பார்க்க முடியாது மனு"..என ஆதங்கத்தில் அவள் கூற,

"சோ வாட் மாயா இனி அப்படி நினைச்சு பாரு "..என்று கூலாக கூற

"மனு உனக்கு எல்லாமே ஈசி ..பார்த்தோ இல்லை பல நாள் பழகியோ டேக் இட் ஈஸியா காதல் வராது மனு..இது ஜஸ்ட் அட்ரேக்ஷன் ..நாம பிரெண்ட்ஸ் நாளைக்கு காதலர்களா மாறினா இப்படியே இருப்போம்ன்னு சொல்ல முடியாது...நாம பார்க்கிற எல்லா விஷயங்களும் மாறும்...

லவ் அப்படிங்கறது ஒரு பீல் மனு ஒரு ஸ்பார்க் அதுக்கு நாம பல நாள் பழகி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கனும்னு இல்ல ..அந்த ஸ்பார்க் எனக்கு உன் மேல வரல...பிகாஸ் எனக்கு அல்ரெடி அந்த ஸ்பார்க் வந்து போயிடுச்சு இனியும் வராது மனு..என் லைஃப்ல ஒரு முறை வந்த ஸ்பார்க் அது என் மனசு முழுசா இருக்கு எனக்கு அதுவே போதும்..சோ இனி இது போல என்கிட்ட பேசாத ..அதுவும் உன்கிட்ட நான் இதை சத்தியமா எதிர் பார்க்கல.. நான் ஏதாவது ஹர்ட் பண்ணி இருந்தா மன்னிச்சுக்கோ..நான் சொல்ல வர விஷயம் உனக்கு புரியும்னு நெனைக்கிறேன்".. என்று அவள் கூற

மனுவோ அவள் கூறுவதை கேட்டு," கூல் மாயா நோ ப்ராப்ளம் ...எப்படி எனக்கு உன்கிட்ட காதலை சொல்ல உரிமை இருக்கோ அதே போல உனக்கு மறுக்கவும் உரிமை  இருக்கு"...என்று கூறி எழ மாயாவோ மீண்டும் அவன் முகத்தை பார்த்து அவன் ஏதாவது வருத்தம் கொண்டு விட்டானோ என்பது போல பார்க்க

"மாயா இந்த ஒரு சின்ன விஷயம் நம்ம பிரெண்ட்ஷிப் பிரிய காரணமா அமையாது மாயா "..என்று கூறி அவளது குற்ற உணர்ச்சியை மாற்றியவன் அன்றிலிருந்து மாயாவை தோழியாகவே பழைய படி பார்க்க தொடங்கி விட்டான்..அவனுக்கு மாயா கூறியதை கேட்டு வருத்தம் எல்லாம் எழவில்லை..உண்மையில் மிக சந்தோஷமே எழுந்தது இன்னும் முடிந்து போன காதலை எண்ணி கொண்டு இருக்கிறாளா என நினைத்து ஆச்சரியம் தான் அடைந்தான்...

உண்மையில் அவன் மனதில் இப்போது மாயா இல்லை வெண்ணிலாவே இருக்கிறாள் ..ஆம் அவன் கண்கள் மாயாவை அல்ல சுற்றுகிறது வெண்ணிலாவை தான் அதை அவன் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை...இப்படி அவன் வெண்ணிலாவின் முகத்தையே பார்த்து மாயா கூறியதை எண்ணி கொண்டு இருக்க வெண்ணிலாவோ அவனது குறுகுறு பார்வையில் மேலும் சிவந்தாள்.. என்ன இவன் இப்படி பார்க்கிறான் என நினைத்து கொண்டே வேகமாக சமையலை முடித்தாள்..

தன் மனைவியின் கையால் உண்டாக்கிய உணவை வெகு ரசனையான உண்டவன், " ஓ இவளுக்கு நல்லா சமைக்க கூட வருமா"... என்று விழிகள் உயர்ந்து அவளை பார்க்க அதே நேரம் வெண்ணிலாவுக்கோ அவனுக்கு தான் செய்த உணவு பிடித்து இருக்கிறதா என்று அவள் நினைத்து மெல்ல விழி உயர்த்தி அவனை பார்க்க அந்த நேரம் பார்த்து அவனும் அவளை பார்த்தான்...கண்ணோடு கண் கலந்து கொண்டு இருக்கும் போது அவன் வீட்டு அழைப்பு மணி அடித்தது...

அதில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையை பரிமாறி கொள்ள அதற்குள் மனு எழுந்து யார் வந்து இருக்கிறது என லென்ஸ் வழியே பார்க்கவும் அது வேறு யாருமில்லை குமார் மற்றும் ராம்....அத்தனை நேரம் இருந்த இனிமையான தருணம் நண்பர்களால் தடை ஆனது...

மல்லிகை மணம் வீசும்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top