Share:
Notifications
Clear all

மன்மதன் 32

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 32

மன்மதன் தேசத்து மல்லிகை

    மனு அவளிடம் எதற்காக சண்டை போட்டானோ அதுவே நடந்து விட்டது இதோ அவனது நண்பர்கள் வந்து விட்டனரே... இவர்கள் வெண்ணிலாவை கண்டால் என்ன ஆவது என்ற பதட்டம் மனுவை தொற்றி கொண்டது...

அவன் உள்ளே பயம் எழுந்தாலும் அவன் மூளை கடகடவென அடுத்தது என்ன செய்யலாம் என யோசிக்க துவங்கியது..அவர்கள் கண் முன் வெண்ணிலாவை மறைக்க வேண்டும் என்று மூளை அறிவுறுக்க அதை செயல் ஆற்ற விரைந்தான் மனு...

அவர்களை கண்டதும் தலையில் கை வைத்த மனு வேகமாக ஏதோ யோசித்து  அவள் அருகே ஓடி வந்து "சீக்கிரம், சாப்பிட்டது போதும் எழுந்திரு குமார் ,ராம் வந்து இருக்காங்க உன்னை இங்கே பார்த்தா நான் முடிஞ்சேன் "...என்று கூற அவளுக்கும் அவனுடைய பதட்டம் தொற்றி கொண்டது....

அவன் திட்டுவானோ அவன் நேற்று கூறியது போல நடந்து விட்டதே என்று அவனை பாவமாக அவள் பார்க்க அவனோ அவள் தோளைத் தொட்டு தட்டி கொடுத்து உள்ளே போக சொல்லி விட்டு அவனது பதட்டத்தை மறைக்கும் பொருட்டு அவனது முகத்தை அழுந்த துடைத்து கொண்டு  ஓடினான்...

அதற்குள் வெண்ணிலாவோ வேகமாக அவனுடைய அறைக்குள் மாயமானாள்...அவனோ அவளுடைய உடை பேக்,செருப்பு மற்றும் வாட்ச் என அவளின் பொருட்களை எல்லாம் எடுத்து அவனுடைய கபோர்டில் ஒளித்து வைத்தவன் அதற்குள் மீண்டும் ஒரு முறை முகத்தை சரி செய்து இருந்தவன் நிதானமாக கதவை திறந்தான்...

கதவை திறந்து மனு அங்கேயே நின்று கிட்டத்தட்ட அவர்களுக்கு வழி விடாமல் கதவை ஒரு கையால் பிடித்தபடி, "என்ன டா மச்சி "...என்று இயல்பாக கேட்க,

"என்ன மச்சி காலேஜ் லீவ் விட்டாச்சு புதுசா கேக்கிற இனி விடிய விடிய குடிக்கிறோம் கூத்தடிக்கிறோம் "...என்று சிரித்தபடி கையில் பெரிய பை நிறைய மது பாட்டில்கள் அடங்கிய பையை காட்டி மனுவை தள்ளி விட்டு அவர்கள் இருவரும் உள்ளே போக முயல

மனுவோ , "மச்சி நான் டெல்லி போகலாம்ன்னு  இருக்கேன் மச்சி அம்மா வர சொல்லி இருக்காங்க..இல்லாட்டி நாளைக்கு அம்மாவே இங்கே வருவாங்களாம்..மிரட்டுறாங்க மச்சி...கூடவே அவங்களோட ரீலேஷன் கூட வரங்களாம்...சோ எனக்கு மூட் இல்ல மச்சா சரக்கு அடிக்க நீங்க கிளம்புங்க "...என்று அவர்களை விரட்ட பார்த்தான்..

"என்ன டா மச்சி வாசல்ல வெச்சு விரட்டுற உனக்கு மூட் செட் எப்படி பண்றதுன்னு எங்களுக்கு தெரியும்"... என்று மனுவை தள்ளி கொண்டு ராம் உள்ளே செல்ல அங்கே டைன்னிங் டேபிளில் சாதம், சாம்பார், பொரியல்,ரசம் என எல்லா அடங்கி இருக்க குமார் நேரே அங்கே சென்றவன், " என்ன மச்சி பல ஐட்டம் இருக்கு..வாசனையே தூள் கிளப்புதே "...என்று கேட்க

மனுவோ முழித்து , "அது வேலைக்கார அக்கா செஞ்சு வெச்சிட்டு போனாங்க டா"...

"இது என்ன மச்சி ரெண்டு பிளேட்ல சாப்பாடு ஆகி இருக்கு யாராவது இருக்காங்களா ??"...என்று ராம் சந்தேகமாக கேட்க

அச்சோ குடைய ஆரம்பிச்சுட்டாங்களே என நெனைத்தவன், " அது அந்த வேலைக்கார அக்கா சாப்பிட்டுட்டு இருந்தாங்க ஏதோ அவசரம்னு இப்போ தான் டா கிளம்பினாங்க.. நான் தான் வாஷ் பண்ணிக்கறேன் நீங்க போங்கன்னு சொல்லி அனுப்பி வெச்சேன்"... என்று வாய்க்கு வந்ததை உலறி கொட்டி கொண்டே வெண்ணிலா உண்டதையும்  , அவன் உண்டதையும் எடுத்து சின்ங்கில் இட்டவன் திரும்பி பார்க்க குமார் மனுவின் அறையை திறந்து கொண்டு இருந்தான்..

"அடேய் என்ன டா பண்ற".. என்று மனு அலறி வேகமாக வெண்ணிலா ஒளிந்து இருந்த மனுவின் அறை வாசலில் போய் கையை வைத்து மறைத்து நிற்க,

"ஏன் டா பாத்ரூம் போறேன் டா "..என்க

பாத்ரூம் எல்லாம் உன் வீட்டுலே போயிட்டு வர மாட்டியா டா என்று நொந்தவன்

"அந்த பாத்ரூம் வேலை செய்யல அந்த ரூம்க்கு போ "..என்று விரட்ட

என்ன இவன் வந்ததுல இருந்து ஒரு மார்க்கமா இருக்கான் என்று குமார் அவன் முகத்தை பார்த்து கொண்டே வெண்ணிலா தங்கி இருந்த பாத்ரூமுக்குள் சென்றவன் சற்று நேரத்தில் வெளியே வந்து, " என்ன மச்சி ஒரு பொண்ணு தங்கி இருந்த ரூம் மாதிரி பொண்ணு ஸ்மெல் வருது"... என்க,

மனுவின் முகம் அப்பட்டமாக டென்ஷனை தத்து எடுத்து கொண்டாலும் அவர்கள் முன் காட்டி கொள்ளாமல், ஐயோ நோண்ட ஆரம்பிச்சுட்டாங்களே என மனதுக்குள் நொந்த மனு ,"டேய் யாரு டா இங்க வர போறாங்க..வேலைக்கார அக்கா தான் டா லாஸ்ட்டா கிளீன் பண்ணினாங்க அதை வெச்சு சொல்லுவ போல ".. என்று சிரித்து சமாளிக்க,

ராம் உணவை கண்டதும் அப்படியே ஒரு பிடி பிடிக்க கூடவே குமாரும் ஒரு பிடி பிடித்தான்..இங்கே மனுவுக்கு முதன் முறையாக நண்பர்கள் மீது கோபம் வந்தது அவன் மனைவி செய்த உணவை ரசித்து கூட உண்ண விடாமல் தொல்லை இப்போது அவர்கள் வெட்டி விழுங்குவதை அவனால் பொறுத்து கொள்ள முடியவில்லை..

அதிலும், " டேய் அந்த அக்கா சூப்பரா செஞ்சு இருக்காங்க டா"... என பாத்திரத்தை குமார் அவனது தட்டில் கமர்த்த இங்கே மனுவின் வயிறு எரிந்தது...அங்கே இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கேட்டு கொண்டும் சாவி துவாரம் வழியாக பார்த்து கொண்டும் இருந்த வெண்ணிலாவுக்கு அவர்களிடம் மாட்டி விடுவோமா என்ற பயம் மட்டும் இருக்க, அவர்கள் இருவரும் உண்ணுவதை பார்த்து அவங்களுக்கு நல்ல பசி போல என்று அவர்கள் மீதி இரக்கபட்டாலும் மனு அங்கே டென்ஷன் நிறைந்த முகத்தோடு நிற்பதை பார்த்து, " அவங்க வேற சரியாவே சாப்பிடல இவங்க வேற அவருக்கும் கொடுக்காம சாப்பிடறாங்க "...என்று அவளும் அவள் பங்கிற்கு வறுத்தெடுத்து கொண்டு அப்படியே கதவுக்கு அடியில் அமர்ந்து கொண்டாள்...

அப்போது அவள் அவனது அறையை பார்க்க அது மிக சுத்தமாக இருந்தது சுத்தம் அவனுக்கு இல்லை என்பது ஊர் அறிந்த விஷயமே என்றாலும் சற்று முன் அவள் சுத்தம் செய்ததால் அந்த அறை மிக அழகாக ஜொலித்தது..

ஒரு பக்க சுவரில் முழுவதும் அவனுடைய போட்டோக்கள்..மறுபக்கம் முழுவதும் அவன் விளையாட்டில் ஜெயித்து பெற்ற பரிசுகளும் கோப்பைகளும்..மெல்ல அந்த போட்டோக்களை எல்லாம் வெண்ணிலா பார்வையிட அதில் அவனும் அவனது அம்மா அப்பாவுடன் எடுத்த புகைப்படம் பின் அவன் விளையாட்டில் ஜெயித்து கோப்பையுடன் நின்று கொண்டு இருந்த புகைப்படம் அவளை கவர அப்படியே பார்வையை சுழல விட நண்பர்கள் உடன் சிரித்த முகத்தோடு நின்று கொண்டு இருந்த மனு பின் அவன் மட்டும் கரு நீல டி ஷர்ட் அணிந்து கொண்டு சிரித்த முகமாக ஒரு மரத்தின் மீது இலேசாக சாய்ந்தபடி கைகளை கட்டி கொண்டு நின்று கொண்டு இருந்த புகைப்படம் அவளின் மனதை மயக்க அந்த புகைப்படத்தையே பார்த்து கொண்டு இருந்தவளுக்கு அதை தொட்டு பார்க்கும் ஆவல் எழ மெல்ல கைகளை உயர்த்தி தொட என்னவோ அவன் முகத்தை தொட்ட உணர்வு அவளுள் எழுந்தது..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top