Share:
Notifications
Clear all

மன்மதன் 33

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

 

அத்தியாயம் : 33

இது அவளுக்கே புரியாத உணர்வு அவனை பிடித்து இருக்கிறதா என்று கேட்டால் அவளிடம் விடை இல்லை..ஆனால் அவனின் சிரித்த முகம் அவளுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்ததோ என்னவோ உண்மை தான் ஆனால் அதை அவள் மனம் ஒத்து கொள்ளவில்லை தாலி கட்டியதால் வந்த ஈர்ப்பு என்றே வெண்ணிலா நினைக்க அப்படியே அதற்கு அருகில் இருக்கும் போட்டோவை பார்க்கும் போது அது மாயாவின் கழுத்தில் கையை போட்டு அவளை கிட்டத்தட்ட அணைத்தபடி நின்று கொண்டு இருந்தான்..அந்த நொடி அவள் மனம் சற்று முன் இருந்த இளக்கம் போய் இது தான் எதார்த்தம் என நினைத்தவள் ஒரு விரக்தி புன்னகையுடன் அவ்விடம் நகர்ந்தாள்...

அதற்குள் அவளை வருத்தப்பட வைக்க அவளது கணவனான மனுவிற்கு எண்ணம் இல்லை போலும் அறைக்கு வெளியே அவனுடைய சத்தம் அந்த பிளாட் முழுவதும் கேட்டு அவளது கவனத்தை அந்த பக்கமாக இழுத்தது..

மெல்ல மீண்டும் கதவின் ஓட்டை துவாரம் வழியாக வெண்ணிலா பார்க்க அவள் அதிர்ந்து விட்டாள்..

ஏனெனில் அவள் கண்ட காட்சி அத்தகையது ...விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு இருக்க குமார் டிவிக்கு அருகில் அமர்ந்து இருந்து அவனது கண்கள் டீவியிலே நிலைத்து இருந்தது...

ஆம் அங்கே ராம் மற்றும் குமார் சேர்ந்து பலான காட்சிகள் கொண்ட மாசலா படம் ஓடிக்கொண்டிருக்க  மனுவின் சத்தம் தான் விண்ணை பிளந்து கொண்டு இருந்தது..

"டேய் இதை ஆப் பண்ணு டா"...

"என்ன நீ இன்னிக்கு ஒரு மார்க்கமா இருக்க எப்போவும் நீ தான் டா இது மாதிரி பார்க்கலாம்னு கூப்பிடுவ"... என்று சமயம் பார்க்காமல் ராம் மனுவின் இமேஜை டேமேஜ் செய்ய மனுவோ வேகமாக அவனது அறை பக்கம் திரும்பி அவளுக்கு கேட்டு இருக்குமோ என ஒரு நொடி அதிர்ந்தவன் அவளை பிறகு சமாளித்துக் கொள்ளலாம் என நினைத்து அவன் இவர்கள் இருவரையும் எப்படியாவது வீட்டை விட்டு துரத்த வேண்டும் என எண்ணினான்......

ஆனால் அதற்குள் வெண்ணிலாவும் டீவி காட்சியை கண்டு, " ஐயோ".. என்று கத்த அந்த சத்தம் கேட்டு ராம் மற்றும் குமார் டிவியின் சத்தத்தை காட்டிலும் அதிகமாக அவளது குரல் வர அந்த சத்தம்

வந்த தசை பக்கம் திரும்பி இவனது அறையை அவர்கள் பார்க்க இவனோ வேகமாக அங்கே சென்றது போய் அங்கே சென்று நின்றவன் ,

"அதுக்குத் தாண்டா சவுண்ட் கம்மி பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க சொல்றேன் நீங்க கேட்கவே மாட்டேங்கறீங்க ஊருக்கே கேக்குது"... என்று கூறவும் அவர்கள் நம்பாமல் அவளது அறையை பார்க்க

"ஏதோ சத்தம் உன் ரூமுக்குள்ள இருந்து தான் வருது கதவை தொற "...என்று குமார் சொல்ல

மனுவோ , "யாரும் இல்ல டா "...என்று கதவை அடைத்தபடி நின்று கொள்ள,

"

சரி டா கதவை தொற நாங்க நம்புறோம் "..என்று வம்படியாக கதவை திறக்க மனு இன்று தொலைந்தோம் என்று நினைத்து கதவை திறக்க அங்கே அவளை காணவில்லை...எங்கே போய் இருப்பா என அவனது கணக்கிட்டு கொண்டு இருந்தாலும் அவனது மூளையோ வேறு யோசித்தது...

உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட மனு , "பாருங்க யாரும் இல்ல"... என்று குமார் தலையில் அடிக்க,

அவர்கள் இருவரும் சேர்ந்து, " இல்லையே சத்தம் வந்துச்சே "...என்று மீண்டும் அதிலே நிற்க

அவனோ பேச்சை மாட்டும் பொருட்டு," நாளைக்கு காலைல எங்க அம்மா வீட்டுக்கு  வந்துருவாங்க "..

"அதுனால கிளம்புன்னு சொல்ல வரியா".. என்று குமார் கேட்க

"ஆமாம் டா கிளம்புங்க தான் சொல்றேன் முதல இந்த கருமத்தை ஆப் பண்ணுங்க".. என்று கூறி அவர்கள் இருவரை மெல்ல ஹாலுக்குள் அழைத்து வந்தவன் டிவியை அணைக்க,

"என்ன மச்சான் உன் அம்மா தானே எதுக்கு இப்படி பயப்படுற என்னமோ பொண்டாட்டிக்கு பயப்படுற மாதிரி நடக்கிற "...என்று ராம் கேட்டான்.. ஏனெனில் அவர்களுக்கு தான் தெரியுமே அவர்களின் நண்பனான மனுவை பற்றி.. அவர்களே கிளம்புகிறேன் என்று கூறினாலும் வம்படியாக அவர்களை பிடித்து வைப்பவன் இப்போது அவர்களை துரத்தி விடுகிறான் என்றால் ஏதோ இருக்கும் என்று அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்..

நண்பர்களின் பார்வை பரிமாற்றத்தை எல்லாம் கவனித்தில் கொள்ளாமல் இருந்த மனுவோ, " அடேய் பாவி பொண்டாட்டி தான் டா கிளம்புங்க டா இந்நேரம் அவ இதை எல்லாம் பார்த்து இருப்பாளே "..என்று சற்று முன் கதவுக்கு கீழே சிறு இடைவெளியில் நிழல் ஆடுவதை வைத்தே கணக்கிட்டு கொண்டு இருந்தவன் கிட்டத்தட்ட நண்பர்களை ," வெளியே கொஞ்சம் வேலை இருக்கு".. என்று வாய்க்கு வந்த பொய் எல்லாம் கூறி ஒரு வழியாக அனுப்பி வைத்தான்...அவர்களும் இவனுக்கு என்ன ஆகிற்று என்று சந்தேகத்துடனே அவ்விடம் நகர்ந்தனர்...

கதவை அடைத்து விட்டு இனி இவளை வேற சாமளிக்கணுமே என நொந்து அவளை தேடி செல்ல அங்கே அவளோ பலான காட்சிகளை கண்ட அதிர்ச்சியில் வாயை பிளந்தபடி நின்று கொண்டு இருந்தாள்... பாத்ரூமில் ஒளிந்து இருப்பாள் போலும் அங்கே தான் கதவை திறந்து கொண்டு இவனுக்காக காத்து கொண்டு இருந்தாள் வெண்ணிலா...

அவளின் அதிர்ச்சியான முகத்தை கண்டு முழுசா பார்த்துட்டா போல என நக்கலாக சிரித்தபடி அவள் முன் சொடக்கு இட்டு அவளது கன்னத்தை தொட்டு வருட,

அவளோ அவனை முறைத்து பார்த்து, " என்னை தொடாதீங்க சீ நீங்க இவ்ளோ கேவலமான ஆளுன்னு எனக்கு தெரியாம போச்சு"....

என்று சூடாக கூற

"தெரிஞ்சு இருந்தா என்ன பண்ணி இருப்ப ???...காலேஜ் படிக்கிற பசங்க அப்படி இப்படின்னு தான்  இருப்பாங்க".. என்று கூற,

"அதுக்குன்னு இப்படியா "...என்று வாய் கூறினாலும் அவளால் ஒப்பு கொள்ள முடியாமல் அவள் விலகி செல்ல அவனோ விடாமல் அவள் கையை பிடித்து  , "ரொம்ப பண்ணாத...அவ்வளவு ஏன்  உன் அண்ணன் கூட இப்படி தான் இருப்பான் எல்லா பசங்களும் இந்த வயசுல இப்படி எல்லாம் தான் இருப்பாங்க ".. என்று கூலாக கூறவும்

அவளோ பொங்கி விட்டாள், "என் அண்ணன் எல்லாம் உங்களை மாதிரி இல்ல...கல்யாணம் பண்ணியும் பொண்டாட்டி மேலே ஒரு சுண்டு விரல் கூட படாமல் தள்ளி இருக்காங்க நீங்க அப்படியா ??"....என்று கேட்க

"ஏன் எனக்கு என்ன குறைச்சல் என்னோட சுண்டு விரலும் தான் உன் மேலே படல "....என்று தனது சுண்டு விரலை அவளது கண் முன்னே ஆட்டி கொண்டு நக்கல் சிரிப்புடன் கூற,

அவளோ வாய்க்குள், " ஆமாம் அதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல ..சுண்டு விரல் மட்டும் தான் படல மீதம் எல்லாமே பட்டுடுச்சு"...என்று முனக,

அந்த நேரம் அவன் செய்த சில்மிஷம் எல்லாம் கண்முன் வந்து போக மீண்டும் அவள் கன்னம் சூடேறி அவ்விடம் நகர முயல அவனை காணும் போதெல்லாம்  சிவக்கும் அவளின் சிவப்பை ருசி பார்க்கும் ஆவல் அந்நொடி அவனுள் எழ சரியோ தவறோ நினைத்ததை நினைத்த நேரம் முடிக்கும் பழக்கம் உடையவன் அவளை பிடித்து இருந்த பிடியில் சற்று அழுத்தம் கொடுத்து தன்னோக்கி அவளை இழுக்க அவனது எதிர்பாராத செயலால் அவளும் அவன் மீதே மோத மனு அவளை மலைப்பாம்பு போல வளைத்து பிடித்தான்...

நொடிப்பொழுதும் தாமதிக்காமல் அவளது முகம் நோக்கி குனிய, " அவளோ விடுங்க என்னை "...என்று அலறி விலக முற்பட்டாள்...

விடுவானா அவன் அவன் நினைத்ததை முடிக்க வேண்டுமே மெல்ல அவன் ரசித்த அவளின் கன்னச்சிவப்பின் மீதே தனது இதழ்களை பதித்தவனுக்கு மேலும் அவளது அதரத்தை ருசிக்கும் ஆவல் கொள்ள அதையும் ருசித்தான்...நீண்ட நெடிய இதழ் யூத்தம்..கிட்டத்தட்ட இரு முறை தடையான முத்தம் இப்போது அவனுக்கு கிடைக்க அவளுள் புதைந்தான் மனு...

அந்த சமயம் அவன் மீது கொலைவெறியில் இருந்த அவளும் அவனுக்கு அவள் அறியாமலே இயைந்து கொடுத்து கொண்டு இருந்தாள் என்றே கூற வேண்டும்...

ஆம் அவனது நெருக்கமே அவள் துவள போதுமானதாக இருக்க சற்று முன் அவள் கண்ட புகைப்படத்தில் எப்படி சிரித்து அவளை மயக்கி இருந்தானோ அதே போல அவளை மயக்க அவள் ஒரு நொடி மயங்க அதை பயன்படுத்தி மேலும் அவளது மனு கழுத்து வளைவில் புதைய அவள் அவனது சட்டையை முறுக்கி பிடித்து கொண்டு இருந்தாள்...

மெல்ல அவனது நாசியும் , உதடும் அவளின் முகத்தில் கோலமிட்டு கொண்டு இருந்தன...இதே நிலை இன்னும் ஒரு பத்து நிமிடம் தொடர்ந்தால் எந்நேரமும் (கரையை )அவர்கள் கிழித்த கோட்டை அவர்கள் இருவருமே கடக்கலாம் என்ற நிலையில் தான் இருவரும் இருந்தனர்...வெண்ணிலாவிற்கு புது வித அவஸ்தையை அவன் கொடுத்தான் என்றால் அவனோ அவளுள் மேலும் மேலும் புதையுண்டான்...அதற்கு தடையாக அவள் அணிந்து இருந்த துப்பட்டாவை விலக்கி தூர எறிந்து இருந்தான் மனு...மெல்ல அவளை நெருங்கி நின்று அவளை ஆலிங்கனம் செய்ய துவங்கினான்...மெல்ல அவனது கைகள் அத்து மீறி அவளை வசியப்படுத்தி கொண்டு இருந்தது தாலி கட்டிய கணவன் தொடுவதால் என்னவோ அவளும் அவனது மகுடிக்கு மயங்கி கொண்டு இருந்தாள்...

அதற்குள் வெண்ணிலாவின் அலைபேசியின் சத்தம் கேட்டது ..அவனின் இனிமையான நொடியை தடுத்தது வேறு யாருமல்ல அசோக் ...அசோக்கின் எண்ணை கண்டதும் நொடி பொழுதில் அவளிடம் இருந்து பதறி விலகி அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான்...

அவன் சென்றதும் தன்னை நிலைப்படுத்தி கொள்ள முயற்சி செய்த அவளுக்குள் பெரிய போராட்டமே நடந்தது... போன் ஒரு பக்கம் அடித்து கொண்டு இருந்தாலும் அவளால் எடுக்க முடியவில்லை அவள் மனம் முழுவதும் மனுவிடமே இருந்தது...

சற்று முன் தானும் தானே அவனுடன் இயைந்தேன் என்ற உண்மை அவளை சுட , தான் எப்படி அவனுடன் என அவள் நினைக்க அவளுக்கு அந்த நொடி தான் என்ன மாதிரி உணர்வை கொண்டு உள்ளோம் என்று பிரித்து அறிய முடியாதபடி நிலையில் அவள் இருந்தாள்...

கூடவே மாயாவுக்கு தான் நம்பிக்கை துரோகம் செய்கிறோம் என்று புரிப்படவும் கண்ணீர் வர இதென்ன அசடு போல எப்போதும் அழுகை என சில மணி துளிகளில் தன்னை தேற்றியவள் இனி இவன் அருகாமையை தவிர்க்க வேண்டும் என இவள் முடிவு செய்ய காலன் வேறு ஒன்று அல்லவா முடிவு செய்து இருக்கிறது...

பால்கனியில் இருந்து அவன் அந்நேரம் அதை தான் சிந்தித்து கொண்டு இருந்தான்...அவன் அவளின் அருகாமையை ரசிக்க துடிக்கிறான் இடையில் வேறு அசோக்  அதிலும் இவர்களின் காதல் தடையாக அமைய அவனும் அவளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என அந்த நொடி முடிவு செய்தான் மனு...

அவன் அந்த நொடி  அவ்வாறு தீர்மானம் எடுத்து இருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் அவன் மாறுவான் என்பது அவனே அவனிடம் அறியாத ஒரு விஷயம்..

இப்படி ஆளுக்கு ஒரு திசையில் இருந்து அவரவர் வாழ்க்கை எண்ண ஓட்டங்களை குறித்து சிந்தித்து கொண்டு இருக்க மீண்டும் அவன் வீட்டு காலிங்பெல் ஒலித்து அவர்களின் கவனத்தை திசை திருப்பியது...

அதுவும் வேகமாக அடித்து கொண்டே இருக்க யாரது என்று கடுப்புடன் மனு கதவை திறக்க அங்கே செழியன் கோபத்துடன் நின்று கொண்டு இருந்தான்..

கூடவே கையில் பெரிய கட்டுடன் மாலதி நின்று கொண்டு இருக்க அவனுக்கு பின்னால் இருந்து யார் வந்து இருக்கிறார்கள் என  பார்த்து கொண்டு இருந்த வெண்ணிலா செழியனை கண்டதும் ஓடி வர அதற்குள் மாலதியை பார்த்து , "மேம்".. என மனு அழைக்கும் முன் வெண்ணிலா," அண்ணி உங்களுக்கு என்ன ஆச்சு"... என மாலதியின் கையை பார்த்து பதறி கேட்க அண்ணியா  என்று அதிர்வது மனுவின் முறையானது...

என்னது மாலதி மேம் அவனோட மனைவியா என்று மனு செழியனை பார்க்க அதே நேரம் இவர்கள் இருவரையும் ஒரே வீட்டுக்குள் இருப்பதை பார்த்த மாலதியும் அதிர்ந்தாள்...

மல்லிகை மணம் வீசும்…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top