Share:
Notifications
Clear all

மன்மதன் 59

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 59

அவனுக்கே இப்படி என்றால் பாவம் சிறுப்பெண் நிலா அவளுடைய நிலைமையை கூறவா வேண்டும்..அவள் நித்தமும் அவனை நினைத்து வாடினாள்..உடல் அசதி ஒரு பக்கம் மன வருத்தம் மறுபக்கம் என அவள் அல்லாடினாள்..அவளுக்கு என்று ஒரு ஆறுதல் அவளுடைய வயிற்றில் வளரும் குழந்தை தான்...

நித்தமும் அவளுடைய கனவில் வந்து தொல்லை செய்ய அதோடு அவன் கூறிய காதல் மொழிகளை எண்ணி வாழ்க்கையை ஓட்டி வருகிறாள்..

அவன் அவளை விட்டு செல்லும் போதே நிலாவிடம் , "உனக்கு எப்போ என்னை கூப்பிடனும்னு தோணுதோ அப்போ கூப்பிடு நான் வரேன் "..என்று கூறி விட்டு தான் சென்று இருந்தான் ஆனால் அவள் தான் இன்று வரை அழைக்காமல் இருக்கிறாள்..

அவளுக்கு  அவனிடம் ஈகோ எல்லாம் இல்லை அவனுக்கான சமயத்தை கொடுத்து அமைதியாக இருக்கிறாள்..

இதற்கு இடையே அவர்கள் வீட்டில் தான் எப்போதும் மனுவை கரித்து கொட்டி கொண்டு இருந்தனர்..அதை தான் அவளால் தாங்கி கொள்ள இயலவில்லை சும்மாவே அவனை விட்டு கொடுக்க மாட்டாள் இப்போது விட்டு கொடுப்பாளா என்ன பொறுத்து பொறுத்து  பார்த்தவள் ஒரு நாள்  பொறுமை இழந்து, " இந்தா பாருங்க என் புருஷன் அவரு மரியாதை இல்லாமல் ஒருத்தர் பேசினாலும் நான் சும்மா இருக்க மாட்டேன் இப்போ நான் ஒரு போன் கூப்பிட்டா போதும் மனுசன் இங்க வந்து நிப்பாங்க எங்களுக்கு உள்ள எந்த பிரச்னையும் இல்லை..அதுனால யாராவது இனி அவரை பத்தி ஏதாவது பேசினிங்க அவ்வளவு தான்".. என்று வெகுண்டு எழுந்தாள்...

"அப்போ கூட்டிட்டு போக சொல்ல வேண்டியது தானே இங்கே நின்னுட்டி அவனை பத்தி பீத்திக்கிட்டு திரியற மாசமா இருக்கான்னு கூட தெரிஞ்சே விட்டுட்டு போறானாம் இதுக்கு இவ சப்போர்ட் "..என வெண்ணிலாவின் அம்மா கேள்வி கேட்க..

"அவங்க நான் நினைச்சா போதும் வந்திடுவாங்க அதுக்கு உங்க யார் சப்போர்ட்டும் தேவை இல்லை எனக்கு...உங்களுக்கு அப்படி நான் இங்கே இருக்கிறது கஷ்டமா இருந்தா சொல்லுங்க நான் எங்கே வீட்டுக்கு போறேன் "...என்று கூற வெண்ணிலாவின் மொத்த குடும்பமே வாயை அடைத்து கொண்டனர்...

அதிலும் அவளின் நடவடிக்கைகளை கண்ட செல்லக்கிளி மேற்கொண்டு அவளிடம் எதுவும் கேட்க வேண்டாம் என்று கூற அதன் பின் யாரும் அவள் முன் அவனுடைய பெயரை இழுப்பது இல்லை..

நிலாவை பொறுத்தவரை அவனுடைய ஆசை எல்லாமே தெரிந்து விட்டது...அவனுடைய மனதில் நான் தான் இருக்கிறேன் என்பதும் அவளுக்கு புரிந்து விட்டது வேறு என்ன வேண்டும் நிலாவுக்கு அவனுடைய அருகாமை இல்லாத குறையை தவிர வேறு எதுவும் அவளை பெரிதாக தாக்கவில்லை..

  அதிலும் அவளுக்கு சில காலம் விலகி இருந்து தான் நீ என் மேல் வைத்திருக்கும் காதலை உணர்த்த வேண்டுமா என்று தான் தோன்றினாலும் முதல் இரு நாட்கள் அவளும் தன்னால் தானோ என்று வருத்தப்பட்டாலும் அடுத்த நாட்களில் அவள் அவன் கூறிய வார்த்தைகளையே திரும்ப திரும்ப நியாபகப்படுத்தி அவனது நினைவுகளோடு வாழ துவங்கினாள்..

அவன் அவளை தனியாக விட்டு விடவில்லையே அவளுக்கு துணையை அளித்து உள்ளானே..அதில் அவனது நினைவுகள் எப்போதும் அவளிடம் இருக்கும் என நினைத்து இருக்க அவளும் அவனை போல தானே அவனை மறந்தால் தானே நினைப்பதற்கு..

நிலாவுக்கு குழந்தையை வைத்து தான் அவனை நினைக்க வேண்டுமா என்ன??

இப்படி ஒருவரை ஒருவர் நினைத்து வாழ்ந்து கொண்டு இருக்க நிலாவுக்கு இரு நாட்கள் முன் இருந்து அவனுடைய நினைவு சிலிர்த்து கொண்டு எழுந்தது ..

அவனை காண வேண்டும் என்று அவன் மார்பில் கண்ணீர் சிந்த வேண்டும் நீ வேண்டும் எனக்கு என்று அவனிடமே கூற வேண்டும் என்று எல்லாம் தோன்றியது..

ஆனால் இப்போது அழைக்க மாட்டேன் குழந்தை பிறந்து அவர்களின் ஆத்மார்த்தமான காதலுக்கு பரிசாக குழந்தையை கையில் எடுத்த பின்னரே அவனிடம் பேசுவேன் என்று ஒரு குட்டி பிடிவாதத்தோடு இருந்தாள் வெண்ணிலா..

அதற்கு சாட்சியாக இதோ இன்று அவர்கள் இருவரின் மகன் பூமியில் அவதரித்து விட்டான்...ஆனால் நிலாவுக்கு தான் பிரசவம் ஆகி இருக்க நிலா மயக்கத்துக்கு சென்று விட்டாள்...

அவள் மனதுக்குள் அவள் கணவனை அழைக்க வேண்டும் என்ற எண்ணமே ஆழ் மனதில் புதையுண்டு கிடக்க அவள் கணவன் வராமல் போய் விடுவானோ குழந்தை பிறந்தது அவருக்கு தெரிந்து இருக்குமா என்று எல்லாம் அவளின் ஆழ் மனம் அவளிடமே கேள்வி எழுப்ப ஒரு வேளை அவனுக்கு விஷயம் தெரியாமல் போய் விட்டால் என்று நினைக்கும் போதே நிலாவின் கண்களில் கண்ணீர் கசிந்தது..

இதை எல்லாம் முன்பே கணித்து விட்டானோ என தெரியவில்லை ஆனால் இதோ மனு இந்தியாவில் கால் வைத்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்து இருந்தது..

மிக சரியாக சொல்ல வேண்டுமெனில் அவளுடைய பிரவசம் முடிந்து மகன் பிறந்த நேரம் மனு மதுரை விமான நிலையத்தில் இறங்கி இருந்தான்..

இன்னும் ஒரு இரண்டு மணி நேரத்தில் மனு அவளை அனுமதித்து இருக்கும் மருத்துவமனைக்கு சென்று விடுவான் வெகு ஆவலாக அவன் பயணம் செய்து கொண்டு இருந்தான்..இது அறியாத அவனது அம்மா பல்லவி போன் செய்து மனுவுக்கு தெரிவித்தார்..

விஷயத்தை கேள்வி பட்டதும் மனுவின் மனதுக்குள் இனம் புரியாத உணர்வு எழ அவனின் காதலுக்கு கிடைத்த பரிசு அவனது குழந்தை ..இந்த நொடி அவனுக்கு அவனவளை காண வேண்டும் என்ற வேகம் மட்டுமே மனுவினுள் இருந்தது..

அதிலும் அவனுக்கு சிறு வருத்தம் எழுந்தது என்னவோ உண்மை தான் எப்படியோ அவளுடைய பிரசவ நாளை அறிந்தவன் அந்த நாளில் அவள் அருகில் இருக்க வேண்டும் என நினைத்து தான் இரு நாட்கள் முன்னே அவன் வர அதற்குள் அவனுடைய மகனுக்கு மனுவை போல பொறுமை இல்லை போலும் தந்தையின் கால் சொந்த மண்ணில் பதிந்ததும் அவன் ஜனித்து விட செல்லமாய் மனதுக்குள் தன் மகனை வைதவன் மனம் அப்படியே எப்போதும் போல அவள் மனைவியிடம் சென்றது..

அவளுக்கு மிகவும் வலித்து இருக்குமோ அவள் துடித்து இருப்பாளோ என்று அவளை பற்றிய எண்ண ஒட்டங்களிலே மனு பயணிக்க இதோ மருத்துவமனையும் வந்து விட்டது...

மனு பயணம் செய்த கார் மருத்துவமனை வாசலில் நிற்க முதலில் கண்டது செழியன் மற்றும் சண்டி தேவனை தான் ..

அவனது தோற்றமே கூறியது அவன் நேராக இங்கே தான் வந்து இருக்கிறான் என்று அவன் இல்லாத பேசிய அனைத்து வாய்களும் அவனை கண்டதும் மூடி கொண்டது என்னவோ உண்மை தான்..செழியன் கூட சற்று முன் கொதித்த அவனது ரத்தம் இப்போது ஆறி போய் நின்று கொண்டு இருந்தான்..

மனுவுக்கு இவர்களை பற்றி எல்லாம் ஒரு சிறு துளி கவலை இல்லை ஒன்றுமே நடக்காதது போல அவர்கள் அருகில் வந்தவன் , "எந்த ரூம்ல நிலா இருக்கா "..என்று இயல்பாக கேட்க

செழியனோ முகத்தை திருப்பி நிற்க , " டேய் செழியா அது தான் மாப்பிளை கேக்கிறார்ல அவரை அழைச்சிட்டு போ "...என்று கூறிய சண்டித்தேவன் மேலும் மனுவை பார்த்து, " இன்னும் எவ்வளவு நேரம் இருக்க போறீங்க"... என்று கேட்க

மனுவுக்கு முதலில் அவருடைய கேள்வி புரியாத நிலையில் பின் அவனுக்கு புரிய, " மே பி இரண்டு மாசம் அப்போ தான என்னோட பொண்டாட்டியையும் ,புள்ளையும் கூட்டிட்டு போக முடியும்"... என்று கூற இப்போது அதிர்வது செழியன் மற்றும் சண்டித்தேவனின் முறை ஆனது..

அவர்கள் இருவரும் மனம் மகிழ்ந்து அவனுக்கு வழி விட மனுவும் சிரித்து கொண்டே உள்ளே செல்ல பெண்கள் படை அவனை பிடித்து கொண்டது..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top