மன்மதன் 60
அத்தியாயம் : 60
அதுவும் கண்ணீரிலே கேள்வி கேட்க அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடை இல்லாமல் தடுமாறியவனை செழியன் தான் காப்பாற்றி நிலா படுத்து இருக்கும் அறைக்குள் அனுப்பினான்..
கதவை திறந்தும் உள்ளே சென்றவன் விழிகள் அவள் அருகில் தொட்டிலில் படுத்து இருக்கும் குழந்தை மீது செல்லாது தன்னவள் மீதே படிந்தது..
அதுவும் ஒல்லியான தேகத்தை கொண்டவளுக்கு சற்று தசை வந்தது போல தோன்ற அயர்வு காரணம் அவள் மயக்கமாக படுத்து இருந்தாலும் அந்த நேரம் கூட அவளை மயக்கி கொண்டு தான் இருந்தாள் நிலா..
மெல்ல அவள் அருகே சென்றவன் கட்டிலுக்கு அருகே இட்டு இருக்கும் நாற்காலியை அவளுக்கு அருகே அமரும் விதத்தில் நகர்த்தி போட்டவன் அவள் அருகே அமர்ந்து வலியால் துடித்து இருப்பாள் போலும் கையை இன்னமும் முறுக்கி இறுக்கி பிடித்து கொண்டு படுத்து இருக்க அவள் கையை மெதுவாக எடுத்து அவனது கண்களில் ஒற்றி கொண்டான்..
"ரொம்ப வலிச்சுதா டி உன் இந்த சின்ன வயசில கஷ்டப்படுத்திட்டேன்ல நிலா இனி இப்படி செய்ய மாட்டேன் நிலா ..மனசு அளவிலும் உடைஞ்சு போய் இருப்ப இல்ல.. உன்னோட டெலிவரி சமயத்துல வரனும்னு இருந்தேன் டி அதுக்குள்ள உங்க இரண்டு பேருக்கும் என்ன அவசரம் நான் வர மாட்டேன்னு நீங்க இரண்டு பேரும் நெனைச்சுட்டீங்களா?? "...என்று கூறியவனுக்கு அவளது வேதனை பற்றி தெரிந்தும் அருகில் இல்லாமல் போனது வருத்தத்தை அளிக்க ,
"என்னை மன்னிச்சுடு உனக்கு எப்போவும் கஷ்டத்தை மட்டும் தான் நான் தரேன்".. என்று கூறும் போதே மனுவுக்கு கண்கள் கலங்க அவனது கண்ணீர் அவளது கைகளில் நனைய அந்த நொடி உயிர் இருந்தும் உயிரற்ற ஜடமாய் படுத்து கிடந்தவளுக்கு அவளது உயிர் அவளை தேடி வந்தது தெரிந்து விட்டதோ என்னவோ மெல்ல கண் விழிக்க அவள் முதலில் கண்ட காட்சியே அவனை தான்..
ஆம் இரண்டு நாட்கள் முன் மனக்கண்ணில் மனு வந்து அவளுடன் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தவளுக்கு அந்த காட்சி தற்போது உண்மையாகவே நடப்பதை கண்டு கண்களில் நீர் வர பார்க்க ஒரு வேளை கனவாக இருக்குமோ என்று மலங்க மலங்க விழித்தவள் மெல்ல கையை தூக்கி அவனை தொட அந்த நேரம் உடைந்து அழுது கொண்டு இருந்த மனு சட்டென நிமிர்ந்து அவளை பார்க்க இருவருக்கும் பேச்சு இல்லை..
பேசவே தேவையில்லை இதோ வார்த்தை மொழியை விட பார்வை மொழி ஆயிரம் கதை பேசுமே.. ஆயிரம் கதைகள் என்ன இரண்டு நிமிடத்தில் ஓராயிரம் கதைகள் இருவரும் பேசி இருந்தனர்..அதை கண்ட அவர்கள் இருவரின் அருமை தவ புதல்வன் அழ அப்போது தான் அவன் ஒருவன் இருப்பதையே இருவரும் உணர்ந்தனர்..
மனுவும் குழந்தையை வந்தது முதல் பார்க்கவில்லை நிலாவும் குழந்தையை இதுவரை பார்க்கவில்லை இதோ ஒரு சேர நான்கு கண்களும் சேர்ந்து அந்த சிறு ரோஜா குவியலை காண குழந்தை ஒரு நொடி இருவரையும் ஆழ்ந்து பார்த்து விட்டு மீண்டும் அழ துவங்கியது ...குழந்தையை முதன் முதலாக கண்டதும் இருவரின் மனதிலும் ஒரு பூரிப்பு எழுந்தது...அவர்களின் காதலின் சின்னம் அல்லவா அங்கே தொட்டிலில் ஆடி கொண்டு இருக்கிறது..
அதற்குள் குழந்தை நெளிய அதை கண்ட இருவரும் ஒரு சேர சிரிக்க மனு வந்த போது அவளது கையை பிடித்தவன் இதோ இப்போது வரை விடவில்லை இன்னும் விடும் உத்தேசமும் இல்லை...
"என்ன டி காதல் நல்லா வேலை செஞ்சது போல என்னை பார்க்காமல் கொஞ்சம் குண்டாகிட்ட "...என்று மனு நிலாவை பார்த்து கிண்டல் செய்ய
அவளோ அவனை பார்த்த சதோஷத்தில், " நான் ஒன்னும் தானா குண்டாகல உங்கனால உண்டானதால குண்டாகி இருக்கேன்"... என்று கூறியவள்
காதல் பொங்க அவனை பார்த்து தன் கையை பிடித்து இருக்கும் கையின் மீது அவளது கையை வைத்தவள், " எப்படி இருந்தீங்க நெஞ்சு நிறைய இவ்வளவு காதலை சுமந்துகிட்டு என்னை பார்க்காமல் எப்படி விலகி போக மனசு வந்துச்சு "...என்க
அவனோ மெல்ல அவள் அருகில் நெருங்கியவன் அவளின் முகம் நோக்கி குனிய அவளோ சுற்றும் முற்றும் பார்த்து பதறி வேணாம் என்று மறுக்க
அவனோ இதோ, " இந்த கண்ணை இதோ என்னை பார்த்ததும் துடிக்கிற இந்த உதடு என் மூச்சு காத்து பட்டாலே சிவக்கும் இந்த கன்னம் மொத்தத்தில் உன்னை இன்னும் அழகா இன்னும் காதலா இன்னும் உயிருக்கு உயிரா இதோ என்னை பார்த்ததும் துடிச்சியே இந்த துடிப்பு அதுக்காக தான் விலகி இருந்தேன் ..இனி விலகி போக மாட்டேன் "..என்று கூறியவன்
அவளை போல சுற்றும் முற்றும் பாராமலே அவள் நெற்றியில் இதழ் பதித்து மெல்ல கண்களுக்கு இறங்கி அங்கும் தன் இதழ்களை பதிக்க அவளும் அவனுக்கு வாகாக முகத்தை காட்டிய படி படுத்து கொண்டாள்..
அவனுடைய வயது மேலும் உந்தி அவள் கன்னங்களுக்கு செல்ல நிலா அப்படியே அவனது சட்டையை இறுக்கி பிடித்து இருந்தவளுக்கு அவளது கையில் போடப்பட்டு இருந்த ட்ரிப்ஸோடு அழுத்தம் கொடுக்க அவள் முகம் சுணுங்குவதை அறிந்தவன் சட்டென்று விலகி , " இப்போ இது போதும் மீதி நமக்கான நேரத்தில் வெச்சுக்குவோம் "...என்று கூறவும் அவர்கள் குழந்தை அழவும் சரியாக இருக்க அதற்குள் செவிலி மற்றும் வெண்ணிலாவின் தாய்,மாலதி மற்றும் பாட்டி அனைவரும் உள்ளே நுழைந்தனர்..
கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கு பிறகு,
"முடியாதுனா முடியாது என்னோட பொண்டாட்டி குழந்தையை அமெரிக்கா கூட்டிட்டு போய் தான் ஆவேன்".. என்று மனு வீடே அதிரும் படி கத்தி கொண்டு இருந்தான்..
"டேய் அவளே சின்ன குழந்தை அவளுக்கு ஒரு குழந்தை ..குழந்தையை எப்படி டா பார்த்துப்பா".. என்று பல்லவி குழந்தையை விட்டு பிரிய மனம் இல்லாமல் கூற அவருடனே வெண்ணிலாவின் மொத்த குடும்பமும் கூட்டு சேர்ந்து கொண்டது..
அவர்கள் அனைவரின் செல்ல கண்ணன் க்ரிஷாந்த்..அவன் பிறந்த நேரம் தான் குடும்பம் ஒன்றானது என்று அனைவரும் மனமார நினைத்து பாசத்தை கொட்ட அந்த செல்ல கண்ணனை தங்களிடம் இருந்து கூட்டி செல்ல போகிறோம் என்பதே அவர்கள் அனைவருக்கும் கசக்க குடும்பமே மனுவை எதிர்க்க துவங்கியது..
அதை பார்த்து நிலா சும்மா இருப்பாளா , "அது தான் அவங்க சொல்றாங்கல "...என்று கூறவும்
"மா உன் புருஷன் ஆயிரம் சொல்லுவான் அதுல சரி ஏது தப்பு ஏதுன்னு பிரிச்சு பாரு மா இல்லாட்டி கொஞ்ச நாள் முன்னாடி தேவையில்லாமல் பிரிஞ்சு இருந்தீங்களே அது போல ஆகிட போகுது "...என்று ரவீந்தர் கூற, அவருக்கு அவன் செய்த செய்கையை இன்று வரை உட்கொள்ள முடியவில்லை..
அதனாலே அவர் அவ்வாறு கூற மாமனார் மீது மரியாதை வைத்துள்ளதால் அமைதியாக இருந்தாள்..
அதற்குள் செல்லக்கிளி , "நான் குளிப்பாட்டினா தான் என் எள்ளு பேரன் சிரிப்பான்..நீ கூட்டிட்டு போறேன்னு சொல்றியே ராசா "..என்று மூக்கை சிந்திய படி கூற
"அவன் நான் தூங்க வெச்சா தான் தூங்குவான் "..என்று வெண்ணிலாவின் அம்மா கொடி பிடிக்க
செழியன் மற்றும் மாலதியோ இவர்களின் கூத்தை பார்த்து சிரித்து கொண்டு இருந்தனர்..மாலதிக்கு இப்போது ஏழாவது மாசம் அதனால் தாய்மையின் பூரிப்போடு நின்று கொண்டு இருந்தாள்..
மனுவோ தலையில் கை வைத்து, " உங்களுக்கு ஏதாவது சொல்லனுமா மா நீங்க என்ன செஞ்சா உங்க பேரன் அமைதியா இருப்பான் சீக்கிரம் சொல்லுங்க லிஸ்ட் போட்டடறேன்"...என்று கேட்டவனுக்கு தலையே வலிப்பது போல இருந்தது..
இவர்கள் அனைவரிடமும் இருந்து அவனது குடும்பத்தை பிரித்து கொண்டு செல்வது கடினம் என்பதை உணர்ந்தவன், " இதோ பாருங்க நான் போய் தான் ஆவேன் உங்க யாருக்கு எல்லாம் வர விருப்பம் இருக்கோ எல்லோரும் என் கூட வாங்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் இனியும் என் பொண்டாட்டி பையனை விட்டுட்டு இருக்கிற ஐடியா இல்லை".. என்று முடிவாக கூற
"குழந்தை சின்னதா இருக்கு இப்போ எப்படி கூட்டிட்டு போவீங்க".. என்று செழியன் தன் பங்கிற்கு கேட்கவும்
மனுவோ சிரித்து, " என்ன மச்சான் அன்னிக்கு கூட்டிட்டு போக சொல்லி சண்டை போட்டிங்க இப்போ கூட்டிட்டு போக வேணாம் சொல்றீங்க இப்போ நான் என்ன தான் செய்யறது "...என்று சிரித்தபடி கேட்க அனைவரும் சிரித்தனர்..
மனு கூறியது போல தன் மனைவி குழந்தையை அமெரிக்கா கூட்டி சென்றான்..கூடவே பெரியவர்கள் வருத்தப்பட கூடாது என்று தன் பெற்றோரை அழைத்து சென்றான்...குழந்தையையும் அவளையும் தாங்கு தாங்கு என்று தாங்கினான்..
குழந்தை செய்யும் அசுத்தத்தை கூட முகம் சுளிக்காமல் சுத்தம் செய்தான் மனு..அதை கண்டு நிலா கூட அவனிடம் , "நான் பார்த்துக்கறேன்". என்று கூற,
அவளை ஒரு கையால் அணைத்து, " நீ கஷ்டப்பட்டத்தை விட நான் ஒன்னும் அதிகம் கஷ்டப்படல நிலா..சோ செய்ய வேணாம்னு சொல்லாத "...என்று கூறி அவள் நெற்றியில் இதழ் பதித்து குழந்தைக்கான வேலைகளில் ஈடுபட்டான்..
இதை கண்ட பெரியவர்களுக்கும் பெரிய சந்தோஷமே..இது தானே அவர்கள் எதிர்பார்த்தது இவ்வளவு அன்னிநோனியமாக வாழ முடியுமா என்பது போல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தனர்..நாட்கள் வாரங்கள் ஆகி வாரங்கள் மாதங்கள் ஆகி மூன்று மாதம் கடந்து விட்டது..
மனுவின் மகனுக்கு இப்போது ஆறு மாதம் ஆகி விட ஒரு நாள் இரவு நிலா குழந்தையை உறங்க வைத்து அவனுக்கு பால் கொண்டு வந்து கொடுத்து எப்போதும் அவள் செய்வது போல அவனது பிளாங்கெட்டுக்குள் அவளும் நுழைய, "கிரிஷ் தூங்கிட்டானா"... என்று கேட்டு கொண்டே நிலாவின் கன்னத்தை அவனது கன்னத்தோடு உரச
அவனது இரண்டு நாள் சவரம் செய்யப்படாத தாடி குத்த அதில் சிலிர்த்தவள் மேலும் அவனோடு ஒன்ற அங்கே ஒரு இனிமையான தருணமாக அமைய இருந்தது..
அந்த நேரம் பார்த்து அவளிடம் இருந்து விலகிய மனு, "நிலா நீ படிக்கலையா டி உன்னோட படிப்பு என்னால லாஸ் ஆகிடுச்சி நீ இங்கே இருக்கிற காலேஜ்ல படிச்சாலும் சரி இல்லை நம்ம ஊர்ல போய் படிச்சாலும் சரி ஆனால் படிப்பை முடிக்கிற முடிச்சதுக்கு பின்னாடி தான் எல்லாமே "...என்க
நிலாவோ, " நான் படிக்கிறேன்ங்க அதுக்கு ஏன் நீங்க தள்ளி இருக்கீங்க"... என்று கேட்டே விட்டாள்..
ஆம் அவள் தான் கடந்த ஆறு மாதமாக பார்த்து கொண்டு இருக்கிறாளே அவனுடைய தவிப்பை.. காதலோடு அவள் அருகில் வருவான் ஆனால் சற்று நேரத்திலே விலகி விட இவன் இப்படி எல்லாம் செய்ய மாட்டானே என நெனைத்தவள் புரியாமல் முழிக்க
அவனோ , "இல்லடி அப்பா சொன்ன மாதிரி ஏதாவது குழந்தை வந்துடுச்சுனா..நீயே சின்ன பொண்ணு உன்னை கஷ்டப்படுத்தினது போதும் "...என்று முகம் சிவந்த படி கூற
அப்போது தான் நிலாவுக்கு புரிந்தது தனக்காக தான் அவன் பார்க்கிறான் என்று அவனது செயலில் மகிழ்ந்தவள் , "குழந்தை வராமல் இருக்க தள்ளி நிக்கனும்ன்னு அவசியம் இல்லைங்க பாதுகாப்பா கூட இருக்கலாம் "...என்று அவனை சமாதானம் செய்யும் விதமாக கூறியவளுக்கு அந்த வார்த்தையை கூறி முடிப்பதற்குள் முகம் சிவந்து விட அந்த நொடி அவள் கணவன் சிட்டாக வெளியே பறந்து சென்று இதோ அவளை தன்னுள் புதைத்து கொண்டான்...அவனின் வேகம் புரிந்தது அவனது காதலின் வேகம்..அவளும் அவனோடு ஒன்றி போனாள்..
காதலெனும் சோலையில் இரு குயில்கள் முத்து எடுத்து கொண்டு இருக்க அவர்கள் இதே காதலோடு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என வாழ்த்தி நாமும் விடை பெறுவோம்.. நன்றி..
* சுபம் *
