மன்மதன் 58
அத்தியாயம் : 58
மன்மதன் தேசத்து மல்லிகை
ஒன்பது மாதங்களுக்கு பிறகு
பொன்வானம் பன்னீர் தூவுவது போல மழை நீரை பூமியில் இறைத்து கொண்டு இருக்க எங்கு பார்க்கினும் குளுமையான ரம்மியமான இரவு பொழுது.. ரசிக்கும்படியான இரவாக பலருக்கும் அமைய அவள் ஒருத்தி மட்டும் வலியால் துடித்து கொண்டு இருந்தாள்..அவள் வேறு யாரும் அல்ல நிலாவே தான் ..பேறு கால வலியால் துடித்து கொண்டு இருந்தாள்..
"அம்மா....என்னை காப்பாத்துங்க.. நான் இப்போ செத்துடுவேன்".. என்று அவள் அலற
வெளியே நின்று கொண்டு இருந்த அவளது உறவினர்களோ அவளது சத்தத்தை கேட்டு துடித்து கொண்டும் ஆண்கள் கையை பிசைந்தும் பெண்கள் முந்தானையால் வாயை பொத்தி கொண்டு அழுகையை அடக்கி கொண்டு நின்று கொண்டு இருந்தனர்..நின்று தானே ஆக வேண்டும் பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லாத ஒன்று அல்லவா...
அவளை சுற்றி இருந்த செவிலியர்களோ , "மா கொஞ்சம் பொறுத்துக்கோமா புஷ் பண்ணுங்க அப்போ தான் குழந்தை சீக்கிரம் வெளியே வரும் "..என்று அவளை ஆறுதல் படுத்தியபடி மென்மையாக கூற
அவளோ , "முடியல நர்ஸ் ரொம்ப வலிக்குது".. என்று அழுதாள்..அவளால் வலிமையோடு போராட முடியாமல் போக அங்கே இருந்த தலைமை செவிலி மருத்துவரின் முகத்தை பார்த்து மருத்துவர் தலையை அசைத்ததும் மேடிட்டு இருந்த அவளது வயிற்றை கீழ் நோக்கி தள்ள வெளியே மழை கொட்டி எடுக்க இங்கே இவள் வலியால் துடிக்க தாயை கதறடித்து கொண்டு குழந்தை இந்த பூமியில் அவதரித்தது..
அயற்சி மிகுதியில் அவள் மயக்கமாக குழந்தையை பரிசோதித்து சுத்தப்படுத்தி வெளியே வெளியே அவளுக்காக காத்து கொண்டு இருந்த அவளது உறவினர்களிடம் குழந்தையை காட்ட குழந்தையை ஏந்திய வெண்ணிலாவின் தாய் சந்தோஷ மிகுதியில் ஆனந்த கண்ணீர் வடிக்க அனைவரும் மகிழ்ந்து கொண்டு இருக்கும் சமயம் வெண்ணிலாவின் அம்மா , "அவங்களுக்கு சொல்ல வேணாமா"... என்று தயங்கியபடி கேட்க
ஆண்கள் யாரும் பதில் அளிக்காமல் இருந்தனர்...வெண்ணிலாவின் தந்தை மட்டும் செய்கையால் அனுமதி தர விரைவாக அழைத்தார்..
மறுமுனையில் பல்லவி எடுக்க நலம் கூட விசாரிக்காமல் வெண்ணிலாவின் அம்மா , " குழந்தை பிறந்து இருக்கு".. என்றார் மொட்டையாக
மறுமுனையில் இருந்த பல்லவி ஆழ்ந்த மௌனத்தில் இருந்தவர் சேதியை கேட்டதும் சந்தோசத்துடன், " என்ன குழந்தை?".. என்று கேட்கவும்
"ஆண் குழந்தை "..என்றதும் இந்த பக்கத்தில் ஆழ்ந்த மௌனமே நிலவ
வெண்ணிலாவின் அம்மா போனை பட்டென்று போனை வைத்து விட்டார்..
வேகமாக தன் மகன் மனுவை அழைத்து, " குழந்தை பிறந்து இருக்கு "..என்று வெண்ணிலாவின் அம்மா கூறிய அதே வார்த்தைகளை பல்லவி கூற
அந்த பக்கம் ஆழ்ந்த அமைதியே நிலவியது, அதற்கு பின் மீண்டும் பல்லவி இணைப்பு தான் துண்டித்து விட்டதோ என நினைத்து , "ஹலோ".. என்க
மனுவோ , "யாருக்கு குழந்தை பிறந்து இருக்கு".. என்று கேட்டான்..அவன் குரலில் நக்கல் இருந்ததோ பல்லவிக்கு பிரித்து அறிய கூடிய பொறுமை எல்லாம் அந்நேரம் இல்லை..
அவனது தாய்க்கோ தலையில் அடித்து கொள்ளலாம் என்று இருந்தது கூடவே கோபமும் வர, " என்னோட அண்ணன் பொண்ணுக்கு "..என்றார்..
அவனோ தன் தாயின் கோபத்தை உணர்ந்து, " ஓ அப்படியா அதை ஏன் என்கிட்ட சொல்றீங்க உங்க அண்ணனோட மருமகன்கிட்ட சொல்ல வேண்டியது தானே "...என்று கிண்டல் பண்ணி சிரிக்க மகன் இப்படி தன்னிடம் சிரித்து பேசி கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் கடந்து விட்டது..மனுவுடன் பல்லவி மட்டுமல்ல வேறு யாரும் பேசுவது இல்லை அதில் கூடுதலாக ரவீந்தர் தான் தன்னுடைய வளர்ப்பு சரியில்லை என்றே கூறி அவனை விலக்கி வைத்திருந்தார்..
இவர்கள் காதல் என்றால் என்ன என புரிய வேண்டும் என்ற மனுவின் நிர்பந்தத்தால் மனு மற்றும் நிலா பிரிய அது என்னவோ சிறியவர்களுக்கு இணக்கத்தை ஏற்படுத்தினாலும் பெரியவர்கள் இடையே சுணக்கத்தையே ஏற்படுத்தி இருந்தது..
அன்று அவன் வீட்டை விட்டு யாரிடமும் கூறாமல் வெளியேறிய பிறகு நிலாவிடம் என்ன நடந்தது என்று கேட்க அவளோ அழுகையை தவிர வேறு எதுவும் கூறவில்லை அவளிடம் வேலைக்கு ஆகாது என்று நெனைத்தவர்கள் மனுவிடம் கேட்க அவன் நடந்த உண்மையை அழகாக ஒப்பு கொண்டான்..
ஆம் அவனோ , "ஆமாம் நாங்க இப்போ பிரிஞ்சு தான் இருக்கோம் எப்போ எங்களுக்கு தோணுதோ அப்போ ஒன்னா இருப்போம் இது நாங்க இரண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவு சோ நீங்க எல்லோரும் விலகி இருக்கிறது உங்களுக்கு நல்லது"... என்று கூற
இந்த பக்கம் ரவீந்தருக்கு விஷயம் தெரிந்ததால் அவர் அவன் பார்த்து கொள்வான் என்று தானும் ஒதுங்கி கூடவே தன் மனைவியை ஒதுக்க நினைக்க அது சண்டி தேவனுக்கும் செழியனுக்கும் கோபத்தை உண்டு பண்ணியது..
"உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து இப்படி ஒரு பையன் பண்ணினா இப்படி தான் சும்மா இருப்பீங்களா சொல்லுங்க".. என்று செழியன் கேட்க
ரவீந்திரோ அவன் வயதில் இளையவன் தானே என நினைத்து, " தம்பி அவங்க இரண்டு பேரும் உள்ள பிரச்னையை தீர்த்துப்பாங்க நாம இதில் தலையிட வேண்டாமே "...என்று தன்மையாக கூற
எங்கே முன் கோபி கேட்டால் தானே, " நீங்க இப்படி தான் சொல்லுவீங்க பையனை பெத்தவரு தானே இனி என் தங்கச்சி உங்க வீட்டு வாசப்படி எப்படி மிதிக்கிறான்னு பார்க்கிறேன்"... என்று கூறி விட்டு தன் தந்தையை அழைத்து கொண்டு சென்று விட்டான்..
அதன் பிறகு இவர்கள் அழைத்தால் முகத்தில் அடித்தது போல போனை கட் செய்வது இவர்களை கூட வெண்ணிலாவை பார்க்க விடாமல் செய்வது , "வந்தா உங்க பையனோட வாங்க இல்லாட்டி வராதீங்க "... என்றே அவன் கூறி விட மனுவோ பெற்றவர்கள் கூறிய எதுவும் தலையில் ஏற்றி கொள்ளாமல் அவன் போக்கில் சுற்றி திரிந்தான்..
கல்லூரி படிப்பு முடிந்ததும் அவனுக்கு வேலை தயாராக இருக்க அமெரிக்கா சென்று விட்டான்..அதற்கு இடையே மாயா மற்றும் அசோக்கின் வீட்டில் காதல் தூதுவனாக மாறி அவர்களின் திருமணத்தை உறுதி செய்து கொடுத்தான்...
இதோ அப்படி இப்படி என்று அவன் இங்கு அமெரிக்கா வந்து ஆறு மாதங்கள் ஆகி விட்டது..இதற்கு இடையில் தன்னவளின் நியாபகம் வரவில்லையா என்று கேட்டால் அவளை மறந்தால் தானே நினைப்பதற்கு அவள் தான் அவனுள்ளே புகுந்து அவளை ஆட்டி படைத்துக்கொண்டு இருக்கிறாளே அவளுடைய நிலா..
பிறகு எதற்கு இந்த தண்டனை என்று அவனிடம் கேட்டால் இனி ஒரு பிரிவு அவ கூட எனக்கு வரக்கூடாது என்றே அவன் நித்தம் நித்தம் அவள் நினைவுகளில் வாழ்ந்து வந்தான்..
காதல் என்றால் என்ன என்பதை உணரவே அவன் பிரயத்தனப்படுகிறான்..அருகில் இருக்கும் போது புரியாத காதல் விலகி இருக்கும் போது புரிப்படும் அதனால் தெரிந்தே விலகி இருக்கிறான்..
இதனாலே அவன் பிரிந்தது இது பலருக்கு முட்டாள்தனமாக இருக்கலாம் ஆனால் அவனை பொறுத்தவரை இது நியாயமே...இப்போதும் ஒன்றும் இல்லை அவளது சிறு அழைப்பு போதும் அவன் பறந்தோடி வர அதற்கு நிலா அழைக்க வேண்டுமே...
அது என்ன நிலா மட்டும் அழைத்தால் போதுமா காதலில் ஈகோ இல்லையே என்று அவனது மனசாட்சி கேள்வி கேட்டால் அதற்கு அவன் சொல்லும் பதில் காதலிக்கிறோம் என்பதை விட காதலிக்கபடுகிறோம் என்பது சுகம் அல்லவா அந்த சுகத்தை தன் மனைவி தனக்கு தர வேண்டும் என எதிர்பார்க்கிறான்..
