Share:
Notifications
Clear all

மன்மதன் 57

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 57

மன்மதன் தேசத்து மல்லிகை

    அன்றைய சம்பவத்திற்கு பிறகு இன்று தான் மனு அவளை பெயர் சொல்லி அழைத்து இருக்கிறான்..

அந்த சந்தோஷத்தில் நிலா அவனது அழைப்பை கேட்ட உடன் காலை சுற்றி வரும் நாய்க்குட்டி போல துள்ளி கொண்டு ஓடினாள் நிலா..

அவர்களது அறைக்குள் வர , "கதவை லாக் பண்ணு".. என்று கூறினான்..

அவனது குரலிலோ அல்லது அவனது தோற்றத்தில் இருந்து நிலாவால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை..

அவனோ அவள் வந்ததும் மார்பில் கையை கட்டி அவளை பார்த்து கொண்டே இருந்தவன் சட்டென்று அவளிடம், " வெல் பேபி போர்ம் ஆகி இருக்கு இந்த பேபியை கேரி பண்றதுல உனக்கு ஏதாவது கஷ்டமா இருக்கா??".. என்று முதல் கேள்வியை கேட்க

அவளோ இவன் வாய் என்ன தேள் கொடுக்கா என்ன கேள்வி கேக்கிறான் என் குழந்தையை சுமப்பதில் எனக்கு என்ன கஷ்டம் என்பது போல அவனை பார்த்தவள், " எனக்கு எந்த கஷ்டமும் இல்லை"... என்க

அவனோ , "இல்லை உன்னை போக பொருளா யூஸ் பண்ணி வந்தேன் இல்லையா அது மூலமா வந்த குழந்தை ஆச்சே அதுனால கேட்டேன்"... என்க

அன்று அவனிடம் அந்த வார்த்தையை கூறும் போது என்னவோ யோசிக்காமல் கூறி விட்டாள் ஆனால் இந்த நொடி அவன் கூறும் போது அவளுக்கு நெஞ்சை அறுப்பது போல இருந்தது..

இருந்தாலும், " நான் அன்னிக்கே சொல்லிட்டேன் உங்ககிட்ட நான் எதனால அந்த வார்த்தையை சொன்னேன்னு திரும்ப திரும்ப அதை சொல்லி காட்டி என்னை வேதனைப்படுத்தாதீங்க"....என்றாள் கம்மிய குரலில்

"இல்லை வெண்ணிலா நீ சொன்னதுல நியாயம் இருக்கு நீ என்னை மாயா கூட இணைச்சு வெச்சு பேசினதுல எந்த தப்பும் இல்லை அதே நேரம் உனக்கு ஒரு தடவை கூட உன் மேல காதலா இருந்தேன்னு புரியல பாரு அது தான் இதுல வருத்தமான விஷயம்"....என்று கூற

"நீங்க என்கிட்ட உங்க காதலை இதுவரை சொன்னேதே இல்லை தீடீர் கல்யாணம் தீடீர்னு சேர்ந்து வாழறோம் இதுல எதை சொல்ல சொல்றீங்க..??"...

"சரி நான் சொல்லல நீ சொல்லி இருக்கலாம் இப்போ மட்டும் நல்லா பேசுற இத்தனை நாள் உனக்கு வாய் எந்த இடத்தில் இருந்ததுன்னு எனக்கு புரியல"...என்று சிரித்தபடி கூற

அவளோ மீண்டும் தலை குனிந்தாள்..
அதை பார்த்தவன் , "உன்னை கேள்வி கேட்டு இப்படி நிறுத்தனும்னோ இல்லை உன்னை குற்றவாளி ஆக்கனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை உண்மையில் எனக்கு உணமேல எந்த கோபமும் இல்லை வருத்தம் மட்டுமே".. என்க

அவளோ இல்லை, " நான் "...என்று தடுமாற

"தடுமாற தேவையில்லை வெண்ணிலா எனக்கு உன்னை தொட்டதில் எந்த விதமான வருத்தமும் இல்லை இன்பேக்ட் சந்தோசம் தான் பிகாஸ் நான் உன்னை காதலிச்சேன்...பட் நீ என்னை காதலிக்கிறியான்னு  தெரிய வெய்ட் பண்ணினேன்..

எனக்கு முதலில் ஒரு சந்தேகம் இருந்துச்சு நீ அசோக்கை காதலிக்கிறியோன்னு"...

அவளோ , "இல்லை அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை".. என்று பதறியபடி கூற

"எஸ் இல்ல அது தான் எனக்கு தெரியுமே"...

"அதுக்கு முன்னாடியே எனக்கு உன்னை பிடிச்சு இருந்துச்சு"...என்று கூறி அவளை அதிர்ச்சிக்கு உள்ளாகினான்...

அவளோ அதிசயமாக அவனை பார்க்க, " என்ன அப்படி முட்டை கண்ணை விரிச்சு பார்க்கிற உன்னை பிடிச்சு இருந்துச்சு பட் உனக்கு அசோக்கை பிடிக்கும்னு ஒதுங்கி இருந்தேன் ஆனால் அதுவும் எனக்கு பிடிக்கலை அதெப்படி அவன் உன்னை காதலிக்கலாம்ன்னு ஒரு எண்ணம் ஆனால் அதை நீ சுயநலம் கூட வெச்சுக்கலாம்".. என்று கூறி சிரித்தவன்

மேலும், "எஸ் என்னோட பொண்டாட்டியை நான் காதலிக்கிறேன் எனக்கு உன்கிட்ட இல்லாத உரிமை வேற எவன் கிட்ட இருக்கு இல்லையா"... என்று நிலாவை கேள்வி கேட்டான்..

அவளோ திக் பிரமை பிடித்தவள் போல நின்று கொண்டு இருந்தவளுக்கு அவன் கூறுவதை கேட்கும் போதே தன் காதுகள் சரியாக தான் கேட்கிறதா என்பது போல பார்த்தாள்..

அவனுள் இவ்வளவு காதலை தன் மீது வைத்திருந்தானா அவனும் தன்னை போல தான் நினைத்து இருக்கிறான் என நினைத்து மகிழ்ந்து அவனை பார்க்க அவனோ சற்று முன் அவன் மனதை வெளிப்படுத்தி அவள் மீது அவன் வைத்துள்ள காதலை கூறியவன் அவன் தானா என்பது போல நின்றவன் அவளை முறைத்து பார்க்கவில்லை விறைத்து நிற்க வில்லை இறுகி போய் நிற்கவில்லை கூலாக மிக அமைதியாக அவளை பார்த்து

"எஸ் இப்போவும் சொல்றேன் நீ என் மனைவி உன்னை  காதலிக்க எனக்கு எல்லா ரையிட்ஸும் இருக்கு சோ நான் உன்னை காதலிச்சேன் ஆனால் எனக்கு ஒரு உறுதி இருந்துச்சு என் கண்ணில் உன் மீதான காதலை எப்போ நான் பார்கிறேனோ அப்போ உன்னை முழுசா எடுத்துப்பேன் ஏன் இதை உன்கிட்ட கூட எடுத்துக்க மாட்டேன்னு முடிவு செஞ்சு இருந்தேன்..

அதே போல தான் அன்னிக்கு உன் கண்ணில் தெரிஞ்சது என் மீது நீ வெச்சு இருக்கற தவிப்பு அப்படி தான் எல்லாம் நடந்துச்சே தவிர நீ சொன்ன மாதிரி இல்லை"..என்று கையை விரித்தவன்,

" இதை எல்லாம் ஏன் நான் உன்கிட்ட இப்போ சொல்றேன்னு நினைக்கலாம் நீ உன் வயித்துல வளர குழந்தையை சுமக்க கஷ்டப்பட கூடாது இல்லையா அதுனால தான்"
.. என்று கூற

வெண்ணிலாவின் கண்கள் பனித்து பொலபொலவென கண்ணீர் வர அது அதீத மகிழ்ச்சியிலும் குற்ற உணர்விலும் தான் வந்தது அவளுக்கு வார்த்தைகள் தடைப்பட்டன.. மூச்சு அடைத்தது..

அவன் மார்பில் கதறி அழ வேண்டும் என்று அவளுக்கு துடித்தது ஆனால் அவனோ சலனமற்ற பார்வை பார்த்து அவளை பார்வையாலே தள்ளி வைக்க அவள் மேலும் துடித்தாள்..

மேலும் அவளை பார்த்து, " நீ அழனும்ன்னு இதெல்லாம் நான் சொல்லல வெண்ணிலா ரொம்ப எமோஷனல் ஆக வேணாம் பட் இதெல்லாம் என் மனசில் மட்டும் வெச்சு உன்கிட்ட நான் சொல்லாமல் வெச்சு இருந்ததினால தானே வந்துச்சு.. இனி அப்படி ஆக வேணாம் நான் நெனைக்கிறதை உன்கிட்ட சொல்லிட்டே செய்யறேன்"... என்று அவளை தீர்க்கமாக பார்க்க,

நிலாவின் உள்ளே தன் கணவனின் தன் மீதான காதல் பக்கத்தை அறிந்த மகிழ்ச்சியில் முகம் மலர இருக்க அதை கெடுக்கும் நோக்கத்தில் , "நாம பிரிஞ்சடலாம் வெண்ணிலா"... என்றான்..

அவளோ அதிர்ந்து , "என்ன சொல்றிங்க "...என்க

"ஆமாம் வெண்ணிலா என்னை பொறுத்தவரை லவ் ஆர் கல்யாணம் இரண்டிலுமே ட்ரஸ்ட் ரொம்ப முக்கியம் அது நமக்கு இடையில் இல்லை"..

"நான் தான் நான் பேசினது தப்புன்னு சொல்லிட்டேனே.."...என்க

"நான் அதை வெச்சு மட்டும் சொல்லல நல்லா யோசிச்சு தான் சொல்றேன் ..நாம ரெண்டு பேரும் ஒருத்தவங்களை ஒருத்தர் உணரனும் ..நீ சொன்ன மாதிரி செக்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லை நான் அப்படி நெனைக்கலை பின்னாடி அப்படி ஒரு எண்ணம் நமக்கு இடையில் வர கூடாதுனு தான் சொல்றேன்..

காதல் இது தான்னு புரிஞ்சுக்கனும்..ஒருத்தர் இல்லாட்டி ஒருத்தர் இருக்க முடியாது அப்படின்னு தோணனும் அதுவும் இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் அந்த உணர்வு நமக்கு வரனும் ஒருத்தர் இல்லாட்டி இன்னொருத்தர் வாழ முடியாத என்ற நிலை வரட்டும் நிலா... அப்போ நாம மீட் பண்ணுவோம் அதுவரை உனக்கு பிடிச்ச இடத்தில் நீ இருக்கலாம் எங்கே வேணா போ யார் கூட வேணா இரு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை..

ஆனால் இப்போவும் சொல்றேன் நீ காதலோடு என்னை தேடினா அப்போ நான் வரேன்"... என்க

"எனக்கு உங்களை பிடிக்கும்ங்க அதுக்காக இப்படி பிரியலாம்னு சொல்லாதீங்க "...என்று நிலா வருத்தப்பட்டு கூறும் போதே நிலாவின் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது...

அவள் அருகே வந்து அவள் விழி நீரை துடைத்தவன், " நிலா இது உனக்கான தண்டனை மட்டும் நினைச்சுக்காத எனக்கும் சேர்த்து தான் காதல் அப்படினா என்னன்னு நமக்கு தெரிய வேணாமா இல்லை புரிய தான் வேணாமா பார்ப்போம்..இது தான் என்னோட முடிவு சோ நான் என் முடிவை நான் மாத்திக்க மாட்டேன் "..என்று கூறியவன்

அவளை பார்க்க அவன் தன்னை காதலிக்கிறான் என்ற ஒரு வார்த்தை போதாதா பெண்ணவள் அவனின் பாதத்தில் விழ இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா என்ற கேள்வி அவளை துரத்த என்னங்க ப்ளீஸ்ங்க என்று மனதில் மட்டும் தான் கூற முடிந்தது அவன் தான் முடிவு செய்து விட்டானே இதை மாற்ற யாராலும் முடியாதே..என்று அவள் அவனை பார்க்க , "நிலா இங்கே வா "..என்று கையை விரித்தான்..

மழை காலத்தில் ஒதுங்கும் கோழி குஞ்சு போல அவன் மார்பிலே ஓடி சென்று ஆறுதல் பெற்றவளை இறுக்கி எலும்பு நொறுங்கும் அளவுக்கு கட்டி பிடித்தவன் மறு நொடி அவளை விட்டு விலகினான்..

"நிலா நான் சொன்னது உனக்கு முட்டாள் தனமா தோணலாம் ஆனால் இது நான் உன்மேல வெச்சு இருக்கிற அன்பு வெறும் உடல் சார்ந்தது இல்லை அப்படின்னு ப்ரூவ் பண்றதுக்காக நான் போடுற வேலி"... என்று கூறியவன் அடுத்த நொடி அந்த வீட்டை விட்டும் வெளியேறி இருந்தான் கேள்வி கேட்கும் எவருக்கும் அவன் பதில் அளிக்கவில்லை...எல்லோரும் நிலாவை புரியாமல் பார்க்க அவளோ ஓடிச்சென்று கதவை அடைத்து கொண்டாள்..

மல்லிகை மணம் வீசும்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top