Share:
Notifications
Clear all

மன்மதன் 56

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 56

இது தானே அவனுக்கும் வேண்டும் உடனே அவளை ஏந்தி படுக்கையில் படுக்க வைக்க அவளோ, " நான் இப்போ தான் குளிச்சேன்"... என்று சிணுங்க

அவனோ யோசிப்பது போல பாவனை செய்து, "அப்படியா அப்போ நான் வேணும்னா உன்னை இன்னொரு முறை குளிப்பாட்டவா??".. என்று கள்ள நகை புரிய அவன் கூறியதை கேட்டு வெட்கப்பட்டவளின் அழகில் தன்னை தொலைத்தவன் கைகள் செயலில் இறங்கின..

அந்த நாளை எண்ணியவள் அவனை பார்க்க அவனோ பட்டென்று கதவை அடைத்து விட்டு வெளியேறி இருந்தான்..நிலாவுக்கு அவனது செய்கை முகத்தில் அடித்தது போன்ற வேதனையை கொடுத்தது..

"நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன் ..என் மனசில் நான் நினைச்ச விஷயத்தை கேட்டேன் அது தவறா".. என ஒரு புறம் வாதிட்டாலும் மறுபுறம் அவன் யாரையும் காதலிக்கவில்லை அதே நேரம் அதை வைத்து அவனிடம் தவறாக பேசி அவன் மனதை வருத்தி விட்டோமா என்று நிலா கிடந்து சங்கடப்பட்டு கொண்டு இருந்தாள்..

பெரியவர்கள் எடுத்து கொடுத்த உடையில் இளையவர்கள் அழகாக ஜொலித்தனர்..செழியனும் மாலதியும் மகிழ்ச்சியாக திருவிழாவில் பங்கு கொள்ள மனு மட்டும் அமைதியை தத்து எடுத்தான்..அவனது செய்கை அனைவரையும்  குழப்பத்தில் ஆழ்த்த நிலாவோ என்ன கேட்டாலும் தலையை தாழ்த்திய படியே நின்று கொண்டு இருந்தாள்..

பெரியவர்கள் கவனித்தாலும் திருவிழா முடியட்டும் என காத்து இருக்க இரவு ஒரே அறையில் உறங்கும் போது அவனிடம் பேசலாம் என நிலா காத்து கொண்டு இருக்க அந்த வாய்ப்பை கூட அவளுக்கு கொடுக்காமல் இரவு ஆனால் அவனுடைய காரில் உறங்கி நிலாவின் மானத்தை வாங்கினான்.. இதே போல மூன்று நாட்களும் அப்படியே தான் செய்தான்..

மனுவின் அப்பா அவனது செய்கையை பார்த்து, " என்ன மனு எதுக்கு காரிலே நேத்து தூங்கினியாம்".. என்று விஷயத்தை கறக்க முயற்சி செய்தார்..

ஆனால் அவன் பிடி கொடுத்தான் இல்லை இப்படி எல்லோரிடமும் பிடி கொடுக்காமல் சுற்றி கொண்டு இருந்தவன் அடுத்த நாள் அவனே பிடி கொடுத்தான்..

அன்றைய நாள் அவ்வூரின் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாட்டப்பட்டு கொண்டு இருந்தது..பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து கொண்டு இருக்க நிலா இளம் சிவப்பு நிறத்தில் பட்டு உடுத்தி தேவதையென ஒளிர்ந்தவள் தன்னவன்  அவளிடம் பாராமுகத்தை காட்டி வருவது வேதனை அளித்தாலும் அவன் ஒரு முறையாவது பேசி விட மாட்டானா என்று புழுவாய் துடித்தாள்..

அவளுக்கு அவன் அருகே செல்லவே பயமாக இருந்தது ..அதனால் ஒதுங்கியே இருக்க இதை எல்லாம் நினைத்து வருத்தப்பட்டு கொண்டே தெய்வத்திடம் கோரிக்கை வைத்தவள் பொங்கல் பொங்கி வரும் நேரம் வெண்ணிலாவுக்கு தலை சுற்றுவது போல இருந்தது..

அவளும் நிதானமாக இருப்பது போல காட்டி கொண்டாலும் யாரோ பின்னால் இருந்து தள்ளுவது போல அவள் தள்ளாட கண்கள் வேறு இருட்டி கொண்டு வர யார் மீதோ மோதி விழுந்து மயக்கமானாள் நிலா..

பாட்டியின் தொல்லை காரணமாக பொங்கல் வைக்கும் இடத்திற்கு மனு வரவும் நிலா அவன் மீது விழுவதற்கும் சரியாக இருக்க மனு அவளை தாங்கி பிடித்தான், " ஹே நி...லா..வெண்..ணிலா என்ன டி ஆச்சு"... என்று பதறி அவள் கன்னம் தட்ட அதற்குள் பெரியவர்கள் கூடி விட்டனர்..

மனுவுக்கு உள்ளுக்குள் பதைப்பதைக்க தொடங்கி விட்டது, " இவளுக்கு என்ன ஆச்சோ "...என்று அவன் அவளுக்கு அருகிலே நிற்க அதற்குள் செல்லக்கிளி கையை பிடித்து பார்த்து முகம் மலர எல்லாம் நல்ல செய்தி தான், " வெண்ணிலா முழுகாம இருக்கா"... என்று கூற

அனைவரும் மகிழ்ந்தனர்.. மனு மட்டும் அவர்கள் கூறிய பாஷை புரியாமல் முழித்தான்..

உடனே தன் அன்னையை பார்த்து முறைத்து, " என்ன மம்மி அவ இப்படி மயங்கி இருக்கா எல்லோரும் சேர்ந்து சிரிச்சுட்டு இருக்கீங்க?"..

"டேய் அவ கன்சீவ் ஆஹ் இருக்கான்னு உன் பாட்டி சொல்றாங்க "..என்று பல்லவி சிரித்து கொண்டே கூற

"வாட் "..என்று ஒரு நொடி அதிர்ந்தவன் கண்கள் மேலும் பிரகாசிக்க," என்ன கையை பார்த்தா தெரிஞ்சுடுமா "..என்று எதிர் கேள்வி கேட்டான்..

வெண்ணிலாவின் அம்மாவோ , "அந்த காலத்தில் எனக்கு வீட்டிலே பிரசவம் பார்த்தவங்க தம்பி அத்தை அதுனால தைரியமா நம்பலாம் "...என்று முகம் மலர கூற அதை கேட்டவன் முகமும் மலர்ந்தது...

அந்த சமயம் பார்த்து கூட்டத்துக்குள் நுழைந்த ரவீந்தர் காதுகளில் இந்த விஷயம் கேட்டதும் தன் மகனை கேள்வியாக பார்க்க மனு தலை குனிந்தான்..

அவனுக்கு தான் தெரியுமே தன் தந்தை எதற்காக இந்த பார்வை பார்க்கிறார் என்று அவனுக்கு அவன் தந்தைக்கு கொடுத்த வாக்கை தான் காப்பாற்ற முடியவில்லை என்று வருத்தமே தவிர அவள் மாசமாக இருப்பதில் கவலை இல்லை கிட்டத்தட்ட சந்தோஷமே..

ஆனால் இந்த குழந்தை வந்த மகிழ்ச்சியை கூட அவளின் வார்த்தையால் மகிழ முடியவில்லையே என நினைத்தான்..

இருந்தும் மனம் தாங்காமல், தன் மனைவியின் நலம் கருதி , "எல்லாம் சரி தாங்க..நீங்களே முடிவு பண்ணினா எப்படி அவளை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போலாம்"... என்று ஒரு கணவனாய் அவனுக்கு பதறி கூற அனைவரும் அவனது பதட்டத்தை பார்த்து சிரிக்கவே, அந்நேரம் பார்த்து வெண்ணிலா ஒன்றும் விளங்காமல் தலையை பிடித்து கொண்டு எழுந்தாள்..

அவள் எழுந்து மலங்க மலங்க விழித்து கூடி இருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்து மனுவில் வந்து முடிய அவள் பார்வையை எதிர் பார்வையை பார்க்காமல் அதுவரை பதட்டப்பட்டது தான் அல்ல என்பதை அவளுக்கும் மட்டும் உணர்த்தி கொண்டு இருந்தான் மனு...

"என்ன டி அப்படி முழிக்கிற எல்லாம் நல்ல விஷயம் தான்"... என்று செல்லக்கிளி பூடகமாக பேச

பல்லவி மற்றும் வெண்ணிலாவின் அம்மா இருவரும் வெண்ணிலாவின் தலையை வருடி உச்சி முகர்ந்து விஷயத்தை கூறினர்..

வெண்ணிலாவுக்கு சந்தோஷமா இல்லை சங்கடமா என தெரியவில்லை அவள் கண்ணில் நீர் துளிர்த்து மனுவை பார்க்க மனு ஒரு நொடி அவள் கண்களை பார்த்தவனின் கண்கள் பனிக்க பின் இறுகி போய் திரும்பி நின்று கொண்டான்...

அவனது செய்கையால் அவள் அடிபட்ட வலியை உணர்ந்தாள்.. நாம தானே தப்பு செஞ்சோம் நாமளே அவங்க கிட்ட பேசுவோம் பேசி புரிய வைப்போம் என அந்த நேரம் முடிவு செய்தாள்..

அதற்குள் மனுவின் தந்தை ரவீந்தர், " மனு கம் ஹீயர்"... என்க

அவர் எதற்காக அழைக்கிறார் என அறிந்தவன் அவர் பின்னாலே செல்ல யாரும் இல்லாத இடத்தில் நின்றவர் அவனிடம், " என்ன மனு இதெல்லாம் அவ  ஒரு கிட்..படிக்கிற சமயத்துல இதெல்லாம் என்ன?? உனக்கு ஒரு வேலை கூட கிடையாது"... என்று கூற

அவனுக்கு சுருக்கென்று இருந்தது இருந்தாலும் தலை குனிந்து நிற்க, " அவங்க தான் முட்டாள்தனமா சந்தோஷப்ட்டுட்டு இருக்காங்கனா ?? நீயும் கூட சேர்ந்துட்டு இப்படி செய்யற ..இனி அவளை நெனைச்சே பார்கலை யா ..அவ இன்னும் படிப்பை கூட  முடிக்கலை".... என்று கூறினார்...கிட்டத்தட்ட அவருக்கு பாவம் வெண்ணிலாவை நினைத்து தான் அவர் அவ்வாறு கூறுகிறார்..

"டாட் அவளுக்கு இன்னும் 2 வீக்ஸ் ல நைன்ட்டீன் வந்திடும் நீங்க சொல்ற மாதிரி அட்டெம்ப்ட் டூ ரேப் எல்லாம் இல்லை" .. என்றான் கொஞ்சம் காட்டமாகவே

"நான் என்ன சொல்றேன் நீ எதை பேசிட்டு இருக்க ?"..

"டாட் நீங்க சொன்னதுக்கு தான் நான் பதில் சொல்லிட்டு இருக்கேன் நான் கல்யாணம் பண்ணி வைங்கன்னு யார்கிட்டயும் கேட்கலையே

நீங்களும் சேர்ந்து தானே அன்னிக்கு கல்யாணம் பண்ணி வெச்சிங்க தென் சேர்ந்து வாழ்ந்தா என்ன தப்பு ..எனக்கு புரியல நீங்க இப்போ சேர்ந்து வாழ வேணாம்னு சொல்றீங்க ..அவங்க ஏன் வாழல கேக்கிறாங்க..அவ "...என்று கூறி வார்த்தையை மென்றவன்

" எல்லோரும் சேர்ந்து என்ன நெனைச்சுட்டு இருக்கீங்க நான் ஒன்னும் குழந்தை இல்லை எல்லோரும் சேர்ந்து என்னை ஆட்டி வைக்க".. என்று கூறியவன்

" இப்போ என்ன உங்களுக்கு எஸ் எங்களுக்கு குழந்தை வர போகுது உண்மை தான் அந்த குழந்தைக்கான செலவை கேட்டு உங்க கிட்ட கையேந்தி நிக்க மாட்டேன்".. என்று கூற

"மனு நான் சொல்ல வரது"..

"டாட் நீங்க சொல்ல வர எல்லாம் எனக்கு புரியது பட் இது என்னோட லைஃப் எனக்கு எப்படி வாழனும்னு தெரியும் அண்ட் எனக்கு வேலை கிடைச்சு இருக்கு இப்போவே நான் சம்பாதிச்சுட்டு தான் இருக்கேன் எனக்கு என்னோட அவளோட செலவை ஏத்துக்க கூடிய தெம்பு இருக்கு..போதும் இது நாள் வரை உங்க தோளில் சவாரி பண்ணிட்டேன் இப்போ கீழே இறங்க ஆசைப்படுறேன் "...என்று கூற ரவிந்தருக்கு எல்லாம் புரிந்து போனது..

ரவீந்தர் அவன் ஒரு நிலைமைக்கு அவன் காலில் நின்ற பின்னரே அவனுடைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்று எண்ணினாரே ஒழிய மகனை கேள்வி கேட்டு குற்றவாளி ஆக்க வேண்டும் என்று அவரும் நெனைக்கவில்லை..

மருமகள் வந்த பின் மகனின் அதிரடியான மாற்றம் அவரை ஆச்சரியம் கொள்ளவே செய்தது.. அதிலும் அவனது தன்னம்பிக்கையான வார்த்தையை கேட்க அவருக்கும் சந்தோஷமாகவே இருந்தது..

"ஓகே மனு உன்னோட பார்ட்டை சொல்லிட்ட அப்போ வெண்ணிலா அவளோட படிப்பு?"..

"டாட் நானும் அதை தான் நெனைச்சுட்டு இருக்கேன் டாட்..படிப்பை வீட்டில் இருந்து கண்டின்னு பண்ணட்டும் அது தான் அவ அண்ணி எல்லாம் இருக்காங்களே "...என்க அவரோ சரி என்பது போல தலையாட்டினார்..

அவருக்கு மகனை இப்படி பொறுப்பாக பார்த்ததில் மகிழ்ச்சியாக இருந்ததால் எல்லாம் உன் இஷ்டம் என்பது போல இருந்து விட்டார் ..அது மட்டுமின்றி இனி அவனுடைய வாழ்க்கையில் தலையிடுவது தவறாக அவருக்கு பட்டதாலே இந்த முடிவை அவர் எடுத்தார் ஆனால் சற்று நேரத்திலே அவர் இந்த முடிவில் இருந்து மாறுவார் என்பதை அவர் சற்றும் எதிர் பார்த்திருக்க மாட்டார்..

அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே பல்லவி வர பேச்சு  தடைபட்டு போனது பின் அனைவரும் வெண்ணிலாவை வீட்டுக்கு அழைத்து சென்றனர் அவளை தாங்கு தாங்கு என்று தாங்க அவளுக்கு எங்கே அதெல்லாம் தெரிகிறது தன் கணவன் தன்னிடம் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லையே என்பதிலே அவள் மனம் அல்லாட அவன் செல்லும் இடங்களில் எல்லாம் பார்வையை கொண்டு சென்று தவித்து கொண்டு இருந்தாள்..

அதற்குள் இரவு ஆகி விட மனுவோ என்னவோ வெகு யோசனையாக நின்று கொண்டு இருந்தான்...பெரியவர்கள் பேசிக்கொண்டு இருக்க நிலா அவனை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே தன் அன்னைக்கு உதவி செய்து கொண்டு இருக்க மாலதி உணவு தயார் செய்து கொண்டு இருந்த நேரத்தில், " வெண்ணிலா இங்கே வா "..என்று அழைத்தான் மனு..

மல்லிகை மனம் வீசும்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top