மன்மதன் 55
அத்தியாயம் : 55
மன்மதன் தேசத்து மல்லிகை
வெண்ணிலாவின் ஊரில் விழா களைகட்டியது..கிராமத்து திருவிழா எனும் போது சொல்லவா வேண்டாம் அதிலும் வெண்ணிலாவின் குடும்பம் தான் ஊரிலே பெரிய குடும்பம் என்றால் சொல்லவா வேண்டும் ..
ஒவ்வொரு முறையும் திருவிழா அந்த சுற்று வட்டாரத்தில் ஒரு வாரம் பேசப்படும் செய்தியாக வெண்ணிலாவின் ஊர் திருவிழா இருக்க இந்த முறை கூடுதலாக மனுவின் குடும்பத்தையும் அழைத்து இருந்தனர் வெண்ணிலாவின் வீட்டார்..
அதனால் சண்டித்தேவனின் வீடும் சிறப்பாக களைகட்டியது..செழியனை பற்றி கூறவே வேண்டாம் மாலதியுடன் சேர்ந்த பிறகு அவனை கையிலே பிடிக்க முடியவில்லை என்றே கூற வேண்டும் அதிலும் செழியன் காதலை சொல்லாமல் அடக்கி வைத்தான் என்றால் மாலதி அவனிடம் கொட்டி தீர்த்தான் என்றே கூற வேண்டும்..
ஆம் அதிலும் மாலதி இங்கே வந்து முழுதாக இரண்டு நாட்கள் முடியவில்லை ஆனால் அவனுடன் நூறு ஜென்மம் வாழ்ந்தது போல இன்பம் கொண்டாள்... இனியும் நான் அவன் மனதை புரிந்து கொள்ளாமல் இருந்து இருந்தேன் என்றால் என் வாழ்க்கை என்ன ஆவது என்று மாலதி நினைக்கவே மாலதிக்கு பயமாக இருந்தது..
ஆனால் செழியனோ எந்த ஏற்பாடும் இன்றி இவள் அவனை தேடி வந்ததால் அவள் வேலைக்கு விடுப்பு தான் எடுத்து இருந்தாள் நேற்று காலை ஒரு பேப்பர் எடுத்து என்னவோ எழுதுவதை கண்ட செழியன் என்ன என்று விசாரிக்க , " வேலையை விட போறேன்"... என்றாள் அசால்ட்டாக
"என்ன வேலையை விட போறியா யாரை கேட்டு இந்த முடிவு பண்ணின"..என்று செழியன் அதிர்ந்து கேட்க
"மாமா நான் உங்க கூட முழுசா ஒரு நாள் வாழ்ந்து இருக்கேன்..வாழ்ந்ததும் தான் எனக்கு புரிஞ்சது.. ஆல்ரெடி நெறைய நாள் வேஸ்ட் பண்ணிட்டேன்னு.. எனக்கு உங்க கூட அனுபவிச்சு என் வாழ்க்கையை வாழனும் "..என்று காதலோடு கூற
அவனோ அவள் நெற்றியில் தன் நெற்றியை முட்டிவன் அப்படியே யோசித்து பார்த்து அவளிடம், " சரி எழுதி அனுப்பு".. என்றான்..
அவளும் லெட்டரை அனுப்பியே விட்டாள் இந்நேரம் அது சென்னையை அடைந்து இருக்க வேண்டும்..
அதற்குள் இன்று காலை குளித்து வந்த அவனுக்கு உடை எடுத்து வைத்து கொண்டு இருந்தவளிடம், " இந்தா இதை பிடி "..என்று ஒரு பேப்பரை காட்ட
அவளோ பிரித்து பார்த்தாள் அதில் அவளுக்கு இந்த ஊர் காலேஜிலே வேலை வாங்கி இருந்தான் செழியன் அதற்கான பேப்பரை கொடுக்க ,படித்தவளுக்கு அவனது ஆழ் மனது நேசம் புரிப்பட விழிகள் கலங்க , "மாமா "...எனவும்
"மாலதி நான் உன்னை மட்டும் நேசிக்கல உன்னோட உணர்வுகள் உன்னோட ஆசைகள் எல்லாத்தையும் தான் நேசிக்கிறேன்...எனக்காக உன்னோட ஆசைகள் பாழாய் போக நான் விட மாட்டேன் "..என்று கூற மாலதி பேச்சற்று போனவள் செழியனை அணைத்து அவனுக்கு முத்தமழையை பொழிந்தாள் என்றே கூற வேண்டும்..அவனும் அவன் பங்கிற்கு காதல் மீட்ட அங்கே அழகிய அரங்கேற்றம் உருவானது..
குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியே தன் கணவனின் படத்தின் முன்பு நின்று செல்லக்கிளி, " உங்க ஆசையை நான் நிறைவேத்திட்டேங்க..நம்ம பொண்ணு நம்ம கூட சேர்ந்துட்டா அதே போல நிலாவும் மனுவும் இப்போ சந்தோஷமா இருக்காங்க,இப்போ செழியன் அவனும் அவன் பொண்டாட்டி கூட நல்லா இருக்கான் இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு "..என்று மானசீகமாக வேண்டி கொண்டு இருந்தார்..
ஆனால் பாவம் அவர் அறியாதது பேத்தியும் பேரனும் வருவது பிரிவதற்காக தான் என்று அவருக்கு எங்கே தெரிய போகிறது..
மனு மற்றும் நிலா வீட்டுக்கு வந்ததும் அங்கே அவர்களை அனைவரும் உற்சாகமாக வரவேற்றனர்..நிலா அவர்கள் முன் எதுவும் காட்டி கொள்ளவில்லை அதே போல மனுவும் எதுவும் காட்டி கொள்ளவில்லை.. வீட்டில் வெண்ணிலாவின் வீட்டினர் மட்டுமின்றி மனுவின் குடும்பமும் இருந்தது அதாவது மனுவின் அப்பா மற்றும் அம்மாவும் வருகை புரிந்து இருந்தனர்..
மனுவை கண்டதும் மனுவின் அப்பா ரவீந்தர் , "ஹே மனு எப்படி டா இருக்க ப்ரொஜெக்ட் எப்படி போகுது "..என்று அணைக்க
"நல்லா போகுது டாட்".. என்று அவருக்கான பதிலை அளித்தவன் மேலும் தன் தந்தையை இறுக்கமாக அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தினான் கூடவே தன் தாயிடம் மற்றும் வெண்ணிலாவின் வீட்டினர் அனைவரிடமும் தன் அனபை வெளிப்படுத்தினான் அவள் ஒருத்தியை தவிர
மாலதி செழியனின் கையை பிடித்து கொண்டு நிற்பதை கண்டதுமே மனுவுக்கு புரிந்து போனது அவர்கள் இருவரும் இணைந்து விட்டனர் என்று மகிழ்ச்சியாக இருந்தது அவர்கள் இருவரை இப்படி பார்க்கும் போது நிலாவுக்கும் அதே நேரம் அது தான் தோன்றியது மெல்ல மனுவை பார்க்க மனு அவளை விட்டு நாலு அடி விலகி நின்று கொண்டு இருந்தான்..
அவளுக்கு அவளை அரித்து கொண்டு இருந்த விஷயம் அவளை விட்டு போனதை எண்ணி அவளால் சந்தோசிக்க கூட முடியவில்லை.. ஆம் அதன் பிறகு அவன் கேட்ட கேள்விகள் நெஞ்சை பிளப்பது போல இருக்க அவள் பக்கத்தை அவனிடம் கூற கூட அவன் சம்மதிக்காமல் இருப்பது அவளுக்கு வருத்தத்தை அளிக்க பொலிவு இழந்த முகத்தோடு இருந்தாள் நிலா..
அதன் பலன் அவள் குளித்து உடை மாற்றிய பின்னும் அவளுக்கு அதே முகமாக அவள் இருக்க வெண்ணிலாவின் அம்மாவோ வேகமாக அவளது அறைக்குள் வந்து, " என்ன இன்னிக்கும் அந்த சுடிதாரை போடுற சேலைய கட்டு கோவிலுக்கு போகனும்".. என்க அவளும் எதிலும் நாட்டமின்றி தனது தாய் கொடுத்த சேலையை எடுத்து உடை மாற்ற போனாள்.. கிட்டத்தட்ட முதுகில் ஜிப் வைத்து தைத்து இருக்கும் சுடிதாரில் ஜிப்பை கூட அவிழ்த்து விட்டாள்.. வெற்று முதுகோடு நிலா நின்று கொண்டு இருக்கும் சமயம் பார்த்து,
அந்த சமயம் பார்த்து மனு உள்ளே வந்தான் அவனை கண்டதும் அடுகளைக்குள் இருந்து ஓடி வந்த அவளது தாய், " மாப்பிளை உங்களுக்கும் வேட்டி சட்டை எடுத்து வெச்சு இருக்கேன் போட்டுக்கோங்க"... என்று கூறி விட்டு அவர் செல்ல,
அவனோ தலையை ஆட்டியபடி அறைக்குள் நுழைந்து கதவை அடைக்க அதற்குள் இங்கே இவள் திறந்த புத்தகமாக
காட்சி அளித்தாள்..
இவனை சற்றும் எதிர்பாராத நிலா புடவையை கையில் வைத்து கொண்டு திரும்பி நின்று கொண்டாள்..
அவனுக்கு அவளின் வெற்று உடலை காட்டாத விதத்தில் அவள் நிற்க இது போல மறைந்து நிற்பவளை பார்த்து ஒன்றும் கூறாமல் வெளியேறினான் மனு..
அவனின் அமைதி அவளை கொன்றது என்றே கூற வேண்டும்.. இதே போல மூன்று வாரங்களுக்கு முன் அவள் உடை மாற்றும் நேரம் அவன் வர அவன் கொஞ்சியது அவளுக்கு இன்றும் நினைவு வந்தது..
ஆம் அன்றைய தினம் நிலா குளித்து முடித்து உடை மாற்றி கொண்டு இருந்தாள்..அவள் சுடிதார் பேண்ட் அணிய போகும் போது மனு உள்ளே வர அவளின் காட்சியை பார்த்து கள்ள சிரிப்போடு அவள் அருகில் வந்து நின்றவன், "நீ இப்படியே நான் வரும் போது எல்லாம் செக்சியா இருந்தா நான் பண்ணுவேன்னு தெரியுமா??"... என்று கூறி அவள் அருகில் வந்தவன் அவள் கழுத்தில் புதைந்து அவள் ஒரு கால் நுழைத்து இட்ட பேண்டை கழட்டி வீசி எறிந்து விட்டான்..
அவளோ அவனின் எண்ணம் புரிந்தாலும் வெட்கப்பட்டு கொண்டே, " என்னங்க விடுங்க"... என்று கூறினாலும் நிலா அசைந்தாள் இல்லை..
அப்போது அவளது அவஸ்தையை கூட பொருட்படுத்தாமல், " நீ என்ன சோப் போட்டு குளிக்கிற உன்கிட்ட மட்டும் இவ்வளவு வாசனை "..என்று விட்டால் அவள் கழுத்தையே நுகர்ந்து உள்ளே இழுத்து கொள்வான் போலும்..
அப்படி அவள் கழுத்தின் வளைவில் வாசம் பிடித்தவனின் செய்கை அவளை கூச்சம் வரவைக்க நெளிந்த அவளை பிடிக்க இடையில் கை வைத்தவனின் கை அப்படியே வெண்ணெய் வழுக்குவது போல வழுக்க அவன் வேண்டும் என்று செய்தானா இல்லை அவளது வாழை தண்டு காலை தொட்டு பார்ப்பதற்காக பார்த்தானா என தெரியவில்லை அவளது நெளிச்சலில் அவளது ஆடைகள் இன்றிய கால்களில் அவனது கை பதிந்து வருட அவளுக்கு மேலும் நெளிய துவங்கினாள் ..
