மன்மதன் 54
அத்தியாயம்: 54
வீட்டுக்குள் நுழைந்ததும் தன் அறைக்குள் நுழைபவளை பார்த்து," ஹே நில்லு டி "...என்க
இயல்பிலே பயந்த சுபாவத்தை கொண்ட பெண்ணிற்கு அவனது குரல் பயத்தை கொடுத்தது..
சோபாவில் எட்டி உதைத்தவன் , "என்ன டி நெனைச்சுட்டு இருக்க உன் மனசில என்ன பிரச்சனை??எதுக்கு எல்லோரையும் அவாய்ட் பண்ணிட்டு இருக்க நீ?? உனக்கு என்ன ஆச்சு..இப்போ நீ சொல்லி தான் ஆகனும் "...என்று அவள் முன்னே வந்து நிற்க
அவளோ ஒன்றும் கூறாமல் நிற்பதை பார்த்து கடுப்பான மனு
"நிலா நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன் எதுக்காக இந்த மௌனம் சொல்லு..தேவையில்லாமல் என்னை கோபம் வர வைக்காத "...என்று அவள் தோளை தொட போக
"என்னை தொடாதீங்க"... என்று சீறினாள் நிலா..
"ஏன்??தொட்டா என்ன டி பண்ணுவ" என்று திமிராக மனு கேட்க
"நீங்க என்னை தொட்டு பேசறது எனக்கு பிடிக்கல".. என்றாள் அடக்கப்பட்ட கோபத்துடன்
அதில் கடுப்பான மனு, "தொட கூடாதுன்னு சொல்றியா இல்லை தொடவே கூடாதுன்னு சொல்றியா??".. என்று தெளிவாகவே கேட்டான் மனு
"இரண்டும் தான் நீங்க போக பொருளா உபயோகப்படுத்திக்க நான் ஒன்னும் மெஷின் கிடையாது அதுக்கு எத்தனையோ பேர் இருக்காங்க அங்கே போங்க"...என்க
மனுவுக்கு அதிர்ச்சி , "என்ன டி சொல்ற நான் உன்னை மெஷின் மாதிரி யூஸ் பன்றேன்னு சொல்றியா??" என மனு அதிர்ச்சி மற்றும் கோபத்துடன் கேட்டான்..அவனால் அவள் கூறியதை ஏற்று கொள்ளவே முடியவில்லை என்பது அவனது முகமே உணர்த்தியது..
ஆனால் உணர்ந்து கொள்ள முடியா நிலையில் இருந்த நிலாவோ, "ஆமாம் இதுக்கு மேல என்ன சொல்ல இருக்கு நம்ம இரண்டு பேருக்குள்ள வெறும்" இருவரின் உடலையும் காட்டி, " இது தான் இருக்கு வேற ஒன்னும் இல்லை"... என்க
"நிலா " என்று கத்தியவன் ,
"என்ன டி சொல்ற இப்போ நான் உன்கிட்ட வரும் போது எல்லாம் உனக்கு அப்படி தான் தோணுச்சா இல்லையே நீ நல்லா இருந்த மாதிரி தானே இருந்துச்சு"..என்றான் நக்கலுடன் அவனுக்கு அவள் கூறியதுக்கு பதில் கூறியே ஆக வேண்டும் என்றே அவ்வாறு கூற
அதை கேட்டவளுக்கு முகம் சிவந்தாலும், "ஆமாம் அப்படி தான் தோணுச்சு நீங்க மாயா அக்காவை நெனைச்சுட்டு என்கிட்ட வரும் போது எனக்கு அப்படி தான் தோணுச்சு "..என்று அவள் உள் மனதில் கிடந்த அரிப்பை இறக்கியே விட்டாள்..
அதை கேட்ட மனுவுக்கு சப்த நாடியும் அடங்கியது என்றே கூற வேண்டும் இவள் என்ன பேசுகிறாள் புரிந்து தான் பேசுகிறாளா மாயாவை எண்ணி இவளிடம் இருந்தேனா?? என்று மனதில் கேள்வி எழுந்தாலும் இருந்தும் மாயா எங்கே இடையில் வந்தாள் என மனுவுக்கு புரியவில்லை..
"உனக்கு ஏதாவது சொல்லணும்னா உன்னை பத்தி மட்டும் பேசு எதுக்கு மாயாவை இழுக்கிற?"..என்றான் கோபத்தை அடக்கியபடி
"ஏன் உங்க காதலியை பத்தி பேசும் போது உங்களுக்கு வலிக்குதா எனக்கும் அப்படி தான் அப்படி தான் வலிக்குது நீங்க அவங்களை நெனைச்சுட்டு என்கிட்ட வரும் போது".. என்று கூறும் போதே நிலாவின் உதடு துடித்து கண்ணீர் வழிந்தோடியது..அவள் கூறுவதை கேட்ட மனுவுக்கும் வலித்தது...
மேலும் தொடர்ந்த நிலா , " உங்களுக்கு எப்போவும் உங்க விருப்பம் உங்க இஷ்டம் தான் நடக்கணும் அப்படி தானே என்கிட்ட கூட அப்படி தானே இருந்தீங்க..இல்லைன்னு சொல்ல முடியுமா?? என்னோட உணர்வுகளுக்கு எப்போவாவது நீங்க மதிப்பு கொடுத்து இருக்கீங்களா??".. என்க
மனுவுக்கு அவளது பேச்சு இலேசாக புரிவது போல இருந்தது, " நான் மாயாவை காதலிக்கல காதலிச்சு தான் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேன் மாயாவா இருந்தா நல்லா இருக்கும்னு எனக்கு தோணுச்சு நான் அவ கிட்ட என் காதலை சொன்னேன் அவ வேற ஒருத்தனை காதலிக்கிறேன்னு சொல்லிட்டா..அதோட அந்த கதை முடிந்தது "..என்று மனு கூற நிலா நம்பும் நிலையில் இல்லை
அவளோ, இது என்ன புது கதை என்பது போல பார்த்து வெகுண்டவள், " பொய் சொல்லாதீங்க என் கண் முன்னாடி தானே நீங்க உங்க காதலை சொன்னீங்க இப்போ வரைக்கும் ஒன்னா தானே சுத்திட்டு இருக்கீங்க..இதுக்கு எல்லாம் என்ன அர்த்தம்"..என்று வெடித்தாள்..
"ஆமாம் அதுக்கு என்ன இப்போ..இனியும் அவ கூட சுத்துவேன் ஒரு நண்பனா"..என்று அவளுக்கு புரியும் படி மனு கூற நிலா அதை ஏற்பதாக இல்லை
"நீங்க நேத்து காதலை சொல்லலாம் இன்னிக்கு நண்பன்னு சொல்லலாம் ..பொண்டாட்டியை யார்னு தெரியாதுன்னு சொல்லலாம்..உங்களுக்கு ஏமாத்த சொல்லியா தரணும்..ஆனால் உங்களையே நெனைச்சுட்டு இருக்கிற மாயா அக்காவை ஏமாத்த உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு?"..அந்த நேரத்திலும் மாயாவின் மீது உள்ள உண்மையான அக்கறையோடு நிலா கூற மனுவுக்கு கோபம் துளிர் விட்டது..
"நான் நல்லவன்னு எவன் கிட்டேயும் சொன்னது இல்லை..சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை...உன் மாயா அக்காவை நான் ஏமாத்துறேன்னா குட் ஜோக் அவ வேற ஒருத்தனை காதலிக்கிறா அது நான் கிடையாது"... என்க
நிலா முழிப்பதை பார்த்து ,"என்ன முழிக்கிற அவ காதலன் யார்னு தெரியுமா ??என்ன தெரியாதா?? உன்னோட அஷோக் தான்".. என்க
நிலாவோ நம்பாத பார்வை பார்த்தாள்.. "என்ன அப்படி பார்க்கிற என் மேலே அவ்ளோ நம்பிக்கை இருக்கு பரவாயில்லை நான் சொன்னா நம்ப மாட்ட இந்த நிலையில் மாயா சொன்னாலும் நம்ப மாட்ட ஆனால் அசோக் சொன்னா நம்புவ தானே "..என்று கூறியவன்
அசோக்கை அழைத்து போனை ஸ்பீக்கரில் போட்டு ,"எங்கே டா இருக்க".. என்று கேட்க
"மாயா கூட டா உன் பைக்கில் ஸ்பீடா போகனும்னு சொல்றா எப்போ இவ அப்பா கண்ணுல மாட்டுவேனு தெரியல"... என்று அசோக் பயத்தில் கூறுவது போல நடித்தாலும் மாயாவுடன் இருக்கும் போது உற்சாகமாகவே அசோக்கின் குரல் வெளிப்பட்டது ..
அதை உணர்ந்து மனு நிலாவை ஒரு அர்த்தம் உள்ள பார்வை பார்த்தவன் அமைதியாக இருக்க நிலா தலை குனிந்தாள்..
மனுவின் அமைதியை கூட பொருட்படுத்தாமல், "மனு இன்னிக்கு நான் வேணாம்னு தான் டா சொன்னேன் அஷூ தான் டிரைவ் போலாம்னு சொன்னான் "என்று மாயா தன் பங்கிற்கு கூற
அவர்கள் மிக நெருக்கமாக பேசி கொள்வதை கேட்டவளுக்கு அவன் கூறியது உண்மையாக இருக்குமோ என்று நினைத்தவளுக்கு ஒரு பக்கம் மனம் இலேசாவதை போல இருந்தாலும் மறுபக்கம் அவர் இது வரை அவரோட காதலை கூட என்கிட்ட சொன்னது இல்லையே என்று மீண்டும் தன்னை குழப்பி கொள்ள மனுவை நிலா ஏறிட்டு பார்க்க
அதற்கும் மனுவோ வேறு ஒரு முடிவு எடுத்து இருந்தான்..சிறிது நேரம் அவர்களிடம் பேசி விட்டு போனை வைத்தவன்,
"ஹ்ம்ம் வேற ஏதாவது சந்தேகம் இருக்கா "..என்று கேட்க
அவளோ இல்லை என்று கூறினாள் என்ன கூறுவாள் அவள் இத்தனை நேரம் நீட்டி படித்த குற்றப்பத்திரிகை தான் ஒன்றும் இல்லாமல் போய் விட்டதே
"சரி நான் ஒரு கேள்வி உன்னை கேக்கிறேன் நீ சொன்னபடி நான் தான் காதலே இல்லாமல் உன்கூட இருந்தேன்னு வெச்சுப்போம் அப்போ நீ யாரை நினைச்சிட்டு என் கூட இருந்த ..ஐ மீன் யாரை நெனைச்சுட்டு என் கூட படுத்த??"..என்று கேட்டான்..
வெண்ணிலா அதை கேட்டதும் தன் காதை பொத்தி கொண்டாள்.. அவளுக்கு அந்த வார்த்தையை கேட்கவே அபத்தமாக இருந்தது...
" என்ன வார்த்தை சொல்லிட்டிங்க நீங்க?"..என்று கண்ணீரோடு கேட்க
அந்த கண்ணீருக்கு விடை மனுவிடம் இல்லை, "நீயும் தான் நிறைய சொல்லிட்ட வெண்ணிலா ..நான் பதிலுக்கு ஒரு கேள்வி தான் உன்கிட்ட கேட்டேன்"..என்று தோளை குலுக்கி விட்டு இதோடு பேச்சு முடிந்தது என்பது போல போய் விட்டான்..
அடுத்த அரைமணி நேரத்தில் மனுவின் கார் வெண்ணிலாவின் வீடு நோக்கி பயணித்தது ..
மல்லிகை மணம் வீசும்…
