Share:
Notifications
Clear all

மன்மதன் 53

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 53

தன்னை விட்டு விலகி போனவளை பார்த்து, "போகலாம் அதுக்காக..இப்போ..இந்த நேரத்தில் நாம ஓட்டுக்கா இருக்கும் போது"... என்று கேள்வியாக கண்களில் அவள் வேண்டும் என்ற நிலையில் மனு அவளிடம் கேட்க

அவனது கண்கள் கூறுவது தெளிவாக அவளுக்கு புரிந்தாலும் அவளுக்கும் அவனுடன் வாழ வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இல்லையே அவன் அவளுக்கு உண்மையாக இல்லாமல் அல்லவா இருக்கிறான் என நினைத்து கொண்டு மனதை கல் ஆக்கியவள் அவன் பார்க்க பார்க்க  அவள் அறையை விட்டு வெளியேறி விட்டாள்..

"இவளுக்கு என்ன ஆச்சு..என்ன இப்படி விலகி போறா"... என்று ஒரு நாள் முழுவதும் அவளை கவனித்த மனுவுக்கு ஒன்றும் புலப்படாமல் போக அவளிடம் நேரே வந்து, " நாளைக்கு சாயந்தரம் தயார் ஆகு உன் வீட்டுல விடுறேன் அதுக்காக இப்படி விலகி எல்லாம் நிக்காத "...என்று அவளை தன்னோடு சேர்த்து இழுத்தவன் கைகள் அவள் முதுகை வருடி கொடுத்தது .

அதில் இலேசாக விசும்பிய நிலா தன் மனதில் அடக்கிய விஷயத்தை அவனிடம் கூறவும் முடியாமல் திணற அவனோ அவள் முகத்தை பார்த்து," வீட்டுக்கு போகலன்னு யாராவது அழுவாங்களா நீ இப்படி அடம் பிடிப்பன்னு நினைச்சு இருந்தா உன் அண்ணன் , பாட்டி கூடவே உன்னை அனுப்பி இருப்பேன் "..என்று கூறியவன் இலேசாக அவளது கன்னத்தை தட்டி விட்டு சென்றான்..

அவனுடைய ஆறுதலை கூட அந்த நிலாவால் அனுபவிக்க முடியவில்லை ..அவளுக்கு அங்கே இருந்தால் சரி வராது என்று நினைத்து தான் அவள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று நிலா நினைத்து இருந்தாள்..

அதில் நிலா அவனை அவள் அருகில் விடாதது போன்ற உணர்வு மனுவுக்கு எழ துவங்கியது என்ன கேட்டாலும் அந்த அறையை விட்டு வெளியே வராமல் உள்ளேயே அடைந்து கிடந்தாள் ஏதாவது கேட்டால் தலை வலி என்று எல்லாம் கூற மனு இவளின் மனது அறியாமல் தடுமாறினான்..

ஆம் அவன் தான் எப்போதும் அவளை கல்லூரிக்கு விட கடந்த இரண்டு நாட்களாக அவன் எழும் முன்னே எழுந்து தயாராகி செல்கிறாள் அவன் வரும் முன்னே கதவை அடைத்து கொள்ள இதை எல்லாம் கண்டு குழம்பிய மனு அவளுக்கு என்ன தான் பிரச்சனை என கேட்க அவள் சென்றதும் இதோ தயாராகி கல்லூரிக்கே வந்து விட்டான்..

அப்போது தான் மாயாவுடன் அவள் நிற்பதை கண்டு அங்கே வர இவனை கண்டதும் விலக போனவளை வம்படியாக கையை பிடிக்க போக நிலா முறைத்தாள்..

மாயாவோ நிலாவின் நிலைமை புரியாமல், "நிலா யூ லுக் பிரிட்டி ..ஆனால் இவன் விஷயத்தை என்கிட்ட சொல்லவே இல்லை அதில் நீயும் இவன் கூட சேர்ந்து சொல்லாமல் இருந்து இருக்க எப்படி உங்க இரண்டு பேரால இப்படி ஒன்னும் தெரியாத மாதிரி இருக்க முடிஞ்சது"..

"இடியட் நீ கூட சொல்லல "..என்று நிலா முன்னிலையில் மனுவை அடித்தாள்..

அவனோ , "ஹே அது தான் நாங்க இப்போ சொல்லிட்டோமே"...என்க

"ஆனால் உன் பொண்டாட்டி இன்னும் அப்படியே தானே இருக்கா??"..

நிலாவோ தலை குனிந்து கொண்டே இருந்தவளுக்கு அவர்களது பேச்சும் சிரிப்பும் எரிச்சலை கொடுக்க அவள் அவர்களின் முகம் கூட பார்க்காமல் கிட்டத்தட்ட அவர்கள் இருவரையும் அவமானப்படுத்துவது போல, " நான் போறேன் எனக்கு கொஞ்சம் நோட்ஸ் எழுதனும் "...என்று கூறி விட்டு செல்ல மனுவுக்கு இந்த முறை அவளது செய்கை கோபத்தை கொடுத்தது..

என்ன இவள் இப்படி செய்கிறாள் என பார்த்தவனுக்கு மாயாவின் குறுகுறு பார்வைக்கு பதில் அளிக்க முடியாமல் தடுமாற ,"மனு அவ கூட நீ ஹாப்பியா தானே இருக்க??"..என கேட்டாள்..அவளுக்கு அவளுடைய நண்பனின் வாழ்க்கை முக்கியம் என்பதாலேயே அவள் அவ்வாறு கேட்க

மனுவோ, "ஆமாம் மாயா என்ன இப்படி கேள்வி கேக்கிற??"..

"ஒன்னுமில்லை அவ ஏதோ குழப்பத்தில் இருக்க மாதிரி இருக்கு"... என்று கூற

"மாயா அவளை நான் பார்த்துக்கறேன்..இனி உன் அசோக்கை பார் "..என்று சிரித்து கொண்டு கூறினான்..

மாயாவிடம் சொன்னபடி மாலை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தவளின் முன் காரை நிறுத்தினான்..

அவளோ , "இவன் எதுக்கு இங்கே வந்தான் " என்று முணுமுணுத்து பார்த்தும் பார்க்காதது போல நிற்க, இதை கண்ட மனு ஹாரன் அடித்து கொண்டே இருந்தான்..பேருந்து நிறுத்தத்தில் உள்ள அனைவரும் காரை பார்த்தாலும் நிலா மட்டும் கண்டுகொள்ளாமல் இருக்க கடுப்பான மனு , "உனக்கு என்ன அவ்வளவு திமிரா டி..இப்போ பாரு"... என்று கூறியவன் காரை அணைத்து விட்டு அப்படியே காரில் அமர்ந்து இருந்தான்..

"இவங்க வேற இங்கேயே நிக்கிறாங்களே "...என நினைத்து கொண்டு இருக்கும் போது பின்னால் இருந்து பஸ் ஆடி அசைந்து வந்தது..நிறுத்தத்தில் வந்ததும் பேருந்து ஓட்டுநர் மனு கார் முன்னால் இருப்பதை பார்த்து ஹாரன் அடிக்க அவனோ அசையாமல் பாட்டு கேட்டு கொண்டு இருந்தான்..அவ்வளவு கூலாக பாட்டு கேட்டு கொண்டு இருந்தான் யாரையும் கவனிப்பதாகவே இல்லை..

மீண்டும் அவர் அடித்து கொண்டே இருக்க கேக்காத பாவத்தில் இருப்பவனை ஓர கண்ணால் பார்த்து கிளம்ப மாட்டானா என நினைக்க அவனோ அசையாமல் இருப்பதை பார்த்து , "இவனுக்கு என்ன திமிரா பெரிய கார் வெச்சு இருந்தா ஹாரன் அடிக்கிறது கூட தெரியாதா"... என்று சத்தம் போட்டு கொண்டே டிரைவர் இறங்கி விட வீணாக சண்டை போவதை உணர்ந்த நிலா வேகமாக காரில் ஏறி அமர்ந்தாள்..

அவள் ஏறி அமர்ந்த அடுத்த நொடி மனுவின் கார் பறந்தது ..

ஒரு வார்த்தை கூட மனு பேசவில்லை அவனுக்கு அவள் மீது கோபம் இவள் என்ன நினைத்து கொண்டு இருக்கிறாள் என்று அவளும் அமைதியாக பயணம் செய்ய இருவரும் வீட்டை அடைந்தனர்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top