Share:
Notifications
Clear all

மன்மதன் 52

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 52

அவனது வேதனையை உணர்ந்த மாலதி ,"போதுங்க ..என்னை வார்த்தையால கொல்லாதீங்க..மன்னிப்பு அப்படிங்கற வார்த்தையை தவிர என் கிட்ட வேற எதுவும் இல்லை..நான் உங்களை இத்தனை நாள் புரிஞ்சுக்காமல் இருந்துட்டேன் எனக்கு உங்களை பார்க்கும் போதே பயம்..நீங்க நான் எப்போ பார்க்கும் போதும் யாரையாவது அடிச்சிட்டு இருப்பீங்க அதை பார்த்தே உங்க பக்கம் வராம ஒதுங்கி இருந்தேன்..

தீடிர்னு உங்களுக்கும் எனக்கும் கல்யாணம்னு சொன்னா நான் என்ன செய்யறது யாரும் என்னை புரிஞ்சுக்கல அது தான் அந்த கோபத்தை உங்ககிட்ட காட்டினேன்"... என்று உண்மையை போட்டு உடைக்க

"இப்போவும் நான் அப்படி தான் மாலதி..என்னால மாற முடியாது தப்பு செஞ்சா என்னால பொறுத்து போக முடியாது அதுனால இது சரி வராது"..என்க

"நான் உங்களை மாற சொல்லலேயே நான் தான் உங்களை புரிஞ்சிகிட்டேனே "...என்று அவனது கையை மெதுவாக பிடிக்க அப்போதும் விலக போனவனை பிடித்து இழுத்து இதழோடு இதழ் பொறுத்தினாள் மாலதி ..இந்த செய்கையை ஓட்டும் எதிர் பார்க்காதவன் அடுத்த நொடி மாலதி செழியனின் அணைப்பில் இருந்தாள்..

இதுவரை அவளுக்காக காத்து இருந்தவனுக்கு இனியும் காத்து கொண்டு இருக்க மனம் இல்லை..காதலோடு காமமும் போட்டி போட இதோ அங்கே அழகிய தாம்பத்தியம் ஒன்று உருவானது..

"ஹே வெண்ணிலா நில்லு "...என்று கல்லூரிக்குள் நுழையும் போதே தடுத்து நிறுத்திய மாயாவை காண துளியும் விருப்பம் இல்லாமல் இருந்தாள் நிலா..

வாழ்க்கையே வெறுத்த நிலையில் இருக்கும் தன்னை மீண்டும் மீண்டும் ஏன் தொல்லை செய்கிறார்கள் இவர்களை தான் காண விருப்பம் இல்லாமல் தானே நான் ஒதுங்கி செல்கிறேன் இப்போ எதுக்கு இவங்க கூப்பிடுறாங்க என்று உள்ளுக்குள் பல்லை கடித்த படி நின்றாள் நிலா..

"என்ன நான் கூப்பிட்டுட்டே இருக்கேன் நீ கண்டுக்காமல் போற"..

மாயாவை பார்ப்பதில் விருப்பம் இல்லை என்றாலும் மாயா மீண்டும் மீண்டும் அழைக்க தவிர்க்க முடியாமல் திரும்பிய நிலாவை ,"என்ன வெண்ணிலா நீ கூட என்கிட்ட சொல்லல"..என்று குறைப்பட

"அது தான் அவங்க சொல்லிட்டாங்களே"..என்றாள்

"ஓ அவங்க சொன்னா நீங்க சொல்ல மாட்டீங்களா"... என்று மாயா மீண்டும் கேள்வி கேட்டு கொண்டு இருக்கும் போதே மனு வர," என்ன இங்கே நடக்குது..சீனியர் என்ன ராக்கிங் ஆஹ் ".. என்று கேட்டவனின் விழிகள் தன்னவளை மொய்த்தது..

ஆம் இரண்டு நாட்களாக அவனை பட்டினி போட்டு வருகிறாள்...அவளை விட மனம் இல்லாமல் பாட்டியும் செழியனும் வந்த போது மனு அவளை தன்னுடன் அழைத்து வருவதாக மனு கூறி விட  பாட்டிக்கு ஏதோ புரிவது போல இருக்கவும் அவர் ஒன்றும் பேசாமல் அமைதியாக கிளம்பி விட்டார்..செழியனும் அந்த நேரத்தில் பாதி தேவதாஸ் ரூபத்தில் இருந்ததால் அவனும் கண்டு கொள்ளாமல் கிளம்பி விட நிலாவின் நிலைமை அதோ கதி என்ற நிலைக்கு சென்றது..

அவர்கள் கிளம்பியதும் நிலா அவனிடம் நேரே சென்று, "நான் தான் போகணும்னு முன்னாடியே உங்க கிட்ட சொன்னேன்ல எதுக்கு அவங்க கிட்ட அப்படி சொன்னீங்க".. என்க

மனுவோ தனக்கு எதிரே நின்று கையை நீட்டி முகம் சிவந்து கேள்வி கேட்டு கொண்டு இருப்பவளை அந்த நேரம் பார்க்கும் போதும் அவனுக்கு அணைக்கவே தோன்றியது..

நினைத்ததை செய்தால் தானே அவன் மனு அவள் உயர் அழுத்தத்தில் இருப்பதை கூட பொருட்படுத்தாமல் அவளின் இடையை தன் ஒரு கையால் இழுத்து தன்னோடு இழுக்க நிலை இல்லாத அவள் அவன் மீதே விழுந்தாள்..

விழுந்த விசையில் அவனது முகத்துக்கு நேரே அவளது முகமும் மோத அந்த நொடி இது தான் சமயம் என்பது போல அவளின் இதழை தன் இதழோடு பிடித்து இழுத்தவனின் கைகள் அவள் உடலின் அனைத்து பகுதிகளிலும் அத்துமீற அவனது செய்கையில் துவண்டவளுக்கு தன் உடல் மீதே கோபம் வந்தது..

அதிலும் அவள் உடல் துவளும் போதே அவளுக்கும் உணர்வுகள் தூண்டப்பட்டு இருந்தது..

அவனுக்கு மிக நன்றாக தெரியும் எங்கே அவளை தொட்டால் அவள் கூசி சிலிர்ப்பாள் என்பதை தெரிந்தே மனு அவன் வேலையை காட்ட எப்போதும் அது போன்ற சமயங்களில் மாயாவின் நினைவை தூர விலக்கி வைப்பவளுக்கு இன்றும் அது போல முடியவில்லை..

அதே போல மனு மெல்ல மெல்ல அவனது உதட்டால் அவளை குளிப்பாட்டி கொண்டு இருக்க நிலா தன்னிலை பெற்று அவனிடம் இருந்து விலகி, " என..க்கு ..போக..னும்".. என்றாள் உடையை சரி செய்தபடி அவளுக்கு அவனிடம் சண்டையிட வேண்டும் கேள்வி கேட்க வேண்டும் என்று எல்லாம் துடிக்கிறது..ஆனால் அவன் மனம் வருத்தப்படுமோ என்று நிலா தன் கோபத்தை அடக்க ஆனால் அவள் ஒன்றை மறந்து விட்டாள் கூடிய விரைவில் அவளே இந்த கோட்டை உடைத்து தகர்த்து எறிவோம் என்று அவள் இந்நேரம் நினைக்கவில்லை..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top