Share:
Notifications
Clear all

மன்மதன் 50

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 50

அவள் சற்றும் விலகி அமரவும் விலக முடியாத படி அவளது தோளில் கையிட்டு நெருங்கி அமர்ந்தவன் கைகள் அவளது முகத்தில் கோலம் இட இங்கே உணர்ச்சிகள் கிளர்த்து எழுந்து கொண்டு இருந்தது..

"எனக்கு படிக்கணும்"..

"படி நான் வேணாம்னு சொல்லலேயே"

"நீங்க போங்க"

"எங்கே "

"ப்ளீஸ் எனக்கு படிக்கணும்"

"அதுக்கு புக்கை நீ நேரா வெச்சு படிக்கணும் நீ படிக்கலன்னு உன் கண் சொல்லுது வெரி சாரி டியர் கனவில் படிக்க எவ்வளவோ படிக்க பாடம் இருக்கு சோ "என்று கூறியவன் அவளது புத்தகத்தை வாங்கி அருகில் இருந்த டேபிளில் வைத்தவன் அவளை அணைத்து அவளது கழுத்து வளைவில் புதைந்து இருந்தான்..

அவனது கைகள் அவளது உடலில் லீலைகளில் ஈடுபட அவளோ துள்ளியபடி விலக போக விலக முடியவில்லை இப்படியே ஒரு மாதம் போனது இருவருக்கும் தெரியவில்லை..

இந்த ஒரு மாத காலமும் அவர்கள் அழகிய தாம்பத்திய வாழ்க்கை வாழ்ந்தனர் என்றே கூற வேண்டும்..எப்போதும் அவன் அவளை அணைக்கும் போதும் முதலில் அவனிடம் இருந்து விலக முற்படும் அவளை லாவமாக தனக்குள் அடக்கி தன்னுள்ளே புதைத்து கொள்வான் மனு..ஆனால் அவன் எப்படி அவள் மீது ஆசை வைத்து இருக்கிறானோ அது போல நிலா ஒரு முறையாவது அவளாக அவனிடம் வர வேண்டும் என்பதே அவனுடைய விருப்பமாக இருந்தது..

இதற்கு இடையில் மனு மற்றும் அவனது நண்பர்கள் பிருத்திவியின் கம்பெனியில் ப்ரொஜெக்ட் செய்ய தொடங்கி விட்டனர்..

அவன் வந்தது முதல் ஒரு தடவையாவது பிருத்திவியை நேரில் கண்டு விட மாட்டோமோ என நினைத்து கொண்டு இருந்தவனுக்கு பிருத்திவியே அன்று சென்னையில் உள்ள அவனது நிறுவனத்துக்கு வருகை புரிந்தான்..

அதும் வரும் போதே அனல் தெறிக்கும் அளவுக்கு காண்போரை எட்டி நிற்க வைக்கும் அளவுக்கு ஆகாய அசுரனாக வந்து கொண்டு இருந்தான் அதுவும் அவனது கம்பெனி சீக்ரெட் அடங்கிய சாப்ட்வேரை யாரோ ஹாக் செய்து இருப்பதாக தகவல் கிடைக்க அது என்னவென்று பார்க்க தான் அவன் இங்கே வந்தது...

அவன் உள்ளே நுழையும் போதே இருவரை காய்ந்து கொண்டே வர கம்பெனியை ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு அமைதியாக இருந்தது..

" எனக்கு இம்மிடியேட் ஆஹ் ஒரு ஹாக்கர் வேணும் இன்னும் பத்து நிமிடத்தில் ஆள் எனக்கு வேணும்..நீங்க இத்தனை பேர் இருந்தும் யார் பண்ணினான்னு கண்டு பிடிக்க முடியல டாமிட்ஸ் ".. என்று கத்தும் சத்தம் அந்த கம்பெனி முழுவதும் கேட்க

அந்த சமயம் பார்த்து இவர்களுக்கு ப்ரொஜெக்ட் சொல்லி தரும் அந்த மேனேஜர் சேர்ந்து கதி கலங்கி நிற்பதை கண்ட மனு ,

"சார் என்ன பிரச்சனை".. என்று கேட்க

அவரோ இவனிடம் பழகிய பழக்கத்தில் நடந்த விஷயத்தை கூற

"சார்  நானும் ,அசோக்கும் சேர்ந்து இதை சால்வ் பண்றோம் எங்களுக்கு ஹாக்கிங் தெரியும் "..என்று கூறினான்..

ஆம் கல்லூரி காலத்திலே அசோக் ஹாக்கிங் படிக்கிறான் என்று கேள்வி பட்டதும் போட்டி போட்டு கொண்டு மனுவும் படித்து இருந்தான் அது இந்த சமயத்தில் அழகாக அவனுக்கு பயன் அளித்தது..

மாயா மற்றும் அவனது நண்பர்கள் அனைவரும் மனு மற்றும் அசோக் இயல்பாக பேசுவதை ஏழாவது அதிசயமாக பார்த்தனர்..

குமாரோ , "டேய் என்ன டா நடக்குது இங்கே விட்டால் இவனுங்க இரண்டு பேரும் நம்மல கழட்டி விடுவானுங்க போல".. என்று கவுண்டர் அடிக்க அதை கேட்டு மாயா சிரித்தாள்..இதை தான் அவள் அசோக்கிடம் மற்றும் மனுவிடமும் கடந்த ஒரு மாதமாக எதிர்பார்த்தது அது நிறைவேறவும் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..

மேனேஜர் அவரை விட உயர் அதிகாரிகளிடம் விஷயத்தை கூற அது பிரித்திவியின் செவிகளுக்கு சென்றடைந்தது..

பிருத்திவியோ ஒரு நிமிடம் யோசித்து அவர்களை தன்னை காணும் படி வர சொல்ல மனுவுக்கு ரெக்கை கட்டி பறப்பது போல இருந்தது..பிருத்வி அவர்கள் இருவரை கண்டதும் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்..

"சார் நான் உங்க பெரிய ரசிகன் ..உங்களை எனக்கு நல்லாவே தெரியும் சார்.. உங்க ஆர்டிகலஸ் நிறைய படிச்சு இருக்கேன் சார்..உங்களை மாதிரி வாழ்க்கைல முன்னேறனும்னு ஆசைப்படுறேன் ".. என்று மனு பிருத்திவியிடம் அறிமுக படுத்தி கொள்ள

பிருத்திவியும் ஒரே நோட்டத்தில் அவனை இனம் கண்டு கொண்டான் பிற்காலத்தில் இவன் நல்ல நிலைமைக்கு வருவான் என்று , "வெல் ரொம்ப சந்தோசம் உங்களை மீட் பண்ணினதில் உங்களை மாதிரி யங்ஸ்டர்ஸ் இன்னும் வாழ்க்கைல முன்னேறனும் அண்ட் நான் எந்த ஒரு விஷயத்தையும் லாபம் இல்லாமல் செய்யமாட்டேன்

அதே போல லாபம் தராமலும் வேலையை வாங்கிக்க மாட்டேன்..நீங்க என்னோட கம்பெனில ப்ரொஜெக்ட் பண்றீங்க ..எப்படியும் மூணு மாசத்துல உங்க காலேஜ் முடிஞ்சிடும்.. சோ இந்த ஹாக்கிங்கை இப்போ கிளியர் பண்ணினா நான் உங்க ரெண்டு பேரையும் என்னோட கம்பெனிக்கு ஹையர் பண்ணிக்கறேன்..

உங்களுக்கு வேலை யூஎஸ்ல அண்ட் சம்பளம் அதுக்கு ஏத்த மாதிரி வரும்".. என்று உதவி செய்ய வந்தவர்களுக்கே செக் வைத்தது போல அவன் நிற்க

மனுவுக்கு புரிந்து போனது பிருத்திவியின் குணத்தை பற்றி மேற்கொண்டு விவாதிக்காமல் வேலையில் இறங்கினர்..

கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்குள் யார் ,எங்கே எப்போது எந்த இடத்தில் ஹாக் செய்து இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து பிருத்திவியிடம் தெரிவிக்க பிருத்திவியின் மெச்சுதலான பார்வையுடன் கூடவே அவன் கூறியது போல அசோக் மற்றும் மனுவுக்கு வேலைக்கான நியமன உத்தரவும் அளித்தான்..

அதன் படி கல்லூரி முடிந்ததும் இவர்கள் அவனுடைய கம்பெனியில் வேலை செய்யலாம் கூடவே இப்போது இருந்தே அவர்களுக்கு ட்ரைனிங் கொடுக்கப்படும் அதற்காக அவர்களின் சம்பளமாக நியமிக்கப்பட்டு இருக்கும் தொகையில் இருந்து பாதி சம்பளம் இப்போது முதலே அவர்களுக்கு கிடைக்க பெறும் என்று கூறி விட்டு பிருத்வி சென்று விட்டான்..

மனுவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை அதை நிலாவுடன் கொண்டாட வீட்டுக்கு ஆயத்தம் ஆனான்.. வீட்டுக்குள் நுழைந்ததும், " ஹே பொண்டாட்டி இன்னிக்கு ஐயா ஹாப்பியா இருக்கேன்".. என்று சிரித்தபடி அவளை எப்போதும் செய்வது போல அவளது கன்னத்தில் அவனது இதழை பதிக்க மறுபக்கம் அச்சமோ இல்லை நாணமோ எந்த வித உணர்வும் இல்லாமல் அவனை விட்டு விலகினாள்..

மனு கேள்வியாக அவள் முகத்தை பார்க்கவும்  நிலாவோ திரும்பி நின்று அவர்கள் ஊரில் நடக்கும் திருவிழாவை பற்றி கூற அவனும் வீக் என்டில் வருவதால் சரி என்றும் சம்மதம் தெரிவித்தான்..

அப்போது தான் செல்லக்கிளியும் செழியனும் சென்னை வந்திருக்கும் விஷயத்தையும் கூறினாள் நிலா..

"எதுக்கு வந்து இருக்காங்க?".

"தெரியல..இன்னிக்கு ராத்திரி இங்கே வராங்கலாம் என்னை அவங்க கூட நாளைக்கு ஊருக்கு வர சொல்றாங்க இந்த வார கடைசில தானே ஊர் திருவிழா "என நிலா பட்டும்படாமலும் கூற

"அது தான் நானும் வரேனே எதுக்கு இரண்டு நாள் முன்னாடி போற"..

அதுக்கு அவளிடம் பதில் இல்லை," எனக்கு போகனும்".. என்றே அவள் கூறினாள்..

மனுவோ, "என்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க??"...

நீ தான் டா காரணம் ஒன்னும் தெரியாத மாதிரி இருக்கான் பாரு என்று மனதுக்குள் நெனைத்தாலும் அமைதியாகவே இருந்தாள்..

அவளின் பார்வையை பார்த்ததும் அவனுக்கு புரிந்து போனது ஏதோ சரியில்லை என்று ஒரு வேளை அவளுக்கு அவளுடைய வீட்டாரை பார்க்க வேண்டும் என்று இருக்கோமா என நெனைத்தவன் அவளையே கூர்ந்து கவனிக்க , "எனக்கு படிக்கனும்".. என்று கூறி அறை கதவை அடைத்து விட்டு உள்ளே சென்று குமுறி கொண்டு அழுதாள் நிலா..

ஆம் போன வார இறுதியில் ஒரு நாள் மாலை அவளை பிக் செய்ய முடியாது என்று கூறி இருந்த மனு வீட்டுக்கு வர லேட் ஆனது அவளும் அவனுக்காக சமைத்து வைத்து காத்து இருக்கும் போது வனிதா அழைத்து," ஹே என்ன டி உன் புருஷன் மாயா அக்கா கூட பைக்கில் பறந்துட்டு இருக்கார் "..என்று கூற நிலாவோ அதிர்ந்தாள்..

அவளின் மனதை எப்போதும் அரித்து கொண்டு இருக்கும் விஷயம் தான் இப்போதும் அரிக்க என் கூட இப்படி எல்லாம் நடந்துட்டு அவங்க கூட சுத்துறீங்களா என அழுதாள் அவளுக்கு அவனுடன் இருக்கவே வெறுப்பாக இருந்தது..

வனிதா கூறியதை எண்ணி குமைந்தவளுக்கு மீண்டும் கண்ணாலே காணும் பாக்கியம் அமைந்தது மனுவின் பைக்கில் மாயாவுடன் ஊர் சுற்றுவதை காண அவளுக்கு ஆத்திரம் தாளவில்லை..

நான் என் மனதையும் உடலையும் அனைத்தையும் இவனுக்காக சமர்ப்பித்து இருக்க இவன் மட்டும் என்னை போக பொருளாக உபயோகப்படுத்துகிறானா என நினைத்து நிலா அவனை விட்டு ஒதுங்க ஆரம்பித்தாள்...

இங்கே இவள் ஒதுங்க ஆரம்பிக்க அங்கே மாலதி செல்லக்கிளியின் வேலையால் வாழ்க்கையே வெறுத்த நிலைக்கு சென்று விட்டாள்..

மல்லிகை மணம் வீசும்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top